KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)/நம் மனத்தின் நான்கு நிலைகளைப் புரிந்துகொள்ளுங்கள்Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)

நம் மனத்தின் நான்கு நிலைகளைப் புரிந்துகொள்ளுங்கள்

முதல் நிலை :

எண்ணங்கள் உள்ள நிலையுடன் 'நான்' என்ற விழிப்புணர்வும் சேர்ந்து இருக்கிற, இப்போது நாம் இருக்கிற இந்த நிலையைத்தான் ஜாக்ரத் என்கிறோம். (நம்மில் சிலர், எல்லோரும் அல்ல, இப்போது கனவு நிலையிலோ அல்லது ஆழ்ந்த உறக்க நிலையிலோதான் இருக்கிறார்கள்!)

இரண்டாம் நிலை - எண்ணங்கள் இருக்கும்; ஆனால் 'நான்' என்ற விழிப்புணர்வு இருக்காது. இதைத்தான் 'கனவு நிலை' - ஸ்வப்னம் என்கிறோம்.

''எண்ணங்கள் இருக்கின்றன, ஆனால் 'நான்' என்ற விழிப்புணர்வு

இருப்பதில்லை; இது எப்படி?' என்று நீங்கள் கேட்கலாம். கனவு நிலையில் எண்ணவோட்டங்களின் அலைவரிசை அதிகமாக இருக்கும். அதனால்தான், நம்மால் கனவுகளைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.

நாம் விழித்திருக்கும்போது 'நான்' என்ற விழிப்புணர்வு அதிகம். அதனால்தான், நமது எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடிகிறது. நாம் அவற்றை அடக்க முடியும் மாற்ற முடியும் உருவாக்க முடியும்.

நாம் எதை விரும்புகிறோமோ அதைச் செய்ய முடியும். ஏனென்றால் 'நான்' என்ற விழிப்புணர்வின் அலைவரிசை, எண்ணங்களின் அலைவரிசையைவிட அதிகமாக இருக்கிறது. கனவு நிலையில் 'நான்' என்ற விழிப்புணர்வைவிட எண்ண ஒட்டங்களின் அலைவரிசை அதிகமாக இருக்கும். அதனால்தான், நம்மால் கனவுகளைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.

நம்மால் கனவுகளைத் தேர்ந்தெடுக்க முடியும் என்றால் எப்படிப்பட்ட கனவுகளைத் தேர்ந்தெடுப்போம் என்று நமக்கே தெரியும். கனவுகள் நமது கட்டுப்பாட்டில் இல்லை. நம்மால் கனவுகளின் மேல் ஆதிக்கம் செலுத்த முடியாது.

விழிப்புணர்வின் அலைவரிசையைவிட எண்ண அலைவரிசையின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், நாம் கனவுகளைத் தேர்ந்தெடுக்க முடியாது. எண்ணங்கள் இருக்கும் ஆனால் 'நான்' என்ற விழிப்புணர்வு இருக்காது. நமது இருப்புத் தன்மையில் 'நான்' என்ற விழிப்புணர்வு அற்ற ஆனால் எண்ண ஓட்டங்கள் மட்டுமே இருக்கிற நிலையைத்தான் 'கனவு நிலை' என்கிறோம்.

அடுத்தது எண்ண ஓட்டமும் இருக்காது. விழிப்புணர்வும் இருக்காது. இதுதான் ஆழ்ந்த உறக்க நிலை. இதை ஸுஷுப்தி நிலை என்று அழைக்கிறோம். மூன்று நிலைகள் -அதாவது ஜாக்ரத், ஸ்வப்னம், ஸுஷுப்தி நிலைகளை விழிப்புணர்வு நிலை, உள் மன நிலை (ஒருவர் உணராமலேயே ஏற்படும் மனத்தின் செயல்கள்), என்கிறோம்.

உயிருடன் இருக்கும்போது ஒரே ஒருமுறை ஸமாதி நிலையை உணர்ந்தாலே போதும், உடலைவிடும் போதும் ஸமாதி நிலையில்தான் உடலை விடுவீர்கள்.

நான்காவது ஒருநிலை உள்ளது. இதை நாம் வாழ்வில் அனுபவித்ததே இல்லை.

அந்த நிலையில் எண்ண ஓட்டம் இருக்காது. ஆனால் 'நான்' என்ற விழிப்புணர்வு இருக்கும். தூய்மையான 'நான்' என்ற விழிப்புணர்வு மட்டும் இருக்கும்.

முழுமையான 'நான்' என்ற விழிப்புணர்வு மட்டுமே இருக்கிற இந்த நிலையைத்தான் ஸமாதி, எண்ணங்களற்ற உணர்வு நிலை, துரீய அவஸ்தை, ஆத்ம ஜ்ஞானம், ப்ரஹ்ம ஜ்ஞானம், தன்னை உணர்தல், நிர்வாணம், ஆத்ம அநுபூதி, தெய்வீக நிலை, THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, முடிவில்லா ஆனந்தம் என்று குறிப்பிடுகிறோம்.

துரீய நிலையே நாம் அடைய வேண்டிய நிலை

எல்லா மேற்கண்ட சொற்களும் எண்ணங்கள் அற்ற, ஆனால் முழு விழிப்புணர்வு நிலையில் இருக்கும் தன்மையைத்தான் குறிப்பிடுகின்றன. இந்த நிலையில் நாம் உடல், மனம் அற்ற தன்மையில் உள்ளோம். ஜாக்ரத், ஸ்வப்ன, ஸுஷும்னா என்ற மூன்று நிலைகளிலும் நாம் மனம், உடலுடன்கூடிய நிலையில் உள்ளோம்.

ஜாக்ரத் நிலையில், நாம் நமக்கு இப்பொழுது இருக்கும் இந்த ஸ்தூல சரீரத்தோடு அதாவது திட உடலில் வாழ்கிறோம். கனவு நிலையில் ஸூக்ஷ்ம சரீரத்தில் அதாவது நுட்பமான உடலில் வாழ்கிறோம்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், கனவு நிலையிலும் நாம் ஒரு உடலை எடுத்துக்கொள்கிறோம். அதாவது அப்பொழுது ஸூக்ஷ்ம சரீரத்தில் வாழ்கிறோம். அதனால்தான், கனவுகளில்கூட நாம் பயணம் செய்ய முடிகிறது. உதாரணத்திற்கு லாஸ் ஏஞ்சல்ஸில் உறங்குகிறோம். ஆனால் உடனே நாம் பாரதத்தில் இருப்பதாக கனவு காண்கிறோம். அப்படியென்றால், நாம் ஸூக்ஷ்ம சரீரத்தின் மூலமாகப் பயணம் செய்கிறோம் என்பது தெளிவாகிறது. நாம் ஆழ்ந்த உறக்கத்தில் காரண சரீரத்தை அடைகிறோம்.

துரீய நிலையில் நாம் எல்லையற்ற நிலையை, உடலற்ற நிலையை அடைகிறோம். அங்குதான் நாம் முழுமையான, தூய்மையான 'நான்' என்ற விழிப்புணர்வு நிலையில் இருக்கிறோம். இங்கு 'நான்' என்கிற விழிப்புணர்வு இருக்கிறது, ஆனால் எண்ணங்கள் இல்லை.

விவேகானந்தர் சொல்கிறார்: ''உயிருடன் இருக்கும்போது ஒரே ஒருமுறை அந்த விழிப்புணர்வு நிலையின் ஒரு துளியை நீங்கள் உணர்ந்தாலே போதும், நீங்கள் உடலைவிடும்போது தன்னிச்சையாகவே அந்த அனுபவம் மீண்டும் ஏற்படும். நீங்கள் ஸமாதி நிலையில்தான் உங்கள் உடலை விட்டுச் செல்வீர்கள்."

எல்லா ஆன்மீக வழி முறைகளும் நேரடியாகவோ அல்லது மறை முகமாகவோ மனம், உடல் என்ற இந்த உணர்வு நிலைகளைத் தாண்டி 'நான்' என்ற முழு விழிப்புணர்வு நிலையை அடைவதைப் பற்றித்தான் சொல்கின்றன.

அதனால்தான், கிருஷ்ணர், ''ஒரே ஒரு கணம் நாம் அந்த விழிப்புணர்வை அனுபவித்தாலும் போதும், அடுத்த பிறவியைத் தளர்வாகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்," என்று சொல்கிறார்.

வாழும்போது ஒருமுறையாவது நாம் உடல்-மனம் தாண்டிய, உடல்-மனம் இல்லாத நிலை இருக்கிற நிலையை அனுபவிக்கவில்லை என்றால் உடலைவிடும்போது நம்மால் அந்த நிலையை அடைய முடியாது. அதுமட்டுமல்ல, நம்மால் உடலையும் மனத்தையும் விட்டு

எண்ணங்களற்ற விழிப்புணர்வை நாம் ஒரு கணம் உணர்ந்திருந்தால் கூட போதும், மரண சமயத்தில் நமக்குத் தேவையான தெளிவு பிறந்துவிடும்.

விட்டுச் சும்மா இருக்க முடியாது. அதனால்தான், நாம் இறந்த உடனேயே வேறொரு உடலைப் பற்றிக்கொள்ள முயற்சி செய்கிறோம்.

ஏனென்றால் ஒரு கணம் கூட உடலும், மனமும் இல்லாமல் நம்மால் இருக்க முடியாது. எந்த மாதிரி உடலில் நுழைகிறோம் என்றுகூட யோசிக்க மாட்டோம். எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக ஏதோ ஒரு உடலில் நுழைய முயற்சி செய்வோம். இது எதுபோல என்றால், நாம் ரயில் நிலையத்திற்குத் தாமதமாகப் போகிறோம். அதனால் நாம் எந்த ரயிலை முதலில் பார்க்கிறோமோ அதில் வேகமாக ஓடிப்போய் ஏறி உட்கார்ந்துகொள்வது போன்றதுதான். அந்த ரயில் எங்கே போகிறது என்றுகூட யோசிக்க மாட்டோம்.

"ஏதோ ஒரு ரயிலில் ஏறிக்கொள்வோம்," என்றுதான் சொல்வோம்.

அதேபோல்தான், நாம் உடலை விட்ட பிறகும் கிடைக்கிற ஏதோ ஒரு உடலில் வேகமாகச் சென்று ஏறிக்கொண்டு மீண்டும் ஒருமுறை பூமிக்கு வருவோம்.

கீழே வந்தவுடன் மீண்டும், இந்த உடலை எடுத்ததற்கான காரணம் மறந்து மிகப்பெரிய பிரச்சினை. மொத்த நிகழ்வும் குழப்பத்திலிருந்து குழப்பத்திற்கு என்று போய்க்கொண்டே இருக்கிறது.

உங்களது சூழ்நிலையும், குடும்பமும் உங்களைத் தடை செய்யாமல் உதவி செய்தால் புரிந்துகொள்ளுங்கள் விழிப்புணர்வுடன்கூடிய ஒரு பிறவியைத்தான் நீங்கள் எடுத்துள்ளீர்கள்.

ஒரே ஒரு கணம் அமைதியான, எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலையை நாம் அனுபவித்திருந்தால்கூட, உடலைவிடும் போதும் இயல்பாகவே நாம் அதே நிலையில்தான் இருப்போம். இந்த நிலையை 'உடலற்ற' விழிப்புணர்வு நிலை என்றும் சொல்கிறோம். ஏனென்றால் நாம் துரீய நிலையில் இருக்கும்போது ஸ்தூல சரீரம், ஸூக்ஷ்ம சரீரம், காரண சரீரம் எதுவும் நம்மைத் தீண்டாது.