சீவன்.. நமக்களித்த உறுதிமொழி
இந்த நாடகத்தின் கடைசி கணங்கள், திரை போடப்படுவதற்கு முன்பாக அனைவரிடமும் மலர்கள் வழங்கப் பட்டன.
பிறகு இதைச் சொன்னார் : குடும்ப பந்தங்களை முழுவதுமாகத் துறந்து ஸ்ரூயாஸியாக துறவறம் பூண்டமையால் தன்னால் ஒரு மகனாகப் பாரம்பரிய வழக்கத்தின்படி காரியங்கள் செய்ய முடியாது. ஆனால் ஒரு குரு குரு என்ற முறையில், தம்முடைய சீடரின் இறுதிப் பயணத்திற்கான பாதையை வகுத்துக் கொடுப்பது தமது பொறுப்பு மற்றும் தமது கடமையுங்கூட என்று சொல்லிவிட்டு மற்றொரு நிகழ்ச்சியை நினைவுகூர்ந்தார்.
ஒருமுறை தந்தையிடம் என்ன வேண்டுமென கேட்டபோது, ''ஸ்வாமிஜி இருந்தால் போதும், ' என்றார். அந்த நிமிடத்தில் அவர் எனது சீடரானார். அந்த முழுமையான, நம்பிக்கையே போதும். வேறெதுவும் வேண்டாம்,'' என்று சொன்னார் ஸ்வாமிஜி.
ஸ்வாமிஜி, மேலும் ஒரு அறிவிப்பைச் செய்தார்: வரும் வருடங்களில் நவம்பர் 12-ஆம் நாள் ஸ்ரீநித்ய அருணாசலானந்த ஸ்வாமிஜி மறைந்த நாள், மறை பரிநிர்வாண நாள் அதாவது ஞானமடைந்தோரின் தினமாக, யார் ஒருவர் ஞானமடைந்த பின், ஸ்வாமிஜியின் கருணையின் கீழ் உடலை விடுகிறார்களோ அவர்களின் நினைவாக இந்தத் தினம் கொண்டாடப்படும் என அறிவித்தார்.
''எனது சீடர்கள் எங்கு மரணமடைந்தாலும் சரி, அவர்களுடைய இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கு, அங்கு நான் இருப்பேன்,'' என்று உறுதிமொழியை எங்களுக்குக் கொடுத்தார். இந்த ஆச்சரியம் மிக்க உறுதிமொழி, எங்கள் இருப்புத் தன்மைக்குள் இடிபோல் இறங்கியது, அந்தக் கணமே எங்களுக்குள் இருந்த கொஞ்ச நஞ்சமிருந்த மரண பயம் கரைந்து மறைந்தது.
சிவனிடமிருந்தே கிடைத்த உறுதிமொழி இது.
அவரது தந்தை, விழிப்புணா்வு நிலையிலிருந்து, மிக உயர்ந்த விழிப்புணர்வு நிலைக்குச் சென்று 21 நிமிடங்களுக்கு இருந்தபின் அவர் ஞானமடைந்தார்.
அவர் விழிப்புணர்வு அற்ற நிலையான கோமா நிலைக்குச் செல்லவில்லை. அதனால் அவரைச் சாதாரணமாக நடத்த முடியாது. மேலும் கடைசி அந்திம முக்தி) மரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்டது.
போர்க்களத்தில் மறைந்த ஒரு மாவீரருக்குச் செய்யப்பட்ட போலிருந்தது அது.
''எனது சீடர்கள் எங்கு மரணமடைந்தாலும் சரி, அவர்களுடைய இறுத்ச் சடங்குகளைச் செய்வதற்கு நான் அங்கு இருப்பேன். '' என்ற உறுதிமொழியை எங்களுக்குக் கொடுத்தார்.
சிதைக்கு எரியூட்டும் முன்பாக தமது சகோதரர்களையும் தாயையும் அழைத்து அவர்களிடம் கொடுத்து இத்தனை வருடங்களாக ஒரு தந்தையாகவும் கணவராகவும் இருந்த சக்திக்கு, உடலுக்கு மரியாதை செலுத்தச் சொன்னார். இதுவே முத்தாய்ப்பான செய்கை. ஸ்ரீநித்ய அருணாசலானந்த ஸ்வாமிஜிக்கு ஜே என்ற முழக்கம் ஒலிக்க ஸ்வாமிஜி ஆரத்தி காட்டினார். பிறகு சிதைக்கு தீ மூட்டினார். உடல் அக்னிக்குச் சமாப்பிக்கப்பட்டது. இது அத்தனையிலுமே ஒருவித கருணையும் அழகும் மிளிர்ந்தது.
கடைசியாக என் மனக்கண்ணில் பதிந்த காட்சி என்னவென்றால் ஸ்வாமிஜி தமது தாயின் தோள் மேல் கையை வைத்து தம் பக்கவாட்டில் அரவணைத்துக் கொண்டார். அது, தாயின் எளிமையான நம்பிக்கையையும் ஆன்மீக பலத்தையும் துணிவையும் ஏற்றுக் கொண்டதைக் குறிப்பதுபோல் இருந்தது.
தமது பூர்வாச்ரம குடும்பத்தினர் தம்மைச் சுற்றிச் சூழ்ந்திருக்க அவர் - ஒரு மகனாக, சகோதரனாக, குருவாக, கடவுளாக நிமிர்ந்து நின்றார்.
என்னுள் எழுந்த ஆழமான நன்றி உணர்வின் காரணமாகவே நான் இந்த மொத்த அனுபவத்தையும் எழுதிச் சமாப்பிக்கிறேன். மேலும் இதைப் படிக்கிற ஒவ்வொருக்குமே எனது அன்பையும் மரியாதையும் வெளிப்படுத்தும் விதமாகவே இதை எழுதுகிறேன்.
இதைத் தவிர, வேறு காரணம் என்று ஒன்று இருக்குமேயானால், அது, உங்களுடைய ஆழமான ஏக்கம்தான்! 'அனுபவத்தை அனுபவிக்க வேண்டும்' என்ற உங்களுடைய ஆழமான ஏக்கத்தினால்தான், இந்தப் பகிர்தல் சாத்தியமாகியுள்ளது.
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ல் MNM