KAILASA Library/பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)/என்னுடைய சீடர்களிடம் இந்த வார்த்தைகளின் சக்தியைப் பற்றிக் கேட்டுப் பாருங்கள்.Sign in
பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)

என்னுடைய சீடர்களிடம் இந்த வார்த்தைகளின் சக்தியைப் பற்றிக் கேட்டுப் பாருங்கள்.

முழுமையாக சரணடையும் மனோநிலையுடன் வருகின்றவர்களிடம் மட்டுமே நான் இதைச் சொல்கிறேன். அவர்கள் என்னிடம், ''அருள்கூர்ந்து, என்னைப் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லுங்கள் ஸ்வாமிஜி.'' என்று சொல்லுமளவுக்கு எல்லையற்ற நம்பிக்கையை என்மீது கொண்டுள்ளனர்.

அவர்களுடைய பிரச்சினைகளையும் மன வலிகளையும் என்னிடம் இறக்கிவைத்துவிட்டால், அதற்குப் பிறகு அது அவர்களுடைய பாரம் அல்ல, அது என்னுடையதாகிவிடுகிறது என்பதை அவர்கள் தங்கள் இருப்புநிலையில் உணர்வார்கள். அந்தப் பிரச்சினைகள் முழுவதும் மறைந்தேவிட்டன என்பதில் ஒரு எள்ளளவு சந்தேகம்கூட அவர்கள் மனத்தில் இல்லை என்பதை ஆழமாக அறிந்திருக்கிறார்கள். உண்மையில், பலருக்கு, அவர்கள் என் சாந்நித்தியத்திலேயே இருந்தாக வேண்டுமென்ற உணர்வுகூட மறைந்துவிடுகிறது. அவர்களுடைய சரணாகதியும், அதிலிருந்து பிறந்த நம்பிக்கையும் அவ்வளவு ஆழமாக இருக்கிறது.

அவர்களுக்காக நான் எதுவும் செய்வதெல்லாம் ஒன்றே, பிரபஞ்சத்திடைய பெண்மை சக்தியாகிய தேவி பராசக்தியிடம் அவர்களுடைய பிரச்சினைகளையெல்லாம் சமர்ப்பித்து விடுகிறேன். அவ்வளவேதான். அவளுடைய கட்டளையில்லாமல் என்னால் ஒரு விரலைக்கூட அசைக்க முடியாது. அதனால் என்னால் என்ன செய்துவிட முடியும்? ஆனாலும் அவள் ஒவ்வொரு முறையும் உதவிக் கொண்டேதான் இருக்கிறாள். அவளுடைய இருப்புணர்வு அவ்வளவு ஆழமானது.

சரணாகதி, உங்கள் கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால கர்மங்கள், வாசனைகள் மற்றும் ஸம்ஸ்கார தளைகளிலிருந்து உங்களை விடுவிக்கும் கருவி நுட்பம்.

சரணடையும்பொழுது, அஹங்காரமும் மனமும் சரணடையும்பொழுது, அதன்பிறகு நிகழவேண்டியதை அவளே பார்த்துக்கொள்வாள். ஆனால், நீங்கள் அஹங்காரத்தால் நிறைந்திருந்தீர்களானால் அங்கே அவளுக்கு இடமில்லை.

அதனால், நான் என் தியான சிகிச்சையாளர்களிடம் சொல்வதெல்லாம், நீங்கள் சிகிச்சையை ஆரம்பிக்கும்பொழுது, உங்களுடைய அக்ஞா சக்கரத்தில் முழு கவனத்தையும் செலுத்தி, நீங்கள் பாதையை விட்டு விலகி எனக்கு வழிவிடுங்கள். அப்பொழுதுதான் நான் உள்ளே வர முடியும்.

பரமகுருவாகிய, ஜகத்குருவாகிய கிருஷ்ண பரமாத்மா, தம் கீதை முழுவதும் திரும்பத் திரும்பச் சொன்னது இதுவே. அவர், அவரிடம் உங்களைச் சரணடையச் சொல்வது அஹங்காரத்தினால் அல்ல, அளவான அவருடைய கருணையினால்தான்! அவரிடம் இல்லாத எதை நீங்கள் அவருக்குக் கொடுத்துவிட முடியும்?

உங்களுக்குத் தேவையானவற்றையெல்லாமே அவரால் மட்டுமே கொடுக்கமுடியும் என்றிருக்கும்பொழுது, நீங்கள் வேறு எதை விரும்புகிறீர்கள்? துயரங்களிலிருந்தும் நீங்கள் மீள்வதற்கு, உங்களுக்கு என்னென்ன தேவையோ, அவை எல்லாவற்றையுமே அவரால் மட்டுமே கொடுக்க முடியும். உங்களுக்காக இதை வேறு யார் செய்ய முடியும்? வேறு யாருமே செய்ய முடியாது.

நம்பிக்கையை இழக்காதீர்கள். அவசியமேயில்லை. கிருஷ்ணர் ஓர் வழிகாட்டும் தீப்பந்தம், கலங்கரை விளக்கம். உங்களுக்குத் தேவையானதெல்லாம் அவரிடம் ஆழ்ந்த நம்பிக்கை மட்டுமே.

சக்தி கரிசனம்