KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)/தேவர்களின் ஒரு நாள், நமது ஒரு வருடம்Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)

தேவர்களின் ஒரு நாள், நமது ஒரு வருடம்

காலத்தைக் கணக்கிடும்போது, நம் மனிதர்களின் ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள் என்கிறோம். ஏனென்றால் அவர்களின் TPS மிகவும் குறைவு. அவர்களுடைய TPS குறைவாக இருப்பதால், நமது ஒரு வருடம் அவர்களுக்கு ஒரு நாள். அதனால்தான், தென்னிந்தியாவில் சிதம்பரத்தில் நடராஜருக்கு வருடத்தில் ஆறு முறைதான் பூஜை நடைபெறுகிறது.

அங்கு நடராஜருக்கு வருடத்தில் ஆறுமுறை மட்டுமே பூஜை செய்கிறார்கள்! ஆனால் பொதுவாக மற்ற கோவில்களில் ஒரு நாளைக்கு ஆறுமுறை பூஜைகள் நடைபெறுகின்றன. ஆனால் இந்தக் கோயிலில் தேவர்கள் வந்து கும்பிடுவதாக ஐதீகம் இருப்பதனால், அவர்களின் நேரப்படியே பூஜை நடைபெறுகிறது.

பூஜை என்பது சிதம்பரத்தில் வருடத்தில் ஆறு முறை மட்டுமே செய்யப் படுகிறது. ஏனென்றால் தேவர்களின் ஒருநாள் என்பது நமது ஒரு வருடம். ஒரு துளியேனும் ஸ்மாதி அனுபவத்தை அடைந்தவர்கள்தான் தேவர்கள்.

உங்களின் TPSம் குறைவாக இருந்தால், நீங்களும் சொர்க்கத்தில்தான் இருக்கிறீர்கள். நமது TPS அதிகமாக இருந்தால், நாம் நரகத்தில் இருக்கிறோம். சொர்க்கம் எப்போதும் சுருக்கமாகவே தோன்றும்; நரகம் என்பது நீளமாகவே இருக்கும். அதற்குக் காரணம் எண்ணங்களின் எண்ணிக்கைதான்.

நாம் உடலில் இருக்கும்போதே எண்ணங்களற்ற ஸமாதி அனுபவத்தைப் பெற்றிருந்தால் இயற்கையாகவே இந்த விழிப்புணர்வு, நாம் உடலைவிடும்போதும் மேலெழும்பி வருகிறது. நாம் உடலில் இருக்கும்போதே எண்ணங்களற்ற ஸ்மாதி நிலையை, தியான அனுபவத்தைப் பெற்றிருந்தால் இயற்கையாகவே இந்த விழிப்புணர்வு, நாம் உடலைவிடும் போதும் மேலெழும்பி வருகிறது. இதனால் இரண்டு விதமான நன்மைகள் நமக்குக் கிடைக்கும்.

ஒன்று, நாம் ஞானத்தைத் தேர்தெடுத்து ஞானியாகலாம்; அப்போது நாம் மீண்டும் பிறப்பெடுக்க வேண்டியதில்லை.

இரண்டாவது, நமது கர்மங்களை அனுபவித்துத் தீர்ப்பதற்கு ஏற்ற ஒரு இடத்தை, நமக்கு விருப்பமான முறையில் தேர்ந்தெடுக்கலாம். எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலையை நாம் அனுபவித்திருந்தோமேயானால், இந்த இரண்டு விதமான வாய்ப்புகள் நமக்கு உண்டு.

கேள்வி: மனம் என்பது 'எண்ணங்களின் தொகுப்பு' என்று நீங்கள் சொன்னீர்கள் விழிப்புணர்வு ஏற்பட வேண்டுமானால் மனம் என்பது மறைய வேண்டும். சாதாரணமாக மனம் இறப்பதை நாம் மரணம் என்று சொல்கிறோம். அப்படியானால் நாம் ஸமாதியை அனுபவிக்கும்போது இறந்து விடுகிறோம் என்று பொருளா ?

ஸமாதி நிலையும் மரணத்தைப் போன்றதுதான். இதில் நீங்கள் உடலை விடுவதில்லை. மனத்தை விடுகிறீர்கள். அது ஒன்றுதான் வித்தியாசம்.

மிக அழகான கேள்வி!

ஆம்! நீங்கள் சரியாகச் சொன்னீர்கள். ஸமாதி நிலை அல்லது ஞானம் அல்லது எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலை எல்லாமே மரணத்தைப் போன்றதுதான். இதில் நீங்கள் உடலை விடுவதில்லை. அது ஒன்றுதான் வித்தியாசம். மனத்தை விடுகிறீர்கள். ஆனால் நீங்கள் திரும்பி வரும்போது அந்த மனம் நீங்கள் விட்டுச் சென்ற மனமாக இருப்பதில்லை.

யோகத்தின் பாதையும் யோகத்தின் ஒரு பகுதியாக உள்ள தியானத்தின் பாதையும் உங்களை அந்த இடத்திற்கு அதாவது மனமற்ற, எண்ணங்களற்ற இடத்திற்கு அழைத்துச் செல்லும்.

பொதுவாக யோகம் என்றால் 'இணைதல்'. அதாவது மனம், உடல் ஆத்மா இவை மூன்றும் இணைதலே யோகம் என்று வரையறுக்கிறார்கள். அதன் முடிவான விளைவு என்பது ஸமாதி அனுபவமே என்றும் அதாவது உடல், மனம், ஆத்மா மூன்றும் இணைந்து நம்மை மனமற்ற, உடலற்ற அனுபவத்திற்கு வழிநடத்திச் செல்கிறது என்றும் அதற்கு விளக்கம் கூறுகிறார்கள்.

ஆனால் உண்மையில் யோகம் என்றால் 'இணைத்தல்' அல்லது 'இணைப்பதற்கான வழிமுறை' என்றே பொருள். யோகம் என்பது இணைப்பதற்கான வழிமுறையே அன்றி, 'இணைதல்' அல்லது 'இணைந்து விட்ட நிலை' அல்லது 'இணைந்த நிலை' அல்ல. 'இணைத்தல்' என்பது வேறு, 'இணைதல்' என்பது வேறு.

யோகாவிற்கு இறுதி முடிவு என்று ஒன்று இல்லை.

நாம் 'அடைய வேண்டியது' என்று எதுவும் இல்லை. ஏனென்றால் புதிதாக நாம் எந்த நிலையையும் அடைவதில்லை. இப்போது நாம் எங்கே இருக்கிறோம் என்பதையும், இது நாள்வரை எங்கே இருந்தோம் என்பதையும் உணருகிறோம், அவ்வளவுதான். நாம் யார் என்பதை உணர்கிறோம். நமது உண்மையான நிலை இதுதான் என்பதையும் உணருகிறோம். அதனால் யோகா என்பது இறுதி லக்ஷ்யம் அல்ல; அது ஒரு வழிமுறை, அவ்வளவுதான்.

நாம் லக்ஷ்யத்தைக் காட்டிலும் வழிமுறையில் கவனம் செலுத்தினால், நமக்கு எதிர்ப்பார்ப்புகள் இருக்காது. அதனால் வழிமுறையின்

உண்மையில் யோகம் என்றால் 'இணைத்தல்', 'இணைப்பதற்கான வழிமுறை' என்றே பொருள். யோகம் என்பது இணைப்பதற்கான வழிமுறையே அன்றி, 'இணைதல்' அல்ல.

இறுதியில் அடையப்படும் பற்றிக் எதிர்பார்ப்புகளும் இல்லாமல் நம்மால் பற்றற்ற நிலையில் இருக்க முடியும்.

வழிமுறையில் ஏற்படும் அனுபவம்தான் முக்கியம். இந்த வழிமுறையில் நமக்கு ஏற்படும் ஆனந்த அனுபவம்தான் முக்தி அல்லது

அதனால்தான், சொல்லியிருக்கிறேன், "பொதுவாக நாம் புரிந்து வைத்திருப்பதுபோல், பதஞ்ஜலியின் அஷ்டாங்க யோகம் என்பது சிரமமான எட்டுத்

தொடர் படிகளோ அல்லது யோகத்தின் பகுதிகளோ அல்ல; அது யோகத்தின் எட்டு அங்கங்களை, எட்டு அணுகுமுறைகளை, அதாவது எட்டுப் பாதைகளைத்தான் குறிக்கிறது.

இந்த எட்டுப் பாதைகளில் எந்தப் பாதை வேண்டுமாலும், நமக்கு ஏற்றதாக இருக்கலாம். ஒவ்வொரு பாதையும் நம்மை அதே பயண அனுபவத்திற்குள்தான் கொண்டு செல்லக்கூடியது!

நமக்குள், பாதையில் பயணம் செய்வதைப் பற்றியோ, லட்சியத்தை அடைவதைப் பற்றியோ குழப்பமோ, தயக்கமோ இருந்தால் பாதையும் சரி, அடையும் லட்சியமும் சரி அனுபவிக்கத்தக்கதாகவோ அல்லது சரியானதாகவோ இருக்காது. உண்மையில், 'சரியான அடையும் இடம்' என்று ஒன்றில்லை; சரியான முடிவிடம் என்பது இல்லை, ஏனெனில் 'தன்னை உணர்வதற்கோ', 'ஞானத்திற்கோ' சரியான வரையறை இல்லை.

ஸ்மாதி என்பது ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் 'தனித் தன்மை' வாய்ந்த விசேஷமான தனிப்பட்ட அனுபவம்.

அனுபவங்கள் ஒன்றுபோல இருக்கலாம் என்பது உண்மைதான். ஆனால் அதை வெளிப்படுத்துகிற விதம் தனித் தன்மை கொண்டதாகவும் வேறு வேறாகவும் இருக்கும்.

அதனால்தான், இரண்டு ஞானிகள் அனுபவத்தை ஒன்றுபோல சொல்லமாட்டார்கள்.

அப்படி ஒரே விதமாகச் சொன்னால் அவர்களில் ஒருவர் போலி என்று பொருள். ஒவ்வொரு வெளிப்படுத்துகிற முறையும் வேறு வேறு விதமாகத்தான் இருக்கும்.

ஆம், உங்களை நீங்களே உணரும்போது நீங்கள் இறக்கிறீர்கள்.

உங்களது சேர்க்கப்பட்ட எண்ணப் பதிவுகள், கட்டுறு இதுவரை நீங்கள் கற்றுக் கொண்ட மொத்த பட்டறிவுப்பூர்வமான கருத்துகள், உங்கள் எதிர்மறைப் கடந்தகாலக் கவலைகள், எதிர்காலம் பற்றிய

ஒவ்வொரு எண்ணமும், அனுபவமும் அந்த நேரத்திற்கானவை, கற்காலிகமானவை, கனித்தனியானவை.

எதிர்பார்ப்புகள், உங்களது பயங்கள், அசைகள் இவை எல்லாமே உங்களது உண்மையான இருப்புத் தன்மையைப் புரிந்துகொள்ளும்போது மரைந்துவிடும்.

நான் முன்பே சொன்னதுபோல ஒரு நல்ல தெய்வீகமான வைரஸ் உங்களைப் புதுப்பித்து, உங்களை மறுபடியும் புது மனிதராக மாற்றி அமைத்துவிடும். உள்ளே நுழையும்போது இருந்த மனிதராக இல்லாமல் வேறு மனிதராக வெளியில் வருவீர்கள்.

இந்த தேவைப்படுவது இல்லை. தேவைப்படும்பொழுது எண்ணங்கள் வரும். அதற்கேற்ப நடந்துகொள்வீர்கள்.

நீங்கள் எண்ணங்களைக் கோர்த்துக் கோர்த்துப் பார்த்து, அதிலிருந்து மகிழ்ச்சி சங்கிலிகளை உருவாக்கிக்கொள்ள மாட்டீர்கள். நீங்கள் எந்தவித முயற்சியையும் எடுக்க மாட்டீர்கள்.

எண்ணங்களை கோர்க்குக் கோர்த்துப் பார்ப்பதிலோ உங்களுடைய பங்களிப்பு என்று எதுவும் இருக்காது.

ஸமாதி நிலையில் நம்மை நாமே உணரும்போது. நாம் தூய்மையான ச் கீதிவாய்ந்த, நம்முடைய உண்மையான, நிலையான நிலையைத் தொடுக்றோம்.

ஆனால் இப்போது நாம் அனுபவங்களை ஒன்றோடு ஒன்று கோர்த்துக் கோர்த்துப் பார்க்கு அந்த அபைவங்களினால் ஏற்படும்

உணர்ச்சி நிலைகளை ஒன்றோடொன்று தொடர்புபடுத்திப் பார்க்கிறோம்.

அதனால் தொடர்ந்து ஒரு இன்ப நாடகமோ அல்லது துன்ப நாடகமோ அரங்கேறுகிறது. இந்த விளையாட்டைத்தான் இப்பொழுதும் நாம் விளையாடிக்கொண்டிருக்கிறோம்.

துன்பம், இன்பம் ஆகிய இவையெல்லாம் உளவியல் ரீதியான நாடகங்கள்தான்; இது ஒரு நாடக நடிப்புத்தான். துன்பமோ இன்பமோ உண்மையில் இல்லை. ஒவ்வொரு எண்ணமும், அனுபவமும் அந்த நேரத்திற்கானவை, தற்காலிகமானவை, தனித்தனியானவை. அந்தச் சூழ்நிலைக்கு மட்டுமே பொருந்தும். நாம் அவற்றை இணைத்துப் பார்த்துத் துன்பத்தையும் இன்பத்தையும் உருவாக்கிக்கொள்கிறோம்.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், நாம் துக்கத்தை மட்டுமே உருவாக்கி துக்கத்தைத்தான் கொடுக்கிறது.

தூய்மையான சக்தியின் வடிவான பருப்பொருள் வெளிப்பாடே இந்த மனமும், உடலும்.

ஸ்மாதிநிலையில் நம்மை நாமே உணரும்போது, நாம் இந்தத் தூய்மையான ச்ச்தி வாய்ந்த, நம்முடைய உண்மையான, நிலையான நிலையைத் தொடுகிறோம்.

இதுதான் பிறப்புக்கும் இறப்புக்கும் அப்பாற்பட்ட நிலை. ஆனால் பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில், ஸம்ஸார பந்தத்தில் சிக்கிக்கொண்டவர்களுக்கு, பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான இந்த நிலைதான் அதாவது இப்போது அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நிலைதான் நிலையானதென்று ஆகி விடுகிறது.

என்னுடைய மஹோன்னதமான இருப்பிடம்

  • 8.19 ஓ ப்ரிதாவின் மகனே! மீண்டும் மீண்டும் பெருந்திரளாக இவ்வுயிர்கள், பகல் தொடங்கும்போது வெளிப்பட்டு செயல்பட்டு, இரவு வரும்போது இயற்கையாகவே மறைந்து விடுகின்றன.
  • 8.20 ஆனால் இவற்றிற்கு அப்பாற்பட்ட இயற்கை ஒன்று உண்டு. அது நிலையானது; அது தோன்றிய மற்றும் தோன்றாதவற்றிற்கும் அப்பாற்பட்டது.

அந்த அழிக்கப்பட்டாலும், உலகங்களெல்லாம் ஆது மாறாமல்இருக்கிறது.

  • 8.21 அந்த மஹோன்னதமான இருப்பிடம் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாததாகவும் அழியாததாகவும் முடிவான லக்ஷ்யமாகவும் இருக்கிறது.

ஒருவர் எனது அந்த மஹோன்னதமான இருப்பிடத்தை அடைந்துவிட்டால் அவர் திரும்ப வருவதில்லை.

  • 8.22 ஓ பார்த்தா! உயர்ந்த அந்தப் பரம்பொருளை மாறாத பக்கியால் அடைய முடியும்.

அவர் தமது இருப்பிடத்திலேயே இருந்தாலும், எல்லாவற்றிலும் ஊடுருவி நிலைகொண்டு உள்ளன.