உங்களிடம் இல்லாதனவற்றை துறந்துவிடுங்கள், அது போதும்
முதலில் நாம், சரணாகதி என்னும் சொல்லின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வோம், இந்தச் சொல்லே மக்களைப் பயமுறுத்துகிறது. சரணாகதி நமக்கு எதிரானது கிடையாது. நாம் எல்லா வகையான லாபங்களையும் அடையத்தான் போகிறோம் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். வேறு சரியான வார்த்தை கிடைக்காததால், இந்த வார்த்தையைப் பயன்படுத்த வேண்டியதாயிருக்கிறது.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், முதலாவதாக நம்மிடம் சரணாகதி செய்வதற்கென மதிப்புமிக்கதென்று எதுவுமே இல்லை. சரணாகதி செய்ய நம்மிடம் ஏதோ வைத்திருக்கிறோம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், சரண் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே, நம் கண்களைத் திறந்து 'இருப்பதெல்லாம் தெய்விகமே' என்று பார்ப்பது மட்டுமே.
சரணாகதி என்பது மூன்று வகைப்படும்.
- முதல்வகை, நமது பட்டறிவை சரணாகதி செய்வது. பெரும்பாலானேருக்கு, முக்கியமாகப் பட்டறிவாளர்களுக்கு இது மிகவும் எளிது. உங்களுடைய அஹங்காரம் கீழே விழவேண்டுமானால், அதற்குமுன் அது நன்கு பழுத்திருக்க வேண்டும்.
நிறைய தகவல்களை உங்கள் கனமான தலைக்குள் ஏற்றி ஏற்றி, உங்கள் தலை மேலும் பெருத்துக் கனத்துவிடும் நிலையில், உங்களுடைய அறிவே உங்களுக்கு ஒரு போதையூட்டுவதாக மாறி, கர்வம் தலைக்கேறி நிற்கும். அப்போதுதான் நீங்கள் சரணடைவதற்கு அதாவது உங்கள் பட்டறிவு முதிர்கிறது.
வாழ்வின் அந்தக் அந்தக் கட்டத்தில் யாராவதொருவர், 'பட்டறிவு' என்பது
நன்கு பழுக்க வேண்டும்.
வெறும் குப்பையே என்று சொல்லி, அதை நிரூபித்துவிட்டால், அஹங்காரம் கொண்ட எந்தவொரு முதிர்ந்த பட்டறிவாளரும் உடனே உண்மையை ஒப்புக்கொண்டு விடுவார்.
தாங்கள் பெரும் அறிவாளிகள் என்று பாசாங்குசெய்து கொண்டிருக்கும் அரை வேக்காட்டு இந்த உண்மையைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கும். ஏனெனில், அவர்கள் தாம் கற்றுக்கொண்ட அறிவெல்லாம் வெறும் மாயையே என்று நம்புவதில்லை.
நான் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும் பொழுது. அந்தக் 'கேள்விக்குப்' பதிலளிப்பதில்லை, 'கேட்டவருக்கே' பதிலளிக்கிறேன்.
இது நிகழும்போது, அந்த மனிதர், தாம் கற்றறிந்த அறிவையெல்லாம், தமக்குத்
ஆன்மிகத் தேடலுள்ளவர்களும், ஆன்மிக வாடிக்கையாளர்களும் பல கேள்விகளைச் சுமந்து கொண்டு என்னிடம் வருவார்கள். அவர்களுள் பலர், என் முன் சிறிதுநேரம் அமர்ந்திருந்த பிறகு, ''இப்போது என்னிடம் எந்தக் கேள்விகளும் இல்லை, ஸ்வாமிஜி!'' என்று மிகுந்த ஆச்சரியத்தோடு சொல்வதுண்டு. நான் அவர்களுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்லும் சிரமத்தை எடுத்துக்கொள்வதில்லை. அந்த மாதிரி கேள்விகளுக்கு யாருமே பதில் சொல்லவும் முடியாது.
நான் செய்வதெல்லாம், அவர்களுக்குள் மேலும் பல புது வார்த்தைகளைத் திணித்துவிடுவதுதான். அவர்களும் அந்தப் புது வார்த்தைகளோடு போராடிப் பார்த்துவிட்டு, இறுதியில் தாங்களாகவே தங்கள் கேள்விகளுக்குப் பதில்களைக் கண்டுபிடித்துக்கொள்வார்கள்! ஒருசில கேள்விகளுக்குப் பதிலளித்தாலே போதும், மற்ற கேள்விகளெல்லாம் தானாகவே கீழே உதிர்ந்துவிடும்.
நான் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும் பொழுது, அந்தக் 'கேள்விக்குப்' பதிலளிப்பதில்லை, 'கேட்டவருக்கே' பதிலளிக்கிறேன். நான், அந்தக்
குறிப்பிட்ட நபருக்காகத்தான் பேசுகிறேன், அவருடைய கேள்விக்கு அல்ல. நான் அவருடைய இருப்பு நிலையினுள்ளே பார்த்துவிட்டு, பிறகுதான் தீர்வைச் சொல்கிறேன்.