KAILASA Library/பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)/என்னிடம் சரணடைந்துவிடுSign in
பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)

என்னிடம் சரணடைந்துவிடு

  • 18.63 இவ்வாறு மறையொருளுக்கெல்லாம் முறையொருளான ஜ்ஞானம் என்னால் உனக்குக் கூறப்பட்டது. இப்பொழுது நீ இந்த ஜ்ஞானத்தை முழுமையாக நன்கு ஆராய்ந்து எப்படி விரும்புகிறாயோ அப்படியே செய்.
  • 18.64 எனக்கு நீ மிகவும் உற்ற நண்பனாக இருப்பதால், உன் நன்மைக்காக என்னுடைய மேலான ரஹஸ்யத்தைக் கூறுகிறேன், மீண்டும் கேள்.
  • 18.65 அர்ஜுனா நீ என்னிடமே மனத்தைச் செலுத்துவாயாக. என்னிடமே வழிபடுவாயாக; இப்படிச் செய்வதால் நீ என்னையே அடைவாய். இவ்வுறுதிமொழியை நான் உனக்கு நல்குகின்றேன். ஏனெனில் நீ எனக்கு மிகவும் அன்புக்குரியவனாக இருக்கிறாய்.
  • 18.66 நெறிமுறைகள், கருத்துகள், ஒழுக்க நியதிகள் அனைத்தையும் விட்டுவிட்டு, என்னிடம் சரணடைந்துவிடு; பாவகரமான விளைவுகள் அனைத்திலிருந்தும் நான் உன்னை விடுவிப்பேன், வருந்தாதே.

எவ்வளவு சக்திமிக்க வார்த்தைகள்! இறைவன் ஒருவரால் மட்டுமே இந்த வலிமைமிக்க வார்த்தைகளை அதிகார பூர்வமாகப் பேச முடியும்.

எப்பொழுதும் என்னைப் பற்றியே நினை, என்னுடைய பக்தனாகிவிடு, என்னை வழிபடு, எனக்கே மரியாதை செய், இதுவே நீ தவறாமல் என்னை வந்தடையும் பாதை. நீ என்னுடைய சிறந்த பக்தனாகவும், எனக்குப் பிரியமானவனாகவும் இருப்பதால், நான், இந்த வாக்குறுதிகளை உனக்கு அளிக்கிறேன்.

இந்த வார்த்தைகளைத் தவறான வகையில் பயன்படுத்தாதீர்கள்!

இப்பொழுது அவர் இறுதி உபதேசத்திற்கு வருகிறார். அவருடைய மொத்த உபதேசங்களின் சாரம் இதுவே. பகவத்கீதையின் சிறப்பம்சம் இதுவே. அவர் இந்த ஸ்லோகத்தின் மூலம் அர்ஜுனனை விழிப்படையச் செய்து, கிருஷ்ண உணர்வு நிலைக்குள், எல்லையில்லா உன்னத விழிப்புணர்வு நிலைக்குள், ஞானத்திற்குள் ஆழச் செல்கிறார்.

கிருஷ்ணர் தம்மையே அர்ஜுனன் மீது பொழிந்து, அவரை முழுமையான அனுபவத்திற்கு விழிப்பிக்கச் செய்கிறார்.

'மதங்கள் விதித்திருக்கும் கர்மத்தை - சட்ட திட்டங்களை மறந்துவிட்டு, நீ என் பக்கம் திரும்பு, நான் உன்னைக் காப்பேன்' என்கிறார் கிருஷ்ணர்.

அவர் சொல்கிறார்: " தர்மம் என்று நீ எதையெல்லாம் நினைக்கிறாயோ அவை அனைத்தையும் - வெளியுலக மற்றும் மனக்கட்டுப்பாடுகளையும் உனக்குத் திருத்த தெரிந்த யாவற்றையும் விட்டுவிட்டு, என்னிடமே சரணடைந்துவிடு. நான் உன்னை எல்லாவற்றிலிருந்தும் விடுவித்துக் காப்பாற்றுகிறேன், சிறிதும் பயம் வேண்டாம்,'' என்றருளி, கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு தம்முடைய அபயத்தை - முழுமையான பாதுகாப்பை அளிக்கிறார்.

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ | அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஶுச: ||

இந்த வார்த்தைகளைச் சொல்லி அர்ஜுனனை அனைத்திலிருந்தும் விடுவிக்கிறார். அவர் அர்ஜுனனுக்கு, 'நீ கடலே' என்ற இறுதி விழிப்புணர்வு அனுபவத்தை வழங்கி, ''நீ உன்னை ஒரு தனி நீர்த்துளியாகக் கருதிக்கொண்டிருக்கிறாய். அக்கருத்தை விட்டுவிட்டு, தளர்வாக அமைதியாக இருந்து, லக்ஷ்யத்தை உணர்ந்துகொள்,' என்று கேட்டுக்கொள்கிறார்.

கடவுள், கடல் என்னும் கருத்துகளெல்லாம்கூட நம்முடைய கருத்துகளே. கிருஷ்ணர் அர்ஜுனனை, எல்லாக் கருத்துகளையும் விட்டுவிட்டு, எல்லையற்ற விழிப்புணர்வாகிய கிருஷ்ண விழிப்புநிலைக்குள் விரிவடையச் செய்கிறார். அவ்வனுபவம் அவருக்குள் என்றென்றும் நிலைத்திருக்க அருள்புரிகிறார்.

கிருஷ்ணரும், அர்ஜுனனுமாக இருந்தவரை இரு தனிப்பட்ட அடையாளங்கள் இருந்தன. ஆனால், அந்த இருவரும் ஒருவராகிவிட்ட பின்பு இப்பொழுது அங்கே இருவருமே இல்லை!

நாம் இனி அவரை 'அர்ஜுனன்' என்று அழைக்க முடியாது. ஏனெனில், அவர் இப்போது 'கிருஷ்ணராக' ஆகிவிட்டார். இப்போது கிருஷ்ணர் மட்டுமே இருக்கிறார். கிருஷ்ணரும், அர்ஜுனனுமாக இருந்தவரை இரு தனிப்பட்ட அடையாளங்கள் இருந்தன. ஆனால், அந்த இருவரும் ஒருவராகிவிட்ட பின்பு இப்பொழுது அங்கே இருவருமே இல்லை! அதற்குப் பெயரே இல்லை. அது ஒரு சக்தி! அவ்வளவுதான்.

'மதங்கள் விதித்திருக்கும் தர்மத்தை - சட்ட திட்ட விதிமுறைகளை மறந்துவிட்டு, நீ என் பக்கம் திரும்பு, நான் உன்னைக் காப்பேன்' என்கிறார் கிருஷ்ணர்.

இந்த வார்த்தைகளைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள், தவறாக மேற்கோள் காட்டாதீர்கள், தவறான வகையில் பயன்படுத்தாதீர்கள். அப்படிச் செய்யும்போது நீங்கள் உங்களுக்கே பெரும் தீங்கிழைத்துக் கொள்கிறீர்கள்.

தெய்விகம் பொருட்படுத்துவதில்லை. புனிதர் - பாவி, லக்ஷ்மியாஸி - விலைமாது என்ற பாகுபாடெல்லாம் தெய்விகத்திடம் இல்லை. எல்லோருக்குமே தெய்விகத்தை அடைய சமமான வாய்ப்புக்கள் உள்ளன. இதுவே சத்தியம்.

நீங்கள் தெய்விகத்திற்கு அருகாமையில் வரும்பொழுது, நிச்சயமாக, சக்தியானது உங்களுக்குள் உணர்வுமாற்றத்தை ஏற்படுத்துகிறது. எதிர்மறைத் தன்மைகளைக் கரைக்கிறது. நீங்கள் பிறந்தபோது எவ்வளவு தூய்மையாக இருந்தீர்களோ அவ்வளவு தூய்மையாகி விடுவீர்கள்!

மதம், மனிதனின் படைப்பு; ஆன்மிகம், முழுமையான விழிப்போடும் தெய்விக விழிப்புணர்வோடும் வாழ்கின்ற ஞானகுருமார்களின் படைப்பு. கிருஷ்ணர், சிவன், புத்தர், மஹாவீரர், ஜீஸஸ் போன்ற ஞானகுருமார்கள் எந்த மதத்தையும் சாராதவர்கள். அவர்களைப் பின்பற்றியவர்களே, அவரவர்கள் புரிதலின்படி, நல்ல விதமாகவோ, கெட்ட விதமாகவோ பல மதங்களை உருவாக்கினார்கள்; தர்மம் என்ற பெயரில் நன்னடத்தைக் கோட்பாட்டு விதிகளை உருவாக்கினார்கள்.

நீங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை விவரிப்பதற்காக, எந்தக் கடவுளும், குருமார்களும் அவதரிக்க விரும்புவதில்லை. அவர்கள் உங்களை விழிப்புநிலையிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளவே அவதரிக்கிறார்கள், 'விழிப்புநிலையே' உங்களைச் சரியான பாதையில் வழிநடத்திச் செல்லும்.

நீங்கள் தெய்விகத்திற்கு அருகாமையில் வரும்பொழுது, அச்சக்தியானது உங்களது எதிர்மறைத் தன்மைகளைக் கரைக்கிறது.

கிருஷ்ணர் திட நம்பிக்கையோடும், அதிகார பூர்வமாகவும் இவ்வாறு சொல்கிறார்.

''எல்லா நல்லொழுக்க நெறிகளையும் மறந்துவிடு, விட்டுவிடு, விழிப்புணர்வுடன் என்னிடம் வருவாயாக. இதுவே உன்னுடைய முக்தி. ''

கிருஷ்ணர், த்ரிகுணாதீதராக இருக்கிறார். அதாவது, இயற்கையின் குணங்களுக்கும், கர்மங்களின் ஆதிக்கங்களுக்கும் அப்பாற்பட்டவராயிருக்கிறார். அவரிடம் சரணடைந்துவிடுவது பந்தங்களைக் கடந்த நிலைக்கு எடுத்துச் செல்லும்.

நீங்கள் இந்த ஸ்லோகத்தைப் புரிந்துகொண்டு, அதன்படி நடந்து கொண்டால், நீங்கள் முக்தி அடைந்துவிடுவீர்கள். இதுவே கிருஷ்ணர் அளிக்கும் வாக்குறுதி !

அர்ஜுனனின் மீது ஞானத்தைப் பொழிந்து, அவருக்கு உச்ச அனுபவத்தைத் தந்த பரம்பொருளான கிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்ய நீங்கள் சில நிமிடங்களை ஒதுக்குங்கள்.

ஸ்ரீகிருஷ்ணர், இப்போது இங்கில்லையே என்று நினைத்துவிடாதீர்கள். அவர், இப்பூவுலகில் ஒவ்வொரு கணமும், ஒவ்வொருவருக்கும் கிடைக்கக்கூடியவராகவே இருக்கிறார்.

அவர், அதே அனுபவத்தை, இறுதி சத்தியத்தின் கணநேர அனுபவத்தை நம்மீதும் பொழியுமாறு வேண்டி, கண்களை மூடி, ஆழமாகப் பிரார்த்தனை செய்யுங்கள். அவர் இப்போது இங்கில்லையே என்று நினைத்துவிடாதீர்கள். அவர், இப்பூவுலகில் ஒவ்வொரு கணமும், ஒவ்வொருவருக்கும் கிடைக்கக்கூடியவராகவே இருக்கிறார்.

அவர் தம் தூலஉடலோடு இங்கில்லை தான். ஆனால், சக்தி ரூபத்தில் இருக்கிறார். அதனால்தான், கோவில்களில் இருக்கும் விக்ரகத்தை அர்ச்சாவதாரம் என்கின்றனர். தெய்விகத்தின் அவதாரம் என்பது அதன் பொருள். நாம் எப்போது அவரை அழைத்தாலும், அவர் நமக்கு கிடைக்கக்கூடியவராகவே இருக்கிறார். இப்போது, அர்ஜுனன் மீது பொழிந்த அதே அனுபவத்தை நம் மீதும் பொழிய வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள், அமைதியில் மூழ்கி கிருஷ்ணரின் வார்த்தைகளைக் கேளுங்கள்.

நீங்கள் பாரமற்றவராக வேண்டுமா ? இதோ அதற்கான மந்திரம்

கேள்வி: ஸ்வாமிஜி, கீதையில் கிருஷ்ணர் குறிப்பிடும் சீரணாகதி நிலையும், உங்கள் அன்கிளட்சிங் (Unclutching) என்னும் கருத்தும் ஒன்றுதானா?

ஆம். அன்கிளட்சிங் என்பது எண்ணங்களின் சீரணாகதி, மனத்தின் ச்ரணாகதி. அதுவே உச்ச சீரணாகதி. அன்-களட்சிங் என்பதன் முக்கிய அம்சம், எண்ணங்களையெல்லாம் இணைக்கும் செயல்முறையைக் கைவிடுவதே. அச்செயல்முறையை சீரணாகதி செய்யும்போது, நீங்கள் நிகழ்காலத்தினுள் நுழைகிறீர்கள். நிகழ்காலத்தில் உங்கள் மனம் கரைந்துவிடுகிறது. மேலும், உங்கள் அஹங்காரமும் மறைகிறது.

கிருஷ்ணர் நமக்கு அறிவுறுத்தும் துறவு மற்றும் சீரணாகத் நிலை என்பது இதுவே.

நாம் என்றென்றும் நம் புலன்களால் கட்டுப்படுத்தப்படுபவராகவே இருக்கிறோம். நம் புலன்கள் மூலமாக கடந்தகாலத்தில் எதையெல்லாம் உணர்ந்தோமோ, இப்போது எதை உணர்கிறோமோ, அவையே நம் எதிர்காலப் பாதையை நிர்ணயிக்கின்றன. புலனுணர்வுகளே எண்ணங்களையும் எண்ணங்களும் உணர்ச்சிகளுமே நம்முடைய மன அமைப்பிற்கும் மனோபாவத்திற்கும் பிறப்பை நல்குகின்றன. எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளின் விளையாட்டுகளைப் புரிந்துகொள்வதே, அதை நாம் கடந்துசெல்வதற்கான முதலும், கடைசியுமான படி ஆகும்.

மனிதன் இயல்பிலேயே, ஒரு இணைப்புமற்ற, ஆனந்தமான 'இருப்பு' தான்.

நமக்குள் எழும் ஒவ்வொரு எண்ணமுமே, தானே உருவாகி, மேலெழுந்து, உடைந்து இறக்கும் ஒரு நீர்க்குமிழி போன்றதே. ஒவ்வொரு எண்ணமும் தனித்தனியாகவேதான் எழுகிறது. மற்றொரு எண்ணம் எழும் முன்னர் இறந்தும்விடுகிறது. ஒரு உதாரணத்திற்கு, இப்பொழுது நீங்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கிறீர்கள். சிறிது நேரத்தில் எழுகிறீர்கள். நீங்கள் எழுவதற்கு முடிவுசெய்யும் அந்தக் கணமே, உட்கார்ந்திருக்க வேண்டுமென்ற எண்ணமானது உங்களைவிட்டு மறைந்துவிடுகிறது.

நீங்கள் ஒரு கணினியில் வேலைசெய்து கொண்டிருக்கும்பொழுது, ஒருசமயம் அந்தக் கணினியை நிறுத்திவிட எண்ணுகிறீர்களென்றால், அந்தக் கணமே, 'வேலைசெய்ய வேண்டுமென்ற' உங்கள் எண்ணம் இறந்துவிடுகிறது. அதனால், ஒவ்வொரு எண்ணமும், ஒன்றோடொன்று தொடர்பே இல்லாத, ஒன்றன் பின் ஒன்றாக நிகழும் ஒரு தொடர் நிகழ்வாகத்தான் இருக்கிறது. அடுத்த எண்ணம் எழும் முன்னர், முதல் எண்ணம் இறந்துதான் ஆக வேண்டும். இதுவே நம்முடைய இயற்கையான இயல்பு.

நம்முடைய இயற்கையான இயல்பே ஒவ்வொரு கணமும் நம் எண்ணங்களைத் துறந்துகொண்டே இருப்பதுதான். நீர்க்குமிழிபோல் ஒவ்வொரு எண்ணத்தையும் எழு அனுமதித்து, பிறகு அதை உடைத்து, பிறகு அடுத்த எண்ணம் எழ அனுமதிப்பதே நமது இயல்பு. நமது எண்ணங்கள், எழும்பி வரும் நீர்க்குமிழிகள்போல் செங்குத்தாகத்தான் நிகழ்கின்றன.

தானே ஒவ்வொன்றாக எழுந்து மறையும் அந்த எண்ணங்களை, ஒன்றோடொன்று கோர்க்காமல், அப்படியே நிகழ அனுமதிக்கும் செயல்முறையே அன்கிளட்சிங். இந்த இயற்கையான நிகழ்வை நிகழ அனுமதிக்கும்வரை, நிகழ்பவையனைத்தும் சரியாகவே நிகழும்.

இதற்கு பதிலாக, நாம் குறிப்பிட்ட எண்ணங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை ஒன்றோடொன்று கோர்த்து, கோர்த்து ஒரு தண்டையே உருவாக்கிக்கொள்கிறோம். அப்படிச் செய்வதின் மூலம், நாம் செங்குத்தாகவும், அன்கிளட்சிங் செயல்முறையாகவும் இருப்பதை படுக்கை வசமாகவும், ஒன்றோடொன்று தொடர்புடைய சங்கிலித் தொடர்முறையாகவும் மாற்றுகிறோம். மொத்தப் பிரச்சினையுமே இங்குதான் உருவாகிறது.

ஒவ்வொரு எண்ணமும் தனித்தனியாகவே எழுந்து மடிந்தால், நம்மால் உடல் ரீதியான மற்றும் மன ரீதியான பாரத்தை எந்தளவு வேண்டுமானாலும் தாங்க முடியும். நமது வாழ்க்கையும் ஆனந்தமாகவும் இருக்கும். ஒருமுறை எண்ணங்களை இணைக்க ஆரம்பித்துவிட்டாலே, நமது விழிப்புணா்வு பாதிக்கப்படுகிறது. நாம் மிகுந்த சுமையை உணர்கிறோம். அது நமது 'இருப்பை'ச் சிகைக்கிறது.

ஒவ்வொரு எண்ணமும் தனித்தனியாகவே எழுந்து மடிந்தால், நம்மால் உடல் மற்றும் மன ரீதியான பாரத்தை எந்தளவு வேண்டுமானாலும் தாங்க முடியும்.

வெவ்வேறு சமயங்களில் நிகழ்ந்த கவலை, காமம், திருப்தியின்மை, பொறாமை, பயம், அஹங்காரம், கவனத்தேவை போன்ற உணர்ச்சிகளைக் கோர்த்து, நாமே ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்கிறோம். பின்பு அந்தக் கருத்தோடு நம்மைத் தொடர்புபடுத்திக் கொள்ள ஆரம்பிக்கிறோம். நம் எண்ணங்களைக் கொண்டு ஒரு கற்பனைத் தண்டை உருவாக்கிவிட்டு, பின்பு அதன் காரணமாக அல்லல்படுகிறோம்.

இந்த மாதிரி உணர்ச்சியெழுச்சிகளே மதக் கலவரங்கள், சமுதாயச் சண்டைகள், அரசியல் கொந்தளிப்பு போன்ற எல்லாவிதமான வன்முறைகளையும் உருவாக்குகின்றன. இது போன்ற எல்லாவிதமான வன்முறைகளுக்குக் காரணமாக, வேராக இருப்பவை நம் உணர்ச்சிகளே. அந்த உணர்ச்சிகளுக்கு அடிப்படையாக இருப்பது, எண்ணங்களின் கற்பனைத் தண்டுகளை உருவாக்கி, அவற்றுக்குச் சக்தியூட்டி, நம்மீது வேலைசெய்ய அவற்றை அனுமதிக்கும் நம்முடைய நடவடிக்கையே.

இம்மாதிரி தண்டுகளை உருவாக்கும்பொழுது, நாம் செய்யும் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நமக்கு மகிழ்ச்சி வேண்டுமா அல்லது துயரம் வேண்டுமா என்னும் நம் விருப்பத்தின் அடிப்படையிலேயே, எண்ணங்களையும் தேர்வுசெய்துகொள்கிறோம்.

மகிழ்ச்சியான எண்ணங்களையெல்லாம் தேர்வுசெய்து, அவற்றைக் கோர்த்து ஒரு மகிழ்ச்சித் தண்டை உருவாக்குகிறோம் அல்லது எதிர்மறை எண்ணங்களைத் தேர்வுசெய்து, அவற்றைக் கோர்த்து துயரத் தண்டை உருவாக்குகிறோம். இவ்வாறு இன்ப-துன்பத் தண்டுகளை நாமே உருவாக்கிக் கொண்டு, இந்த இரண்டு உணர்ச்சிகளுக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறோம். இந்தத் தண்டுகளை விடுபடுவதே, ஆனந்த வாழ்விற்கான முதன்மை திறவுகோல்.

நம்முடைய எண்ணங்களை நாம் எப்படி ஒன்றோடு ஒன்று இணைத்துக் கோர்த்துக்கொள்கிறோம் என்பதை சிறிது ஆழமாக ஆராய்ந்து பார்த்தோமானால், நமக்கு நாமே துன்பங்களை எப்படி உருவாக்கிக்கொள்கிறோம் புரிந்துகொள்வோம். உண்மையில் நம் எண்ணங்களுக்கிடையே தொடர்பும் கிடையாது. ஆனால், நம் மனம் தான் அந்த மாதிரி தொடர்புகளைக் கண்டுபிடித்துக்கொள்கிறது.

வார்த்தைகள் மற்றும் எண்ணங்கள் மூலம் வாழ்வதற்கே நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். அதனால்தான், நாம் இந்தத் தண்டுகளை உருவாக்குகிறோம். நாம் எண்ணங்களைக் கோர்த்து பார்க்கும் இந்தச் செயல்முறையை விட்டுவிடுவதற்கு அஞ்சுகிறோம். ஏனெனில், எண்ணங்களுக்கிடையே எந்தவித தொடர்பும் கிடையாது. ஆனால், நம் மனம் தான் அந்த மாதிரி தொடர்புகளைக் கண்டுபிடித்துக்கொள்கிறது. நாம் அப்படி விட்டுவிட்டால் பிறகு நாம் பிடித்துக்கொள்வதற்கென்று அங்கு ஒன்றும் இருக்கப்போவதில்லை.

நாம் ஒருபோதும் அன்க்ளட்ச் மனநிலையை அனுபவித்ததில்லை. ஒரு தண்டாக அல்லாமல், நீர்க்குமிழிகள் போன்ற தனித்தனியான எண்ணங்களை மட்டுமே கொண்டிருக்கும் அன்-க்ளட்சிங் நிலையில் நாம் ஒருபோதும் வாழ்ந்ததில்லை.

ஒன்று, நாம் பயத்தின் காரணமாகச் செயல்படுகிறோம். அல்லது பேராசையின் காரணமாகச் செயல்படுகிறோம். ஆனால் அன்-க்ளட்சிங் நிலையில் பயத்திற்கோ அல்லது பேராசைக்கோ இடமேயில்லை. நீங்கள் 'இருப்பீர்கள்', அவ்வளவுதான். இப்படிப்பட்ட ஒரு பரிமாணத்தை மிக அரிதாகவே நாம் அனுபவிக்கிறோம். ஏனெனில், நமக்கு நன்குப் பழகிப்போன எண்ணத் தண்டுகளைப் பிடித்துக் கொண்டு அதன் அடிப்படையிலேயே வாழப் பழகிவிட்டோம்.

நாம், 'எண்ணத்தண்டுகளைச் சாராமல் என்னால் எப்படி வாழ முடியும் ?!' என்று ஆச்சரியப்படுகிறோம். அன்-களட்ச் நிலையில் நம்மால் ஆனந்தமாக வாழ முடியும் என்பதே சத்தியம். அதை நாம் ஒரு அசாத்தியமான செயல்போன்று பார்க்கிறோம்.

மொத்த விஷயங்களுமே ஒரு கற்பனைதான் என்பதைக் கவனிக்கத் தவறிவிடுகிறாம். நம் மனமே ஒரு கற்பனைதான். நாம்தான் அதற்குப் பலமூட்டுகிறோம். பிறகு அதற்கே நாம் அடிமையாகி விடுகிறோம். இதுவே மன ரீதியான அடிமைத்தனம்.

உங்களுக்குள் கவனியுங்கள். ஒவ்வொரு எண்ணமும் எழுவதையும், பிறகு அது மறைவதையும், அதைத் தொடர்ந்து மற்றொரு புது எண்ணம் எழுவதையும் கவனித்துப் பாருங்கள். நீங்கள் இந்த எண்ணங்களையெல்லாம் எப்படி எளிதாக இணைக்கிறீர்கள், அதன் அடிப்படையில் எப்படிக் கருத்துகளை உருவாக்குகிறீர்கள், அந்தக் கருத்துகள் உங்கள் வாழ்க்கையில் எப்படி விளையாடுகின்றன என்பதையும் கவனியுங்கள். அப்போது மட்டுமே நீங்கள் மொத்தக் கற்பனையையும் எப்படி உருவாக்குகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். ஆகவே, எண்ணங்களைக் கோர்த்துப் பார்ப்பதே முதல் பாவம்.

ஆனந்தமான வாழ்விற்கான, ஒரே திறவுகோல் அன்-க்ளட்சிங் முறையில் வாழ்வதே !

எண்ணங்களைக் எண்ணத்தின் மீதும், எந்தவொரு ஒரு நிகழ்ச்சியின் மீதும் உங்கள் தீர்ப்பை வழங்கக்கூடாது என்றும் முடிவுசெய்து கொள்ளுங்கள். எப்பொழுதெல்லாம் மனம் கோர்த்துப் பார்க்கத் தொடங்குகிறதோ அப்போதெல்லாம் அன்-க்ளட்ச் செய்யுங்கள். நீங்கள் நிகழ்ச்சிகளைக் கோர்த்துப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று உணர்ந்தவுடன், அன்-க்ளட்ச் என்று சொல்லி, கோர்த்துப் பார்க்கும் செயலை நிறுத்துங்கள்.

பிறகு உங்கள் மன அமைப்பு தானாகவே உணர்வுமாற்றம் பெற்றுவிடும். ஒரு உளவியல் ரீதியான ஒரு புரட்சியே உங்களுக்குள் நிகழும்.

நாம் நிகழ்வுகளைக் கோர்த்துப் பார்க்காமல், நம் வேலைகளைச் செய்தோமானால், அவை விரிவடைகின்றன. நாம் எந்தவொரு அழுத்தமும் இல்லாமலேயே மேலும், மேலும் பொறுப்புகளை எடுத்து, அவற்றைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும். ஒரு சமயம் மன வலி, மறுநொடி மகிழ்ச்சி என்று நமது மனநிலை அங்குமிங்குமாக ஊசலாடிக் கொண்டிருக்காது. நாம் எப்பொழுதும் ஆனந்தமாக இருப்போம்.

பொதுவாக நாம், ஏதோ ஒரு காரணத்திலிருந்து விளையும் மகிழ்ச்சிக்கே பழக்கப்பட்டிருக்கிறோம். இந்தக் காரணமும், நம் எண்ணங்களால் நாம் உருவாக்கிய ஒரு தண்டே. நாம் இது போன்ற தண்டுகளை உருவாக்குவதை நிறுத்தினாலே போதும், நாம் நித்தியானந்தத்தில் இருப்போம்.

அன்-களட்ச் என்ற வார்த்தை, நம்மைச் சுற்றியிருக்கும் மக்களோடும், சூழ்நிலையோடும் நாம் நட்பில்லாமலிருப்பதையும் அவர்களிடமிருந்து விலகியிருப்பதையும் கோர்க்காதிர்கள், எண்ணத் தண்டுகளை உற்பத்தி செய்யாதீர்கள் என்பதையே குறிக்கிறது.

நீங்கள் இயல்பிலேயே, ஒரு அழகான, அன்-க்ளட்சிங் நிலையில் வாழும் ஆன்மா தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பிறகு உருவாக்குவதை நிறுத்திவிடுவீர்கள்.

நான் உன்னைவிட்டு அகலமாட்டேன்

  • 18.67 ஒழுக்கக் கட்டுப்பாடுகளற்ற, பக்தியற்ற, கேட்க விரும்பாத மற்றும் என்னைப் பற்றி இழிவாகப் பேசுகின்ற ஒருவனுக்கு இந்த ஜ்ஞாநத்தை ஒருபோதும் போதிக்காதே !
  • 18.68 இந்த உன்னதமான உயர்ந்த இரகசியங்களை யாரொருவன் பக்தர்களிடம் பகர்கிறானோ அவன் எனக்கு மிக உயர்ந்த சேவையைச் செய்தவனாகிறான். இறுதியில் அவன் என்னையே வந்தடைகிறான். இதில் சந்தேகமே இல்லை.
  • 18.69 இவனைப் போன்று மேலானதொரு இனிய சேவையை வேறொருவனும் எனக்குச் செய்யப்போவதில்லை. இவ்வுலகில் இவனை விட வேறொருவனும் எனக்கு அன்பானவனாக இருக்கப் போவதும் இல்லை.
  • 18.70 நான் விளம்புகிறேன்: இந்த மேலான உரையாடலைப் படிக்கும் ஒருவன், புத்தி யக்ஞத்தால் என்னை வழிபடுகிறான்.
  • 18.71 நம்பிக்கையோடும், பொறாமையற்றும் இவற்றைக் கேட்கும் ஒருவன், பாவத்தின் விளைவுகளிலிருந்து விடுபட்டு, புண்ணியசாலிகள் வசிக்கும் உலகங்களுக்குச் செல்கிறான்.
  • 18.72 ஒ தநஞ்ஜயா, ஒருமித்த கவனத்துடன் இவற்றைக் கேட்டுக் கொண்டாயா ? அறியாமையால் விளைந்த உன் மயக்கம், குழப்பம் முற்றிலும் அழிந்து விட்டதா?

அவரின் ஆசிர்வாதம் என்றும் நமக்குண்டு

இந்த வார்த்தைகள் வெறுமனே அர்ஜுனனுக்கு மட்டும் சொல்லப்பட்டதல்ல; மொத்த மனித குலத்துக்குமே சொல்லப்பட்டது. நர நாராயணர்களான, அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்களை நாமனைவரும் படிக்கவும், கேட்கவும், புரிந்துகொள்ளவும் வேண்டுமென கிருஷ்ணர் இங்கு வலியுறுத்துகிறார். அதற்கு மேலாக எதையும் படிக்கவோ அல்லது கேட்கவோ அவசியமேயில்லை. நமக்குத் தேவையானது அனைத்துமே இதில் இருக்கிறது.

என்னிடம் ஆழ்ந்த பக்தியுள்ளவன் மட்டுமே இதைப் படிக்க வேண்டும். ஒருவருக்கு உயர் நன்மையைப் பயக்கக்கூடியது எது, ஒரு மனிதன் எவ்வாறு வாழ்வது, என்னை அடைவது எப்படி என்ற இரகசியங்களை இங்கே விவரித்திருக்கிறேன். இதைப் புரிந்துகொண்டு, தன்னுடைய மனத்தை விட்டுவிட்டு, தன்னுடைய மொத்த கவனத்தையும் என் மேல் ஒருமுகப்படுத்தும் ஒருவன் சந்தேகமில்லாமல் என்னை வந்தடைவான்.

நாம் நெருப்பினுள் எதைப் போட்டாலும், அது மறைந்துவிடுகிறது. அதைப்போலவே, இந்த கீதையைப் படிப்பதிலேயே மூழ்கிவிடும்பொழுது, நாம் அவருக்குள்ளேயே கரைந்துவிடுவோம்.

இது கிருஷ்ணருடைய வாக்குறுதி.

கிருஷ்ணர் தம் மீது அவர் ஆசீர்வாதங்களைப் பொழிந்து, தம்மோடு இணைத்துக்கொள்கிறார். அதே உணர்வு நிலையையே இந்த மொத்தப் பிரபஞ்சத்தின் மீதும் பொழிகிறார். இந்த உரையாடல்களைப் படிக்கும் ஒவ்வொருவருமே கிருஷ்ணருடைய மேலான அழிவில்லா விழிப்புணர்வைப் பெறுவார்கள் என்று பிரகடனப்படுத்துகிறார். கிருஷ்ணர் இந்த மொத்தப் பிரபஞ்சத்தையுமே அவரது பெருந்தன்மையாலும், கருணையாலும் ஆசீர்வதிக்கிறார்.

மேலும், அந்த ஜ்ஞாந யஜ்ஞத்தில் நம்மையே அர்ப்பணிப்பதன் மூலம், அந்த ஜ்னூர வேள்வியில் தூய்மைப்படுத்திக்கொள்வதன் மூலம் நாம் அவரை அடைய அவருக்குள் கரைந்துவிட முடியும் என்றும் உறுதியளிக்கிறார்.

கலையில் மயிலிறகும், கையில் புல்லாங்குழலும் கொண்ட வாஸுதேவ கிருஷ்ணராக மறுபடியும் தோன்றமாட்டார் ; அவருடைய சக்திதான் மறுபடியும் தோன்றும்.

நாம் நெருப்பினுள் எதைப் போட்டாலும், அது மறைந்துவிடுகிறது. அதைப்போலவே, இந்த கீதையைப் படிப்பதிலேயே மூழ்கிவிடும்பொழுது, நம்முடைய இப்போதைய தன்மையுடன் இருக்க மாட்டோம். அவருக்குள்ளேயே கரைந்துவிடுவோம். அவர் மட்டுமே எஞ்சுவார்.

ஸம்பவாமி யுகே யுகே - முன்பே கிருஷ்ணர் இதைச் சொல்லியிருக்கிறார். நன்மை, தீமைகளுக்கு இடையே ஏற்றத்தாழ்வு ஏற்படும்போது, அதைச் சமன்படுத்த, தம்முடைய வருகை எப்பொழுதெல்லாம் தேவைப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் தோன்றப்போவதாகச் சொல்லியிருக்கிறார். "நான் கடைசி குரு அல்ல. எனக்குப் பின்பு வேறு ஒருவரும் தோன்றமாட்டார்கள் என்பதெல்லாம் கிடையாது, '' என்று பிரகடனப்படுத்துவதற்குரிய துணிவைப்பெற்ற ஒரே குரு இவரே!

தலையில் மயிலிறகும், கையில் புல்லாங்குழலும் கொண்ட வாஸுதேவ கிருஷ்ணராக மறுபடியும் தோன்றமாட்டார்; அவருடைய சக்திதான் மறுபடியும் தோன்றும். நம்முடைய யூகத்தால் இந்தத் தவற்றைத்தான் நாமெல்லோரும் செய்கிறோம். குரூமார்கள் ரூபத்தில்தான் தோன்றுவார். நல்லோரைக் காத்து, தீயோரை அழித்து, சமநிலையை மீட்க அவர் திரும்பத் திரும்ப வந்து கொண்டேயிருப்பார்.

பகவத்தீதையில் இதுவே கிருஷ்ணர் பேசும் கடைசி இடம். அவர் கேட்கிறார்: ''அர்ஜுனா, கவனத்தோடு எல்லாவற்றையும் கேட்டாயா ? உன்னுடைய மதிமயக்கம் மறைந்துவிட்டதா? ''

அவர் இறுதிவரை ஒரு ஆசிரியராகவே இருந்தார், திகழ்ந்தார், அவருடைய முழுவதையும் மொத்த பொழிந்தார். உன்னுடைய சந்தேகங்கள் தீர்ந்தனவா? உனக்கு வேறு ஏதாவது தேவைப்படுகிறதா?''என்று கருணையுடன் கேட்கிறார்.

சீடர்களைத் துயரங்களிலிருந்து மீட்டு உயர்விப்பதைத் தவிர, குருமார்களுக்கு வேறெதுவும் ஒரு பொருட்டல்ல. அதற்காகவே அவர்கள் இங்கு வருகிறார்கள்.

இதுவே குருமார்களின் சிறப்பு! தத்தம் சீடர்களைத் துயரங்களிலிருந்து மீட்டு உயர்விப்பதைத் தவிர, அவர்களுக்கு வேறெதுவும் ஒரு பொருட்டல்ல. அதற்காகவே அவர்கள் இங்கு வருகிறார்கள். இல்லையென்றால், அவர்கள் ஏன் இப்பூவுலகில் தங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டும் ? எவ்விதத் தொந்திரவுமின்றி, தங்களுடைய ஆனந்த சக்தியிலேயே மூழ்கியிருந்திருக்கலாமே!

நான் என் சீடர்களிடம், ''நான் வருத்தப்படும் ஒரே நேரம் என்னவென்றால், என்னைவிட்டு நீங்கள் பிரிவதாகச் சொல்லும் நேரம்தான்!' என்று சொல்லும்பொழுது, அவர்கள் அதன் பொருளைப் புரிந்துகொள்வார்கள். ஒரு சீடரை ஜீவன்முக்தராக்கவே, பிறப்பு-இறப்பு சக்கரத்திலிருந்து விடுவிப்பதற்காகவே அவரை என்னிடம் கொண்டுவந்து சேர்த்தது. ஆனால் அவர்கள் அந்த அரிய வாய்ப்பை இழக்கிறார்கள் என்னும் விஷயமே என்னை வருத்தப்படச் செய்யும்.

அவருடைய உடலும்-மனமும் ஒத்துழைக்கவில்லையென்றால், ஆன்மா, அது முக்தி பெறும்வரை திரும்பத் திரும்ப பிறக்க வேண்டியதிருக்கிறது. அந்த ஆன்மா ஒவ்வொரு பிறவி எடுக்கும்பொழுதும், இறுதி அடியைத் துணிகரமாக எடுத்து வைக்க முடியவில்லையே என்று துக்கப்படுகிறது, வருத்தமுறுகிறது.

என்னுடைய ஆச்ரமத்திற்குள் வந்த எவருமே என்னைவிட்டுப் போய்விட முடியாது. அப்படியே அவர்கள் சென்றாலும், நான் அவர்களை விட்டு ஒருபோதும் விலகுவதில்லை. நான் அவர்களுடனேயே இருப்பேன். அவர்களை என்னிடம் கொண்டு வந்து சேர்த்த அவருடைய அந்தக் கணநேர புத்திசாலித்தனமே போதும், நான் அவர்களைப் பாதுகாப்பதற்கு! என்னுள் உறையும் அந்த வடிவமற்ற வடிவத்தைப் புரிந்துகொண்டவர்களுக்கே நான் அவர்களுடைய ஒரு பாகம் என்பது புரியும். அவர்கள் எங்கிருந்தாலும், நான் அவர்களுடைய பாகமாக இருக்கிறேன்.

இதுவே கிருஷ்ணர் அளிக்கும் வாக்குறுதி: "நான் சொல்வதைக் கேளுங்கள். என்னைப் புரிந்துகொண்டு என்னிடமே வாருங்கள். பிறகு நீங்களும் என்னில் ஒரு பாகமே. '

அஹங்காரத்தைக் கொல்ல முடியாது!

கேள்வி: சீரணாகதிசெய்ய ஆசைப்படுவதே அஹங்காரத்தின் வெளிப்பாடாக இருக்கும்பொழுது, நாம் எப்படி அஹங்காரத்தை சீரணாகதிசெய்ய முடியும் ?

பதில்: 'அஹங்காரமே இல்லை' எனும்போது, நீங்கள் எப்படி அதை ச்ரணாகதி செய்ய முடியும் ? நீங்கள் இப்போது ஒரு இருண்ட அறையில் அமர்ந்திருக்கிறீர்கள் என்றும், அந்த இருள் நீங்கிவிட வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றும் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் இருளை, உங்கள் கைகளால் தள்ளி வெளியேற்றிவிட முடியுமா? இருளோடு போராடி, அறையைவிட்டு வெளியேறும்படி அதைக் கட்டாயப்படுத்தத்தான் உங்களால் முடியுமா ?

முடியாது! நீங்கள் எவ்வளவு நேரம் முயல்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டே அல்ல; இறுதியில் நீங்கள் தோல்வியே அடைவீர்கள்? அதுவும் 'இருப்பு' இல்லாத ஒன்றுடன் !

அந்த இருளைப் போன்றதுதான் உங்கள் அஹங்காரம். அதற்கு ஒரு நேர்மறை இருப்பே இல்லை. வெளிச்சம் இல்லா நிலையே இருள் என்பதைப்போல, விழிப்புணர்வு இல்லாததே அஹங்காரம். அதனால், அஹங்காரத்தைக் கொல்ல முடியாது. 'நான் உங்களுடைய ஒரு பாகம் என்பது புரியும்.

போராடுவது முயலுவதைப்போலத்தான். இருளை வெளியேற்ற வேண்டுமானால், நீங்கள் இருளோடு போர்புரிய வேண்டுமென்பதை மறந்துவிட வேண்டும். அதற்குப் பதிலாக, ஒளியைக் கொண்டுவருவதில் உங்கள் சக்தியைக் குவிக்க வேண்டும். அறையினுள் ஒரு சிறு விளக்கைக் கொண்டு வாருங்கள். இருள், தானே பறந்துவிடும்! அதனால், அஹங்காரத்தைப் பற்றி மறந்துவிடுங்கள். விழிப்புணர்வு என்னும் விளக்கை உங்கள் இருத்தலுக்குள் கொண்டுவருவதில் கவனம் செலுத்துங்கள். உங்களுடைய மொத்த விழிப்புணர்வும் தீ ஜ்வாலை ஆகிவிட்டால், இனி அங்கு அஹங்காரம் இருக்கப்போவதில்லை.

அஹங்காரம் ஒரு மாயையே. அதை நீங்கள் அறியாமலிருக்கும்பொழுது, நீங்கள் அதை சீரணாகதி செய்ய முடியாது. ஏனெனில், அதை எப்படிச் செய்வதென்பது உங்களுக்குத் தெரியாது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், அஹங்காரத்தைப் பற்றிய விழிப்புணர்வு வந்தாலுங்கூட, உங்களால் அதை சீரணாகதி செய்ய முடியாது. ஏனெனில், அங்கு சீரணாகதி செய்வதற்கென்று ஒன்றும் மிச்சம் இல்லை என்பதை உணர்ந்துகொள்வீர்கள்!

'உங்களை அறிய வேண்டுமானால் அஹங்காரத்தை சீரணாகதி செய்யுங்கள்' என்று இதுநாள்வரை நீங்கள் கேட்ட, படித்த, கற்றுக்கொண்டவையெல்லாம் வழியில்தான் வேலைசெய்யும் ; 'தன்னை அறிதல்' உதயமாகும்பொழுது, சட்டென அஹங்காரம் காணாமல் மறைந்துபோகும். இனியும் உங்களால் அஹங்காரத்தைக் காண முடியாது. சீரணாகதி அந்த கணமே நிகழ்ந்திருக்கும்.

இன்னொரு வகையில், உங்கள் இருத்தலிலிருந்து இந்தக் கேள்வி எழுந்திருப்பதைக் கண்டு எனக்கு மகிழ்ச்சியே. உங்களுடைய எல்லாப் பதற்றங்களுக்கும், துயரங்களுக்கும், மன அழுத்தங்களுக்கும் மூலகாரணம் உங்கள் அஹங்காரமே. உங்களுடைய நரகத்திற்கான வழி அதுவே. அந்த அஹங்காரத்தை விட்டுவிட வேண்டுமென்று உணர்வதும், அந்தச் சுமையிலிருந்து விடுபட்டேயாக வேண்டும் எனும் தேவையை உணர்வதும், நீங்கள் விழிப்புணர்வை நோக்கி எடுத்து வைக்கும் ஒரு அடியே ஆகும். நீங்கள் தூக்கத்திலிருந்து எழுவதற்கு, இப்போதுதான் நெளிய ஆரம்பித்திருக்கிறீர்கள்.