KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)/ஞானமடைவதற்குச் சரியான நேரம்Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)

ஞானமடைவதற்குச் சரியான நேரம்

இந்தச் சில ஸ்லோகங்களில் கிருஷ்ணர், எந்த நேரத்தில் ஒருவர் ஞானத்தை அடைய முடியும், எப்படி ஒருவர் ஞானத்தை அடைய முடியும், எப்படி அந்த உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பவற்றை விளக்குகிறார். மேலும் அவர், மக்கள் பிறப்பு இறப்பு என்ற இந்தச் சுழற்சிக்குள் எப்படி வருகிறார்கள் என்பதையும் விளக்குகிறார்.

அவர் சொல்கிறார்:

எனும் சொல்,

நமது மனம்

சம நிலையில்

இருக்கும் நிலையைக்

குறிக்கிறது.

உயர்ந்த தெய்வீக சக்தியைப் பற்றி அறிந்தவர்கள் அக்னியின் ஆதிக்கத்தின் போதும், ஒளியிருக்கும் நேரத்தின் போதும், நல்ல நேரத்தின் போதும், வளர்பிறையின் போதும், சூரியன் வடக்கு நோக்கிப் பயணிக்கிற உத்தராயண நேரத்தின் போதும் உடலை விடுவதன் மூலம், ப்ரூற்றுத்தை, அந்த உயர்ந்த நிலையை அடைகிறார்கள்.

தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், இந்தக் காலக்கட்டங்கள் நமது கால அட்டவணையைச் சேர்ந்தது இல்லை. முக்தி அடைவது, கால அட்டவணையின்படிதான் என்று சொன்னால், காலத்தில் தற்கொலை செய்து கொண்டாவது போய்விடலாமே!

அப்படியல்ல அதன் பொருள். அந்த வார்த்தைகளுக்கு, அப்படியே நேரடியான அர்த்தத்தை எடுத்துக்கொள்ளக் கூடாது. இவற்றின் அர்த்தம் உருவகம் சார்ந்தவை. உத்தராயணம் எனும் சொல் நமது மனம் சம நிலையில் இருக்கும் நிலையைக் குறிக்கிறது.

கிருஷ்ணர் எந்த நேரத்தில் நமது மனம் முழுமையான சம நிலையில் இருக்குமோ, நமது மனத்தில் போராட்டம் இல்லாமல் இருக்குமோ, குறிப்பிடுகிறார்.

மஹாபாரதப் போரில், பீஷ்மர் தமது உடலை விடுவதற்கு காத்திருந்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அவர் ஜனவரி மாதத்திற்காகக் காத்திருந்தார் என்று மனப் போராட்டங்கள் அடங்கும்வரை காத்திருந்தார்.

இருப்புத் தன்மை முழுமையான விழிப்புணர்வுடன்,

உயிர்ப்புடன் இருந்தால் நீங்கள் மேலே செல்கிறீர்கள்.

போரில் அவர் வீழ்ந்து விட்டார். அம்புகளினாலான படுக்கையில் படுத்திருந்த அவர் மனத்தில் போராட்டம் இருந்திருக்க வேண்டும்.

அவர் மனத்தில், "யாருக்கு நான் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தேனோ, யாருக்காக நான் எல்லாவற்றையும் செய்தேனோ அந்த போன் இதைச் செய்தான்,'' என்ற போராட்டம் இருந்திருக்க வேண்டும். கண்டிப்பாக இந்த எண்ணங்கள் அவர் மனத்தில் அமைதியில்லா நிலையை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அவர் மனப்போராட்டத்தில் இருந்திருக்க வேண்டும்.

அதனால் அவர் தம் மனப்போராட்டங்கள் ஒயும்வரை காத்திருந்தார். இதைத்தான் அவர் உத்தராயணம்வரை காத்திருந்தார் என்ற சொற்களின் மூலம் விளக்கியிருக்க வேண்டும்.

இவை 'காலத்தை அடிப்படையாகக் கொண்ட கருத்துகள் அல்ல' என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இவை மனோ ரீதியானவை. இது

கால நேரத்தின் அடிப்படையில் அமைந்த தென்றால், அந்த மரணமடைகிறவர்கள் எல்லாம் ஞானமடைந்து என்று பொருளா என்ன ?

'ஞானமடைதல்' என்பது விபத்தல்ல ! அது

விழிப்புணர்வுடன்கூடிய தேர்வு !

அதனால் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், அக்னிர் ஜ்யோதிர்: ஸுக்ல: எனும்போது, அவர் குறிப்பிடுவது உயர் விழிப்புணர்வுடன் இருக்கிற நிலையைத்தான். உங்கள் உயிர், உங்கள் இருப்புத் தன்மை முழுமையான விழிப்புணர்வுடன், உயிர்ப்புடன் இருந்தால் நீங்கள் மேலே செல்கிறீர்கள். ( ஸுக்ல என்றால் மேலே செல்லல் ; க்ருஷ்ண என்றால் கீழே செல்லல் )