ஏழு உடல்களையும் அழகாகக் கடந்து செல்லலாம்
இந்தச் செயல்களை விஷ்ணுவிற்காகச் செய்தால், சாகும்போது நம்மை அழைத்துச் செல்வதற்காக விஷ்ணு பகவான், ரம்பை, ஊர்வசி, மேனகை போன்ற தேவலோக அழகிகளுடன் கருட சின்னம் பொறித்த ஒரு விமானத்தை அனுப்புவார் என்று நினைக்காதீர்கள். அப்படி எதுவும் நடக்காது.
அந்தமாதிரி ஏதாவது நடக்க வேண்டுமென நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோமானால், நாம் அப்படியே வெறுமனே உட்கார்ந்துகொண்டே இருக்க வேண்டியதுதான். அப்படி எதுவும் நடக்காது. அப்படி யாரும் வரமாட்டார்கள். நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள், நாம் புண்ணியத்தைச் சம்பாதித்தாலும் பாபத்தைச் சம்பாதித்தாலும் சரி, நாம் உடலை விட்டு செல்லும்போது துக்கப்பட்டுத்தான் செல்வோம். எதுவானாலும் சரி இரண்டுமே காமங்கள்தான்.
பிறகு என்ன செய்ய வேண்டும் ? நாம் உடலில் இருக்கும்போதே ஏதாவது ஒரு வழியில் தியானத்தின் மூலமாகவோ அல்லது சரணாகதியின் மூலமாகவோ ஒருமுறையாவது அந்த 'எண்ணங்களற்ற விழிப்பணர்வை' அனுபவித்துவிட வேண்டும்.
ஒரே ஒருமுறை அந்த எண்ணங்களற்ற விழிப்புணர்வு பார்க்கும் அனுபவத்தைப் பெறுவதற்காக ஆழமாக உழையுங்கள்.
சாக்ஷியாக இருக்கும் விழிப்புணர்வு நிலையை ஒரு கணமாவது உணர்ந்து விடுங்கள். ஒரே ஒருமுறை நீங்கள் அந்த அனுபவத்தை அடைந்துவிட்டீர்கள் என்றாலே போதும். அந்த அனுபவம் தீப்பந்தத்தைப் போன்றது.
சாக்ஷியாக இருக்கும் விழிப்புணர்வு நிலையை ஒரு கணமாவது உணர்ந்து விடுங்கள். அந்த ஒரு அனுபவம் தீப்பந்தத்தைப் போன்றது.
நாம் உடலைவிடும்போது, அந்த அனுபவமே ஏழு சரீரங்களின் வழியாக நம்மை அழைத்துச் செல்லும் தீப்பந்தமாக இருக்கிறது. ஏழு சரீரங்களையும் எந்தவித கஷ்டங்களும், தடைகளும் இல்லாமல் மிக அழகாகக் கடந்து செல்வோம். இந்தப் பாதை மூலமாக, இந்த வாழ்க்கையின் மூலமாக நம்மை வழிநடத்திச் செல்லும் வழிகாட்டியாக இந்த விழிப்புணர்வு என்ற தீப்பந்தம் செயல்புரிகிறது.