KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)/நிச்சயமாய் என்னை அடைய முடியும் !Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)

நிச்சயமாய் என்னை அடைய முடியும் !

8.7. அர்ஜுனா, உனக்கு விதிக்கப்பட்ட போர் செய்தலாகிய கடமையைச் செய்யும் போதும் கிருஷ்ணராகிய என்னையே நினைப்பாயாக !

உனது செயல்கள் எல்லாவற்றையும் எனக்கு சமர்ப்பணம் செய்து விட்டு, மனத்தையும் புத்திசாலித்தனத்தையும் என்னிடமே பதித்தால் நிச்சயமாக நீ என்னை அடைவாய். அதில் சந்தேகமே இல்லை

  • 8.8. ஒ பிரிதாவின் மைந்தனே! யாரொருவர் என் நினைவிலேயே நிலைபெற்று, பாதை விலகாமல் என்னையே த்யானம் செய்கிறாரோ, அவர் நிச்சயமாக என்னை அடைவார்.
  • 8.9. அந்த மேலான பரம்பொருளைத் தியானிக்கும் ஒருவர், அவரை எல்லாம் அறிந்தவராகவும், பழமைகளுக்கெல்லாம் பழமையானவராகவும், எல்லாவற்றையும் கட்டுப்படுத்துபவராகவும், அணுவிலும் அணுவானராகவும், எல்லாவற்றையும் காப்பவராகவும், பருப்பொருள் சார்ந்த உலகாயுதக் கருத்துகளுக்கு அப்பாற்பட்டவராகவும், மனத்திற்கும் கற்பனைகளுக்கும் எட்டாதவராகவும் உணர்ந்து தியானிக்க வேண்டும்.

அவர் உலகப் பொருட்களுக்கு அப்பாற்பட்டவராகவும், இயற்கை ஆற்றல்களுக்கு அப்பாற்பட்டவராகவும், வியக்கத் தக்கவராகவும், சூரியனைப் போன்ற ஒளியுடையவராகவும் விளங்குகிறார்.

  • 8.10. எவன் ஒருவன் மரணமடைகிற நேரத்தில், யோகத்தின் பலனாக, தனது கவனத்தைச் சிதறடிக்காமல், மனத்தையும் உயிர் மூச்சையும் தடுமாற்றம் இல்லாமல் புருவமத்தியில் நிறுத்தி, முழு சமர்ப்பணத்துடன் என்னை நினைக்கிறானோ அவன் என்னில் நிலைக்கிறான். அவன் நிச்சயமாக என்னை அடைகிறான்.

என்னையே நினைத்திருந்தால் ... உன்னிடமே வந்திடுவேன்

முதல் இரண்டு ஸ்லோகங்களிலும் கிருஷ்ணர், ''அர்ஜுனா, நீ எப்போதும் என்னையே நினைக்க வேண்டும். உன்னுடைய வழக்கமான கடமைகளைச் செய்யும்பொழுதுகூட நீ என்னைப் பற்றிய உணர்விலேயே இருக்க வேண்டும். உன்னுடைய மனமும் புத்தியும் என்னில் நிலைத்திருக்குமானால், உறுதியாக நீ என்னை அடைவாய். இதில் சந்தேகமே இல்லை,'' என்கிறார்.

மீண்டும் மீண்டும் அவர், அஸம்ச்ய - 'சந்தேகம் இல்லாமல்' என்கிற சொல்லைச் சொல்கிறார். 'சந்தேகம் இல்லாமல் நீ என்னை அடைவாய்'' என்கிறார்.

நாம் இப்போது ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்கலாம். ''எப்படியும் உடலைவிடும்போது மட்டும்தானே அவரை நினைக்க வேண்டும். அதற்காக ஏன் இப்போதே கவலைப்பட வேண்டும். இப்போது ஏன் அவரை நினைக்க வேண்டும் ? இப்போதைக்கு நான் எனது வாழ்க்கையை வாழ்ந்துகொள்கிறேன். இறக்கும்போது அவரை நினைத்துக்கொள்கிறேன், '' என்பதுதான் அது. நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்த ஸ்லோகங்கள் அதற்கு விடையளிக்கின்றன.

இப்போது அவரை நினைக்கவில்லை என்றால் அப்போதும் அவரை நினைக்க முடியாது. வாழக்கை முழுவதும் 'கோலா, கோகோ கோலா' என்று சொல்லிக் கொண்டிருந்து விட்டு மரணத்தறுவாயில் மட்டும் 'ராமா கிருஷ்ணா' என்று சொல்லிவிடலாம் என்று நினைக்காதீர்கள். முடியவே முடியாது.

நாம் எதை வாழ்நாள் முழுழுவதும் நினைக்கிறோமோ அந்த நினைவுதான் மரணத்தறுவாயிலும் வரும். 'இப்போது கோகோ கோலோ' என்று சொல்லிக்கொள்கிறேன். கடைசிக் காலத்தில் 'ராமா கிருஷ்ணா' என்று சொல்லிக்கொள்கிறேன்' என்று நினைக்கிறோம்.

இல்லை! இப்போது நாம் எதை மீண்டும் மீண்டும் சொல்கிறோமோ அதைத்தான் கடைசியிலும் சொல்வோம். ஏனென்றால் நாம் எதை நினைக்க விரும்புகிறோமோ அதை நம்மால் கடைசி நேரத்தில் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. நமது விழிப்புணர்வு அந்த நேரத்தில் நமது கட்டுப்பாட்டில் இருப்பதில்லை.

மரணத்தறுவாயில் தன்னிச்சையாகவே நம் மொத்த வாழ்க்கையும் நம்முன் தோன்றும். மொத்த ஃபைலும் தோன்றும். நாம் நமது சக்தியை எதில் அதிகமாக செலவிட்டிருக்கிறோமோ அந்த ஃபைல்தான் இயற்கையாகவே முதலில் தோன்றும். அவ்வளவுதான். அந்தக் கணத்தில் நம்மால் எதுவும் செய்ய முடியாது.

இப்போதைக்கு இந்த விஷயத்தை இதை விட்டுவிடலாம், கடைசி நேரத்தில் உடலைவிடும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று மட்டும் நினைக்காதீர்கள். அது நடக்காது. எந்த நினைவில் வாழ்நாள் முழுவதும் ஆழமாக வாழ்ந்திருக்கிறோமோ அந்த நினைவுதான் தோன்றும்.

அதனால்தான் செய்யும்போதுகூட என் நினைவிலேயே இருங்கள்," என்கிறார். இதன் பொருள் என்னவென்றால் நாம் வாழும்போதுகூட, நாம் எண்ணங்களற்ற விழிப்புணர்வில், கிருஷ்ண உணர்வு நிலையில், ஸாக்ஷி பாவணையுடன் தொடர்ந்து இருக்க வேண்டும்.

ஸாக்ஷி பாவனை, எளிமையானதே!

அடுத்த கேள்வி: "நான் அன்றாட வாழ்வில் இருக்கும்போதுகூட ஸாக்ஷி மனோபாவத்தில் எப்படி இருக்க முடியும் ?''

எளிமையான அமர்ந்திருக்கும்போது, வெளியேயும் என்ன நடக்கிறது என்று கவனியுங்கள். உங்களின் இருப்பிற்கு உள்ளேயும் இருப்பிற்கு வெளியேயும் என்ன நடக்கிறது என்று கவனியுங்கள். உங்கள் கண்களை மூடத் தேவையில்லை. தயவு செய்து வண்டி ஓட்டும் போதாவது உங்கள் கண்களை மூட வேண்டாம்!

பந்தம்தான் எல்லாத் துக்கங்களுக்கும் காரணமாகிறது. எப்போது நீங்கள் ஸாக்ஷியாக மாறுகிறீர்களோ அந்தக் கணமே எல்லாத் துன்பங்களும் மரைந்து விடுகின்றன

வெறுமனே உங்கள் உடலை விட்டுத் தள்ளி நில்லுங்கள். உங்கள் மனத்திலும் உங்கள் இருப்பிற்கு வெளியேயும் என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள்.

யாரிடமாவது அமர்ந்து பேசும்போது அவர் என்ன பேசுகிறார் என்பதையும் நீங்கள் அதற்கு எப்படிப் பதிலளிக்கிறீர்கள் என்பதையும் கவனியுங்கள். அவர் வாக்கியத்தை முடிக்கும் முன்பே, எடுக்கிறீர்கள் கருத்துகளுடன் அவர் மேல் பாய எப்படித் தயாராகிறீர்கள் என்பதையும் கவனியுங்கள்.

அவர் பேசி முடிப்பதற்கு முன்பே நீங்கள் பேச எப்படி ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் கவனியுங்கள். ஸாக்ஷியாக இருங்கள். தொடர்ந்து ஸாக்ஷியாகக் கவனியுங்கள். ஆசைகள், குற்ற உணர்ச்சி, மற்றும் வலி போன்ற உணர்வுகள் உங்கள் இருப்புத் தன்மையின் மீது செலுத்தும் ஆதிக்கம் தானாகவே மறைந்து விடுவதைக் காண்பீர்கள்.

நீங்கள் உங்களுக்கும் உங்களுடைய உடல்-மனத்திற்கும் இடையே ஒரு இடைவெளியை உருவாக்கிக்கொள்கிற அந்தக் கணமே துன்பங்கள் மறைந்து விடுகின்றன. உங்கள் உடல் மனதோடு நீங்கள் வைத்திருக்கும் பந்தம்தான் எல்லாத் துக்கங்களுக்கும் காரணமாகிறது.

எப்போது நீங்கள் ஸாக்ஷியாக மாறுகிறீர்களோ அந்தக் கணமே எல்லாத் துன்பங்களும் மறைந்து விடுகின்றன. முதலில் சில தடவை நீங்கள் தோற்க நேரிடலாம். 'இது கஷ்டம் என்னால் முடியாது,' என்று நீங்கள் நினைக்கலாம். அப்படி நீங்கள் முடிவு செய்யும்போது 'இது கடினம்' என்ற கருத்தை நீங்களே உருவாக்கிக்கொள்கிறீர்கள்.

பரதத்தின் ஞானமடைந்த குருமார்களில் ஒருவரான ரமண மஹரிஷியிடம் ஒருவர் சென்று ஆகம் விதீதை (தன்னை அறிதல்) என்பது கடினமான விஷயமா? என்று கேட்டார். அதற்கு ரமண மஹரிஷி, "கடினம் என்கிற வார்த்தைதான் கடினமானது, " என்றார்.

ஐயே! சிதி ஸுலமம். ஆன்ம வித்தை ஐயு, அதி ஸுலமம்! - ஒன்னை அறிந்துகொள்ளும் அறிவு மிகவும் எளிது! என்று அமகாகப் பாடுகிறார்.

''பணத்தை அடைய வேண்டும் என்றால் நீங்கள் புகழையும் பெயரையும் அடைய வேண்டும் என்றாலும் நீங்கள் உழைக்க வேண்டும். எதை அடைய வேண்டுமானாலும் நீங்கள் உழைக்க வேண்டும். தன்னை உணர நீங்கள் 'சும்மா இருந்தாலே' போதுமானது. வேறு எதுவும் செய்ய வேண்டாம், '' என்று அழகாகப் பாடுகிறார்.

நமது உணர்வை சில கணங்களாவது ஸாக்ஷியாகக் கவனித்தாலே போதும், உங்கள் இருப்பிலிருந்து மனச் சோர்வு அடியோர மறைந்துவிடும்.

இருத்தல்' 'சும்மா எளிமையானது: சில கணம்நேர ஸாக்ஷி பாவனை இதற்குப் போதுமானது.

உடனே கணக்குப் போடாதீர்கள் ''நாளையிலிருந்து 24 மணி நேரமும் நான் ஸாக்ஷி பாவத்துடன் இருப்பேன்,'' என்று கணக்குப் போடாதீர்கள். பிறகு அப்படி இருக்க முடியவில்லை என்றால் கவலைப் படுவீர்கள்.

ஸாக்ஷி பாவனை, அது மிகப்பெரிய வரம்

கவலைப் படாதீர்கள். உங்களால் ஒரு ஐந்து நிமிடம் மட்டும் அந்த நிலையில் இருக்க முடிந்தாலேகூட, அது மிகப்பெரிய ஒரு வரம்தான். ஸாக்ஷியாக இருக்கும்போது, உங்களுக்குள் ஏற்படும் துக்கத்திலிருந்து விடுபட்ட அனுபவம் ஒன்றிரண்டு முறை நிகழ்ந்தால்கூட, அந்த அனுபவத்தின்போது

உங்களுக்குள் பெரிய அமைதி ஏற்படும். உங்கள் இருப்பில் இருந்து மனச் சோர்வு எப்படி அடியோடு மறைந்து விடுகிறது என்பதைப் பார்ப்பீர்கள். பிறகு அதே உணர்வு நிலையில்தான் இயற்கையாகவே இருப்பிர்கள்.

ஏனென்றால் நீங்கள் ஒருமுறை அந்தச் சுவையை சுவைத்துப் பார்த்து விட்டீர்கள். ஒருமுறை சுவைத்து விட்டால் மீண்டும் அந்த நிலைக்கு வருவீர்கள். அதே மன நிலைக்குத் திரும்பத் திரும்ப வருவீர்கள்.

இராமகிருஷ்ணர், ''ஒரு மயிலுக்கு ஒரு நாள் மாலை கொஞ்சம் அபினைக் கொடுத்தால், அடுத்த நாள் மாலை சரியாக நாலு மணிக்கு அது உங்கள் வீட்டு முன்னால் நிற்கும்,' என்று சொல்கிறார்.

வட நாட்டில் மயில்களை நடனமாடச் செய்வதற்காக அபின் கொடுப்பார்கள். கொஞ்சம் அரிசியுடன் அபினைக் கலந்து தங்கள் வீட்டு முன்னால் வைப்பார்கள். அந்த அரிசியை உண்ட மயில்கள் நடனமாடும்.

இராமகிருஷ்ணர் கொடுத்து விட்டால், மயில்கள் மறுநாளும் அபினைத் தேடி அதே நேரத்தில் வந்துவிடும். ''

அதேபோல நம் உடலையும் மனத்தையும் ஸாக்ஷியாக இருந்து பார்க்கும்போது நமக்குள் ஏற்படும் தளர்வான நிலையையும் துக்கத்திலிருந்து விடுபட்ட

ஸாக்ஷியாக இருப்பது கடினம் என்று நினைத்தீர்களானால், அந்த நினைப்பையும் ஸாக்ஷியாக இருந்து பாருங்கள்.

நிம்மதியான உணர்வையும் ஒருமுறை நாம் அனுபவித்து விட்டோமானால் அந்த அமைதி நிலைக்காக, அந்த ஆனந்த அனுபத்திற்காகவே ஸாக்ஷி பாவணைக்கு நாம் மீண்டும் மீண்டும் திரும்பி வருவோம்.

ஸாக்ஷியாக இருப்பது நினைத்தீர்களானால், அந்த நினைப்பையும் ஸாக்ஷியாக இருந்து பாருங்கள். அந்த எண்ணத்தையும் ஸாக்ஷியாக இருந்து பாருங்கள்

உங்கள் உயிரின், இருப்புத் தன்மையின் ஆழ்ந்த செல்லாங்கள். அனுபவியுங்கள். எல்லாத் தடைகளும் மறைந்துவிடும். மிக உயர்ந்த, நிலையான விமிப்பணர்வ நிலையை அடைவீர்கள்.

அடுத்த உங்கள் நிறுத்துங்கள்; கவனச் சிதறல் இல்லாது முழுமையான ஈடுபாட்டுடனும் பக்தியுடனும் நிறுத்துங்கள், '' என்று சொல்கிறார்.

உயிர்ச்சக்தி உடலை விட்டுச் செல்லும்போது இதெல்லாம் உங்கள் கையில் இருக்கப் போவதில்லை. அந்த நேரத்தில் நாம், "நான்

நமது மணம் என்பது வேறொன்றுமில்லை. கட்டுறு நிலையின் தொகுப்புத்தான்! அது, இரைப்பின்போது நமக்குள் ஆழமான காக்கத்தை ஏற்படுத்துகின்றது.

புருவ மத்தியில் என் நினைவை நிலைக்கச் செய்யப் போகிறேன். கவனச் சிதறல் இல்லாமல், பக்தியுடனும் ஆழமான ஈடுபாட்டுடன் செய்யப் போகிறேன்,'' என்றெல்லாம் முடிவு செய்ய முடியாது.

வாழும்போதே,

மேலான விழிப்புணர்வு நிலையில் வாழ்ந்திருங்கள்

வாழும் போதே மிக உயர்ந்த விழிப்புணர்வு நிலையில் நாம் வாழ்ந்திருந்தால் மட்டுமே, இயல்பாகவே அந்த நேரத்தில் இது சாத்தியமாகும். புருவங்களுக்கு இடையே உள்ள இடத்தைப்பற்றி கிருஷ்ணர் சொல்லும்போது, நம் உடலிலேயே மிக உயர்ந்த சக்திமையமாக இருப்பதும், மிக உயர்ந்த விழிப்புணர்வுடன் தொடர்புடையதுமான ஆஜ்ஞா சக்கரத்தைக் குறித்துப் பேசுகிறார்.

நமது மனம் என்பது வேறொன்றுமில்லை. கட்டுறு நிலையின் தொகுப்புத்தான் அது. இந்தக் கட்டுறு மனப்பாங்கு நிலைகள்தான் இறப்பின்போது நமக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

நாம் எப்படி நம் மனத்தைக் கட்டுறுவாக்கம் செய்கிறோம் ? உணவு உண்பதுதான் வாழ்க்கையில் மிக உயர்ந்த விஷயம் என்று நாம் நினைத்தோமானால், இறக்கும்போது நம் கண் முன் என்ன வரும் ?! மெக்டோனால்ட் வளைவுகளும், எல்லா வகையான உணவுகளும்தான் நம் கண் முன்னே வரும்.

வாழ்க்கையிலே மிக உயர்ந்த சுகம் சாப்பிடுவதுதான் என்று நமக்கு போதிக்கப்பட்டிருந்தால் நாம் இறக்கும்போது எல்லா வகையான உணவுகளும் நம் முன்னால் வரும்.

உண்பதுதான் வாழ்க்கையில் முக்கியம் என்று நாம் நினைத்தோமானால், அந்த நேரத்தில், 'எந்த நாட்டில் பிறந்தால் நாம் நன்றாக உண்ண முடியுமோ அந்த நாட்டில் பிறப்போம். எந்த உடலை எடுத்தால் நிறைய உண்ண முடியுமோ அந்த உடலை எடுப்போம். எந்தக் குடும்பத்தில் பிறந்தால் செய்யவேண்டியதில்லையோ, வேறு எந்தப் பொறுப்பும் எடுக்கத் தேவை இல்லையோ அந்தக் குடும்பத்தில் பிறப்போம்,' என்றுதான் நினைப்போம்.

நாம் பாதுகாத்து வைத்திருக்கிற ஃபைல்களைப் புரட்டிப் பார்ப்போம். அதன் சாரமான அந்த 'ரிசர்ச் ரிப்போர்ட்' நம் முன்னால் இருக்கும். நாம் எதை உயர்வான அதையே தேர்ந்தெடுத்து, அதற்காகவே நம் வாழ்நாள் முழுவதும் வேலை செய்து கொண்டிருந்தோமோ, அந்தக் கடந்தகால அனுபவங்கள் நம் கண்முன் வரும். அதை அடிப்படையாக முடிவெடுப்போம்.

''நல்லது, இருக்க சிறந்த நாடு இதுதான், '' என்று ஒரு

நாட்டைத் தேர்ந்தெடுப்போம். அங்கே தாமஸ் குணத்தில், மந்தமாக எதையும் செய்யாமல், முழுமையான சோம்பேறித்தனத்தில் நாம் நம் வாழ்வைக் கழிப்போம்.

தமனைத் தகர்த்து எறியுங்கள்

ஒரு சின்ன கதை:

ஒரு மனிதர் டாக்டரிடம் போய், "டாக்டர் என்னைப் பரிசோதியுங்கள். எனக்கு எதையுமே செய்யப் பிடிக்கவில்லை. மிகவும் மந்தமாக உணர்கிறேன்," என்றார்.

டாக்டர் அவரை முழுமையாகப் பரிசோதித்தார். அந்த மனிதர் ''டாக்டர், எனக்கு என்ன பிரச்சினை என்று வெளிப்படையாகத் தெளிவாகச் சொல்லி

விடுங்கள், ' என்றார்.

''வெளிப்படையாகத் தெளிவாகச் சொல்வதானால், நீ ஒரு 'சோம்பேறி'. வேறெதுவும் பிரச்சினையில்லை, ' என்றார் டாக்டர்.

அந்த மனிதர் 'ஒ. கே. டாக்டர்! அதற்குச் சரியான 'மருத்துவ ரீதியான வார்க்கையைச் சொல்லுங்கள், நான் என் மனைவியிடம் போய்ச் சொல்ல வேண்டும்.'' என்றார்.

சோம்பேறித்தனமான, தெளிவற்ற, உயிரற்ற, மந்தமான வாழ்க்கை வாழ்ந்திருந்தால், அந்தச் சோம்பேறித்தனமான வாழ்க்கைக்கான உடலையேதான் நாம் அடுத்த பிறவியிலும் தேர்ந்தெடுப்போம். ஆச்சரியப்படத் தக்க அளவுக்கு சோம்பேறித்தனம் உள்ளவர்களை நான் பார்த்திருக்கிறேன். மிக உச்சகட்ட சோம்பேறித்தனத்தைப் பார்க்க வேண்டும் என்றால், இமாலயப் பகுதிக்குச் செல்ல வேண்டும். அங்கு நீங்கள் வித விதமான சோம்பேறித்தனங்களைப் பார்க்கலாம்.

அதனால்தான், விவேகானந்தரும் சந்நியாசம் என்ற பெயரில் உண்டு உறங்குபவர்களை நிற்க வைத்து அடிக்க வேண்டும் ! என்று சொல்கிறார்.

ஒரு மனிதர் தம் நண்பரிடம், ''சுவிட்ச் போட்டால் துணி துவைத்து, வீடு பெருக்கி, சமைத்து, அயர்ன் செய்து, நம்மைக் குளிக்க வைத்து, துணியும் உடுத்தி விடுகிற மாதிரி யாராவது ஒரு மெஷினைக் கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும், '' என்று சொன்னார்.

அதற்கு அந்த நண்பர், "அந்த மெஷினும் 'தானே' ஆகி 'ஆஃப்'

ஆனால் எவ்வளவு நன்றாக இருக்கும்!'' என்று கட்டம் உச்சக்கட்ட சோம்பேறித்தனமாகக் கழிப்பதற்கு நமது சக்தியைச் செலவழித்தால், நாம் மேலும் மேலும் சோம்பேறிகளாகிறோம். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், சும்மா இருந்தால்கூட நாம் சக்தியைச் செலவழிக்கிறோம். செலவழிக்கவில்லை என்று நினைக்காதீர்கள். 'தூங்கிக் களைப்படைவது' என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா? பலர் ஓய்வெடுத்தே

வாழ்க்கையைச் சோம்பேறித்தனமாகக் கழிப்பதற்கு நமது சக்தியைச் செலவழித்தால், நாம் மேலும் மேலும் சோம்பேறிகளாக ஆகிவிடுகின்றோம்.

களைத்துப் போகிறார்கள். குறிப்பிட்ட மணி நேரத்திற்கு மேல் தூங்கினால்கூட நாம் களைப்படைந்து விடுவோம். பத்து மணி நேரத்திற்கு மேல் உறங்கினால், ஓய்வினால் களைப்படைந்து விடுவோம்.

ஓய்வினால் களைப்படைவதற்குப் பெயர்தான் தமஸ். நாம் வாழ்நாள் பூராவையும் இப்படித்தான் குறிக்கோளே தூக்கம்தான்; சரி, எந்த நாடு நாம் நிறைய தூங்குவதற்கு அனுமதிக்கும் ? எந்த உடல் சரியான உடல் ? பன்றியா ? மனிதனா ? எருமையா? எந்தக் குடும்பத்தில் பிறப்பது?'' என்றுதான் யோசிப்போம்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்த மொத்த முடிவையும் நாம் சேர்த்து வைத்திருக்கிற புள்ளி விவரங்களிலிருந்துதான் எடுக்கிறோம்.

க்ஷணம் என்ற கால அளவு நம் மனத்தைப் பொறுத்ததே!

நான் முதலிலேயே சொன்னதுபோல, நம் இறப்பின்போது மொத்தப் புள்ளி விவரங்களின் சுருக்கமும் பளிச்சென்று நம் முன்னே தோன்றுகிறது. மொத்தப் புள்ளி விவரங்களின் கருக்கமும், மூன்று வகையான ஃபைல்களும் - ஆகாம்யம் (சேர்த்துக் கொண்டிருப்பது) சஞ்சிதம் (சேர்த்து வைத்தது) மற்றும் ப்ராரப்தம் (தற்போது அனுபவித்துக் கொண்டிருப்பது) -நம் முன்னே தோன்றுகிறது.

அந்தப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் 'நான் என்ன செய்ய வேண்டும் ? என்னுடைய அடுத்த பிறப்பு எதுவாக இருக்க வேண்டும் ?''

ஒரு குறிப்பிட்ட மணி நேரத்திற்கு மேல் தூங்கினால்கூட நாம் களைப்படைந்து விடுவோம். ஓய்வினால் களைப்படைவதற்குப் பெயர்தான் தமஸ்.

என்று நாம் முடிவு எடுத்த அந்த க்ஷணமே அதற்கு ஏற்ற உடம்பில் நுழைகிறோம்.

இன்னொரு முக்கியமான விஷயம். நாம் உடம்பின் மீதும், மனத்தின் மீதும் மிகவும் பற்று வைத்திருக்கிற காரணத்தினால், நம்மால் மூன்று க்ஷணங்களுக்கு மேல் உடம்பில்லாமல் இருக்க முடியாது.

க்ஷணம் என்ற சமஸ்கிருத சொல் நொடிகளைக் குறிக்கவில்லை. அது அது 'க்ரோனாலஜிக்கல் டைம்' (Chronological Time) என்ற காலக் கணக்கைக் குறிப்பிடவில்லை.

அது ஒரு எண்ணத்துக்கும் இடைவெளியைக் குறிக்கிறது.

நம்மில் மைக்ரோ செகண்ட்ஸுக்கும் குறைவாகக்கூட இருக்கலாம்.

ஏனென்றால் நமக்குள் தொடர்ந்து எண்ண ஒட்டங்கள் ஓடிக் கொண்டிருப்பதால், ஒரு எண்ணத்திற்கும் மற்றொரு எண்ணத்திற்கும் இடையே உள்ள கால இடைவெளி மிகக் குறைந்ததாகவே இருக்கிறது.

மனத்திற்கு, எண்ணங்கள் உள்ள நிலை. எண்ணங்கள் அற்ற நிலை என்று இரண்டுவித வாய்ப்புகள் இருக்கின்றன.

நாம் உடலில் (எண்ணங்களற்ற நிலை என்றால், உடல் மனம் என்ற உணர்வு இல்லாமல் உயிர்ப்போடு இருப்பது), எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலையை ஒருமுறையாவது அனுபவித்திருந்தால்கூட அதாவது ஒரு கணமாவது உடல் மனத்தைக் கடந்த அந்தப் பிரபஞ்ச விழிப்புணர்வில் நாம் இருந்திருந்தால்கூட, நாம் உடலைவிடும்போது அந்த நிலையை அடைந்து விடுகிறோம்.

உடல்-மனம் தாண்டிய அந்த நிலையைத்தான் நான் ஸமாதி என்கிறேன்.

'எண்ணங்களற்ற நிலை' என்று நான் சொல்லும்போது, எதைக் குறிப்பிடுகிறேன் என்பதைப் பின்வரும் வரைபடத்தின் மூலம் நான் விளக்குகிறேன்.

மனம்எண்ணங்கள்எண்ணங்கள்
இருப்புத்தன்மைஉள்ள நிலைஅற்ற நிலை
விழிப்புணர்வு<br>உள்ள நிலைவிழிப்பு நிலை<br>ஜாக்ரதிஸ்மாதி
விழிப்புணர்வற்ற நிலைகனவு நிலை<br>ஸ்வப்னம்உறக்க நிலை<br>ஸுஷுப்தி

நமது வாழ்வில் இரண்டு விதமான இருப்புத் தன்மைகளும், இரண்டு விதமான மன நிலைகளும் இருக்கின்றன. உதாரணமாக நாம் விழித்திருக்கும்போது நமக்குள் எண்ணங்கள் இருக்கின்றன. ஆனால் ஆழ்ந்த உறக்க நிலையில் நமக்குள் எண்ணங்கள் இருக்கின்றனவா? இல்லை; அதனால் மனத்திற்கு எண்ணங்கள் உள்ள நிலை, எண்ணங்கள் அற்ற நிலை என்று இரண்டு வித வாய்ப்புகள் இருக்கின்றன.

அதேபோல இருப்புத் தன்மை நிலையில் 'நான்' என்ற விழிப்புணர்வு இருக்கும் நிலை, 'நான்' என்ற விழிப்புணர்வு இல்லாத நிலை என இரண்டு நிலைகள் இருக்கின்றன.

இப்பொழுது நாம் விழித்திருக்கும் போதும், நடக்கும் போதும், இயங்கும் போதும் எல்லா நேரங்களிலும் 'நான்' என்ற விழிப்புணர்வு இருக்கிறது. ஆழ்ந்த உறக்கத்தில் இந்த விழிப்புணர்வு இருக்கிறதா? இல்லை. 'நான்' என்ற விழிப்புணர்வு அப்போது இருப்பதில்லை. இருப்புத் தன்மை நிலையில் 'நான்' என்ற விழிப்புணர்வு உள்ள நிலை, இல்லாத நிலை என்ற இரண்டு நிலை இருக்கிறது.

மனத்தின் இரண்டு நிலைகளும், இருப்புத் தன்மையின் இரண்டு நிலைகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்து நம்முள் நான்கு நிலைகளை உருவாக்குகின்றன.