குருவின் நினைவே, ஆனந்தக் கண்ணீரை வரவழைத்துவிடும்
இரண்டாவது வகை சரணாகதி, இதய பூர்வமாகச் செய்யும் சரணாகதி. தாங்கள் இந்த ஆசிரமத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பிய பிறகும், என்னைத் தொடர்ந்து நினைவுகொள்வது எப்படி என்று சிலர் கேட்பார்கள். நான் அவர்களிடம் சொல்வதுண்டு, ''நான் உங்களுடைய குரு என்றால், உங்களுக்கு என்னை மறப்பதுதான் கடினமாக இருக்கும், உங்களுக்கு என்னை ஞாபகத்தில் வைத்துக்கொள்வது ஒரு பிரச்சினையாக இருக்காது. என்னை மறப்பதுதான் பிரச்சினையாக இருக்கும்.''
குருவைப் பற்றிய நினைவே உங்களின் இதயத்தை உருகச் செய்யும். நீங்கள் குருவின் முன்னிலையில் இருக்க வேண்டிய அவசியமில்லை; அவருடைய படத்தைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை; அவருடைய குரலைக் கேட்க வேண்டிய அவசியமில்லை; அவரைப் பற்றிய நினைவே போதும், உங்கள் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிய ஆரம்பிக்கும். இது ஒரு சக்திமிகுந்த சரணாகதி நிலை.
இராமகிருஷ்ணர் சொல்கிறார், ''உங்கள் இஷ்ட தேவதையின் அல்லது உங்கள் கண்ணீரில் உறுதியாகத் இதுவே உங்களின் கடைசி பிறவி!''
ஒரு ஜ்ஞானகுரு சொல்வது அனைத்துமே சத்தியம்! சரணாகதி, அவ்வளவு சக்திவாய்ந்தது, சரணாகதி, செய்துவிடும். இதுவே பூக்தியின் சக்தி.
கிருஷ்ணர், தம்மை அடைவதற்கான சுலபமான வழி சரணாகதி என்று மீண்டும் சொல்கிறார். மீண்டும் சரணாகதி, உங்களை பூரணமடையச் செய்துவிடும்.
கற்பது பற்றிய கவலை வேண்டாம்; சடங்குகளைச் செய்வது பற்றிய கவலை வேண்டாம்; நுட்பங்களை பற்றியெல்லாம்கூட கவலைப்பட வேண்டாம். அவர் சொல்கிறார், ''என்னிடம் மட்டுமே பக்திகொண்டிரு, நான் உன்னைக் காப்பேன்.''
மூன்றாவதும், கடைசியுமான சரணாகதி என்பது நமது புலன்களைச் சரண்செய்வது. புலன்களின் சரணாகதி நிகழும்போது, ஜ்ஞானம் நிகழ்கிறது ; ஜ்ஞானம் நிகழ்கின்றபோது, புலன்களின் சரணாகதியும் நிகழ்ந்துவிடுகிறது.
மஹாபாரதப் போருக்குப் பின்பு ஒருசமயம், அர்ஜுனனும் கிருஷ்ணரும் ஒய்வாக நடந்துகொண்டிருந்தபோது, கிருஷ்ணர், ஒரு மரத்தின் கிளையைச் சுட்டிக்காட்டி, "அதோ அந்தப் பச்சை நிறக் காகத்தைப் பார்!" என்றார்.
அதற்கு அர்ஜுனன் சொல்கிறார், ''ஆமாம், கிருஷ்ணா, நானும் அந்தப் பச்சை நிறக் காகத்தைப் பார்க்கிறேன். ''
உடனே கிருஷ்ணர், "முட்டாளாக இருக்கிறாய் நீ! ஒரு காகம் எப்படிப் பச்சை நிறத்தில் இருக்க முடியும்?" என்று கேட்கிறார்.
அர்ஜுனன் கூறுகிறான், "கிருஷ்ணா, நீர், அங்குப் பச்சை நிறக் காகத்தைப் பார்க்கச் சொன்னபோது, நான் உண்மையிலேயே அங்கு ஒரு பச்சை நிறக் காகத்தைத்தான் பார்க்கிறேன்."
கிருஷ்ணர் எதை எப்படிச் சொன்னாரோ, அப்போது அர்ஜுனனின் கண்களும் அதை அப்படியேதான் பார்த்தன. குருவிடம் அர்ஜுனனின் சரணாகதி அந்தளவுக்கு உறுதியாக இருந்தது. இதுவே, சரணாகதியின் இறுதி நிலை.
'ஒரு சுதந்திரம் கிடையாது' - என்னுடைய இந்தக் கூற்று உங்களுக்கு ஆச்சரியமளிக்கலாம்.
அவர், பிரபஞ்ச சக்தியிடம் முழுமையாக சரணடைந்திருப்பதால், அவருடைய ஒவ்வொரு அசைவும் வழிநடத்தப்படுகிறது. ஆனால், சாதாரண மக்களைப் பொறுத்தமட்டில், அவர்கள் விரும்பியதையெல்லாம் செய்ய அவர்களுக்குச் சுதந்திரம் இருக்கிறது.
விதியைப் பற்றிய உங்களுடைய பேச்சுக்கள் அனைத்துமே அர்த்தமற்றவை. நீங்கள் விரும்பியதைச் செய்ய உங்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு. ஆனால், நீங்கள் விரும்பியதையெல்லாம் செய்துவிட்டு, அதனால் வரும் துன்பங்களுக்கு, உங்களின் விதிதான் காரணம் என்றும் சொல்லிக்கொள்வீர்கள்! ஆனால் நீங்கள் எது செய்தாலும் அது உங்களின் விருப்பத்திற்குட்பட்டதுதான்.
என்னைப் பொறுத்தமட்டில், சுயமாக எதையும் செய்வதற்கு எனக்கு அதிகாரம் கிடையாது. நான் வெளிப்படுத்தும் ஒவ்வொரு வார்த்தையும் செய்கையும், பிரபஞ்ச சக்தியான பராசக்தியின் கட்டளையால்தான்!
அர்ஜுனனுக்கும், மற்ற எல்லாப் பக்தர்களுக்கும் அவர் அருளும் அறிவுரை: சரணடையுங்கள்!' என்பதே! இது ஒன்றுதான் இறுதி வழி, அறுதி தீர்வு.