KAILASA Library/பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)/இருப்பு சக்தியின் கைகளில், நீங்கள் ஒரு பொம்மையே!Sign in
பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)

இருப்பு சக்தியின் கைகளில், நீங்கள் ஒரு பொம்மையே!

கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு இறுதி தீர்மானத்தைப் பகர்கிறார்.

அவர் சொல்கிறார்: ''உனக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, அர்ஜுனா, நீ போரிடத்தான் போகிறாய். உன்னுடைய மேலோட்டமான புத்திசாலித்தனத்தின் காரணமாக, 'நீ போரிடக்கூடாது' என்று உன்னுடைய அஹங்காரம் சொல்கிறது. உன்னுடைய ஆழமற்ற அறிவு உருவாக்கிய மாயை, உன் நண்பர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் ஆகிய இவர்களை எதிர்த்துப் போரிடக்கூடாது என்று உனக்கு அறிவுறுத்துகின்றது, அதன் கட்டுப்பாட்டில் நீ இருக்கிறாய். ஆனால், உன்னுடைய இயல்பும், உன்னுடைய க்ஷத்ரிய கட்டுறு மனப்பாங்கும் உன்னைப் போரிடத்தான் தூண்டும் என்பதை மறந்துவிட்டாய். இருப்பு சக்தியின் கைகளில், நீ ஒரு பொம்மையே! நீ போரிடத்தான் போகிறாய்!

இவை மிக அசாதாரணமான வார்த்தைகள், நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், நம் புத்திசாலித்தனம் எந்த அளவிற்கு இருந்தாலும், நம் விருப்பம் எதுவாக இருந்தாலும், நாம் நம் ஸம்ஸ்காரங்களால்தான் இயக்கப்படுவோம். கர்மச் சக்கரம் என்னும் இயந்திரத்தை இயக்குகிறது. அதிலிருந்து தப்புவதற்கான வழி கிடையாது.

கேள்வி: இதுவரை கிருஷ்ணர், 'என்னிடம் சரணடைந்துவிடு, நான்

தொடர்ந்து உங்களைக் கட்டுப்படுத்தி வரும் ஸம்ஸ்காரங்களை ஏற்றுக்கொள்ளாமல், நீங்கள் அவற்றுக்கு உங்கள் மறுப்பைத் தெரிவிக்க முடியும்.

உன்னை கவனித்துக்கொள்கிறேன்' என்று சொல்லி வந்தார். ஆனால், உன்னுடைய கடந்தகால கட்டுறு மனப்பாங்கிலிருந்து தப்ப வழியே கிடையாது என்று இப்போது அவரே சொல்கிறார். இது என் நம்பிக்கையையே குலையச் செய்கிறதே?

இது ஒரு அருமையான சந்தேகம்! கிருஷ்ணர், இந்தப் பதினெட்டு அத்தியாயங்களின் மூலமாக, வந்ததெல்லாம், உங்களுக்கு நம்பிக்கையை ஊட்டுவதற்குத்தான்!

ஆம், இயக்குகின்றன. ப்ருஹதாரண்யக உபநிஷத் தெளிவாகக் கூறுவது இதுவே: உங்கள் ஆசைகள் எப்படியோ, அப்படித்தான் உங்கள் எண்ணங்களும் இருக்கும். உங்கள் எண்ணங்கள் எப்படியோ, அப்படித்தான் உங்கள் தீர்மானங்களும் இருக்கும். உங்கள் தீர்மானங்கள் எப்படியோ அப்படித்தான் உங்கள் செயல்கள் இருக்கும். உங்கள் செயல்கள் எப்படியோ, அப்படியே நீங்கள் உருவாகிறீர்கள்.

ஆசைகள், நம் விழிப்பற்ற மனத்தில் இருந்தாலும், நம்மால் அணுக முடியாகதாகவும் காண முடியாகதாகவும் இருந்தாலும், குருவானவர் இதைக் கண்டுபிடித்துவிடுகிறார்.

இயற்கையின் விதி, நம் நிறைவேறாத ஆசைகளை நம்மை இயக்குகிறது. நம் கடந்தகால கட்டுறு மனப்பாங்கே இந்த ஆசைகளை உயிர்ப்பிக்கிறது. அவை நம் விழிப்பற்ற மனத்தில் இருந்தாலும், நம்மால் அணுக முடியாததாக இருந்தாலும், அவையே, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவுசெய்கின்றன. நம்மால் இதைக்காண முடியாது, ஆனால், குருவானவர் இதைக் கண்டுபிடித்துவிடுகிறார். அதனால்தான் கிருஷ்ணர் இந்தத் துணிச்சலான அறிக்கையை விடுக்கிறார்.

இவையெல்லாமே உங்கள் மனத்திலிருந்துதான் துவங்குகின்றன. மனம்தான் ஆசைகளையே உருவாக்குகிறது. மனம்தான் ஸம்ஸ்காரங்களையே உருவாக்கி, அவற்றைச் சேமித்தும் வைத்துக்கொள்கிறது. நீங்கள், உங்கள் மனத்திற்குத் தலைவணங்க மறுக்க முடியும். தொடர்ந்து உங்களைக் கட்டுப்படுத்தி வரும் ஸம்ஸ்காரங்களை நீங்கள் ஏற்றுக்கொள்ளாமல், அவற்றுக்கு உங்கள் மறுப்பைத் தெரிவிக்க முடியும்.

அந்த ஸம்ஸ்காரங்களையும் கரைத்துவிடவும் முடியும்! நமது முதல் நிலையாகிய ஆனந்த ஸ்புரண தியான முகாமிலும், அடுத்து, நித்யானந்த ஸ்புரண தியான முகாமிலும் முறையே அந்த ஸம்ஸ்காரங்களைப் பெருமளவில் குறைப்பதற்கும், அவற்றை நீக்கிவிடுவதற்குமான, தியான நுட்பங்களைக் கற்றுத்தருகிறோம். அதற்கடுத்த தியான முகாமான நித்ய தியான சிகிச்சையாளர் வகுப்பில், ஸம்ஸ்காரங்களை, தொடர்ந்து கரைப்பதற்கான நுட்பங்களைக் கற்றுத்தருகிறோம். கிருஷ்ணர், கீதையில் பேசியுள்ளவற்றின் அங்கமே, விரிவே இந்தத் தியான நுட்பங்கள்.

எல்லா தியான நுட்பங்களுமே உங்களை நிகழ்காலத்துக்குக் கொண்டுவந்து விடுகின்றன. நிகழ்காலத்தில் இருக்கும்பொழுது, உங்களுடைய எதிர்காலத்தைப் பற்றிய கற்பனைகளின் மேல் பற்றுதலைத் துறந்துவிடுகிறீர்கள். உங்களுடைய செயல்களின் அடிமையாக இருப்பதிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்கிறீர்கள். இது மட்டுமே, உங்களை தளைகளிலிருந்து விடுவிக்கும் பாதையில் வழிநடத்திச் செல்கிறது.

நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும்பொழுது, உங்களுடைய எதிர்காலத்தைப் பற்றிய கற்பனைகளின் மேல் கொண்டுள்ள பற்றுதலைத் துறந்துவிடுகிறீர்கள்.

குருவிடம் சரணடைவதும், பிரபஞ்சத்தினிடம் சரணடைவதும், உங்கள் கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால கர்மங்கள், வாசனைகள் மற்றும் ஸம்ஸ்கார தளைகளிலிருந்து உங்களை விடுவிக்கும் இறுதி நுட்பம்.

நான், எனது நித்ய தியான சிகிச்சையாளர்களிடம் சொல்வது இதுவே: ஒரு நபருக்கு தியான சிகிச்சை அளிக்கும்போது, நீங்கள், அந்த நபர் குணமடைந்துவிட வேண்டும் என்று பிரார்த்தனை செய்யக்கூடாது, அப்படிச் செய்யவும் முடியாது.

சிகிச்சைபெறும் நபருக்கு நேர்மறையான ஊக்கமூட்டும் வார்த்தைகள் தேவைப்பட்டால், நீங்கள் சொல்ல வேண்டியதெல்லாம் இதுவே: 'எது நல்லதோ அது நடக்கட்டும்!' அதுவே போதுமானது.

பிரபஞ்சத்திற்கு, தன்னுடைய சக்தியை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானிப்பதற்குரிய புத்திசாலித்தனம் இருக்கிறது, சிகிச்சையளிப்பவருக்கு அது இல்லை. சிகிச்சையளிப்பவர் என்பவர் நோயாளியை, அந்தக் குணமளிக்கும் சக்தியுடன் இணைக்கும் ஒரு கருவியாக மட்டுமே இருக்கிறார்.

உதவி கோரி என்னிடம் வரும் மக்களிடம், நான் பொதுவாக இரண்டு செய்திகளில் ஒன்றைச் சொல்வேன். வெறும் பொருள், ஆரோக்கியம், செல்வம் இவற்றைக் கோரி வருகிறவர்களிடம், நான் சொல்வது: ''ஆனந்தேஸ்வரரிடம் உங்களுக்காகப் பிரார்த்திக்கிறேன்!''

உண்மையான தேடலுடன் என்னிடம் வருகின்றவர்களிடத்திலும், மற்றும் இருப்பு நிலையில் என்னுடன் தொடர்பு கொண்டிருக்கும் எனது சீடர்களிடமும் பக்தர்களிடமும் நான் சொல்வது: ''நான் பார்த்துக்கொள்கிறேன்!''