குற்ற உணர்ச்சியை விட்டவர்கள் சக்தியுடையவர்களாகிறார்கள்
ராமாயணத்தில் வாலி என்ற பாத்திரம் உண்டு. வாலி ஒரு வித்தியாசமான பாத்திரம்.
சிவபெருமானிடம் அவர் ஒரு வரம் பெற்றிருந்தார். அந்த வரத்தின்படி அவர் எதிரில் நின்று யார் சண்டை போட்டாலும் அவர்களுடைய பலத்தில் பாதி பலம் அவருக்கு வந்துவிடும்.
நாம் வாலியின் எதிரில் நின்றோமானால், நம் பலத்தில் பாதி அவருக்குப் போய்விடும்.ஏற்கெனவே அவருக்கென்று ஒரு பலம் உண்டு. இப்பொழுது நம்முடைய பலத்தில் பாதியும் அவருக்குப் போய்விடும். இயற்கையாகவே யார் வெற்றி பெறுவார்கள் ? அவர்தான் வெற்றி பெறுவார்.
புரிந்துகொள்ளுங்கள், நமது குற்ற உணர்ச்சி தான் வாலி.
நாம் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு எதிராகப் போராட ஆரம்பிக்கிற அந்தக் கணமே, நம் பலத்தில் பாதியை அந்தப் பழக்கத்திற்குக் கொடுத்து விடுகிறோம். பிறகு அந்தப் பழக்கத்துடன் கடுமையாகப் போராடுகிறோம்.
கடுமையாகப் போராடுகிறோம்.
புத்திசாலித்தனத்தை வைத்து ஆராய்ந்து பார்த்தால், நமக்குள் குற்ற உணர்ச்சி மட்டுமே தோன்றும். அந்தத் தவற்றைச் செய்யாதீர்கள்.
நமது கடந்தகால முடிவுகளை இப்போதைய மேம்பட்ட புத்திசாலித்தனத்தை வைத்து ஆராய்ந்து பார்க்காதீர்கள். ஏற்கெனவே பல மடங்கு பலம் பொருந்திய அதிலிருந்து அரைமடங்கு மட்டுமே பலம்கொண்ட நம்மால் எப்படி வெளியே வர முடியும் ?
குற்ற உணர்ச்சியின் மூலம் நாம் எதிர்மறை எண்ணங்களிலிருந்து வெளியே வரவே முடியாது. நாம் மேலானவர்களாக மாறவும் முடியாது.
பெர்னாட்ஷாவின் மிக அழகான ஒரு வாக்கியம். அவர் சொல்கிறார்: ''புகை பிடிக்கும் பழக்கத்திலிருந்து வெளியே வர முடியும். நான் அதுபோல பலமுறை வந்திருக்கிறேன்!''
நம்மால் பல தடவைகள் வெளியே வர முடியும். அது மட்டும்தான் நடக்கும். இந்த வட்டத்திலிருந்து நம்மால் வெளியேற முடிவதில்லை; இந்தப் பழக்கத்திலிருந்து நம்மால் விடுபட முடிவதில்லை. அந்தச் சுழற்சியிலிருந்து நாம் வெளிவர முடிவதில்லை நாம் அந்தச் சுவடுகளில் சிக்கிக்கொள்கிறோம்.
குற்ற உணர்ச்சி, நம்முள் ஒரு அழுத்தமான தடத்தை, பாதையை உருவாக்கி விடுவதால் அதனை விட்டு நாம் ஒருபோதும் வெளியே வர முடிவதே இல்லை.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நமது குற்ற உணர்ச்சியை நீக்கினால்தான் நமது ஆளுமைத் தன்மையை ஒருமைப்படுத்த முடியும். நம்மை மையப்படுத்தமுடியும். நமது ஆளுமைத்தன்மை ஒருமைப்படுத்தப்பட்டால் நாம் சக்தியுள்ளவர்களாக ஆகிவிடுவோம். நம்மிடம் போதுமான சக்தியில்லாதபோதுதான் நாம் நடத்தை சரியில்லாதவர்களாக ஆகிறோம்.
சக்தி அதிகமுள்ளவர்கள்தான் அதிக நடத்தையுடையவர்களாகவே இருக்கிறார்கள். சக்தியில்லாதவர்கள்தான் தவறான நடத்தை உடையவர்களாகிறார்கள். ஆனால் பொதுவாக சமுதாயத்தில் சக்தி உடையவாகள்தான் தவறு செய்கிறார்கள் என்று நாம் நினைக்கிறோம். அப்படி நினைக்காதீர்கள்.
ஒருவர் தவறான செய்கைகளைச் செய்கிறார் என்றால் அந்தச் செய்கை மூலமாகச் சக்தி பெறவே விரும்புகிறார். அந்தச் செயலைச் செய்வதன் மூலம், 'தாம் சக்தியைப் பெறமுடியும்' என்று அவர் நினைக்கிறார்.
புரிந்துகொள்ளுங்கள், நாம் புலனின்பங்களின் பின்னால் அலைவதுகூட அதுபோலத்தான். அந்தச் செய்கைகளின் மூலமாக நாம் சக்தியைப் பெறுவோம் என்று நாம் நினைக்கிறோம். அந்தச் செயலைச் செய்வதன் மூலமாக நாம் ஆனந்தத்தைப் பெறுவோம் என்று நினைக்கிறோம். புலனின்பங்களைத் தேடி ஓடுவது என்பது வேறொன்றும் இல்லை சக்தியைத் தேடி ஓடுவதுதான். நம்முடைய ஓட்டம் எல்லாமுமே சக்தியைத் தேடி ஓடுகிற ஓட்டம்தான்.
நமது கடந்தகால முடிவுகளை இப்போதைய மேம்பட்ட புத்திசாலித்தனத்தை வைத்து ஆராய்ந்து நமக்குள் அந்தத் தவற்றைச் செய்யாதீர்கள். நாம் குற்ற உணர்ச்சிவசப்பட்டவர்களாக இருந்தோமானால், அந்த மனச் சரீரத்தில் உட்கார்ந்துகொள்கிறது. நாம் உடலைவிடும்போது அது மிகப்பெரிய சுமையாகி விடுகிறது.
மரணம் நேரும்போது நாம் கடக்க வேண்டிய அடுத்த சரீரம் ஸூஷ்ம சரீரம். இங்குதான் நமது வாழ்வில் நிகழ்ந்த அனைத்து துக்ககரமான சம்பவங்களும் பதிந்துள்ளன.
குற்ற உணர்ச்சி, நம்முள் ஒரு அழுத்தமான தடத்தை, பாதையை உருவாக்கி விடுவதால் அதனை விட்டு நாம் ஒருபோதும் வெளியே வர முடிவதே இல்லை.
ஸ்தூல சரீரம், ப்ராண சரீரம், மன சரீரம் மற்றும் சூஷ்ம சரீரம் ஆகிய நான்கு சரீரங்களையும் நமது உயிர் கடக்கும்போது ஏற்படும் அனுபவம்தான் நரகம். தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், நரகம் என்று எந்த இடமும் நம் தலைக்கு மேல் இல்லை. நமது எல்லா வித ஆசைகளும் குற்ற உணர்ச்சிகளும், நமது துக்க அனுபவங்களும் பதிந்துள்ள இந்த நான்கு சரீரங்களும்தான் நரகம்.
நமது வாழ்க்கையில் இந்த நான்கு சரீரங்களையும் நாம் தூய்மையாக வைத்திருந்தால் நாம் நரகத்தில் நுழைவதே இல்லை.
அதாவது, நாம் சில நுட்பங்களால் இந்த நான்கு சரீரங்களையும் தூய்மைப் படுத்தினோமானால், 'நுட்பங்கள்' என்று நான் சொல்லும்போது தியானத்தையே குறிப்பிடுகிறேன், நாம் சரியான தியானங்களின் மூலமாக இந்த நான்கு சரீரங்களையும் தூய்மையாக வைத்திருந்தோமேயானால், நாம் உடலை விட்டுச் செல்லும்போது நமக்கு எந்தவிதமான பிரச்சினையும் இருக்காது. இது நமக்குச் சரியான நெடுஞ்சாலையை அமைத்துக் கொடுக்கிறது. நேரடியாகவே நாம் அதில் பயணம் செய்வோம்.
இதைத்தான் கிருஷ்ணர், ''அந்தப் பாதையில் மனிதன் தன் உடலை விட்டு மிக அழகாகச் சென்று விடுதலையும் அடையலாம் அல்லது துக்கப்பட்டுக்கொண்டே சென்று தம்மை அழித்தும்கொள்ளலாம், '' என்று சொல்கிறார். இரண்டு வழிகளையும் கிருஷ்ணர் காட்டுகிறார். நாம் உடலை விட்டுச் செல்லும்போது நமக்கிருக்கும் மிகப்பெரிய தடைகள் இவைதான்.
புண்ணியங்களும் கர்மங்கள்தான்
நமது முன்று உள் சரீரங்களிலும்தான் நமது ஆனந்த அனுபவங்கள் பதிந்துள்ளன. இவற்றைத்தான் நாம் சொர்க்கம் என்கிறோம். நாம் இங்கேயே சந்தோஷமாக இருந்தாலும் கூட அங்கேயும் நகரத்தான் வேண்டும்.
புரிந்துகொள்ளுங்கள், நன்றாகப் புண்ணியங்களும் கர்மங்கள்தான். அவையும் நம்மைப் பிணைக்கின்றன.
சரியான தியானங்களின் மூலம் நம்முடைய நான்கு சரீரங்களைத் தூய்மையாக வைத்திருந்தோமேயானால், மரணம் ஒரு இனிமையான அனுபவமாகிவிடுகிறது.
நாம் நன்றாக இருப்பதாக உணர்வோம், மகிழ்ச்சியாகவும் இருப்போம். ஆனால் கொஞ்ச நாள்களுக்குத்தான். நமது மனம் அதற்குப் பிறகு அதையும் சாதாரணமாகவே எடுத்துக்கொள்கிறது.
உதாரணமாக நாம் கடற்கரையோரத்தில் நடக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். உடனே நினைப்போம். நமக்கு இங்கு ஒரு குடிசை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ? தினமும் அமர்ந்து சூரிய உதயத்தைப் பார்க்கலாம் என்று நினைப்போம்.
ஆனால் குடிசை கிடைத்தவுடன் உண்மையில் என்ன நடக்கிறது? மூன்று நாள்களுக்கு மகிழ்ச்சியாக இருப்போம். அதற்குப் பிறகு அதையும் சாதாரணமாக நினைப்போம். ''ஓ! அதே வீடு! அதே மனைவி! அதே நாற்காலி! அதே கடற்கரை," என்று நினைப்போம். அவ்வளவுதான்.
எல்லாவற்றையுமே நாம் சாதாரணமாக நினைக்கிறோம். சொர்க்கம் பற்றிய விஷயத்திலும் இதுவேதான் நடக்கிறது. எப்போது எல்லாவற்றையும் சாதாரணமாக நினைக்கிறீர்களோ அப்போதே நீங்கள் வேறோரு உடலை, வேறொரு பிறவியை எடுக்க மீண்டும் வர வேண்டியிருக்கிறது.
கேள்வி : ஸ்வாமிஜி ! நற்செயல்களின் மூலமாக நாம் அடையும் புண்ணியங்களும் கர்மங்கள். அவற்றிலிருந்தும் நாம் விடுபடாவிட்டால் ஞானம் அடைய மாட்டோம் என்கிறீர்கள். அது எப்படி? எங்கள் வாழ்க்கை முழுவுதும் இதுவரை நாங்கள் கேள்விப்பட்டிருப்பதெல்லாம் என்னவென்றால், தர்ம காரியங்கள் செய்து, அதன் மூலமாக புண்ணியங்கள் அடைந்தால்தான் சொர்க்கத்திற்குச் செல்ல முடியும் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படித்தான் எங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. இப்போது நீங்கள் அதில் பயனில்லை என்கிறீர்களே ?
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்தப் பாவம், புண்ணியம் என்ற பேச்சுக்கள் எல்லாம் உங்களைக் கட்டுக்குள் வைக்கவே! சமுதாயத்திற்கு ஏற்றபடி உங்கள் நடத்தை சரியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மதங்கள் இந்தக் கட்டுப்பாடுகளை விதிக்கின்றன.
நீங்கள் உயிருடன் இருக்கும்வரை உங்களால் இந்தச் சமுதாயத்திற்கு தொல்லைகள் இருக்கக் கூடாது என்பதுதான் இதன் பின்னணி. எல்லோருக்குமே மரணத்தைப் பற்றிய பயம் போய் விட்டால் என்ன ஆகும் ? ஒழுங்கீனம் மட்டுமே அங்கு இருக்கும். யாருமே அரசாங்கத்தை மதிக்க மாட்டார்கள்.
அதனால்தான் நல்லவர்களாக இருங்கள், தவறான செயல்களைச் செய்யாதீர்கள், பொய் சொல்லாதீர்கள், திருடாதீர்கள், என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்படியே அவற்றைச் செய்தாலும் அதற்கும் வழிமுறைகள் வைத்திருக்கிறார்கள். வாரம் ஒருமுறை சர்ச்சுக்குச் செல்லுங்கள். பிரார்த்தனை கேட்டுக்கொள்ளுங்கள். பூசாரிகளுக்கும் பணம் கொடுங்கள் (அவா்களும் வாழ வேண்டும் அல்லவா?) பிறகு நீங்கள் அமைதியாக வாழலாம். உங்களுடைய பாவமெல்லாம் கரைந்துவிடும். நீங்கள் சொர்க்கத்திற்குப் போகலாம்.
மறுபடியும் பாவம் செய்தால் ... அதனால் என்ன ? கோயில் இருக்கவே இருக்கிறது. பூசாரியும் இருக்கிறார். இன்னும் பணம் இருக்கிறது. மறுபடியும் பாவ மன்னிப்புக் கேட்டு உங்களால் வருந்த முடியும். அதனால் இந்தச் சுழற்சி போய்க்கொண்டே இருக்கும்.
நீங்கள் உங்களுடைய வங்கியில் எண்ணங்கள், சொல், செயல் என்ற வடிவில் இருப்பு வைத்திருக்கும்வரையில், அது நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி, நீங்கள் மறுபடியும் உடல் எடுத்தாக வேண்டும். அது எப்படிப்பட்ட உடலாக இருந்தாலும் சரி! உங்களுடைய மன அமைப்பு மிகக் கீழானதாக இருந்தால் நீங்கள் விலங்காகப் பிறக்கலாம்.
இந்தப் பிறவியில் உங்கள் செயல்கள் முயற்சி இல்லாமல், உள்ளுணர்வால் தானாகவே விழிப்புணர்வற்ற நிலையில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தால், நன்றாகத் நீங்கள் இந்த வாழ்க்கையில் விலங்கைப்போலத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அதனால் அடுத்த பிறவியிலும் நீங்கள் ஒரு விலங்காகவே பிறப்பீர்கள்.
உங்கள் மதம் சொல்வதைப்போல, சொர்க்கத்தை அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு நற்காரியங்களைச் செய்திருந்தீர்களானால் நீங்கள் மறுபடியும் மனிதராகப் பிறப்பீர்கள். நீங்கள் நல்ல எண்ணங்களில் சிக்கிக் கொண்டிருந்தாலும்கூட மீண்டும் பிறப்பீர்கள்.
கிருஷ்ணர் பகவத் கீதையில் மீண்டும் சொல்வது என்னவென்றால் பலன்களைப் பற்றிக் கவலை படாமல் காரியங்களைச் செய்யுங்கள் என்பதுதான். எந்தவிதமான பலனையும் எதிர் பார்க்காமல், எந்தவிதமான பற்றும் இல்லாமல் காரியங்களைச் செய்யும்போது உங்களுக்குக் கர்மங்கள் சேர்வதில்லை. கர்மங்கள் இல்லை என்றால் மறுபடியும் நீங்கள் பிறக்க வேண்டியதில்லை.
உங்களுடைய எண்ணங்கள், சொல், செயல் ஆகியவை நல்லதாகவே இருந்தாலும் சரி, நீங்கள் மறுபடியும் உடல் எடுத்தாக வேண்டும்.
இந்து மதப் புராணங்களிலும், மற்ற மதப் புராணங்களிலும் தேவர்கள், அஸுரர்கள், தேவதைகள் என்று சொல்கிறார்கள். நம்புங்கள், இருவருக்குமே பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை.
இந்து மதத்தில் குறிப்பிடப்படுகிற அஸுரர்கள் பாதாள உலகில் வாழ்கிறவர்கள். அவர்கள் எல்லாருமே மிக மிகத் துணிச்சல் மிக்கவர்கள். மிகப்பெரிய காரியங்கள் செய்தவர்கள். ஆனாலும் அவர்கள் தங்கள் உடலின் மேல் பற்றுக் கொண்டவர்கள்; புலனின்பங்களில் நாட்டம் கொண்டவர்கள்.
அவர்கள் தங்கள் உடலின் மீது மிகவும் பற்றுக் கொண்டவர்கள். அவர்கள் மிகப்பெரிய தியாகமாக, தங்கள் உடலின் பகுதிகளையே எந்தவிதமான முகச் சுளிப்பும் இல்லாமல் நெருப்பில் இடுவார்கள். அவ்வளவு துணிச்சல் மிக்கவர்கள்.
அஸுரா்கள் உடல் பற்று என்ற தளத்திலேயே இயங்குபவர்கள். அவர்கள் தங்கள் மன அமைப்பை மாற்றி, புலன் இன்பங்களின் மீதுள்ள பற்றிலிருந்து விடுபட்டால்தான் முக்தி அடைய முடியும்.
பிறப்பு, இறப்பு என்ற சூழலிலிருந்து விடுபடுவதற்கு ஒரே வழி பற்றற்ற நிலைதான்.
தேவர்கள் சொர்க்கத்தில் நல்லவர்களாகவும் சிக்கியிருப்பவர்களே. அவர்கள் தங்கள் மனம் என்ற தளத்தில் சிக்கியுள்ளார்கள். மனம் சார்ந்த இன்பங்களை அவர்களால்விட முடியவில்லை. மனம் என்ற தளத்தில் உள்ள மனம் சார்ந்த இன்பங்களை விட்டால்தான் அவர்களும் மேலே போக முடியும்.
பிறப்பு, இறப்பு என்ற சூழலிலிருந்து விடுபடுவதற்கு ஒரே வழி பற்றற்ற நிலைதான். நினைவில்கொள்ளுங்கள், பிறப்புக்கும் இறப்புக்கும் எந்தக் காரணமும் இல்லை. அவை எந்த நோக்கமும் இல்லாத பாதைகள். அவை எப்படி நிகழ்கின்றனவோ அவற்றை அப்படியே நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.
அப்படி ஒரு புரிதல் ஏற்படுமானால் நீங்கள் மேலும் மேலும் ஆசைகளை உருவாக்கிக்கொள்வதில்லை. அதனால் கர்மங்கள் இல்லை. நீங்கள் நிலையான ஆனந்தமான நித்யானந்தத்தில் நிலைக்கிறீர்கள்.