KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)/மிகப்பெரிய விடுதலையுணர்வை அடைவீர்கள்Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)

மிகப்பெரிய விடுதலையுணர்வை அடைவீர்கள்

ஒரு சின்ன கதை!

போதி தர்மா சைனாவுக்குச் செல்கிறார். சைனாவின் அரசர் போதி தர்மாவின் பக்தர். அந்த மன்னர் புத்த மதத்தைச் சைனாவில் பரப்புவதற்கு மிகச் சிறந்த சேவை செய்துள்ளார். நிறைய பணம் செலவு செய்து, நிறைய கோயில்களையும் ஆசிரமங்களையும் கட்டி மக்கள் அந்த மதத்தைப் பின்பற்றச் செய்தார்.

போதிதர்மா அவருடைய மாளிகைக்குச் சென்றபோது, அரசர் அவருக்கு வெகு சிறப்பான வரவேற்பு கொடுத்தார். பிறகு கேட்டார், ''குருவே! புத்த மதத்தைப் பரப்புவதற்காக நான் எவ்வளவோ செய்திருக்கிறேன். நான் இறக்கும்போது என்ன நடக்கும் ? நான் சொர்க்கத்தை அடைவேனா ?'' என்று கேட்டார்.

''நீ மிக மோசமான நரகத்தைத்தான் அடைவாய்!'' என்றார் போதிதர்மா.

மன்னர் அதிர்ச்சியடைந்தார். அவர் என்ன பொருளில் சொன்னார் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள், அரசருடைய கேள்வியில், அவருடைய அறக்காரியங்களுக்கான பிரதிபலன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. போதிதர்மா தம்மைப் பார்த்து, அதற்கான பரிசைக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பில்தான் அவர் பல சேவைகளைச் செய்திருந்தார்.

நான் மக்களிடம் சொல்வதுண்டு ஒரு அரைமணி நேரம், வெறும் அரை மணி நேரம் எதையும் எதிர்பார்க்காமல் ஏதாவதொரு பணியைச் செய்யுங்கள். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஒரு ஓவியம் வரைகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். உடனே, ''ஒ! எத்தனை பேர் இதைப் பாராட்டுவார்கள் ? ஒரு ஆர்ட் காலரி ஆரம்பிக்க வேண்டும் என்றால் இது போன்று எத்தனை ஓவியங்கள் வரைய வேண்டியிருக்கும் ?'' என்று கணக்குப் போடாதீர்கள். அப்படி எந்தக் கணக்கும் இல்லாமல் ஏதாவதொரு செயலில் அரைமணி நேரம் ஆழ்ந்து விடுங்கள்!

எதையும் எதிர்பார்க்காமல் அதைச் செய்வதில் உள்ள ஆனந்தத்திற்காகவே ஒன்றைச் செய்து பாருங்கள். எவ்வளவு பெரிய விடுதலையுணர்வை அடைவீர்கள் எனப் புரியும்.

உங்களுக்குள் ஒரு புதிய உலகம் திறப்பதை உணர்வீர்கள். எனதையும் எதிர்பார்க்காமல் அதைச் செய்வதில் உள்ள ஆனந்தத்திற்காகவே ஒன்றைச் உங்களுக்குள் எப்படிப்பட்ட விடுதலை உணர்வை ஏற்படுத்துகிறது என்பதைப் பாருங்கள்.

எவ்வளவு பெரிய விடுதலையுணர்வை அடைவீர்கள் எனப் புரியும். மெதுவாக இது உங்கள் மனத்தில் பதியும்போது நீங்கள் எதைச் செய்தாலும் அதில் ஆழ்ந்து விடுவீர்கள்.

இந்தப் புரிதல் உங்களுக்குள் ஆழமான பதிவை ஏற்படுத்தும்போது, நீங்கள் எதைச் செய்தாலும் அனுபவித்துச் செய்வீர்கள். ஆனந்தத்துடன் அனுபவித்துச் செய்யும் செயல் எதுவாக இருந்தாலும், அது சிறப்பாகவே இருக்கும். அதற்குப் பிறகு நீங்கள் மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்பட மாட்டீர்கள். உங்களைப் பற்றி யார் எதை நினைத்தாலும் பெரியதாகவே எடுத்துக்கொள்ள மாட்டீர்கள்.