KAILASA Library/பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)/கிருஷ்ணர் ஒங்கு இருக்கிறார்Sign in
பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)

கிருஷ்ணர் ஒங்கு இருக்கிறார்

  • 18.73 அர்ஜுனன் சொல்கிறார்: ஓ இறைவனே, என்னுடைய மாயை ஒழிந்தது. உன்னுடைய கருணையால் என்னுடைய நினைவு திரும்பியது. நான் இப்போது உறுதியாக இருக்கிறேன். சந்தேகங்களில்லாமல் இருக்கிறேன். உன்னிடம் பணியவும் தயாராயிருக்கிறேன்.
  • 18.74 ஸ்ஞ்ஜயன் சொல்கிறார்: இரண்டு உயர்ந்த ஆத்மாக்களான கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த முயிர்க்கூச்சு உண்டுபண்ணும் அதிஅற்புதமான உரையாடல்களைக் கேட்டேன்.
  • 18.75 வியாசரின் கருணையால், யோக புருஷரான கிருஷ்ணர் அர்ஜுனனிடம் உன்னதமான இரகசியங்களைக் கேட்டேன்.
  • 18.76 அரசே, கிருஷ்ணருக்கும், அர்ஜுனனுக்கும் இடையே நடந்த அந்த அற்புத, தெய்விக உரையாடல்களைத் திரும்பத் திரும்ப

நினைவுகூறுவதில், ஒவ்வொரு கணமும் சிலிர்ப்படைந்து மிகவும் ஆனந்தப்படுகிறேன்.

  • 18.77 அரசே, இறைவன் கிருஷ்ணருடைய அற்புதமான ரூபத்தை நினைவுகூரும்பொழுது இன்னும் அதிகமான அதிசயத்தால் உறைந்து போயிருக்கிறேன். நான் மிகுந்த ஆனந்தத்தில் திரும்பத் திரும்ப திளைத்துக் கொண்டிருக்கிறேன்.
  • 18.78 எங்கெல்லாம் வில் வித்தையில் மிகச் சிறந்தவரான பார்த்தன் இருக்கிறாரோ அங்கெல்லாம் நிச்சயமாக செல்வ வளமை, வெற்றி, அசாத்திய சக்தி, நியாயம், நீதிநெறி, ஒழுக்கம் ஆகிய எல்லாமே நிறைந்திருக்கும். இதுவே என் கருத்து.

உருவமற்ற சக்தியோடு கலந்திடுவோம்

இந்தக் கடைசி ஸ்லோகங்களில், அர்ஜுனனும் ஸ்ஞ்ஜயனும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

அர்ஜுனன் தம் குருவிடம் தலைவணங்கிக் கூறுகிறார்: "என்னுடைய எல்லாச் சந்தேகங்களும் தீர்ந்தன. நான் புரிந்துகொண்டேன். நான் தயார். தாங்கள் என்ன சொன்னாலும் அடிபணிகிறேன். நான் நிச்சயம் போர் புரிகிறேன்."

இனி வருவது வரலாறு. அர்ஜுனனின் தலைமையில் கௌரவப்படை அழிக்கப்பட்டது. எல்லாக் கௌரவ சகோதரர்களும், எல்லாப் பெரிய ஆச்சாரியார்களும், பெரிய பெரிய படைத்தலைவர்களுமே மடிந்தனர். பாண்டவ சகோதரர்கள் வெற்றியடைந்தனர். யுதிஷ்டிரா மன்னராக முடிசூட்டப்பட்டார். தம் அரியாசனத்தை உறுதிப்படுத்தும் மற்றும் பெருமைப்படுத்தும் விதத்தில் ராஜஸூய யாகத்தையும் மற்ற யாகங்களையும் நடத்தி முடித்தார்.

சில வருடங்களுக்குப் பிறகு கிருஷ்ணர் இறக்கிறார். இச்செய்தியைக் கேட்ட பாண்டவர்களும் உலகைத் துறக்கின்றனர். கிருஷ்ணர் தமது மனித வடிவத்தை விட்டுவிடுகிறார். இதுவே வாழ்க்கையின் கதை. நீங்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும் அந்த வடிவம் அழியத்தான் வேண்டும் ; சக்தி மட்டும் தொடர்ந்து வாழும். இத்தனை அத்தியாயங்களின்

மூலமும், ஸ்லோகங்களின் மூலமும் கிருஷ்ணர் இதைத்தான் கற்பித்தார். நீங்களும் உங்கள் வடிவத்தைத் துறந்துவிடுங்கள்; வடிவமற்றதைப் பெறுங்கள்.

இப்போது கிருஷ்ணராலும் பேச இயலவில்லை. அர்ஜுனனாலும் பேச இயலவில்லை. ஏனெனில் இருவருமே வேறு மனநிலையில் இருந்தனர். அர்ஜுனன் மறைந்தேவிட்டார்; கிருஷ்ணரோ பரவச நிலையில் இருக்கிறார். இப்பொழுது ஸ்ஞ்ஜயன் மீண்டும் காட்சியில் தோன்றுகிறார்.

கீதையின் தொடக்கத்தில், அர்ஜுனன் மன அழுத்தத்தில் இருந்தபொழுது,

அவருக்குச் சொல்வதற்கு ஏதும் இல்லை. அந்த நேரத்தில் ஸஞ்ஜயன் பேசினார்.

பிறகு, கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு விசுவரூப தரிசனத்தைக் காட்டி, முதல் அன்ம அனுபவத்தைத் தரும்பொழுது, கிருஷ்ணர் உயர்ந்த விழிப்புணர்வில் இருந்தார்; அர்ஜுனன் பரவசநிலையில் இருந்தார்; இருவருமே ஏதும் பேசும் மனநிலையில் இல்லாததனால், இரண்டாம் முறையாக, ஸஞ்ஜயன் பேச முன்வந்தார்.

இத்தனை அத்தியாயங்களின் மூலமும், கிருஷ்ணர் இதைத்தான் கற்பித்தார்: நீங்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும் அந்த வடிவம் அழியத்தான் வேண்டும்; சக்தி மட்டும் தொடர்ந்து வாழும்.

முறையாக, மூன்றாம் ஸஞ்ஜயன் பேசுவதற்கு முன் வருகிறார். கிருஷ்ணரும், அர்ஜுனனும் பேசும் நிலையில் இல்லை என்பது மட்டுமல்ல, அந்த இருவரும் அங்கு இல்லை. கிருஷ்ணர், பரப்ரூம் கிருஷ்ணநிலையில் இருந்தார்; அர்ஜுனன், பரப்ரூற்ம கிருஷ்ணரான தூய்மையான விழிப்புணர்வில் கரைந்து மறைந்துவிட்டார் சொல்வதற்கென்று அங்கு ஒன்றுமே இல்லை.

ஸஞ்ஜயன் திருதிராஷ்டிரரை விளித்து, தம் மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் வெளிப்படுத்துகிறார்: 'ஒ, அரசே, கிருஷ்ணருக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த உரையாடல்களைத் திரும்ப திரும்ப நினைவுகூர்வதில் ஒவ்வொரு கணமும் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.''

மூன்றாம் முறை : நினைக்கும்போதெல்லாம் பேரானந்தத்தால் இந்த ஸ்தீயம் என் ஆன்மாவை, இருப்பை முழுமையாக அருளால் என்று சொல்கிறார்.

ஸ்ஞ்ஜயன் வியாஸரின் கருணையால், ஜகத்குரூவாகிய கிருஷ்ணருடைய இரகசியமாக வைக்கப்பட வேண்டிய உரையாடலைக் கேட்க முடிந்தது.

பகவத்தீதையை நாம் எப்போதெல்லாம் படிக்கிறோமோ, கற்பிக்கிறோமோ அல்லது கேட்கிறோமோ, கிருஷ்ணரும், அர்ஜுனனும் அந்த இடத்தில் தவறாமல் இருப்பார்கள்.

இங்கு வியாஸர் என்பது குருவைக் குறிக்கிறது. வட பாரதத்தில், புராணங்கள் கற்கும் இடத்தை, வயாஸ்டீம் என்றழைப்பார்கள். வியாஸரே ஆதிகுரு. அதனால் ஸஞ்ஜயன், கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த உரையாடல்களைக் கேட்கும் வாய்ப்பு அளித்ததற்கு குருநாதருக்கு தம் நன்றியை வெளிப்படுத்துகிறார்.

ஸஞ்ஜயன் சொல்கிறார்: ஓ, அரசே, நான் பிரபு கிருஷ்ணரின் அற்புதமான வடிவத்தை நினைவுகூறும் பொழுதெல்லாம் ஸ்தம்பித்துப் போகிறேன். நான் திரும்பத் திரும்ப மகிழ்ச்சியில் ஆழ்கிறேன். அவரால் அதற்கு மேல் ஏதும் சொல்ல முடியவில்லை! அவருக்குள் பெருமகிழ்ச்சி நிரம்பி வழிகிறது. அவர் இந்த ஸ்லோகத்தோடு, மொத்தத்தையும் அழகாகச் சொல்லி முடிக்கிறார்.

யத்ர யோகேர்வர க்ரு'ஷ்ணோ யத்ர பார்தோ தூர்தர: / தத்ர ஸ்ரீர்விஜயோ பூதிர்த்ருவா நீதிர்மதிர்மம // 18.78

யோகங்களுக்கெல்லாம் அரசரான கிருஷ்ணரும், மிகச் சிறந்தவரான அர்ஜுனனும் எங்கெல்லாம் இருக்கிறார்களோ, அங்கு செல்வவளம், வெற்றி, அதீத சக்தி, நல்லொழுக்கம், நீதி எல்லாமே நிச்சயம் இருக்கும். இதுவே எனது

கருத்து என்று சொல்லி, இந்த மங்களகரமான ஆசீர்வாதத்தோடு முடிக்கிறார்.

பகவக்கீதையை கற்பிக்கிறோமோ அல்லது கேட்கிறோமோ, கிருஷ்ணரும், அர்ஜுனனும் அந்த இடத்தில் தவறாமல் இருப்பார்கள். அவர்கள் தங்கள் வடிவமற்ற வடிவத்தில் இருப்பார்கள். நிச்சயமாக, அவர்கள் இப்போது இங்கே இருக்கிறார்கள்; இந்தப் பதினெட்டு நாட்களும் இங்கு இருந்தார்கள்.

இரு மஹாத்மாக்களுக்கு இடையில் நிகழ்ந்த, குருவுக்கும் சிஷ்யருக்கும் இடையில் நடந்த ஆன்மிக உரையாடல்களைக் கேட்கவும், படிக்கவும் வாய்ப்புக்களைப் பெற்ற நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இனி நீங்கள் எதை எடுத்துச்செய்ய முனைந்தாலும், உங்களுக்கு செல்வம், நல்ல ஆரோக்கியம், வெற்றி ஆகியவை கிட்டும் என ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள். இந்த கிருஷ்ண உணர்வுடனே செல்லுங்கள் நீங்கள் நீத்யானந்தத்தில், எல்லையில்லாப் பேரானந்தத்தில் இருப்பீர்கள்.

'நுட்பம்' என்றால் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்

கேள்வி: ஸ்வாமிஜி, சீரணாகதியையும், துறவையும் எப்படி ஒரு நுட்பமாகப் பயன்படுத்த முடியும் என்பது எனக்குப் புரியவில்லை. தயவுசெய்து விளக்கவும்.

'நுட்பம்' என்ற வார்த்தையால் நான் எதைக் குறிப்பிடுகிறேன் புரிந்துகொள்ளுங்கள், பிறகு நீங்கள் இறுதி நுட்பம் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.

எல்லாக் கலாச்சாரங்களும், மதங்களும், ஆன்மிக சம்பிரதாயங்களும் இந்த ஒன்றை ஒப்புக்கொள்கின்றன: இறுதி நிலையிலிருந்து தாழ்ந்துவிட்டான்; அவன் அப்படியில்லை !'

'ஆதாமும், ஏவாளும் தூய்மையானவர்கள்.

ஒரு உயர்ந்த நிலைக்கு எடுத்துச்செல்லும் ஒரு வழிமுறையே நுட்பம் எனப்படுகிறது!

ஆனந்தம், இன்பம், பெரு மகிழ்ச்சி ஆகியவற்றுடன் இருந்தார்கள். ஆனால், ஆதாம் எப்போது ஆப்பிளைச் சுவைத்தானோ அப்போதே கீழ்நிலைக்கு இறங்கிவிட்டான். மனிதகுலம் சிதைந்துவிட்டது' என்று கிருக்குவ சம்பிரதாயம் சொல்கிறது.

ஹிந்து சம்பிரதாயம், 'முதல் யுகமான ஸ்த்ய யுகத்தில், நாம் ஸைத்யத்தில் நிலைபெற்றவர்களாக இருந்தோம். பிறகு காலப்போக்கில், நாம் தூய்மையற்றவர்களாகி விட்டோம். நம்முடைய ஆதார, சொந்த நிலையிலிருந்து தாழ்ந்துவிட்டோம்' என்று பகர்கிறது.

தம்ம காலத்தில், மனித குலம் நேர்மையுடன் வாழ்ந்தது; காலப்போக்கில் அது மேலான நிலையிலிருந்து வழுவிவிட்டது என்று புத்த மதம் கூறுகிறது.

ஒவ்வொரு சம்பிரதாயப்படி பார்த்தாலுமே, மனிதன் அவன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லை! மனிதன் தம் விழிப்புணர்வு நிலையிலிருந்து, தம் ஆன்ம நிலையிலிருந்து நழுவிவிட்டான்.

ஒரு அழகான உபரூஷத் மந்திரம் சொல்கிறது: சிம்ரு 'தஸ்ய புத்ர: - இதன் பொருள், நீங்கள் அழிவில்லாததின் புத்திராகள். நீங்கள் கடவுளின் குழந்தைகள் !

எல்லாச் சம்பிரதாயங்களும், எல்லா மதங்களும், எல்லா குருமார்களும் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம்: மனிதன், தன்னைத் தானே இழிவுப்படுத்திக் கொண்டான், தன் உயர்வான ஸத்ய நிலையிலிருந்து

மனிதன் விலங்கினத்திலிருந்து தோன்றினான் என்று விஞ்ஞானம் சொல்கிறது. ஆனால், மனிதன் கடவுளிடமிருந்து தோன்றினான் என்று மெய்ஞானம் பகர்கிறது.

தாழ்ந்துவிட்டான்.

மனிதன் விலங்கினத்திலிருந்து தோன்றினான் என்று விஞ்ஞானம் சொல்கிறது. ஆனால், கடவுளிடமிருந்து தோன்றினான் என்று மெய்ஞானம் பகர்கிறது. நீங்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டீர்களானால், நீங்கள் இந்த இரண்டு கருத்துகளையும் புரிந்துகொள்வீர்கள். உங்களுக்கு உகந்ததாக உங்கள் முன், உங்கள் மனத்திற்கு முன், எது காட்டப்படுகிறதோ அதை நோக்கியே உங்கள் மனம் இயற்கையாகவே செல்ல விரும்பும்.

'தன்னை உணர்தலே' ஒவ்வொருவரின் இறுதி இலட்சியம், நம் இயல்பான நிலைக்கு நாம் மீண்டும் திரும்பியே ஆக வேண்டும் என எல்லா ஆன்மிகச் சம்பிரதாயங்களும், எல்லா மதங்களும் வலியுறுத்துகின்றன.

கிறிஸ்துவர்கள், எனும் வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். ஹிந்துக்கள், மோக்ஷம் எனும் வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள்.

புத்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள்.

'தன்னை உணர்தலே' ஒவ்வொருவரின் இறுதி இலட்சியம், நம் இயல்பான நிலைக்கு நாம் மீண்டும் திரும்பியே ஆக வேண்டும் என எல்லா ஆன்மிகச் சம்பிரதாயங்களும், எல்லா மதங்களும் வலியுறுத்துகின்றன.

ஒவ்வொரு மதமுமே, தனக்கென ஒரு வார்த்தையைக் கொண்டிருக்கிறது. ஆனால், நாமெல்லோருமே, நாம் இப்போதிருக்கும் இந்த நிலையைவிட உயர்ந்ததான நம்முடைய சொந்த நிலையை அடைய வேண்டியவர்கள் என்பதைப் புரிந்து வைத்திருக்கிறோம்.

நம்மை ஒரு உயர்ந்த நிலைக்கு எடுத்துச்செல்லும் ஒரு உயர்வழிமுறையே நுட்பம் எனப்படுகிறது! நுட்பம் என்பதை நான் இப்படித்தான் வரையறுத்துச் சொல்கிறேன். நுட்பம் என்பது ஒரு ஏணியைபோல, நம்மை உயர்ந்த நிலைக்கு எடுத்துச்செல்கிறது.

பலவிதமான நுட்பங்களைப் பற்றிக் கேட்பது குழப்பத்தையே உருவாக்கும்

உலகில், நம் நம் விழிப்புணர்வு நிலையை உயர்த்துவதற்கென பல்லாயிரக்கணக்கான நுட்பங்கள் இருக்கின்றன. அமைதியாக அமர்ந்திருப்பதேகூட மனங்கடந்த நிலைக்கு, உயர்ந்த விழிப்புணர்வு நிலைக்கு, சாதாரண தளத்திலிருந்து உயர்நிலைக்கு எடுத்துச் செல்வதற்கான ஒரு நுட்பமே. ஒவ்வொரு மதமும் ஆயிரக்கணக்கான நுட்பங்களைக் கொண்டிருக்கிறது. மதத்தின் பெயரால் நாம் கையாளும் ஒவ்வொரு வழிமுறையும், நம்மைக் கீழ்நிலையிலிருந்து மேலான விழிப்புணர்வு நிலைக்கு கொண்டு செல்லும் ஒரு நுட்பமே.

நாம் மனிதனிலிருந்து கடவுளுக்கு, அழிகின்ற தன்மையிலிருந்து அழியா தன்மைக்கு, உலகியலிலிருந்து தெய்விகத்துக்கு நகர முயல்கிறோம்.

கடவுளை அடைவதற்கு, ஆரத்தி அல்லது பூஜை செய்வதுகூட ஒரு நுட்பம்தான். சாதாரண மூச்சுப் பயிற்சியிலிருந்து பூஜை செய்வதுவரை எல்லாமே வெவ்வேறு நிலையைச் சார்ந்த நுட்பங்களே. விழிப்புணர்வை நோக்கி, ஆன்மிகத்தை நோக்கி நாம் பயணம்செய்யும் ஒவ்வொரு பாதையும் ஒரு நுட்பமே.

பகவத்தீதையில், பலவிதமான தியான நுட்பங்களை அர்ஜுனனுக்குக் கற்பிக்கிறார். ஒவ்வொரு அத்தியாயமும், ஒவ்வொரு ஸ்லோகமும் ஒரு நுட்பமே. அப்படி பலவிதப்பட்ட தியான முறைகளைக் கேட்ட அர்ஜுனன், எது சரியான நுட்பம் என்பதை அறிய முடியாமல் குழப்பத்திற்குள்ளானார். அவர் குருவைக் கேட்கிறார்: "ஓ, பிரபுவே, ஆயிரக்கணக்கான நுட்பங்களைக் கேட்ட பின்பு, நான் மிகவும் குழப்பமடைந்திருக்கிறேன். தயவுசெய்து சொல்லுங்கள்! இறுதி நுட்பம் எது ? சரியான நுட்பம் எது ?

இன்றைக்கும்கூட, பல விதமான வழிமுறைகளையும், நுட்பங்களையும் கேட்பதால் நாமும்கூட குழப்பத்தில் தான் இருக்கிறோம். ஒவ்வொரு குருநாதருமே, ஒவ்வொரு மதத் தலைவருமே தம்முடைய நுட்பமே மிகச் சிறந்தது என்று அறிவிக்கிறார். ஒவ்வொரு ஞானியும் அவருடைய நுட்பமே இறுதியானது என்று நம்முன் வைக்கிறார்.

வேடிக்கையான ஒரு கூற்று: இரண்டு ரிஷிகள் ஒரே விஷயத்தை

நாம் மனிதனிலிருந்து கடவுளுக்கு, அழிகின்ற தன்மையிலிருந்து அழியா தன்மைக்கு, உலகியலிலிருந்து தெய்விகத்துக்கு நகர முயல்கிறோம்.

சொன்னார்களென்றால், நிச்சயம் அதில் ஒருவர் மோசடிக்காரர் என்பதை நாம் எளிதாக முடிவுசெய்து விடலாம். இது உண்மையே. இரு ரிஷிகள் ஒரே விஷயத்தையே சொல்கிறார்களென்றால், ஒருவர் மற்றவர் சொல்வதையே திருப்பிச் சொல்கிறார் என்பதுதான் பொருள். ஏனெனில், இரு ஞானகுருமார்கள் ஒரே மாதிரி பேசவும் முடியாது, நடந்துகொள்ளவும் முடியாது.

ஞானமடைதல் என்றால் ஒரு தனித்துவம்

வாய்ந்த வழியில் மலருவது. கடவுள் ஒருபோதும் ஒரே மாதிரி பூவை உருவாக்கினார் என்றால், அதற்கு மட்டுமே உரிய தனிப்பட்ட தன்மைகள், குணங்களோடுதான் அதை உருவாக்குவார். அதைப்போலவே ஒருவர் ஞானமடையும்போது, தமக்கே உரித்தான தனித்துவத்துடன் விளங்குகிறார்.

ஞானமடைதல் என்றால் ஒரு தனித்துவம் வாய்ந்த வழியில் மலருவது.

தம்முடைய ஒவ்வொரு வழிமுறையை உலகுக்கு வழங்குகிறார். இறைவனை அடைவதற்கு ஆயிரமாயிரம் வழிமுறைகளும், நுட்பங்களும், ஆயிரமாயிரம் பாதைகளும் இருக்கின்றன.

இங்கு அர்ஜுனாவது எல்லாவித தியானங்களையும் ஒரே குருவினிடமிருந்து பெற்றுக் கொண்டார். ஆனால், இன்று, மக்கள் ஆயிரக்கணக்கான இடங்களிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிறந்த வழிமுறை என்று எதை எடுத்துக்கொள்வது ?

பழங்காலத்தில், தியானம் அல்லது ஆன்மிகம் என்பது ஏறக்குறைய 'விற்பவரின் சந்தை'யாகத்தான் இருந்தது. ஆனால், இப்போது அது 'வாங்குவோரின் சந்தை'யாகிவிட்டது. பழங்காலத்தில் அது விற்பவரின் சந்தை, அங்கு குருதான் முடிவுசெய்வார். இப்பொழுது சீடர்கள்தான் எது சிறந்த வழி என்று முடிவுசெய்கிறார்கள்.

நீங்கள் கணினியில், இணையதளத்திற்குள் சென்று தியானம் என்று 'டைப்' செய்யுங்கள். உடனே, நூற்றுக்கணக்கான வலைதளங்கள் தியானத்தைப் பற்றிய தகவல்களையும், நுட்பங்களையும், வழிமுறைகளையும் தரும். எதைத் தேர்ந்தெடுப்பது ? என்ன செய்வது ? எது வழி ?

இதைப்போன்ற குழப்பத்தை எதிர் கொள்ளும்போது, 90% மக்கள் ஆன்மிகம் என்றாலே பயந்து, அதிலிருந்து விலகிவிடுகிறார்கள். மற்ற எந்தத் துறையை விடவும் அதிக குழுப்பம் நிறைந்த துறை ஆன்மிகமே! ஏனென்றால், இங்குதான், ஏன்? எது சரியான வழிமுறை? எது உண்மையான வழி ? என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.

அர்ஜுனனுக்கு குழப்பம் ஏற்பட்டபொழுது, அவர் கேட்கிறார், ''தங்களிடமிருந்து பல விதமான வழிமுறைகளையும் கேட்டேன். எது தான் சிறந்த முறை? எது தான் இறுதி நுட்பம்?''