இழந்த பொக்கிஷங்களை மீண்டும் பெற்றிடுவோம்
ஆன்மிகம் ஒரு எளிதான விஷயமல்ல. வேத கலாச்சாரத்தில், குழந்தைகள் இளம் பிராயத்திலிருந்தே குருகுலம் பள்ளிகளில் ஆன்மிக சூழ்நிலையிலேயே வளர்க்கப்பட்டார்கள். அவர்கள் இளவயதிலேயே, தங்கள் மனம் மற்றும் புலன்களை அடக்கியாள்வதற்கும், 'தன்னை அறிதல்' என்பதின்மீது கவனம் செலுத்துவதற்கும் கற்றார்கள். புலனின்பங்களைக் கடந்த வேறொரு சிறந்த ஆனந்தம் இருக்கிறதென்பதை தங்கள் குருமார்களைக் கண்டே புரிந்துகொண்டார்கள். இது அவர்களுக்குத் துணிச்சலைத் தந்தது. ஊக்கத்தைத் தந்தது.
குருகுலக் கல்வியில் குழந்தைகள் புலனின்பங்களைக் கடந்த வேறொரு சிறந்த ஆனந்தம் இருக்கிறதென்பதை தங்கள் குருமார்களைக் கண்டே புரிந்துகொண்டார்கள்.
இன்றைய கல்விமுறையானது, ஒவ்வாததாக உள்ளது. படையெடுத்து வந்த முகலாயர்களும், காலனி ஆதிக்கம் செலுத்திய ஆங்கிலேயர்களும் நம் வேத கலாச்சாரத்தை, அதிலும் முக்கியமாக குருகுலத்தை அழித்துவிட்டார்கள்.
இது நிகழ்வோ அல்லது ஒரு விபத்தோ அல்ல;
அது வேண்டுமென்றே வகுக்கப்பட்ட திட்டம். ஒளரங்கசீப், அவர்களுடைய வீரர்களுக்கு, இந்துகளை இஸ்லாமுக்கு அப்படி மாற மறுப்பவர்களையெல்லாம் கொன்றுவிடுமாறும் மேலும் அவன், மாற்றத்திற்கு முயற்சி செய்யும்படியே அறிவுறுத்தினான்.
ஏனென்றால், மதம் மாற்றம் மட்டுமே தன்னுடைய மதத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்பதையும், கொல்வது என்பது இந்து மகத்தினரின் எண்ணிக்கையை மட்டுமே குறைக்கும் என்பதையும் நன்கு தெரிந்து வைத்திருந்தான்.
ஆங்கிலேயர்கள் அதிபுத்திசாலித்தனத்துக்கு முக்கிய காரணமாக குருகுலக் கல்வி முறையே விளங்குகிறது என்பதையும், குருகுலக் கல்வி அழிந்தால் மட்டுமே தங்களால் ஆள முடியும் என்பதையும் கண்டறிந்து கொண்டு, அதைக் குறிவைத்து முற்றிலும் அழித்தேவிட்டார்கள்.
இன்று நம்மிடையே இருப்பது - படித்த, ஆனால், புரிந்துணர்தல் இல்லாத ஒரு இந்துக்களின் கூட்டமே!
அவர்களுக்கு நம் வேத கலாச்சாரத்தின் சிறந்த தெரியவில்லை. எதுவுமே சடங்கு இல்லையென்று எண்ணுகிறார்கள். இந்து தத்துவவாதிகளும் படித்த கலாச்சாரத்தைப் பற்றி அறியாதவர்களாய் இருக்கிறார்கள்; அதனால், அவர்களும் இப்படிப்பட்ட போக்கையே ஆதரிக்கிறார்கள்.
ஆன்மிகத்திற்கும், இந்த சடங்கு சம்பிரதாயங்களுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிய அறிவை நாம் இழந்துவிட்டோம்.
அர்த்தங்கள் புரிந்துகொண்டு செய்யப்படும் சடங்குகளே ஆன்மிகத்தின் அடித்தளமாகும்.
நாம் புலனின்பங்கள் மட்டுமே நமக்கு ஒருபொருட்டாகத் தெரியும். புலனுறுப்புக்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அவையே, நம் வெளி உலகத்திற்கான சாளரங்கள் (ஜன்னல்கள்). அவை, வலியிலிருந்து விலகி ஒடுவதற்கும், இன்பங்களைத் தேடித் துரத்தி ஓடுவதற்கும் பழக்கப்படுத்தப்பட்டிருக்கின்றன.
நாம் தமஸ் மனநிலையில் இருக்கும்பொழுது, நாம் அறியாமையின் ஆழத்திலிருக்கிறோம் என்பதைக்கூட அறியமாட்டோம். கிருஷ்ணர், தமஸ் மனநிலை மனிதரைப் பற்றி மிக நுணுக்கமாக விவரிக்கிறார். அப்படிப்பட்ட ஒரு மனிதரின் நிலையை விவரிக்கும்பொழுது, விஷம் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. தமஸ் மனிதர், போதைக்கு அடிமையானவர்போல இருப்பார் என்றே சொல்கிறார்.
ரஜஸ் மனிதராவது இன்பங்களை அனுபவிக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறார். பின்னர்தான் துக்கப்படுகிறார்.
ஆனால், தமஸ் மனிதருக்கு மகிழ்ச்சி என்பது ஒருபோதும் இருக்காது. அவர் தாம் துன்பப்படுகிறோம் என்பதுகூட தெரியாமலேயே துன்பப்பட்டுக் கொண்டிருப்பார். அவருடைய மதிமயக்கம் மிக ஆழமானது. அதனால்தான் அவர், தம்முடைய துக்கங்களை மற்றவர்களுக்கும் எந்தவித மனச் சஞ்சலமுமின்றி கொடுக்கிறார். இப்படித்தான் அறியாமையில் இருக்கும் பலரும் தலைவா்களாக ஆகிறார்கள்.