Part 2: Bhagavad Gita Explained
போதும், நாம் பிறர் மேல் கருணை உடையவர்களாகவும் விரும்பாதவர்களாகவும் ஆகி விடுவோம். 'நம் சக்திக்குள் வாழ வேண்டும், ஆசைகளாலும், தேவைகளாலும் அலைக்கழிக்கப்படக் கூடாது' என்ற உண்மையை நோக்கி ஸத்யம் நம்மை அழைத்துச் செல்லும்.
நாம் கற்பனைகளில் சிக்கிக்கொள்ளாமல். நிஜத்தை அதாவது ப்ரஹ்மசர்யத்தை நோக்கி நம்மை ஸத்யம் அழைத்துச் செல்லும். இது மிகவும் எளிமையானது. நான் சொல்லும் இந்த ஒழுக்கம்தான் மரண பயக்கைப் போக்குகிறது.
மரணத்தை பயமோ ஆசையோ இல்லாமல் ஏற்றுக் கொள்ளும் தன்மைதான். வாழ்வையும் பயமோ, ஆசையோ இல்லாமல் நாம் வாழ அனுமதிக்கிறது.
இந்த ஒழுக்கம்தான் நம்மை விழிப்புணர்க்குள் எடுத்துச் செல்கிறது.
'எதைப்பற்றிய விழிப்புணர்வுக்குள் எடுத்துச் செல்கிறது' என்று நீங்கள் கேட்கலாம். இந்த உலகிற்கு வரும்போது நாம் என்னகொண்டு வந்தோம் ? உடையில்லாமல், எந்த உதவியுமில்லாமல், அழுதுகொண்டு யாராவது நம்மைப் பார்த்துக்கொள்ள மாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டும்தானே வந்தோம். இல்லையா ? !
நம்முடைய நிலையே இப்படி இருக்கும்பொழுது, நாம் இந்த உலகத்தை விட்டுச் செல்லப்போகும் விதத்தைப்பற்றி மட்டும் எப்படி நம்மால் ஊகிக்க முடியும் ? அது மட்டுமல்ல, நாம் ஊகிக்க இதில் என்ன இருக்கிறது ? நாம் வந்ததைப்போலவே எதுவும் இல்லாமல்தான் போகப் போகிறோம்.
'இந்த உலகை விட்டுப் போகும்போது நமது உடைமைகளை நாம்தான் எடுத்துச் செல்லப் போகிறோம்' என்று நினைக்கிற அளவுக்கு இங்கு யாருமே முட்டாள்கள் இல்லை.
அலெக்ஸாண்டர், கிரேக்க மன்னா்' தாம் இறப்பதற்கு முன்பு ஒரே ஒரு வேண்டுகோள் வைத்தார். ''நான் இறந்த பிறகு என்னுடைய உடல் இறுதி ஊர்வலமாக தெருக்களில் எடுத்துச் செல்லப்படும்பொழுது, எனது வெறுமையான கைகளை மக்களுக்குத் தெரியுமாறு விரித்து வையுங்கள். ஏனென்றால் மாமன்னர் அலெக்ஸாண்டரால்கூட தாம் இறக்கும்போது தம்முடன் எதையும் எடுத்துச் செல்ல முடியவில்லை என்பதை மக்கள் உணர்ந்துகொள்ளட்டும்,'' என்றாராம்.
நாம் வரும்போது வாது எதையும்கொண்டு வரவில்லை. எதையும்கொண்டு போகப் போகப் போவதில்லை என்ற பொருட்களைச் சேர்க்க வேண்டும் என்ற ஆசை நமக்கு இருப்பதில்லை.
நாம் அதிகமாகப் பொருள் சம்பாதிக்க வேண்டும், நமது சொந்தமாக்கிக்கொள்வதன் அடுத்தவரைவிட செல்வாக்கும் வேண்டும் என்ற ஆசையும் நம்மை விட்டுப் போய்விடும். நாம் வெறுங்கையோடுதான்
உங்களிடம் இருப்பதை அனுபவியுங்கள் : ஆனால் அவற்றைச் சேர்த்து வைக்காகீர்கள்.
போகப் போகிறோம் என்பது புரிந்தாலே இவை எல்லாம் அர்த்தமற்றவை என்பதும் புரிந்துவிடும்.
உங்களிடம் இருப்பதை அனுபவியுங்கள் ஆனால் அவற்றைச் சேர்த்து வைக்காதீர்கள்.
நிகழ்காலத்தில் இருங்கள். ஆனந்தமாக இருங்கள்.
இறப்பைப் பற்றிய புரிதல் இந்த ஒழுங்குமுறையைத்தான் நமக்குள்கொண்டு வருகிறது.
அதற்குப்பின் மரணத்தைப் பற்றிய பயம் இருப்பதில்லை. ஏனென்றால் மரணம் என்பது தவிர்க்க முடியாத நிச்சயமான ஒரு விஷயம்; நமது வாழ்க்கைப் பாதையில் இடையில் நிகழ்கிற ஒரு சடங்குதான்; குழுந்தைப் பருவம், நடுத்தர வயது, முதுமைப் பருவம் என்பதுபோல் நம் வாழ்க்கையில் அதுவும் ஒருநிலைதான் என்ற புரிதல் நமக்குள் மலர்ந்து விடுகிறது.
வாழ்க்கையிலிருந்து எத்தனை இன்பத்தைப் பெற முடியுமோ, அத்தனை இன்பத்தையும் இந்தப் பிறவியிலேயே பெற்றுவிட வேண்டுமென்ற பேராசை நமக்குள் இருப்பதில்லை. வாழ்விலிருக்கும் மொத்த இன்பத்தையும் சாரத்தையும் இந்தப்பிறவிலேயே பிழிந்தெடுத்துவிட வேண்டும் என்று நம்மை விரட்டிக் கொண்டிருக்கும் பேராசைக்கும் இனி இங்கு இடமில்லை.
இந்தப் பிறவியில் அடையவில்லை என்றால், இந்த வாய்ப்பை நமுவ விட்டுவிட்டோமானால் இனி மறு வாய்ப்பு கிடைக்காது என்ற கண்மூடித்தனமான பயத்திற்கும் இனி இடமில்லை. நமது ஆத்மா ' நிலையானது' என்பதை நாம் புரிந்துகொள்வதால், நாம் எதற்கும் அவசரப்படுவதில்லை.
அதனால்கான், இறப்பது எப்படி என்பதைப் புரிந்துகொள்ளும்போதுதான், வாழ்வது எப்படி என்பதையும் உண்மையில் புரிந்துகொள்ள முடியும் என்கிறேன்.
மரணத்தை பயமோ, பயமோ, ஆசையோ இல்லாமல் ஏற்றுக்கொள்ளும் தன்மைதான், நாம் வாழ்வை= பயமோ, ஆசையோ இல்லாமல் வாழ நம்மை அழைகிக்கிறது.
இந்த ஒழுங்குமுறைதான் நம்மை முக்தியடையச் செய்கிறது. எந்தச் சமுதாயமும், எந்த மதமும் தமது சட்ட திட்டங்களால் நம்மைக் கட்டுப்படுத்த முடியாது. நம்முடைய சொந்த விழிப்புணர்வினால் மட்டுமே நம்மை நாமே ஒழுங்குபடுத்திக் கொள்கிறோம்.
அதனால்தான், மரணத்தை அச்சமில்லாமல் எதிர்கொள்வோரை மதங்களும், சமுதாயமும் அச்சத்தோடு பார்க்கின்றன.
நாம் மரண பயத்தை விட்டுவிடும் அந்தக் கணம்மே, இந்தச் சட்டதிட்டங்களை உருவாக்கிய அதிகார அமைப்புகள், நம்மேல் வைத்திருக்கும் தங்கள் கட்டுப்பாட்டை இழந்து விடுகின்றன. அதற்குப்பிறகு அவர்களால் நம்மைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.
நம்முடைய மரண பயம், நம்முடைய அடையாளத்தை நாம் இழந்து விடுவோமோ என்கிற பயம், இந்த இரண்டுவித பயங்களை வைத்துத்தான் கட்டுப்படுத்துகின்றன.
அந்தப் பிடிமானம் உடைந்து போய் விட்டால் அவை நம்மைக் கட்டுப்படுத்த முடியாது. நாம் சுதந்திரமானவர்கள் ஆகி விடுகிறோம்.
நம்முடைய சொந்த விழிப்புணர்வினால் மட்டுமே நம்மை நாமே ஒழுங்கு படுத்திக்கொள்கிறோம்.
உங்கள் கடைஎண்ணமே உங்கள் மறு பிறவியின் தொடக்கம்
8.3. பகவான் சொல்கிறார்:
அழிக்க முடியாததும், எல்லாவற்றையும் கடந்ததுமான ஒன்றே ப்ரஹ்மம் என்று அழைக்கப்படுகிறது. அதன் நிலையான தன்மையே ஆத்மா என்று அழைக்கப்படுகிறது.
பொருள் சார்ந்த உலகத்தின் வளர்ச்சி தொடர்பான செயல்கள் அல்லது பலன்களை அடிப்படையாகக் கொண்ட செயல்கள் கர்மா என்று அழைக்கப்படுகிறது.
- 8.4. உடலின் இயல்பே முடிவில்லாமல் மாறிக் கொண்டிருப்பதுதான். அந்த இந்தப் உயிர்களின் இதயத்திற்குள்ளும் நானே !
- 8.5. மரணத்தறுவாயில் யாரொருவர் என்னை நினைத்துக்கொண்டே உயிர் விடுகிறாரோ அவர் உடனடியாக எனது தன்மையை அடைந்து விடுகிறார்.
இதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.
8.6. மரணகாலத்தில் என்னை நினைத்துக்கொள்கிறாரோ, அவர் நிச்சயமாக என்னை அடைவார்.
நீங்கள் பூமிக்கு வந்த வேலை உங்களுக்கு நினைவிருக்கிறதா?
மரண சமயத்தில் என்ன நிகழ்கிறது என்று அறிந்துகொள்ளுவதற்கு முன், நாம் இந்த உடலை எப்படி எடுக்கிறோம் என்பதையும் இந்த உடலை வைத்துக்கொண்டு எப்படி வாழ்கிறோம் என்பதையும் இந்த உடலை எப்படி விட்டுச் செல்கிறோம் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
நன்கு புரிந்துகொள்ளுங்கள், நாம் நமது மொத்த உடலையும் ஸம்ஸ்காரங்கள் எனப்படும் பயம், ஆசை, குற்ற உணர்ச்சி போன்ற எண்ணப் பதிவுகளினாலேயே உருவாக்குகிறோம். நம்முள் எந்த ஸம்ஸ்காரங்கள் இருக்கிறதோ, அதை வாழ்வதற்கும் மகிழ்ச்சியுடன் அனுபவிப்பதற்கும் ஏற்ற உடலைத்தான் உருவாக்கிக்கொள்கிறோம். இந்த உடல் நமது ஸம்ஸ்காரங்களைப் பொறுத்துதான் உருவாக்கப்படுகிறது.
மரணகாலத்தில் ஒருவர் தம் உடலைவிடும்போது எதை நினைத்துக் கொள்கிறாரோ, அந்த நிலையையேயே மறுபிறவியிலும் நீச்சயமாக அடைகிறார்.
பிரச்சினை நமது உடலை உருவாக்கி, வாழ்க்கையை வாழும்போது, எந்த எந்த நாம் உடலை உருவாக்கிக் கொண்டோமோமோ அவற்றை மட்டும் நாம் வாழ்வதில்லை. அவற்றோடு மேலும் புதிய ஸ்ம்ஸ்காரங்களையும் சேர்த்துக்கொள்கிறோம். நமக்குத் தேவையான பொருட்களை வாங்க கடைத்தெருவுக்குச் செல்கிறோம்.
செல்கிற சந்திக்கிறோம். அப்போது நண்பரைச்
அவர் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த சில இடங்களின் பெயரைச் சொல்லி அங்குப் போகலாம் என்று நம்மை அழைக்கிறார். நாமும் அவர் சொல்கிற இடங்களுக்கு எல்லாம் இங்கேயும் அங்கேயுமாகப் போய் பணத்தை எல்லாம் செலவழித்து விடுகிறோம்.
கடைசியாக நாம் வாங்க வேண்டிய பொருட்களை வாங்க நினைக்கும்போது நம் கையில் பணம் இருக்காது. அடுத்து நமக்கு இருக்கும் ஒரே வழி நம் கையிலிருக்கும் கிரெடிட் கார்டுதான். கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி நமக்குத் தேவையானவற்றை
வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து விடுகிறோம். ஆனால் அந்தப் பணத்தைக் கட்டி முடிப்பதற்கே மீதி வாழ்க்கையைச் செலவழிக்கிறோம்.
கிரெடிட் கார்டு என்பதே நம்மைத் தொடர்ந்து ஓடவைக்கிற ஒரு தந்திரமான நட்பம்தான். அது நம்மைத் தொடர்ந்து ஓடச்செய்வதற்காகவே உருவாக்கப்பட்ட ஒரு தந்திரமான நுட்பம். அதைப் பற்றி இப்போது பேச வேண்டாம். அது ஒரு தனி சப்ஜெக்ட். இச்சா சீக்தி அதாவது ஆசைகளின் சக்தியைப் பற்றி பேசலாம்.
திரும்பவும் கதைக்கு வருவோம். வீட்டுக்குத் திரும்பி வந்த பிறகுதான் நமக்குத் தேவையான பொருட்களை நாம் வாங்கி வரவில்லை என்பதையே உணர்கிறோம்.
பத்தாயிரம் நினைத்துப் போனோமோ அதை மட்டும் வாங்கியிருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது. ஆனால் வழியில் நம் நண்பரைப் பார்த்து அவருடைய ஆசையையும் சேர்த்து நாம் வாங்கிக்கொண்டோம்.
நாம், நம் உடலின் மூலமாக அவருடைய ஆசைகளைப் பூர்த்தி செய்தோம். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், அவருடைய ஆசைகளையே நாம் நிறைவேற்றினோம். நம்முடைய ஆசைகளை அல்ல.
நமது பணம், நேரம், சக்தி எல்லாவற்றையும் பயன்படுத்தினோம். நம்முடைய ஆசைகளையும் தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ளவேயில்லை. ஆனால் அதைச் செய்து முடித்ததற்குப் பிறகுதான் நம்முடைய வாழ்க்கைச் சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்குத் சக்தி, பொருள் இவற்றிற்குப் பற்றாக்குறை ஏற்பட்டு விட்டதை உணர்கிறோம்.
கடவுள், நமக்குத் தேவையான எல்லாவற்றையுமே கொடுத்துத்தான் நம்மை இந்தப் பூமிக்கு அழைப்புகிறார்.
இதேபோலத்தான் நம்முடைய ஆசைகளை,
ஸம்ஸ்காரங்களை நிறைவேற்றிக்கொள்வதற்குத் தேவையான சக்தியோடுதான் நாம் இந்தப் பூவுலகிற்கு வந்திருக்கிறோம். இதைக்குறிக்கும் விதமாகவே பெரிய ஜைன ஞானியான மஹாவீரரும் "கடவுள் உங்களை ஒருபோதும் வெறுங்கையுடன் அனுப்புவதில்லை, " என்று சொல்கிறார்.
கடவுள் நமக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுத்துத்தான் அனுப்புகிறார். என்னென்ன ஸ்ம்ஸ்காரங்களை நாம் கொண்டு வாருகிறோமோ, அவற்றை நிறைவேற்றுவதற்கான சக்தியையும் சேர்த்துத்தான் நாம் நம்மோடுகொண்டுவருகிறோம்.
உங்களின் ஆசைகளை வாழக் கற்றுக்கொள்ளுங்கள்
காமா என்பது பல பிறவிகளாக நாம் சேர்த்து வைத்திருக்கும் நிறைவேறாத ஆசைகளாகும். அந்த நிறைவேறாத ஆசைகள்தான், நம்மை மீண்டும் மீண்டும் பிடித்து இழுக்கின்றன. அவற்றை நிறைவேற்றிக்கொள்வதற்காக நாம் மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டியுள்ளது.
ஸஞ்சித காமா, ஆகாம்ய காமா, ப்ராரப்த காமா என்று மூன்று வகையான காமாக்கள் உள்ளன. மொத்த இருப்பாகும். நமது அலுவலக அலமாரியில் எதிர்காலத் தேவைக்காக அதாவது எதிர்கால ஆய்வுக்காக பாதுகாப்பாக சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் ஃபைல்களைப் போன்றது.
ப்ராரப்த காமா என்பது இந்தப் பிறவியில் அனுபவிப்பதற்காக நாம் கொண்டு
வந்திருக்கும் ஆசைகளாகும். தினமும் நாம் எளிதில் எடுத்து, வேலைசெய்வதற்கு ஏற்ற வகையில் நமது மேஜை இழுப்பறையில் வைக்கப்பட்டிருக்கும் ஃபைல்களைப் போன்றது இது.
ஆகாம் காமா என்பது ஒவ்வொரு பிறவியிலும் நாம் உருவாக்கும் புதிய காமாக்கள்; இப்போது புதிதாக செய்துகொண்டிருக்கும் வேலைகளுக்காக உருவாக்கி வைத்திருக்கும் புதிய ஃபைல்கள் இது.
இந்த மூன்று விதமான காமாக்களையும் நாம் முழுவதுமாக அனுபவித்துத் தீர்த்தால் மட்டுமே ஞானம் அடைய முடியும்.
ஸஞ்சித காமா என்பவை பல பிறவிகளாக நாம் சேர்த்து வைத்திருக்கும் ஆசைகள். ப்ராரப்த காமா இந்தப் பிறவியில், இந்த வாழ்வை வாழ்வதற்காக நாம் கொண்டு வந்திருக்கும் ஆசைகள். ஆகாம்ய காமா என்பது நாம் இந்தப் பிறவியில் புதிதாகச் சேர்க்கும் ஆசைகள்.
ப்ராரப்த காமா என்பது 'ஒபனிங் பேலன்ஸ்'போல. இந்தப் பிறவியில் அவற்றை நிறைவேற்றிக்கொள்வதற்குத் தேவையான சக்தியோடுதான் வந்திருக்கிறோம். பிறகு ஏன் நாம் இந்த வாழ்வை நிறைவாக உணர்வதில்லை ? ! இந்த வாழ்க்கை போதாதென்று ஏன் நினைக்கிறோம் ?
பிரச்சினை என்னவென்றால் இங்குக் கீழிறங்கி வந்த பிறகு நாம் எந்த ஆசைகளை, எந்த ஸம்ஸ்காரங்களை வாழ்ந்து தீர்ப்பதற்காக வந்தோம் என்பதை நாம் மறந்து விடுகிறோம்.
நாம் கொண்டு வந்த ஸம்ஸ்காரங்கள், ஆசைகள் - மட்டுமல்லாமல்
குடும்பத்தினரிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும், சமுதாயத்திடமிருந்தும் ஆசைகளை மற்றவர்களுடைய ஆசைகளை நிறைவேற்றுவதற்காக நாம் உழைக்கிறோம்.
உதாரணமாக, நமது பக்கத்து வீட்டுப் பெண்மணி ஒரு புதுப்புடவை கட்டினால், நான் பாரதத்தில் அமெரிக்காவில் பக்கத்து வீட்டுக்காரர் யார் என்றுகூட தெரியாது. ஒக்லஹாமாவில் உள்ள ஒரு பக்தர் என்னிடம் சொன்னார். அவர்
ஸஞ்சிதம், ப்ராரப்தம், ஆகாம்யம் இந்த மூன்று விதமான காமாக்களையும் நாம் முழுவதுமாக அனுபவித்துத் தீர்த்தால் மட்டுமே ஞானம் அடைய முடியும்.
பக்கத்து வீட்டுக்காரர் இறந்து போனதே ஆறு மாதங்கள் கழித்துதான் அவருக்குத் தெரிந்ததாம்.
ஹிந்து வாழ்க்கை முறை முற்றிலும் வேறானது. பக்கத்து வீட்டுப் பெண்மணி ஒரு புதுப்புடவை வாங்கினால் நாமும் வாங்க வேண்டும் என்று நினைக்கிறோம். அந்தப் பெண்மணியின் ஆசையை நாம் வாழ ஆரம்பிக்கும்போது இயற்கையாகவே பணம், சக்தி, நேரம் என்று எல்லாமே பற்றாக்குறை ஆகிறது.
மற்றவருடைய ஆசைகளை நாம் வாழும்போது நமக்குள் ஆழமான அதிருப்தியை உணர்கிறோம். ஏனென்றால் நாம் கொண்டு வந்து இருக்கிற சக்தி அதற்குப் போதுமானதாக இருப்பதில்லை.
விளம்பரங்கள், நம்மை ஏழைகள் ஆக்குகின்றன. ஆனால் விளம்பரம் செய்பவர்கள் பணக்காரர்கள் ஆகிவிடுகிறார்கள். நாம் கடைக்குச் செல்லும்போது ஒரு திட்டத்தோடும், அதற்குத் தேவையான பணத்தோடும் போகிறோம். ஆனால் திடீரென்று நம்முடைய திட்டம் மாறி விடுவதால், இயற்கையாகவே பற்றாக்குறை அதேபோல நாம் கொண்டு வந்த ஆசைகளை மறந்து விட்டு சமுதாயத்திலிருந்து மேலும் மேலும் ஆசைகளை வாங்கிச் சேர்த்துக்கொள்கிறோம்.