KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)/அடுத்த பிறவியை இப்போதே வடிவமைக்கலாம்Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)

அடுத்த பிறவியை இப்போதே வடிவமைக்கலாம்

முதலில் மிக அதிகமான வலி இருக்கும். ''ஏன் வலி?'' என்று நாம் கேட்கலாம். ஏனென்றால் நமது உயிர் உடலில் தொடர்ந்து தங்க விரும்புகிறது. ஆனால் உடலால், உயிரை அதற்கு மேலும் உடலில் தங்க வைக்க முடியாது. நமது உடல் முழுவதுமாகக் களைப்படையும்போதுதான், உயிர் உடலை விட்டுச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

இறப்பு நேர்கிறது என்றால் உடம்பு முழுவதுமாகக் களைப்படைந்து விட்டது அல்லது சேதமடைந்துவிட்டது என்று பொருள். இயற்கையான மரணத்தில், உடல் களைத்து விடுகிறது. விபத்தில், உடல் சேதமடைந்து விடுகிறது. அதனால் நாம் உடலைவிட்டுச் செல்கிறோம்.

புரிந்துகொள்ளுங்கள், காய் நறுக்கும் போது அரை அங்குல விரலை நறுக்கிக் கொண்டால் எவ்வளவு வலி ஏற்படுகிறது! அது போன்ற வலி அரடி உடல் முழுவதும் இருந்தால், அது எப்படிப்பட்ட வலியாக இருக்கும் ?! உடல் கிழிக்கப்பட்ட மாதிரி ஆகி விடுமல்லவா ? இயற்கையாகவே அதிக வலி இருக்கும்.

ஆனால் நம் இருப்புத் தன்மையிலேயே தன்னிச்சையான 'வலி நிவாரணி முறை' ஒன்று இருக்கிறது. தாங்க முடியாத வலி ஏற்படும்போது நாம் கோமா நிலைக்குப் போய் விடுகிறோம். கோமா நிலைக்குப் போய் விட்டால் நமக்கு வலி தெரிவதில்லை. ஆனால் இதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், 'கோமா' நிலையில் மரணம் ஏற்படும்போது, விழிப்புணர்வற்ற நிலையிலேயே நாம் இறக்க நேரிடுகிறது.

இது மிகவும் கொடுமையான விஷயம். ஏனென்றால் நாம் எதற்காகப் பிறந்தோம் என்ற விழிப்புணர்வு அப்போது நமக்கு இல்லாமல் போவதால், அடுத்தபிறவியைப் பற்றிய முடிவையும் நாம் விழிப்புணர்வுடன் எடுக்க முடியாது.

அதனால்தான், கிருஷ்ணர், யம் யம் வா பி ஸ்மரன் பாவம் என்று சொல்கிறார். அதாவது மரணத்தறுவாயில் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்களோ அந்த நிலையை நீங்கள் நிச்சயம் அடைவீர்கள். மரணத்தறுவாயில் நினைவற்ற நிலையில் இருந்தால் கீழான நிலையிலான உடலையே நாம் அடுத்த அடுத்த பிறவியில் எடுக்கிறோம். மிக உயர்ந்த உணர்வு நிலையை அடையாத பிறவியையே எடுக்கிறோம்.