எதன் வழியாக உயிர் பிரியும் ?
இன்னுமொரு முக்கியமான விஷயம், நாம் வாழ்நாள் முழுவதும்
வாழ்நாள் முழுவதும் நாம் உயர் விழிப்புணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற வாழ்க்கையையே வாழ்ந்திருந்தால், நமது உயிர் ஸஹஸ்ரார சக்ரத்தின் வழியாக வெளியேறுகிறது
கண்களுக்கே முக்கியத்துவம் கொடுத்திருந்தோமேயானால் சக்தி கண்களின் வழியாக வெளியே செல்கிறது. கடைசி நிமிடத்தில் கண்களைத் திறக்கிறோம் வெளியேறுகிறது. நாம் வாழ்நாள் முழுவதும் நாக்கிற்கு, சாப்பிடுவதற்கே முக்கியத்துவம் கொடுத்திருந்தோமேயானால், ஆத்மா வாய் வழியாக வெளியே செல்கிறது.
வாழ்நாள் விழிப்புணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற வாழ்க்கையையே வாழ்ந்திருந்தால், நமது உயிர் உச்சந்தலையில் அமைந்திருக்கும் ஸஹஸ்ரார சக்ரத்தின் வழியாக வெளியேறுகிறது.
ப்ரூற்ம ப்ரூற்மவிதோ ஜரு: என்கிறார் கிருஷ்ணர். நாம் எப்போதும் மிக உயர்ந்த விழிப்புணர்வு நிலையை நோக்கி நம் கவனத்தைச் செலுத்தியிருந்தோமானால், நாம் அந்தப் பாதையில் போய் பிரம்மத்துடன் கலப்போம். நாம் ஞானமடைவோம்.
நன்றாகக் காலத்தின்பாற்பட்டவையல்ல. அவை மன ரீதியானவை. பீஷ்மர் தமது மனம் அமைதியடையும்வரை காத்திருந்தார். முழுமையாக அமைதியடையும்வரை எல்லோரையும் மன்னிக்கிற மனப்பான்மையை அடையும்வரை விழிப்புணர்வு நிலையை அடையும்வரை காத்திருந்தார். அதற்குப் பிறகு ஞான நிலையை அடைந்தார்.
அடுத்து கிருஷ்ணர், ''புகை, இரவு, தேய்பிறை, சூரியன் தெற்கு நோக்கிப் பயணிக்கிற தக்ஷிணாயனம் காலத்தில் உடலை விடுகிறவர் மீண்டும் வருகிறார்,'' என்று சொல்கிறார்.
மீண்டும், இதுவும் காலத்தின்பாற்பட்டதல்ல; மனத்தின் பாற்பட்டதே. இந்த ஆறு மாத காலத்தில் மரணமடைகிறவர்கள் யாருமே ஞானமடைய முடியாது என்று சொல்லவில்லை. அவர்கள் "தக்ஷிணாயன காலத்தில் ஞானத்திற்கான கதவுகள் அடைக்கப்பட்டு விட்டன. ''இப்போது அனுமதி இல்லை. உத்தராயண அப்போது வாருங்கள், '' என்று சொல்ல முடியாது.
'' தக்ஷிணாயன காலம் வேலை ரோம்ப நல்ல, உத்தராயண காலம்தான் வேலை நேரம், ' என்று சொல்ல முடியாது. ஞானமடைவதற்கு வேலை நேரம் ஒன்று கிடையாது. அது முழுக்க முழுக்க நமது இருப்புத் தன்மை முழு விழிப்புணர்வு நிலையில் இருந்து தேர்ந்தெடுக்கிற ஒன்றுதான்.
கிருஷ்ணர் பொறுத்தவரை விடுபடுவதற்கு இரண்டு இருக்கின்றன. ஒன்று ஒளியின் வழியாக. இன்னொன்று இருட்டின் வழியாக. ஒளியின் வழியாகப் போகிறவர்கள் இந்த உலகிற்கு திரும்ப வருவதில்லை. இருட்டின் வழியாகப் போகிறவர்கள் திரும்ப வருகிறார்கள்.
ஒளியென்றும் இருட்டென்றும் கிருஷ்ணர் எதைக் குறிப்பிடுகிறார்? ஒருவர் அடைந்திருக்கிற விழிப்புணர்வு நிலையின் மட்டத்தையே அவர் குறிப்பிடுகிறார்.
இருள் என்றால் என்ன? ஒரு மனிதன் தம் உடலை விட்டுச் செல்லும்போது, இது நாள்வரை தம்மைத் துரத்தியவை - ஸம்ஸ்காரங்கள், ஆசைகள், பயங்கள், குற்ற உணர்ச்சி போன்ற எண்ணப் பதிவுகள்தான் என்பதைப் புரிந்துகொள்ளாமல் செல்வதையே அது குறிக்கிறது. அதைப் புரிந்துகொள்ளாத நிலையையே, இந்த அறியாமையையே இருள் எனக் குறிப்பிடுகிறார்.
இவற்றை நாம் புரிந்துகொண்டு இவற்றிலிருந்து நாம் விடுபட்டு விட்டோமேயானால், நாம் உடலைவிடும்போது முக்தியடைகிறோம். இதைத்தான் ஒளி வழி என்கிறோம். இதைத்தான் கிருஷ்ணர், இந்தப் 'புரிதல் நிகழும்'போது ஒருவர் மீண்டும் உடலுக்கு வருவதில்லை எனச் சொல்கிறார்.