உடல் நமக்குச் சொல்லும் பிரியாவிடை
இறக்கும்பொழுது நமது ஸ்தூல உடலை விட்ட உடனே நாம் ப்ராண சரீரத்தை அடைகிறோம். ப்ராண சரீரம் என்பதுதான் நம் உடலுக்குச் சக்தி கொடுக்கிறது. காற்றை உள்ளிழுக்கவும் வெளிச் செலுத்தவும் காரணமாக இருக்கும் சரீரம்தான் ப்ராண சரீரம். அது நம் ஆசைகளால் நிரம்பியுள்ளது.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், ப்ராண சரீரம், ஆசைகளும் மிக நெருங்கிய தொடர்புள்ளவை. நம்முடைய ஆசைகள் மாறினால் சுவாச ஓட்டமும் மாறிவிடும்.
அதேபோலத்தான் நாம் நமது சுவாச ஓட்டத்தை மாற்றினால், நம் மனமும் மாறுகிறது. நமது மனமும், சுவாசமும் மிக நெருங்கிய தொடர்புடையவை. அதனால்தான், உயிரைவிடும்போது மூச்சை உள்ளிழுத்தும், வெளித் தள்ளியும் மனிதர்கள் துன்பமடைகிறார்கள்.
உடல், வைத்துக்கொள்ள எனக்கு சக்தியில்லை நீ வெளியேறலாம், '' என்று சொல்கிறது.
ஆனால் உயிர், ''எனக்கு இன்னும் ஆசைகள் இருக்கிறது. அதனால் இந்த உடலில் வாழ வேண்டும். இந்த உடல் மூலமாகத்தான் அந்த ஆசைகளை நான் அனுபவிக்க வேண்டும், " என்று சொல்கிறது.
உயிருக்கும் இடையே உடலிக்கும் போராட்டம் நடைபெறுகிறது.
உடலைவிடும்போது, நாம் எதற்காகப் பிறந்தோம் என்ற விழிப்புணர்வு இல்லையானால் நாம் நமது அடுத்தபிறவியைப் பற்றிய முடிவையும் எடுக்க முடிவதில்லை
அடுத்தபடியாக மன சரீரத்திற்குள் நுழைகிறோம். நமது வாழ்க்கை முழுவதும் நாம் உருவாக்கி வைத்திருக்கிற குற்ற உணர்ச்சி முழுவதும் இந்த சரீரத்தில்தான் பதிவாகி இருக்கிறது. ஆசை என்பது எதிர்காலத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு. குற்ற உணர்ச்சி என்பது கடந்தகாலத்தைப் பற்றிய வருத்தம்.
புத்திசாலிகள் குற்ற உணர்ச்சியில் விழமாட்டார்கள்
குற்ற உணர்ச்சி: கடந்தகாலத்தில் நான் இதுபோன்று வாழவில்லையே என்ற எண்ணம்
ஆசை: எதிர்காலத்தில் நான் இது போன்று இருக்கவேண்டும் என்ற எண்ணம்.
புரிந்துகொள்ளுங்கள், கடந்தகாலத்தில் நாம் எடுத்த முடிவுகளை, இப்பொழுது அதிகரித்திருக்கும் புத்திசாலித்தனத்தை வைத்துக்கொண்டு ஆய்வு செய்யும்போது, நம் உணர்வுக்குள் ஏற்படும் உணர்ச்சியையே 'குற்ற உணர்ச்சி' என்கிறோம்.
ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன். ஏழு வயது இருக்கும்போது நாம் நமது பொம்மைகளோடு விளையாடிக்கொண்டிருக்கிறோம்.
அப்போது நம் அம்மா வந்து நம்மை இரவு உணவுக்கு "வா, வந்து சாப்பிடு' என்று அழைக்கிறார். ''நான் சாப்பிட வரவில்லை. நான் விளையாட வேண்டும்,'' என்று சொல்கிறோம்.
குற்ற உணர்ச்சி என்பதுதான் ஒரே ஒரு பாவம். அதைத்தவிர பூமியில் வேறு எந்த பாவமும் இல்லை.
அம்மா நம்மிடமிருந்து விளையாட்டுப் பொருட்களைப் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கிறார். உடனே, ''நீ போ! செத்துப்போ! என்னுடைய பொம்மையைக் கொடு. நான் விளையாட வேண்டும்," என்று சொல்கிறோம்.
அந்தச் சமயத்தில் நமக்கு விளையாட்டுப் பொருட்கள்தான் பெரிதாகத் தெரிகின்றன. அம்மாவின் உயிரைவிடவும் விளையாட்டுப் பொருட்களே பெரிதாகத் தெரிகின்றன. ஆனால் பக்குவமடைந்த பிறகு அது உண்மையல்ல என்று நமக்குப் புரிகிறது.
பக்குவமடைந்த பிறகு, ''ஓ! எவ்வளவு பெரிய தவற்றை நாம் செய்து விட்டோம். இந்த வார்த்தைகளை அம்மாவிடம் நாம் சொல்லியிருக்கக் கூடாது. மிகப்பெரிய தவறு செய்து விட்டோம். அம்மா எவ்வளவு முக்கியமானவர்! ஆனால் அது எனக்கு அப்போது தெரியவில்லையே, ' என்று நினைக்கிறோம்.
ஆனால் இதுபோன்ற குற்ற உணர்ச்சியை வளர்த்துக்கொள்வதில் ஒரு பயனும் இல்லை. அந்த நேரத்தில் ஒரு குழந்தையாக நமக்கு அவ்வளவுதான் புத்திசாலித்தனம் இருந்தது. ஆனால் இப்பொழுது நமது புத்திசாலித்தனம் வளர்ந்து விட்டது.
நமது கடந்தகால முடிவுகளை இப்போதுள்ள புத்திசாலித்தனத்தை வைத்துக்கொண்டு அலசி ஆராய்ந்தால் ஒரு விஷயத்தைத்தான் உருவாக்க முடியும் - அதுதான் குற்ற உணர்ச்சி! அந்தக் குற்ற உணர்ச்சி தான் மிஞ்சும்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், கடவுள் இன்னும் ஒருமுறை நமக்கு வாழ்க்கையைக் கொடுத்தாலும் சரி, ஏழு வயதை அடையும்போது நாம் அதே தவற்றைத்தான் செய்வோம். ஏனென்றால் ஏழு வயதில் அந்த அளவு பக்குவம்தான் இருக்கும். தற்போது நமது புத்திசாலித்தனம் மேம்பட்டுள்ளது. இப்போது நமது புத்திசாலித்தனம் அதிகரித்துள்ளது என்பதற்காக, நமது கடந்தகாலச் செயல்களை ஆராய்ந்து, நமது கடர்க்கால செயல்களைப் பற்றிய குற்ற உணர்ச்சியை நமக்குள் நாமே உருவாக்கிக் கொண்டிருக்க முடியாது.
அந்த நேரத்தில், அப்படிப்பட்ட முடிவை நம்மை எடுக்கக் காரணமான, நமக்கு கிடைத்த அந்தப் புள்ளி விபரம் என்ன என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும்.
அப்போதைய புத்தி அவ்வளவுதான். அப்போது நமக்கு எந்த அளவிற்கு புத்திசாலித்தனம் இருந்ததோ அதை வைத்துக்கொண்டு இயங்கினோம். அதை வைத்துத்தான் முடிவுகள் எடுத்தோம். இப்போது புள்ளி விபரங்களை ஆராய்கிற புத்திசாலித்தனம் வளர்ந்து விட்டது. இப்போது நமது சாஃப்ட்வேர் வளர்ந்து விட்டது. அதை வைத்துக்கொண்டு ''ஒ! நாம் தவறான செயலைச் செய்து விட்டோம், " என்று நினைக்கிறோம்.
நம் உணர்வுக்குள் மீண்டும் மீண்டும் பதியும் எந்த ஒரு எண்ணமாக கருந்தாலும் சரி அது பலமுடையதாகி விடுகிறது.
என்று இப்போது குற்ற உணர்ச்சியால் தவிப்பது என்பது பொருளற்றது.
அந்த நேரத்தில் நம்மிடமிருந்த சாஃப்ட்வேர் அவ்வளவுதான். புள்ளிவிபரங்களை நன்றாக ஆராய்ந்த பிறகு முடிவெடுக்கிற அளவுக்கு மென்பொருள் அப்போது இல்லை. அப்போதைய புத்திசாலித்தனம் அவ்வளவுதான். அதற்கு இப்போது என்ன செய்ய முடியும் ?
இன்னும் ஒரு விஷயம். குற்ற உணர்ச்சி என்பது நம் இருப்புணர்வில் சொருகப்பட்ட ஆப்பு. அது உங்களுக்கும் உங்கள் இருப்பிற்கும் இடையே ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.
மிகப்பெரிய பாவம் - குற்ற உணர்ச்சீ
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், குற்ற உணர்ச்சி என்பது மிக கொடுமையான பாவம்.
பாவம் என்று ஏதாவது இருந்தால், அது குற்ற உணர்ச்சிதான். குற்ற உணர்ச்சி என்பதுதான் ஒரே ஒரு பாவம். பூமியில் வேறு எந்த பாவமும் இல்லை. குற்ற உணர்ச்சியின் மூலமாக நாம் ஒருபோதும் தூய்மையடைய முடியாது; நன்னடத்தையையும் நாம் குற்ற உணர்ச்சியால் அடைய முடியாது. மக்கள் என்னிடம், ''அது எப்படி ஸ்வாமி ? குற்ற உணர்ச்சி இல்லாமல் நாம் எப்படி மேலானவர்களாக மாற முடியும் ?'' என்று கேட்கிறார்கள்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், குற்ற உணர்ச்சியின் மூலமாக நம்மால் நல்ல, தூய்மையான, ஒழுக்கமான மனிதர்களாக மேன்மையடைய முடிவதில்லை.
குற்ற உணர்ச்சிகள் நம்மை மேலானவர்களாக மாற்றுவதற்குப் பதிலாக, மீண்டும் மீண்டும் அதே தவறுகளைச் செய்யத் தூண்டும், நம்மை அழுத்தும் மிகப்பெரிய பாரமாக மாறி விடுகின்றன.
குற்ற உணர்ச்சி என்பது நம் இருப்புணர்வில் சொருகப்பட்ட ஆப்பு.
உதாரணத்திற்கு 'சிகரெட் பிடிக்கும் பழக்கம் தவறானது' என்ற குற்ற உணர்ச்சி நம்முள் பதிந்து விட்டால், சிகரெட் பிடிக்கும் பழக்கத்திலிருந்து வர முடியாது. ஏனென்றால் நம்முள் பதிந்திருக்கும் அந்தக் குற்ற உணர்ச்சியையே மீண்டும் மீண்டும் நினைத்து நினைத்து அதை இன்னும் ஆழமானதாக, பலமுள்ளதாக ஆக்கிக் கொள்கிறோம்.
நம் விழிப்புணர்வுக்குள் மீண்டும் மீண்டும் பதியும் எந்த ஒரு எண்ணமாக இருந்தாலும் சரி, அது பலமுடையதாகி விடுகிறது. அதை விட்டுவிட்டு நம்மால் வெளிவர முடியாது.