தடை சொல்லாத பெற்றோர்கூட உங்கள் தேர்வுதான்!
இந்த விழிப்புணர்வு நிலையை, நாம் மூன்று உடல்களையும் கடந்த நிலையில்தான் உணர்கிறோம். முன்பே இந்த எண்ணங்களற்ற விழிப்புணர்வை நாம் ஒரு கணம் உணர்ந்திருந்தால்கூட போதும், மரண சமயத்தில் நமக்குத் தேவையான தெளிவு பிறந்துவிடும்.
உடலும், மனமும் கடந்த நிலையை நாம் ஒருமுறையேனும் அனுபவித்திருந்தால், நாம் அடுத்த உடலை எடுப்பதற்கு முன்பாக, நமது புள்ளி விவரங்கள் அடங்கிய ஃபைல்களை நிதானமாகப் புரட்டிப் பார்க்கிற பொறுமை நமக்கு இருக்கும். முழுமையாக ஃபைல்களை ஆராய்ந்து பார்த்து, 'அடுத்த உடலை எடுக்க வேண்டுமா? அது அவசியம்தானா?' என்றெல்லாம் யோசித்துப் பார்த்துதான் முடிவெடுப்போம்.
ஒரு வேளை நாம் பிறவியெடுக்கலாம் என்ற முடிவை எடுத்தால்கூட, நம்மால் விழிப்புணர்வுடன் உடலை எடுக்க முடியும், ஞானிகளைப்போல!
கிருஷ்ணர் இதை யோக ப்ரஷ்ட என்று சொல்கிறார். நமது ஆன்மீக வளர்ச்சிக்குத் தடை சொல்லாத, நமது ஆன்மீக வளர்ச்சிக்கு ஏற்ற குடும்பத்தில் பிறப்போம். வெகு சில ஆத்மாக்கள்தான் இது போன்ற முடிவை எடுத்து, தம் ஆன்மீக வளர்ச்சிக்குத் தடைசொல்லாத குடும்பங்களில் பிறக்கின்றன என்று சொல்கிறார்.
தங்கள் குழந்தைகளின் ஆன்மீக வளர்ச்சிக்குத் தடை சொல்லாத குடும்பங்களை வெகு அரிதாகத்தான் நான் பார்க்கிறேன். உங்கள் குடும்பத்தில் உங்களுக்குத் தடை சொல்லாவிட்டால், உங்களைத் தொந்தரவு செய்யாவிட்டால் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள்கூட ஒரு
தங்கள் மகன் சந்நியாச வாழ்க்கையில் நுழைய விரும்பும்போது தடைசெய்கிற பெற்றோர்களைத்தான் நான் பார்த்திருக்கிறேன். மத நம்பிக்கையுள்ள பெற்றோர்கள்கூட, "கோயிலுக்குப் போ! ஆனால் ஆச்ரமத்திற்குப் போகாதே!" என்று தடை சொல்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
கோயில்களுக்கு இனிமையாகவே சென்று கொண்டிருக்கும். ஏனென்றால் பெற்றோர்கள் எந்தப் பக்குவ நிலையில் இருக்கிறார்களோ, அந்த நிலைவரை சென்றால் சரிதான். ஆனால் பெற்றோர்களின் பக்குவத்தைத் தாண்டிப் போனால் அவர்களால் ஏனோ அதை எந்த வகையிலும் ஜீரணிக்க முடிவதில்லை. மிக அரிதாக சில ஆத்மாக்கள்தான், தங்கள் ஆன்மீக வாழ்க்கைக்குத் தடை செய்யாத குடும்பத்தில் பிறக்கிறார்கள்.
நான் பரிவ்ராஜகத்துக்குப் புறப்படும்போது மிகவும் இளைய வயது; பதினேழே வயதுதான். என் தாயிடம் நான் வீட்டை விட்டுப் போக விரும்புவதாகவும் பரிவ்ராஜக வாழ்க்கை வாழ விரும்புவதாகவும் சந்நியாச வாழ்க்கையில் நுழைய விரும்புவதாகவும் சொன்னேன்.
உடனே அம்மா அழ ஆரம்பித்து விட்டார். அதனால் நான், "என்னைப் போக வேண்டாம் என்று சொல்கிறீர்களா? நான் போகக் கூடாது என்பதற்காகத்தான் அழுகிறீர்களா?" என்று கேட்டேன்.
அவர் அழகாகச் சொன்னார், "இல்லை! நான் உன்னைத் தடுக்க விரும்பவில்லை.
நம்மாலும்கூட ஞானிகளைப்போல விழிப்புணர்வுடன் உடலை எடுக்க முடியும், உடலைவிடும்போது தெளிவுடன் இருந்தால்!
ஆனால் ஜீரணிக்க அழுகிறேன்," என்றார். இப்போதுகூட என் பெற்றோருக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன். என்னைத் தடுக்காததால் இளம் வயதிலேயே சந்நியாசம் செய்திருக்கிறேன்.
வெளி உலகைப் புரிந்துகொள்ள நம் மனம் மட்டுமே போதும்; ஆனால் உள் உலகில் ஒன்றை அனுபவிக்க குருவின் உதவி தேவை.
கிராமத்துக்கு அமர்ந்துகொண்டு இரவு நேரங்களில் தியானம் செய்திருக்கிறேன். வேறு யாராவது இருந்தால் சகித்திருப்பார்களா? மாட்டார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால் எப்படியோ எனது ஆன்மீக சாதனையைத் தொடர்ந்து அதுபோலத்தான் சூழ்நிலை இருந்தது.
உங்களது உங்களைத் தடை செய்யாமல் உதவி செய்தால் விழிப்புணர்வுடன்கூடிய ஒரு பிறவியை நீங்கள் எடுத்துள்ளீர்கள். நீங்களும்கூட ஒரு யோக ப்ரஷ்டதான்.