KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)/எண்ணங்களற்ற விழிப்பணர்வே நம் தெய்வீக நிலைSign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 8 - தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 8 - Tamil)

எண்ணங்களற்ற விழிப்பணர்வே நம் தெய்வீக நிலை

ஒரே ஒரு கணமாவது அந்த எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலையை' அடைந்துவிட்டோமேயானால், அனுபவித்து உணர்ந்து விட்டோமேயானால், நாம் எதை அடைய வேண்டுமோ அதை அடைந்து விடுகிறோம். நாம் அதை அடையா விட்டால், நாம் வேறு எதை அடைந்தாலும் அது வீண்தான். எந்தப் புண்ணியமும், பாவமும் நம்மோடு வரப்போவதில்லை. நாம் எதனாலும் மதிப்பிடப் படமாட்டோம்.

சமாதி என்கிற மிக உயர்ந்த ஸத்யத்தால், அனுபவத்தால் மட்டுமே மதிப்பிடப்படுவோம். உண்மையான நிலையில் இருத்தல்' என்று பொருள். ஒருமுறை அதை அடைந்து விட்டால், சேர வேண்டிய இடம் அடைந்து விட்டோம் என்று பொருள்.

மீண்டும் சொல்கிறார், ''ஒரே ஒரு சிறு துளியாவது அந்த அனுபவத்தை நீங்கள் உணர்ந்திருந்தாலும் போதும். உங்கள் உடலைவிடும்போது அந்த அனுபவத்திலிருந்துகொண்டுதான் உடலை விடுவீர்கள்.''

'தன்னை உணர்தல்' ஆகிய அந்த ஆழமான அனுபவம், நாம் உடலைவிடும் போதும் சாத்தியமாகிறது. இறப்பு நிகழும்போது, நமது மொத்த வாழ்க்கையுமே மீண்டும் வேக வேகமாக நம் கண்முன் ஓடும். இது சில நிமிடங்களுக்குள் நடந்து முடிந்துவிடும்.

'எண்ணங்களற்ற விழிப்பணர்வுதான்.' நம் மனத்தை அழிக்கக்கூடிய 'தெய்வீக வைரஸ்'.

முக்கியமான நிகழ்வுகள் மட்டும் மீண்டும் மீண்டும் பல நிறப்படமாக ஓடும். மற்ற நிகழ்வுகளெல்லாம் கறுப்பு வெள்ளையில் ஓடும். அவை பின்னணியாக மாறிவிடும்.

எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலையை அதாவது ஸமாதியை, நாம் உயிருடன் இருக்கும்போது ஒருமுறையாவது அனுபவித்திருந்தோமேயானால், அது மட்டுமே பல நிறங்களில் ஓடும்; மற்றவையெல்லாம் அதற்குப் பின்னணியில் மங்கலாகத் தோன்றும்.

அதனால் இயற்கையாகவே நாம் அந்த நிலையிலிருந்துதான் உடலை விடுவோம். இன்னுமொரு முக்கியமான விஷயம் ஒரு வீடியோ டேப்பில் கீறல் விழுந்திருந்தால், முன் நோக்கி செல்லும் இயக்கத்தில் இருந்தாலும் டேப் கீறல் விழுந்த இடத்திற்கு வந்ததும் நின்றுவிடும் இல்லையா? மீதியிருக்கும் பகுதியில் இருப்பவை எல்லாம் அழிக்கப்பட்டுவிடும்.

அதைப்போலவே நம் வாழ்க்கையில் 'எண்ணங்களற்ற விழிப்புணர்வு நிலை'தான் அந்தத் தடைப்படுத்தும் புள்ளி. ஏனென்றால் அந்தப் புள்ளியில்தான், அந்த இடத்தில்தான் நாம் எண்ணங்களே இல்லாத நிலையில் இருந்திருக்கிறோம். அதனால் நாம் அந்த இடத்திலேயே நின்று விடுவோம். அதற்குப் பிறகு வேகவேகமாக முன்னோக்கி செலுத்துவது நிகழ்ந்தாலும் அதனோடு தொடர்புடைய எல்லா காமங்களும் அழிக்கப்பட்டுவிடும், துடைக்கப்பட்டுவிடும்.

ஒரு வைரஸ் நமது சாஃப்ட்வேரில் நுழைவது போன்றது இது. வைரஸ்கள் இருக்கும்போது, நாம் மேலும் மேலும் சாப்ட்வேரை இயக்கினோமானால், அது சாஃப்ட்வேரையே அழிக்கும்.

அதுபோல் 'எண்ணங்களற்ற விழிப்புணர்வுதான்', நமது சம்சார சாகரத்தை, உலக வாழ்வு என்ற கடலை, நமது ஆசைகளை, நம் மனத்தை அழிக்கக் கூடிய 'தெய்வீக வைரஸ்'. நமது மனம்தான் சாஃப்ட்வேர். நமது மனம் என்பது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட ஒரு சாஃப்ட்வேர்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், மனம் புத்திசாலியும் அல்ல; நுண்ணறிவு கொண்டதும் அல்ல. மனம் என்பது முன்பே தயாரிக்கப்பட்ட சாஃப்ட்வேர்.

உதாரணமாக, தினமும் காலையில் அலுவலகக் கவலைகள் காரணமாக நாம் மன உளைச்சல் அடைகிறோம். மெதுமெதுவாக, ஒவ்வொரு நாளும் தினமும் காலை 10 மணிக்கு நாம் உற்சாகமற்ற, துக்கமான மன நிலையை அனுபவிக்கத் தொடங்குகிறோம். இதில் வேடிக்கை என்னவென்றால் விடுமுறை நாள்களிலும்கூட அதே மனச்சோர்வை அனுபவிக்க ஆரம்பித்து விடுகிறோம்.

மனம் புத்திசாலியும் அல்ல; நுண்ணறிவு கொண்டதும் அல்ல. மனம் என்பது முன்பே தயாரிக்கப்பட்ட ஒரு சாஃப்ட்வேர்.

நாம் கொஞ்சம் கவனமுள்ளவராகவும் கூர்ந்து உணரும் திறம் கொண்டவராகவும் நம்மை நாமே கவனிப்பவராகவும் இருந்தோமேயானால்,

என்று புரியும். எவ்வளவு பேர் இதை அனுபவித்திருக்கிறீர்கள்? நம்மை நாமே கவனித்திருந்தால், சில முறைகளாவது இந்த அனுபவத்தை அனுபவித்திருப்போம்.

அப்போது நம் மனத்திடம் ''இல்லை, இன்று விடுமுறை; இன்று நான் அலுவலகத்திற்குப் போக வேண்டியதில்லை. அதனால் அதைப் பற்றி நினைக்க வேண்டியதுமில்லை, '' என்று சொல்வோம். ஆனால் ஒவ்வொரு வாரமும் விடுமுறையிலும் அதே மன நிலைக்குத்தான் மீண்டும் மீண்டும் திருப்பிச் செல்வோம். ஏனென்றால் நம் மனம் ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட ஒரு சாஃப்ட்வேர்.