இனியும் மனிதராகவே இருக்க மாட்டீர்கள்
ஒரு சின்ன கதை:
ஒரு சந்யாஸி, அரசர் ஜனகரிடம் சென்றார். ஜனகா் ஞானம் அடைந்தவர். உலக இன்பங்களையும் ஞான நிலையையும் ஒரு சேர அனுபவிப்பவர். ஜனகரைப் பார்த்து அந்த சந்யாஸி கேட்டார். "உலக இன்பங்களை அனுபவிக்கும் உங்களை ஞானம் அடைந்தவர் என்று எப்படிச் சொல்ல முடியும் ?''
சந்யாஸிகளுக்கு உலக இன்பங்களை அனுபவிப்பவர்கள் மீது எப்போதுமே பொறாமை உண்டு! நீங்கள் உங்களுக்குள்ளேயே ஆனந்தத்தை அனுபவமாக உணர்ந்து, அதற்குப் பிறகு ஒரு தெளிவான உணர்வோடு உலகைத் துறந்து சந்யாஸத்திற்குப் போயிருந்தால் பொறாமை வராது.
ஆனால் நீங்கள் உள் உலகில் பயனுள்ள ஏதோ ஒன்று கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன், வெளி உலகிலிருந்து தப்பித்துக்கொண்டுபோய் சந்யாஸியாகி, ஆனால் அங்கேயும்கூட உறுதியான, நம்பும்படியான அனுபவம் கிடைக்காதபோது, நீங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.
உள் உலக ஆனந்தமும் கிடைக்காமல்,வெளி உலக உடைமைகளும் இல்லாமல் தற்பெருமையிலும் மாட்டிக்கொள்கிறீர்கள்.
இப்படிப்பட்ட மனிதர்கள், எப்படித் தங்களை ஆறுதல் படுத்திக்கொள்வார்கள் ? க்ருஹஸ்தர்களைத் திட்டவும் அவமரியாகை செய்யவும் க்ருஹஸ்தர்களிடம், ஒழுங்காகச் சாமான்களை வைத்துக் கொள்ளவில்லை. நீங்கள் அதைச் செய்யவில்லை, நீங்கள் இதைச் செய்யவில்லை, ' என்று சொல்கிறார்கள். இதனால்தான் எப்போதுமே சந்யாஸ வாழ்க்கையை மேற்கொண்டவர்கள் க்ருஹஸ்தர்களைக் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
எந்த மனிதருடைய உள் உலகில் ஆனந்தம் நிரம்பி வழிகிறதோ அவரை எந்த அசுத்தமும் நெருங்காது.
நீங்கள் எப்போதாவது சந்யாஸிகளைப் பார்த்துப் பொறாமைப்படுகிற க்ருஹஸ்தர்களைப் பார்த்து இருக்கிறீர்களா ? ஒருவரையும் பார்க்க முடியாது. ஆனால் க்ருஹஸ்தர்களின் மேல் பொறாமைகொள்கிற நூற்றுக்கணக்கான சந்யாஸிகளைப் பார்த்து இருக்கிறேன். ஏனென்றால் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒன்றை இழந்து விட்டதாக நினைக்கிறார்கள்.
சந்யாஸி ஜனகரிடம் கேட்டார், "உலக இன்பங்கள், ஆன்மீக இன்பங்கள் - இந்த இரண்டையுமே நீங்கள் அனுபவிக்கும்போது உங்களை நீங்கள் ஞானி என்று எப்படிச் சொல்லிக்கொள்ள முடியும் ?''
அதற்கு ஜனகா், ''தயவு செய்து என்னுடைய மாளிகையில் சில நாள்கள் தங்குங்கள். அதற்குப் பிறகு நான் உங்களிடம் பேசுகிறேன். இப்போது ஆடல், பாடலுடன்கூடிய பெரிய விருந்து நடந்து கொண்டிருக்கிறது. அதனால் என்னால் இப்போது தத்துவம் எல்லாம் பேச முடியாது, '' என்று சொன்னார்.
சந்யாஸி அரண்மனையிலேயே தங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் ஜனகர் அவரை ஒரு அறையில் தங்க வைத்து அவரது படுக்கைக்கு மேலே மெல்லிய நூலால்கட்டப்பட்ட கத்தி தொங்கவிடப்பட்டது.
உடனே அந்த சந்யாஸி, ''எதற்காக ஒரு கத்தியைச் சரியாக என் தலைக்குமேல் தொங்க விடுகிறீர்கள், '' என்று கேட்டார்.
அதற்கு அரண்மனை வேலையாட்கள், "அது எங்களுக்குத் தெரியாது. அது எங்கள் மன்னரின் ஆணை; நீங்கள் இங்குதான் தூங்க வேண்டும்," என்று சொன்னார்கள்.
சந்யாஸி அன்று இரவு முழுவதும் தூங்கவே இல்லை. எப்போது வேண்டுமானாலும் கத்தி தம் மீது விழுந்துவிடலாம் என்ற பயத்தால் தூங்காமல் உட்கார்ந்துகொண்டு இருந்தார்.
அடுத்த நாள் காலை ஜனகா், '' ஸ்வாமி, எப்படி இருக்கிறீர்கள். இரவு நன்றாக தூங்கினீர்களா ?'' என்று கேட்டார்.
சந்யாஸி, "நீங்கள் என்ன செய்தீர்கள் என்று உங்களுக்கே தெரியும். பிறகு எதற்காக இப்படிக் கேட்கிறீர்கள்? தலைக்கு மேலே ஒரு கத்தி தொங்கும்போது ஒரு மனிதர் எப்படி நிம்மதியாகத் தூங்க முடியும் ? தூக்கத்தைப் பற்றி நினைக்கவாவது முடியுமா?'' என்று கேட்டார்.
ஜனகர் சிரித்தார். "இறப்பு உங்கள் முன்னால் இருக்கிறது எனும்பொழுது உங்களால் எதுவுமே செய்ய முடிவதில்லை. உங்கள் மொத்த வாழ்க்கையுமே மாறி விடுகிறது. ஆனால் மரணம் என் முன்னால் இருக்கிறது என்பது எனக்குத் தெரிந்தாலும் நான் அதனால் பாதிக்கப்படுவதில்லை. கத்தி என் தலைக்கு மேலே தொங்குகிறது என்று எனக்குத் தெரியும். ஆனாலும் என்னுடைய மொத்த விழிப்புணர்வும் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் இந்த மாளிகையில் வாழ்கிறது. உங்களுக்கும் எனக்கும் இதுதான் வித்தியாசம்.
உங்களுக்கு ஒரேயொரு கத்தி தொங்கியதனால் இந்த அழகான படுக்கை, இந்த வசதிகள் இவற்றை உங்களால் அனுபவிக்க முடியவில்லை. நிம்மதியாக தூங்க முடியவில்லை. இவை அத்தனையும் வெளி உலகில் இருந்த போதிலும், என்னுடைய உள்ளுணர்வு இவற்றால் பாதிக்கப்படுவதில்லை. எனது ஆத்மா தூய்மையாக உள்ளது.
மாணத்தை அறிவுப்பூர்வமாக உணருங்கள். உங்கள் மொத்த சிந்தனையும் மாறும்.
ஏனென்றால் மரணம் என்பது எந்த நிமிடமும் நேரிடக்கூடிய ஒன்றுதான் என்பதும், மரணம் என் முன்னால் தொங்கிக்கொண்டு இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியும். நிமிடத்திற்கு நிமிடம் இந்த விழிப்புணர்வு எனக்கு இருப்பதனால், இந்த உலகாயத வாழ்க்கையை நான் முழுமையாகவும் ஆனால் அதே சமயம் அதில் சிக்கிக்கொள்ளாமலும் அனுபவித்து வாழ்கிறேன்," என்றார்.
அதனால்தான் நான் சொல்கிறேன், '' யம என்கிற காலன் நம் வாழ்க்கையில் ஒரு விசித்திரமான, ஆனால் நேர்மையான ஒழுங்கு முறையை ஏற்படுத்துகிறார். மரணம், வழக்கத்திற்கு மாறான ஆனால் ஒரு நேர்மையான ஒழுங்கு முறையை நம் மனத்தில் பதிய வைக்கிறது.''
மரணத்தை அறிவுப்பூர்வமாக உணருங்கள். உங்கள் மொத்த சிந்தனையும் மாறும். உங்கள் வாழ்க்கை முறையே முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டுவிடும். இந்த இடத்தை விட்டு நீங்கள் அதே மனிதராகப் போக வேண்டிய தேவை இல்லை. உங்கள் இருப்புத் தன்மையையே மாற்றி அமைத்துவிட முடியும். உங்கள் உள் மையம் தொடப்படும்.
கேள்வி: கிருஷ்ணர் மரணத்தின் ரகசியங்களை விளக்க ஆரம்பிக்கிறார்.
ஒரு மனிதருக்குள் ஒழுக்கத்தை ஆழப் பதிய வைக்கும் என்கிறீர்கள், பயத்தினால் வரும் ஒழுக்கத்தைக் குறிப்பிடுகிறீர்களா ? இந்த வகையான ஒழுக்கம்தானே உலகம் முழுவதும் பிரச்சினையை உண்டாக்குகிறது.
பதில்: மரணம். வழக்கத்திற்கு மாறான ஆனால் ஒரு நேர்மையான ஒழுங்கு முறையை நம் மனத்தில் பதிய வைக்கிறது.
இல்லை. இது அதற்கு நேர் மாறானது. பயத்தினாலோ, ஆசையினாலோ ஏற்படும் ஒழுக்கம் வெகுநாள்களுக்கு நிலைக்காது. அதனால்தான், பல மதங்கள் ஆன்மீகப் பாதையில் மக்களை வழி நடத்திச் செல்ல முடியாமல் இருக்கின்றன.
ஆத்மாவின் அழிவற்ற தன்மையையோ, மறுபிறவியையோ நம்பாத மதங்கள்தான் மனிதர்களின் பேராசையையும் பயத்தையும் பயன்படுத்தி அவர்களைக் கட்டுப்படுத்துகின்றன. நீங்கள் அந்த மதங்களுடைய போதனைகளைப் பின்பற்றி நடந்தீர்களானால், உங்களை நல்லவர் என்றும், அதனுடைய சட்டதிட்டங்களை நீங்கள் உடைத்து விட்டடீர்களானால், உங்களைக் கெட்டவர் என்றும், நல்ல மனிதன் சொர்க்கத்திற்குப் போகிறார், கெட்ட மனிதன் நரகத்திற்குப் போகிறான் என்றும் அவை சொல்கின்றன.
அவர்களின் வேதநூல்களிலேகூட மதங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மனிதர்கள்தான், மக்களைத் தங்கள் மதங்களைப் பின்பற்றச் செய்வதற்காக இது போன்ற வழி முறைகளைக் கையாள்கிறார்கள்.
நான் ஏற்கெனவே சொன்னதுபோல், சொர்க்கமும், நரகமும் நமது மனத்தில்தான் உள்ளது. மக்கள் தவறான வழியில் நடக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் ஏற்கெனவே நரகத்தில்தான் இருக்கிறார்கள். அவர்களின் மன நிலைதான் நரகத்தின் நிலையுங்கூட! அதனால் நரகத்திற்குச் செல்ல அவர்கள் இதற்கு மேல் வேறு எதுவும் செய்ய வேண்டிய தேவை இல்லை.
நமது எண்ணங்களும் சொற்களும் செயல்களும்தான் நமது நடத்தையைத் தீர்மானிக்கின்றன. அதுவே, இந்தப் பிறவியிலும், இனி வரும் பிறவியிலும் சரி நம்மை நாமே மேலெடுத்துச் செல்வதற்குக் காரணமாக இருக்கிறது. அல்லது நம்மை நாமே மனச் சோர்வில் ஆழ்த்திக்கொள்வதற்குக் காரணமாக இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொண்ட அந்தக் கணக்திலேயே யம என்கிற ஒழுங்குமுறை நமக்குள் நிகழ்கிறது.
யம என்கிற ஒழுங்குமுறை பயத்தின் காரணமாகவோ அல்லது ஆசையின் காரணமாகவோ ஏற்படும் வழிமுறைகளின் தொகுப்பு அது.
இந்த வழிமுறைகள், 'தன்னை-உணர்தல்' என்கிற நம்மை நாமே உணர்ந்து கொள்கிற நிலைக்கு நம்மை வழிநடத்திச் செல்கின்றன.
இந்த நியதிகளை நாம் வலுக்கட்டாயமாகத் திணிக்க முடியாது. முதலில் நாம் அதைப் புரிந்துகொள்ள வேண்டும், ஆழமாக உள் வாங்க வேண்டும், பிறகு நடைமுறையில் பயிற்சி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இந்த ஆன்மீகம் சார்ந்த வழிமுறைகளுக்கும் மதம் சார்ந்த சட்டதிட்டங்களுக்கும் பெரிய வேறுபாடு இருக்காது.
ஒரு மனிதர் அவர் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, விடுதலைக்காகவே, தம்முடைய சொல், செயல், எண்ணங்களில் சத்தியத்தைக் கடைப்பிடித்தே ஆக வேண்டியுள்ளது.
நாம் சத்தியத்திற்குள் ஆழ மூழ்கி விட்டால், அதற்குப் பிறகு நாம் பேசுகிற சொற்களையோ, நமது எண்ணங்களையோ வடிகட்டத் தேவை இல்லை.
இன்றைய நிலையில், நாம் எல்லோரும் நாம் யாரிடம், எங்கே, எப்படிப் பேசுகிறோம் என்பதை யோசித்து கவனமாகப் பேச வேண்டியிருக்கிறது. சொற்களை அளந்து பேச வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் அவை சரியாக இருக்கும்.
யம என்கிற ஒழுக்கம் நமக்குள் பயத்தினாலோ அல்லது ஆசையினாலோ ஏற்படுவதல்ல. 'நம்மை நாமே உணர்வதற்கான' வழிமுறைகளின் தொகுப்பு அது.
ஏனென்றால் உண்மையைப் பேசுகிற பக்குவம் நம்மிடத்தில் இல்லை. நாம் பேசுகிற வார்த்தைகள், மற்றவர்களுக்குள் அதிருப்தியையும் கோபத்தையும் உண்டாக்கிவிடக் கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்கிறோம். அதனால்தான், நாம் மற்றவர்களிடம் பேசும்போது நாம் நமது எண்ணங்களையும் சொற்களையும் வடிகட்ட வேண்டியுள்ளது.
விளைவுகள் மற்றும் எதிர்ச் செயல்கள் எதுவாக இருந்தாலும் சரி, 'இனிமேல் நான் உண்மையைத்தான் பேசப் போகிறேன். நாம் பேசுவது எதுவாக இருந்தாலும் சரி உண்மையைத் தவிர வேறெதையும் பேசப் போவதில்லை' என்கிற தீர்மானத்தை மட்டும் நாம் எடுத்துவிட்டோமானால், நாம் மற்றவர்களிடம் பேசும்போது, நமக்குள் ஒரு தயக்கமோ, அல்லது வார்த்தைகளை வடிகட்ட வேண்டிய அவசியமோ இருக்காது.
தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், நாம் உண்மையைப் பேசும்பொழுது இயற்கையாகவே அஹிம்ஸை என்பது யம என்ற ஒழுக்க கோட்பாட்டிலுள்ள இரண்டாவது நியதியாகும். நாம் பேசும் உண்மைகள் யாரையும் புண்படுத்தவோ, யாருக்கும் தீங்கு செய்யவோ செய்யாது.
நமது உள் உலகம் மிகத் தூய்மையாக இயங்கும்போது, நம்மிடத்திலே எந்த எதிர்மறை எண்ணங்களும் இருக்காது.
நமது உள்ளத்தில் எழும் எல்லா எண்ணங்களிலும் இரக்கமும், கருணையும் மட்டுமே பொங்கிக்கொண்டிருக்கும்.
கண்டிப்புடன் திண்க்கப்படும் ஆன்றீக வழிமுறைகளுக்கும், மதம் சார்ந்த சட்டதிட்டங்களுக்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் கிடையாது.
உண்மையையே பேசும் ஒருவர் மற்றவர்களைத் தாக்கக்கூடியவராகவும், மற்றவர்களுக்குத் தீங்கிழைக்கக் கூடியவராகவும், ஒருபோதும் இருக்க மாட்டார்; இருக்கவும் முடியாது.
யம ஒழுக்கத்தின் ஐந்து நியதிகளுமே ஒன்றை ஒன்று ஒத்தும் இணைந்தும், ஒன்றையொன்று நிறைவு செய்து கொள்பவையாகவும் இருக்கின்றன. அவை ஒன்றுக்கொன்று என்றுமே முரண்படுவதில்லை.
ஸத்யத்தின் பாதையில் நடக்க ஆரம்பித்தாலே