பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)
ஒழுக்கம் ஒரு முழுமையல்ல
- 18.41 எதிரிகளை வாட்டுபவனே, அவரவர்கள் செய்கின்ற வேலைகளின் அடிப்படையில், மனிதர்கள் ப்ராவற்றணர்கள், க்ஷ்ரியர்கள், வைச் யர்கள் மற்றும் சூத்ரா்கள் எனப் பிரிக்கப்பட்டனர்.
- 18.42 அமைதி, ஒழுக்கம், எளிமை, சகிப்புத்தன்மை, நேர்மை, அறிவு, ஜ்ஞாரம் மற்றும் இறை நம்பிக்கை – இவை ப்ராவற்மணர்களின் இயல்புகளாக இருக்கின்றன.
- 18.43 வீரம், வேகம், திடம், திறமை, போர்த்திறம், தலைமைப் பண்பு மற்றும் பெருந்தன்மை போன்ற பண்புகளால் க்ஷ்ரியன் வகைப்படுத்தப்படுகிறான்.
- 18.44 விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் வியாபாரம் போன்றவற்றில் திறமை உடையவர்களாக இருப்பவர்கள் வைச் யர்கள் எனப்படுகின்றனர். உடல் உழைப்பில் திறமை உடையவர்கள் சூத்ரா்கள் எனப்படுகின்றனர்.
- 18.45 ஒருவன், தனக்கு இயல்பாக அமைந்த வேலைகளை பக்தியுடன் செய்வதன் மூலம், நிறைநிலையை அடைகிறான். தனக்கு இயல்பாக அமைந்த வேலைகளைச் செய்வதன் மூலம், ஒருவர் எவ்வாறு நிறைநிலையை அடைய முடியும் என்பதைக் கூறுகிறேன் கேள்!
- 18.46 யாரிடமிருந்து உயிரினங்கள் தோன்றினவோ, யாரால் இந்த பிரபஞ்சமும் வியாபிக்கப்பட்டிருக்கிறதோ அந்த ஒப்புயர்வற்ற ஈச்வரனை, தன்னுடைய சுய கர்மத்தால் தொழுவதன் மூலம் ஒருவன் உன்னத நிலையை அடைகிறான்.
- 18.47 ஒருவன், மற்றொருவனின் வேலையைச் சிறப்பானது என்று ஒப்புக் கொண்டு, அதை எடுத்துச் சிறப்பாகச் செய்வதைக் காட்டிலும் தன்னுடைய சொந்த இயல்புக்கேற்ற செயலில் ஈடுபடுவதே சாலச் சிறந்தது. அதை மிகச் சிறப்பாகச் செய்ய முடியாவிட்டாலும்கூட! அவரவருக்கு இயல்பாக விதிக்கப்பட்ட கர்மங்களைச் செய்வது, பாவ விளைவுகளை ஏற்படுத்துவதில்லை.
- 18.48 குந்தியின் புதல்வனே, ஒருவன் தன்னுடைய இயல்பால் விளைந்த செயல்களை, அந்தச் செயல் பல குறைகளைக் கொண்டதாயிருப்பினும் விட்டுவிடக்கூடாது. ஏனெனில், நெருப்பைப் புகை சூழ்வதுபோல, ஒவ்வொரு செயலையும் ஏதாவது ஒரு குறை சூழ்ந்துள்ளது.
ச்' ரேயாந் ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத் ஸ்வனுஷ்டிதாத்' என்கிறார் கிருஷ்ணர்.
பண்டிதர்கள் என்று சொல்லப்படுகிற மேதாவிகளே, கீதையின் வேறு எந்த ஸ்லோகத்தை விடவும், இந்த ஸ்லோகத்தைப் பொருத்தமற்ற வகையில் மொழிபெயர்த்து இருக்கிறார்கள். படிக்காதமக்களும், வேத கலாச்சாரத்தைப் பழிப்பதற்கு இந்த ஸ்லோகத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
சிலா், இந்து ஜாதி பாகுபாட்டை நியாயப்படுத்திக்கொள்ள அதைப் பயன்படுத்துகின்றனர்.
மற்றவர்கள், ''இவர் எப்படி ஒரு கடவுளாயிருக்க முடியும் ? ஜாதீய அமைப்பை சமுதாய அமைப்புகளைப் பொறுத்துக்கொண்டு, அவற்றுக்கு ஆதரவளிக்கும் இந்நூல், கடவுளின் நூலாக எப்படி இருக்க முடியும்?' என்று சொல்வதன்மூலம், கீதையையும் கிருஷ்ணரையும் இழிவுபடுத்துகின்றனர்.