KAILASA Library/பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)/18.62 பரத குலத்தோன்றலே, அவனிடத்தே முழுமையாக சரணடைந்துவிடு. அவனுடைய கருணையால் நீ மேலான அமைதியையும் அழியா வீடுபேறும் அடைவாய்.Sign in
பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)

18.62 பரத குலத்தோன்றலே, அவனிடத்தே முழுமையாக சரணடைந்துவிடு. அவனுடைய கருணையால் நீ மேலான அமைதியையும் அழியா வீடுபேறும் அடைவாய்.

கிருஷ்ணர் இப்பொழுது தம் வழிமுறையை மாற்றி, அர்ஜுனனுக்கு அனுபவத்தைத் தர ஆரம்பிக்கிறார். அவர், என்றென்றும் அழியா அந்த விழிப்புணர்வை வெளிப்படுத்தி, அர்ஜுனனை விழிப்புணர்வு நிலையிலும் ஞான அனுபவத்திலும் ஆழ்த்துகிறார்.

நீங்கள் இப்பொழுது ஒருசில நிமிடங்களுக்கு, உங்கள் தலைக்குள் ஓடும் எண்ணங்களில் இருந்தும், கருத்துகளில் இருந்தும் விலகி, தளர்வாக, நிம்மதியாக அமைதியாக இருங்கள். கிருஷ்ணருடைய கருணையால் அர்ஜுனனுக்குக் கிடைத்தது உங்களுக்கும் கிடைக்கும் சாத்தியம் இருக்கிறது.

வாழ்ந்தாக வேண்டுமென்கிற உள்ளுணர்ச்சியினாலும், உடைமைகளைச் சேர்க்க வேண்டும் என்ற உள்ளுணர்ச்சியினாலும்தான் அதைத் தவறவிட்டுக் கொண்டிருக்கிறோம்.