KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)/பக்தியணர்வே கடைசி காலத்திற்கும் உதவிடும்Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)

பக்தியணர்வே கடைசி காலத்திற்கும் உதவிடும்

இந்தக் கடைசி சில ஸ்லோகங்களில் கிருஷ்ணர் மொத்த அத்தியாயத்தையும் தொகுத்துச் சொல்லி விடுகிறார். அவர் 'ஒ ப்ரீத்தாவின் மகனே! இந்த இரண்டு விதமான பாதைகளையும் அறிந்தவர்கள் தடுமாறுவதில்லை. அதனால் அர்ஜுனா! எப்போதும் நீ பக்தியில் நிலைத்து இரு, '' என்று சொல்கிறார்.

கிருஷ்ணர் இதன் மூலம் என்ன சொல்கிறாரென்றால். இந்த உடலைவிட்டுச் செல்லும்போது உயிர் செல்லக்கூடிய இந்த இரண்டு பாதைகளையும் அறிந்த ஒருவர் எப்போதுமே இறப்புக்குத் தயாராய் இருப்பார் என்பதுதான்.

அவர், தம்முடைய வாழ்நாள் முழுவதும் பக்தியிலேயே மூழ்கி, தமக்குள்ளேயே கரைந்து விடுவதால், பிறப்பு, இறப்பு சுழற்சியிலிருந்து விடுதலை அடைகிறார்.

கிருஷ்ணர், முதலில் மரணத்தைப் பற்றிய பட்டறிவுப்பூர்வமான புரிந்துகொள்ளுதலை அர்ஜுனனுக்குக் கொடுத்து விடுகிறார். உடலைவிடும் நேரத்தில் எந்த எண்ணம் எழுகிறதோ அந்த எண்ணம்தான், உயிர் தனது அடுத்த உடலை தேர்ந்தெடுக்கச் செல்லும் பாதையை ஒழுங்குபடுத்துகிறது என்று தெளிவாகச் சொல்கிறார்.

நம்முடைய வாழ்நாள் முழுவதும் நாம் பக்தி வைராக்கியத்தில் மனத்தைச் செலுத்தியிருந்தாலொழிய கடைசி வினாடியில் வருகிற எண்ணம் தெய்வீகமானதாக இருக்காது என மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.

வாழ்க்கை முழுவதும் ஆழமான பக்தியினால் தமக்குள்ளே ஆழ்ந்துவிடும் ஒருவர், பிறப்பு, இறப்பு சுழற்சியிலிருந்து விடுதலை அடைகிறார்.

நான் பக்தி வைராக்கியம் என்று சொல்லும்போது சேவையைவிட ஈடுபாட்டைக் குறிப்பிடுகிறேன். பணத்தைத் தானம் செய்தால் நன்மை கிடைக்கும் என்று சொன்னதற்காக தானம் செய்யாதீர்கள். எந்தச் சட்ட திட்டங்களையும் குருட்டுத்தனமாகப் பின்பற்றாதீர்கள். அதற்காக, ''தானமே செய்யாதீர்கள்,'' என்று நான் சொல்லவில்லை. அது உங்களின் ஒரு இயற்கையான வெளிப்பாடாக இருக்கட்டும். எந்தவிதமான எதிர்பார்ப்போடும் செய்ய வேண்டாம்,'' என்றுதான் சொல்கிறேன்.

சிந்திப்பதற்கு ஒரு மூளையும் உணர்வதற்கு ஒரு இதயமும் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் நாம் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்ய வேண்டாம் என்பதற்குச் சமுதாயத்தை ஆலோசனை கேட்க வேண்டியகில்லை.

இன்னொரு விஷயம் பக்தி ஈடுபாடு என்ற பெயரில் தனிநபர் ஒருவரையோ மகிழ்விப்பதற்காகச் செய்யப்படும் செயல். பக்தியினால் மலருமேயானால் அந்தச் செயலே உங்களுக்குப் பரிசாக அமையும்.

எதையும் எதிர்பார்த்தீர்களேயானால் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், அது பக்தி இல்லை. செயல், பக்தியினால் மலருமேயானால், அந்தச் செயலே உங்களுக்குப் பரிசாக அமையும்.