விருப்பமிருந்தால் பூமிக்கு வருவீர்கள்
எண்ணங்களற்ற விழிப்புணர்வு என்பது பெருந்தன்மை உடையதுமான, அன்புமயமான வைரஸ், அப்படி ஒரு வைரஸ் இருக்குமானால்! வைரஸ் நுழைந்தபிறகு எவ்வளவுக்கெவ்வளவு வேலை செய்கிறோமோ அதே அளவுக்கு சாஃப்ட்வேர் ப்ரோகிராம்ஸ் அழிக்கப்பட்டுவிடும்.
அதைப்போலவே நம் வாழ்வில் ஒருமுறையேனும் எண்ணங்களற்ற விழிப்புணர்வை அனுபவித்து விட்டோமேயானால், உயிர் நீங்கும்போது அந்த அனுபவம் மேலோங்கி மற்ற நினைவுகளையெல்லாம்
உலக வாழ்வில் நாம் உடலாலும், மனத்தாலும் அனுபவிக்க வேண்டியது இன்னும் இருக்கிறதென்று நம்பினால்தான் பூமிக்கு வருவோம்.
மொத்தமாக அழித்துவிடும்.
இன்னொரு நாம் பிறவி எடுக்கத் தேவையில்லை. எடுக்க வேண்டியதில்லை. உடலாலும், மனத்தாலும் அனுபவிக்க வேண்டிய, அடைய வேண்டிய பொருள் என்று, ஏதாவது ஒன்று இருப்பதாக நாம் நம்பினால்தான் நாம் இன்னொரு பிறவி எடுப்போம்.
உடல், மனம் மனம் இவற்றின் மூலமாக அனுபவிக்க இருக்கின்றன. அவற்றின் அடையப்பட வேண்டியவை இருக்கின்றன என்று எப்பொழுது நினைக்கிறோமோ, அப்பொழுதுதான் புது உடலையும் மனத்தையும் எடுக்கிறோம்.
நமக்கு ஏதாவது வாங்கத் தேவை இருந்தால்தானே நாம் கடை வீதிக்குப் போகிறோம் ? தேவையில்லை என்றால் போக மாட்டோம். அதைப்போலத்தான், உலக வாழ்வில் நம் உடலாலும், மனத்தாலும் அனுபவிக்க வேண்டியது இன்னும் இருக்கிறதென்று நம்பினால்தான் பூமிக்கு வருவோம். இல்லை என்றால் நாம் பூமிக்கு மீண்டும் வருவதில்லை. நாம் இந்த உடலில் இருக்கும்போதே, நமது மனத்தில் உள்ள எண்ணங்களின் மீது, ஸம்ஸ்காரங்களின் மீது வேலை செய்தோமேயானால், நாம் அவற்றின் தாக்கத்தில் இருந்து வெளியேறி விடுகிறோம். எண்ணப் பதிவுகளின் பிடியிலிருந்து விடுபட்டு விடுவதால், பிறப்பு இறப்புச் சுழற்சியில் இருந்தும் விடுபட்டு விடுகிறோம்.