KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)/பகவத் கீதையின் மீது விஞ்ஞான ஆராய்ச்சிSign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)

பகவத் கீதையின் மீது விஞ்ஞான ஆராய்ச்சி

விஞ்ஞானத்தையும் புள்ளி விபரங்களையும் துணையாகக்கொண்ட நுட்பங்களைப் பயன்படுத்தி பல நிறுவனங்கள், பகவத் கீதையின் பின்புலமாக இருக்கும் தத்துவத்தை சரி பார்க்க பல ஆராய்ச்சிகளை நடத்தியிருக்கின்றன.

அந்த ஆராய்ச்சிகளுள் குறிப்பிடத்தக்கது மஹரிஷி மகேஷ் யோகி மேற்கொண்ட ஆராய்ச்சியே! அவருடைய கண்டுபிடிப்புகள் மறைரிஷி வேத விஜ்ஞாந விச்வா வித்யாலயத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

பகவத் கீதையின் ஸ்லோகங்களில் அடிப்படையாகக்கொண்ட தியான நுட்பங்களின் மீது ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தியானத்தின் மூலம், அவர்களுடைய வாழ்க்கையின் தரம் வியக்கத் தக்க முறையில் மேம்படுவதை அவை காட்டியிருக்கின்றன.

தியானம், செய்வதன் மூலம் அவர்களுடைய போராட்ட மனப்பான்மை குறைந்து விடுவதால், தங்களுக்குள் மேலான அமைதியை உணருகிறார்கள்' என்பதை இந்த ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன.

தியானிகள் மற்றவர்களால் நன்கு மதிக்கப்படுபவர்களாகவும் மற்றவர்களின் பாராட்டுக்களைப் பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள்.

தியானத்தினால் சுய-மரியாதை, சுய-நம்பகத் தன்மை, இவை உயர்வதன் மூலம், அவர்களுடைய உள்பூரணத் தன்மை மலர ஆரம்பிக்கிறது. இது சுய-மெய்ப்பித்தலுக்கு அவர்களை அழைத்துச் செல்கிறது.

மூளை ஒருவருடைய திறமை அதிகரிக்கிறது. இதன்மூலம் புரிந்துகொள்ளும் தன்மை, படைப்பாற்றல், வேகமாக பதிலளிக்கும் திறன், சூழ்நிலைக்கு ஏற்றார்போல் முடிவெடுக்கும் திறன், மேலான இணைந்து செயலாற்றும் உள் ஆற்றல் போன்ற மேம்பட்ட தன்மைகள் வெளிப்படுத்தப்படுகின்றன.

புலன்களை உணரும் தன்மையும் முழுமுமையான உடல் நலமும் மேம்பட்டு மன அழுத்தம் குறைகிறது. முழுதும் அடிக்கடி மனச்சோர்வில் விழுந்துவிடும் மனப்பான்மையே குறைந்து விடுகிறது என்பதும் ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.

தியானத்தின் விளைவால் தனிமனிதரின் வாழ்க்கை முறை, மேலான, ஒழுக்கமான வாழ்க்கை முறையாக மாறுகிறது. சமுதாயத்தில் சுமுகமாகப் பழகும் மனப்பான்மை மலர்கிறது. இதனால் சமுதாயத்தில் குற்றமும், போராட்டமும் குறைகின்றன.

தியானம் மேல் நிலையான விழிப்புணர்விற்கு வழி நடத்துகிறது. கடந்த சில வருடங்களாக மனிதரின் விழிப்புணர்வு மலர்ந்ததன் மூலம், மனித வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு சிக்கலான மைல் கல்லைக் கடந்துள்ளோம் என்பதை டாக்டர். டேவிட் ஹாக்கின்ஸ் (Power Vs Force) என்ற புத்தகத்தின் ஆசிரியர்) அப்ளைடு கின்சியோலாஜியின் (Applied Kinesiology) ஆராய்ச்சி கருவிகள் மூலமும் பலவற்றின் மூலமும் வெளிக்காட்டியிருக்கிறார்.

டாக்டர். ஹாக்கின்ஸின் ஆராய்ச்சிகள், 'பகவத் கீதை மிக உயர்ந்த சக்தியை மனித குலத்திற்குகொண்டு சேர்க்கிறது' என்பதை உறுதிப்படுத்துகின்றன.

மஹரிஷி மகேஷ் யோகியின் நிறுவனங்களும் மற்றும் டாக்டர் டேவிட் ஹாக்கின்ஸும் இந்த மேலான புத்தகத்தின் சிறப்பை வெளிக்காட்டியுள்ளார்கள். அவர்களின் நன்றியுணர்வுடன் பாராட்டுகிறோம்.

கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின் – வேறு சில பெயர்கள்

ஸ்ரீ கிருஷ்ணருக்கு பல பெயர்கள் இருந்தாலும் கீதையில் அவற்றில் சில பெயர்களைக்கொண்டு, அர்ஜுனன் கிருஷ்ணரை அழைக்கிறார். அதேபோல், அர்ஜுனனுக்கும் பல பெயர்கள் இருக்கின்றன. அவற்றில் சில பெயர்களைக்கொண்டு, கிருஷ்ணர் அர்ஜுனனை அழைக்கிறார்.

அந்தப் பெயர்களையும் அதற்குரிய பொருளையும் இங்கே கொடுத்திருக்கிறோம்.

கிருஷ்ணருடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:

அச்யுதன்: தம்முடைய நிலையில் உறுதியாக இருப்பவர்
அரிஸூதனன்: பகைவர்களை அழிப்பவர்
க்ரு'ஷ்ணன்கருப்பு நிறமுடையவா், மன அழுக்குகளை நீக்குபவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று கடவுள்களின் சொரூபமானவர், பிரஹ்ம சொரூபமானவர், பக்தர்களின் துக்கங்களைப் போக்குபவர்
கேச'வன்: அழகான முடியை உடையவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்களையும் தம் வசத்தில் வைத்திருப்பவர்
கேசி' நிஷூதனன்: கேசின் என்ற அரக்கனைக் கொன்றவர்
கோவிந்தன்எல்லா உயிர்களைப் பற்றியும் அறிந்து வைத்திருப்பவர்
பகவான்: ஆறுவித குணங்களை உடையவர். அவை 1. பரிபூரண ஞானம். 2. பரிபூரண வைராக்கியம். 3. பரிபூரண பலம் 4. பரிபூரண கீர்த்தி 5. பரிபூரண தேஜஸ் 6. பரிபூரண ஐஸ்வர்யம் (ஸ்ரீ)
புருஷோத்தமன்மேலான புருஷன்
  • : மது என்ற அரக்கனை அழித்தவர் மதுசூதனன்
  • : லக்ஷ்மிக்குத் தலைவர் மாதவன்
  • : 'யது' குலத்தில், யாதவ குலத்தில் பிறந்தவர் யாதவன்
  • யோகேச்'வரன் : யோகத்திற்குத் தலைவர்
  • : வசுதேவருடைய மகன், எல்லா உயிர்களிடத்திலும் வாஸு தேவன் வாசம் செய்பவர்
  • வார்ஷ்ணேயன் : விருஷ்ணி குலத்தில் பிறந்தவர்
  • விஷ்ணு : எங்கும் வியாபகமாய் நிறைந்து இருப்பவர்
  • ஜகந்நிவாஸன் : ஜகத்திற்கு (உலகத்திற்கு) இருப்பிடமாகயிருப்பவர்
  • ஜநார்தன் : ஜனங்களால் (மக்களால்) போற்றப்படுபவர்
  • ஹ்ரு'ஷீகேச'ன் : இந்திரியங்களுக்குத் தலைவர்
  • அனகன் : பாபம் அற்றவர்

அர்ஜுனனுடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:

அர்ஜுனன்: நல்ல, தூய்மையான தன்மை உடையவர்
கபித்வஜன்: கொடியில் குரங்குச் சின்னத்தை உடையவர்
கிரீட்டிகிரீடம் தரித்தவர்
குடாகேச'ன்: தூக்கத்தை வென்றவர்
குருநந்தனன்: 'குரு' வம்சத்தில் பிறந்தவர்
கௌந்தேயன்: குந்தியின் மகன்
தனஞ்ஜயன்: செலவழிக்கப்படாமல் சேர்த்துவைக்கப்பட்டிருக்கும் செல்வங்களை ஒன்று திரட்டுபவர்.
பரந்தபன்: எதிரிகளை வாட்டுபவர்
பாண்டவன்: பாண்டுவுக்கு மகன்
பார்தன்: பிருதையின் (ப்ரீத்தாவின்) மகன்
பாரதன்: பரத குலத்தில் பிறந்தவர்
ஸவ்யஸாசின்: இடது கையால் அம்பு எய்பவர்