KAILASA Library/பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)/சக்தி தரிசனம். எதுவெல்லாம் 'நீங்கள்' அல்லவோ', அதையெல்லாம் அழித்துவிடும்!Sign in
பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)

சக்தி தரிசனம். எதுவெல்லாம் 'நீங்கள்' அல்லவோ', அதையெல்லாம் அழித்துவிடும்!

ஒவ்வொரு தரிசனத்தின் போதும், குரு உங்களது இருப்புக்கு ஒளியேற்றுகிறார். உங்களுக்குத் (தெய்விகத்திடமிருந்து) உண்மையான மாற்றப்படுதல் இந்தச் சமயத்தில்தான் நிகழ்கிறது! குரு உங்களுக்கு இறுதி நிலையைத் தருகிறார்.

ஒருமுறை உங்களுக்குள் ஒளியேற்றப்பட்டுவிட்டால், நீங்கள் எங்குச் சென்றாலும், எங்கிருந்தாலும், எதைச் செய்தாலும் அதை உங்கள் தீபமாக எடுத்துச்செல்ல முடியும். ஒரேயொரு தொடுதலே போதுமானது. எந்தவிதமான அறிவும், அனுபவமும், விளக்கமும் இல்லாமலேயே அதை அறிந்துகொள்வதற்கு இது ஒரு அருமையான வாய்ப்பு.

ஒவ்வொரு தரிசனத்தின்போதும், குரு உங்களது இருப்புக்கு ஒளியேற்றுகிறார். அவனது (தெய்விகத்தின்) ஒளியையே உங்களுக்குத் தருகிறார்.

சக்தியானது, உங்களை ஆழமாகத் தொட்டிருந்தால், உங்கள் வாழ்க்கையே என்றென்றைக்கும் உணர்வுமாற்றம் பெற்றுவிடும். உங்களுக்குள் உருவாக்கப்பட்ட 'வெளி'யுள் விழிப்புணர்வு நுழைந்து, உங்களுடைய கேள்விகளையெல்லாம் கரைத்துவிடுகிறது.

தெய்விகத்தை அடைவதற்குப் பல வழிகள் உள்ளன. உள்ளே நுழைந்தபின், அனுபவம் ஒரே மாதிரியானதாகவே இருக்கும். தரிசனம், சாத்தியமான எல்லாக் கதவுகளையும் திறந்துவிடுகிறது. இது ஒரு உன்னதமான அனுபவத்திற்கான அழைப்பு.

ஒவ்வொருவருடைய கதவும் வெவ்வேறு மாதிரியாக இருக்கும். ஆனால், எந்தக் கதவு என்பது ஒரு பொருட்டல்ல, நீங்கள் ஒன்றைக் கண்டுபிடிக்கும்வரை.

தரிசனத்தின்போது வெளிப்படும் சக்தியானது மிகவும் ஆழமானதாக இருக்கும். அது உங்களுடைய புத்திசாலித்தனத்தைத் தூண்டி, உங்களை பட்டறிவு நிலையிலிருந்து உள்ளுணர்வு நிலைக்கு எடுத்துச்செல்லும். பெரும்பாலும் நீங்கள், உங்கள் மனத்தின் ஆழமான விழிப்பற்ற அமைப்புகளில் சிக்கியுள்ளீர்கள். அது மீண்டும் மீண்டும் உங்களை, துக்கம் மற்றும் விழிப்பற்ற நிலையில் முடிவுகள் எடுப்பது போன்ற வழக்கமான பாதை நோக்கியே இழுக்கிறது.

தரிசனத்தின்போது கிடைக்கும் சக்தியானது, உங்களுக்குள் உள்ளுணர்வு ஆற்றலைத் திறந்துவிடக் கூடியது. இந்த உள்ளுணர்வின் ஆற்றலினால், உங்களது இருப்பின் சக்தியைத் தட்டியெழுப்பி, உங்களது வாழ்வின் எந்தச் சூழலிலும் சரியான முடிவுகள் எடுப்பதற்கு அதை உபயோகிக்கலாம்.

தரிசன நிகழ்ந்ததின் ஆழத்தையும், உங்களுக்குக் கிடைத்த பரிசின் மதிப்பையும் உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

ஸ்ரீகிருஷ்ணர், தேர்ந்தெடுப்பதில் வல்லவர். அவரைச் சுற்றியிருந்தவர்களில் அர்ஜுனனை மட்டுமே, தம்முடைய சக்தியை அளிப்பதற்குத் தேர்ந்தெடுத்தார்.

இருப்பினும், திறந்த மனத்துடன் இருக்க முயற்சிசெய்யுங்கள், அதை ஏற்று, அனுபவித்து, மகிழ்வதற்கு முடிவுசெய்யுங்கள். மற்றது தானே நிகழும்.

ஆனந்த தரிசனம் என்பது குருவின் அருகாமையில் இருக்கும் சமயம், அவனிடமிருந்து சக்தி உங்களுக்குள் நேரிடையாகப் பாய்வதை உணர்வதாகும். தரிசனம் எதுவெல்லாம் 'நீங்கள்' அல்லவோ, அதை அழித்துவிடும்: உங்களுக்குள் மாயையை, மதிமயக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள் அனைத்தையும் மற்றும் உங்களுக்குள் துக்கம் தோன்றுவதற்குக் காரணியான, பிறரிடமிருந்து கடன்வாங்கப்பட்ட ஆசைகளையும் ஆனந்த தரிசனம் அழித்துவிடும். தரிசன நேரம் என்பது நீங்கள் பிரபஞ்ச விழிப்புணர்வுடன் ஒன்றி, ஆனந்தக் கடலில் கரைந்துவிடுவதற்கு கிடைத்த அரிய வாய்ப்பு.

ஆனந்த தரிசனம் என்னும் சக்தி விளையாட்டு, குருவினிடமிருந்து உங்களுக்குக் கிடைக்கக்கூடிய ஒரு தூய பரிசு. அது, ஆழமான கருணையிலிருந்து மலரும் ஒரு நிபந்தனையற்ற பரிசு.

ஸ்ரீகிருஷ்ணர், சுற்றியிருந்தவர்களில் அர்ஜுனனை மட்டுமே, தம்முடைய சக்தியை அளிப்பதற்குத் தேர்ந்தெடுத்தார்.

நான் அப்படியல்ல. அனைவரையும் வரவேற்கிறேன். காலம் இப்போது வேறுவிதமாக இருக்கிறது. இருக்கின்றன.

ஒருவர், எவ்வளவு அதிகமான மக்களை, பராசக்தியை நோக்கி வழிநடத்துகிறாரோ, பிரபஞ்ச இருப்பு சக்தியின் கணநேரக் காட்சியைக் காண்பதற்குச் சக்தியூட்டுகிறாரோ, அந்தளவுக்கு, இப்பூவுலகிற்கு அதிகமான அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. அதுவே என்னுடைய நோக்கம். பராசக்தி, அதை நோக்கியே என்னை வழிநடத்துகிறாள்.