KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)/விழிப்புணர்வு. எண்ணப்பதிவை அழிக்கும் ஒரு சக்திSign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)

விழிப்புணர்வு. எண்ணப்பதிவை அழிக்கும் ஒரு சக்தி

கேள்வி: ஸ்வாமிஜி, ஒரு எண்ணப் பதிவைப் பற்றிய விழிப்புணர்வைக்கொண்டு வருவதன் மூலம் அந்த எண்ணப் பதிவையே அழித்துவிட முடியுமா ?

பெரும்பாலான நேரங்களில், விழிப்புணர்வைக்கொண்டு வருவதே இந்த விஷயங்களைக் கையாளுவதற்குப் போதுமானதாக இருக்கிறது.

உதாரணமாக நீங்கள் கடந்தகாலத்தில் செய்த ஏதோ ஒரு செயலைப் பற்றிய குற்ற உணர்ச்சியில் இருக்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். பொதுவாக, நம்முடைய குற்ற உணர்ச்சிகள்தான் நம்மைப் பாதிக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்வதில்லை. இப்பொழுது அந்தக் குற்ற உணர்ச்சி கள்தான் உங்களைப் பாதிக்கிறது என்பதே உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்கள் பிரச்சினையை எப்படிக் கையாள்வீர்கள் ?

ஆனால் உங்களை நீங்களே உள்நோக்கிப் பார்க்கத் தொடங்கிய அந்தக் கணமே, உங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறீர்கள்.

உள்ளே இருக்கிற எண்ணப் பதிவைப் புரிந்து கொண்டால், ஆசை, பயம், குற்ற உணர்ச்சி, வேதனை இவை உங்கள் மேல் ஏற்படுத்துகிற பாதிப்பை உணர முடியும்.

உள்ளே இருக்கிற எண்ணப் பதிவைப் பற்றி ஒருமுறை நீங்கள் புரிந்து கொண்டாலே போதும், ஆசைகள், பயங்கள், குற்ற உணர்ச்சி, வேதனை இவை உங்கள் மேல் ஏற்படுத்துகிற பாதிப்பை நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.

எப்பொழுதெல்லாம் பார்க்கிறீர்களோ, அப்போது உங்களுக்கும் எண்ணப்பதிவிற்கும் இடையே தொடர்பற்ற நிலை ஏற்படுகிறது. பயத்தை விழிப்புணர்வுடன் நேர் எதிர்கொள்ளும்போது, அந்தப் பயம் விழுந்து விடுகிறது. எல்லாப் பயங்களுக்கும் இது பொருந்தும்.

முழுமையான விழிப்புணர்வுடன் ஸாக்ஷியாக இருங்கள். பிறகு பயம் இருக்கவே இருக்காது. எந்த நிமிடம் உங்களுக்குள் பயம் ஆரம்பிக்கிறதோ அப்பொழுது என்ன நடக்கிறதென்று முழு விழிப்புணர்வுடன் ஆராய்ந்தீர்களானால், அது உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடிய தமது சக்தியை இழந்து விடுகிறது. அதேபோலத்தான் மற்ற எண்ணப் பதிவுகளையும் கையாள வேண்டும்.

பய உணர்வைப் பற்றிய விழிப்பணர்வும், 'அதைச் சந்திப்பேன்' என்ற விழிப்புணர்வுடன்கூடிய முடிவும் அந்தப் பயத்தையே கரைத்துவிடும்!

ஒரு சின்ன கதை!

நான் சிறு பையனாக இருந்தபோது நடந்தது. அப்போது எனக்குப் பத்து வயது. நான் பிறந்த ஊரான திருவண்ணாமலையில், அருணாச்சலம் என்ற ஒரு அழகான மலை உள்ளது. அந்த மலை ஒரு சக்தி மையம்: ஆன்மீக இன்குபேட்டர். அது நிறைய ஞானிகளை உருவாக்கி இருக்கிறது.

நான் தினமும் கிரிவலம் செல்வது வழக்கம். ஒரு நாள், நான் வழக்கப்படி கிரிவலம் சென்று கொண்டிருந்தேன். அது பின்னிரவு நேரமாக இருந்ததால் மிகவும் இருட்டாக இருந்தது.

அப்போது அங்கிருந்த ஒரு சுடுகாட்டை நான் கடக்க வேண்டியிருந்தது. பொதுவாக அந்த நேரத்தில் ஒரு சிறிய பையனுக்கு அப்படி ஒரு பகுதியில் நடக்கத் துணிவே இருக்காது. நான் சுடுகாட்டை நெருங்க நெருங்க ஒரு நாய் என்னை நோக்கிக் குரைக்க ஆரம்பித்தது. நான் கவலைப்படவில்லை. தொடர்ந்து நடக்க ஆரம்பித்தேன்.

பிறகு நான் அருகில் போனவுடன் அந்த நாய் ஓடிவிட்டது. அருகில் போனவுடன்தான் எனக்கு, அந்த நாய் சரியாக எரிக்கப்படாமலிருந்த ஒரு பிணத்தை தின்று கொண்டிருந்தது என்பது புரிந்தது.

அந்த நேரத்தில்தான் எனக்குள் பயம் எழுவதை என்னால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. எனக்குள் எழுகிற பயத்தை ஸாக்ஷியாக இருந்து முழுவிழிப்புணர்வோடு கவனித்தேன். அந்தப் பயம் எழுந்தாலும் உடனே அடங்கியது. விழிப்புணர்வு மிக உயர்ந்த நிலையில் இருந்ததால், அது ஒரு பயத் தாக்குதலாக மாறவில்லை, அது என் மேல் ஆதிக்கம் செலுத்த முடியாமல், சக்தியற்றுப் போவதை என்னால் உணர முடிந்தது. அது மேற்கொண்டு என்னைப் பாதிக்கவேயில்லை. நான் பிணத்தைப் பார்த்தேன். அமைதியாகப் புன்னகைத்து விட்டுத் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தேன்.

பய உணர்வைப் பற்றிய விழிப்புணர்வும் பயத்தை நேருக்கு நேர் எதிர்கொள்ள எடுத்த விழிப்புணர்வுடன்கூடிய முடிவும் அந்தப் பயத்தையே கரைத்து விட்டது !

பக்தியில் உறுதியுடன் இருங்கள்

ஒ அர்ஜுனா! அதனால் எப்போதும் பக்தியில் நிலைத்திரு.

  • 8.28 பக்திமயமான சேவை என்ற பாதையை ஏற்றுக்கொள்ளும் ஒருவர் வேதங்களைக் கற்பது, பூஜைகளைச் செய்வது, வேள்விகள் செய்வது, தான தருமங்களைச் செய்வது, தவம் செய்வது, பலன்களை எதிர்பார்த்து செய்யும் செயல்கள் ஆகிய எல்லாவற்றின் பலன்களையும் கடந்து செல்கிறார். முடிவில் அவர் மஹோன்னதமான இருப்பிடத்தை அடைகிறார்.