பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)
ஒளியின் வழியில் பயணம்
- 8.23 ஓ பரத வம்சத்தவர்களுள் சிறந்தவனே! நான் இப்போது, உலகை விட்டுச் செல்பவர்கள் எந்தெந்த நேரங்களில் சென்றால் மீண்டும் வருவதில்லை, எந்தெந்த நேரங்களில் சென்றால் மீண்டும் பிறக்கிறார்கள் என்பதை விளக்குகிறேன்.
- 8.24 ஓ! பார்த்தனே! 'த'க்கடவுள், ஒளியிருக்கும் நேரம், நல்ல நேரம், வளர்பிறை, சூரியன் வடக்கு நோக்கி நகரும் ஆறுமாத காலம் (உத்தராயண காலம்), இந்தக் காலங்களில் இறப்பவர்கள் முக்தியடைகிறார்கள். மிக உயர்ந்த அந்த பரவர்மத்தை உணர்ந்தவர்கள் திரும்புவதில்லை.
- 8.25 புகை, இரவு நேரம், தேய்பிறை, சூரியன் தெற்கு நோக்கிச் செல்கிற அறுமாத காலம் (தக்ஷிணாயன காலம்), இந்தக் காலங்களில் உடலைவிடும் யோகிகள் நல்ல காரியங்களைச் செய்திருந்தாலும் ஆக்ம சீரிம்வரை சென்று விட்டு, மீண்டும் இவ்வலகிற்கு திரும்பி வருகிறார்கள்.
- 8.26 வேதங்களைப் பொறுத்தவரை ஒருவர் இறக்கும்போது இரண்டு விதமாகப் பயணம் செய்யலாம். ஒன்று, ஒளியின் பாதை மற்றொன்று, இருளின் பாதை. ஒளியின் பாதையில் செல்பவர் திரும்புவதில்லை; இருளின் பாதையில் செல்பவர் மறு பிறவி எடுக்கிறார்.