குழந்தைகளின் உள்ளாற்றலே, அவர்களின் 'வர்ண' தர்மத்தை நிர்ணயித்தது
முதலில், ஜாதி அமைப்புமுறை எப்படித் தோன்றியது, காலப்போக்கில் அது எப்படி களங்கப்படுத்தப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வேத கலாச்சாரப்படி, சிறு குழந்தைகள், குருகுலக் கல்விக்காக, ஒரு குருவினுடைய பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டனர். குருமார்கள், இருந்தார்கள். அவர்களுடைய குழந்தைகளும், அதே குருகுலத்தில், மற்றவர்களோடு இணைந்தே அனைத்துக் கற்றனர். அப்படித்தான் அர்ஜுனன், குழந்தைகளுக்குமே துரோணரின் மகன் அஸ்வத்தாமனுடன் பதினான்கு வயதுவரை, சேர்ந்து வளர்ந்தார். ஒரே மாதிரியான கல்வியே பயிற்றுவிக்கப்பட்டது.
எல்லாக் குழந்தைகளுக்கும், ஏழாவது வயதில், உள்ளுலக புத்திசாலித்தனத்தை விழிப்படையச் செய்யும் காயத்ரி மந்திர தீட்சை அளிக்கப்பட்டது.
அனைத்துக் குழந்தைகளுக்குமே பதினான்கு வயதுவரை, ஒரே மாதிரியான கல்வியே பயிற்றுவிக்கப்பட்டது. அதன் பிறகு, அவர்களுக்கு எந்தவிதமான கல்வி கற்றுக்கொடுக்கப்பட வேண்டும், எந்தெந்தப் பயிற்சிகள் தரப்பட வேண்டுமென்பதை குருமுடிவுசெய்வார். பதினான்கு வயதிற்குள், அவர்களுக்குள் நிகழும் உணர்வுமாற்றத்தையும், ஆன்மிக அனுபவங்களையும் கருத்திற்கொண்டே, குரு அதை முடிவுசெய்தார்.
குரு, ஒவ்வொரு குழந்தையையும், அதனுடைய முன்னேற்றங்களையும் உன்னிப்பாகக் கவனிப்பார். குழந்தையினுடைய குணத்தையும், கற்றுக்கொள்ளும் திறனையும், ஆர்வங்களையும் முழுமையாகத் தெரிந்துகொள்ள ஜோதிடத்தையும் பயன்படுத்திக்கொள்வார்.
குரு, இந்த வைத்து, அந்தக் குழந்தைகளின் உள்ளாற்றலைக் கொண்டு அவர்களை வருங்கால அறிஞர்கள், தலைவர்கள், பணியாளர்கள் என வகைப்படுத்தி அவரவருக்கேற்ற தனிப்பட்ட பயிற்சிகளை அளித்தார்.
இந்த வகைப்படுத்தலுக்கும், பயிற்சிமுறைகளுக்கும் ஒருவரின் பிறந்த குலமோ, பரம்பரையோ முன்னுரிமையாகக் கொள்ளப்படவில்லை.
நிச்சயம், ஒரு அறிஞரின் குழந்தைக்கு அதனுடைய மரபணு வழியாகவும், விருப்பப்படியும், அதுவும் ஒரு அறிஞராகவே ஆவதற்கான வாய்ப்புகள் இருந்தன. ஆனாலும், இந்த வாய்ப்பு அந்தக் குழந்தையினுடைய கட்டாய வாய்ப்பாக இல்லை. அப்படி இருந்திருக்குமானால், ஒரு ப்ராஷ்மணரான துரோணர் ஒரு போர் வீரராக ஆகியிருக்க முடியாது!
கல்வி கற்பதிலுள்ள ஆர்வம், இறை நம்பிக்கை, அறிவின் திறம் மற்றும் ஸாத்விக குண இயல்புகளும்கொண்ட குழந்தைகள் 'கல்வியாளர்'களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு வேதங்கள் கற்பிக்கப்பட்டன; அவர்கள்
கல்வி கற்பதிலுள்ள ஆர்வம், இறை நம்பிக்கை, அறிவின் திரம் மற்றும் ஸாத்விக குண இயல்புகளும் கொண்ட குழந்தைகள் 'கல்வியாளர்'களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
துணிவு வெளிப்படுத்தியவர்களுக்குப் போர்க்கலையைக் கற்பித்தார்கள்; அவர்கள் க்ஷத்ரியர்களானார்கள்.
விவசாயம் மற்றும் வாணிபத்துறையில் ஈடுபாடு காட்டியவர்களுக்கு, அதற்குரிய கல்வி கற்பிக்கப்பட்டது; அவர்கள் வைச் யா்கள் ஆனார்கள்.
ஸேவை புரிவதிலும், உடலுழைப்பிலும் ஈடுபாடுகொண்டவர்களை சூத்ராகளாக வகைப்படுத்தினர்.
எந்தவொரு வழியானதும் ஒன்றைவிட மற்றொன்று உயர்ந்ததாகவோ தாழ்ந்ததாகவோ கருதப்படவும் இல்லை. குருகுலத்தின் தேர்வுமுறைகளும் பயிற்சிமுறைகளும் விஞ்ஞான பூர்வமானவையாகவும் பாரபட்சமற்றவையாகவும் இருந்தன. ஒவ்வொருவரும், தங்கள் திறன்களை வெளிப்படுத்தியும், தங்களுக்குரிய மோக்ஷ்திற்கான பாதைக் கேற்றவாறும், வாழ்வை வாழ்ந்ததால், இம்முறை சமூதாயத் திற்கு மிகவும் பயனளித்தது.
இதற்காகத்தான் கிருஷ்ணர் சொல்கிறார்: ஒருவர், மற்றவருக்குரிய கடமைகளை, வேலைகளைச் சிறந்த முறையில் செய்வதைக்காட்டிலும், தமக்கு அமைந்த சொந்த வேலைகளைச் சிறப்பற்று செய்தாலுங்கூட, அதுவே சிறந்தது.
மற்றொருவரின் வேலையை எடுத்து, அதைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடிவது என்பது ஒருவருக்குச் சாத்தியமானதுதான். ஒரு ப்ராஹ்மணரால் ஒரு வைச்யாக, வியாபார கணக்கு வழக்குகளைச் சிறப்பாகக் கையாண்டு அதில் வெற்றிபெற முடியும். ஆனாலும் அவருக்கு ஒரு தொழிலதிபராக இருப்பதற்குரிய, வைசீஃயருக்குரிய இதயமோ மூளையோ இருப்பதில்லை.
இந்த அமைப்பு, தனக்கேற்ற ஒரு துறையைத் தேர்வுசெய்துகொள்ள குழந்தைக்கு வாய்ப்பளித்தது ; இது, குருவானவர்மட்டுமே தேர்வுசெய்யும் ஒரு ஒருவழிப் பாதையாக இல்லாமலும் இருந்தது. அந்தக் குழந்தைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அதற்கான துறையைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையில், அதுவும் பங்குபெறுவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டது.
ஏனெனில், அந்தக் குழந்தையின் எதிர்காலமே குருகுலத்தில்தான் வடிவமைக்கப்பட்டது.
உள்ளார்ந்த தன்மையை வெளிப்படுத்தவும், முடிவுகளை எடுக்கவும் முடிந்தது.
குறிப்பாக, பாரதத்தில், இன்றைய குழந்தைகளில் பலர் இல்லை. ஏனெனில், அவர்கள் தாங்கள் விரும்பிய துறையில் படிக்க முடியாமல், பெற்றோர்கள் படிக்க இருக்கிறார்கள்.
விவசாயம் மற்றும் வாணிபத்துறையில் ஈடுபாடு காட்டியவர்களுக்கு, அதற்குரிய கல்வி கற்பிக்கப்பட்டது; அவர்கள் வைச் யா்கள் ஆனார்கள்.
குழந்தைக்கு இருக்கும் வாய்ப்புகளைப் பற்றி அதனிடம் விளக்கி, அதனுடைய திறமையைக் கணிக்க அக்குழந்தைக்கு உதவிசெய்து, அடுத்தகட்ட கல்வி மற்றும் பயிற்சிக்கான துறையைத் தோவுசெய்வதற்கும், அக்குழந்தைக்குப் பெற்றோர்கள்தான் உதவ வேண்டும். இதுவே பெற்றோர்களின் வேலை.
ஆனால், அதற்குப் பதிலாக அவர்கள், 'நீ ஒரு இன்ஜினியர் ஆகிவிடு. அப்போதுதான் கல்யாணத்தின்போது அதிக வரதட்சிணை குட்க முடியும்' என்றோ அல்லது 'அது, நான் படிக்க விரும்பிய பாடம்; அப்போது என்னால் படிக்க முடியவில்லை, ஆகவே, இப்போது நீ அதையே படி' என்றோ சொல்கிறார்கள்!
காலம் செல்லச் செல்ல, இந்தத் தேர்வு முறையும் பயிற்சி முறையும் சிதைக்கப்பட்டுவிட்டன. ப்ராஹ்மணராக இருந்தவர்கள், தங்கள் குழந்தைகளும் ப்ராஹ்மணர்களாகவே இருக்க வேண்டுமென்று விரும்பினார்கள். விரும்பினார்கள். மக்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, இந்த அமைப்பு முறையை மாற்றிவிட்டார்கள்.
இப்போது, வர்ணம் மற்றும் ஜாதி முறையானது, கல்விக்காகவும் வாழ்வியல் பயிற்சிக்காகவும்தான் என்ற நிலை மாறி, பிறப்பை மட்டுமே கருத்திற்கொண்டு திருப்திப்பட்டுக் கொள்ளும் சமுதாய அமைப்பாக மாறி விட்டது.
நமது ஜாதீய முறையை விமாசிக்கும் முன், உலகிலுள்ள ஒவ்வொரு சமுதாயமுமே, பல அடுக்குப் பிரிவுகளைக் கொண்டிருப்பதை அறிந்துகொள்ளுங்கள். கம்யூனிஸத்தில் வலியுறுத்தப்படுவதுபோல், கட்டாயப்படுத்தி சமத்துவம் புகுத்தப்பட்ட சமுதாயங்களெல்லாம் தோல்வியையே சந்தித்திருக்கின்றன.
பெருமை சேர்க்கும், நம் வேதப் பாரம்பரியம்
ஒவ்வொரு மனிதரும் தனித்துவம் மிக்கவரே. ஒரே தன்மையுள்ள மனிதர்கள் குழுக்களாகச் சேரும்பொழுது, பல அடுக்குகளும் பிரிவுகளும் தோன்றுகின்றன. நம் வேத கால பாரதத்தில், இந்தப் பிரிவுகள் திறமையையும் அறிவையும் அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டன. ஆனால், இந்தக் கால சமுதாயத்தில் பிரிவுகள், பணத்தையும், அதிகாரத்தையும் அடிப்படையாக வைத்தே உருவாக்கப்படுகின்றன. எது நல்லது ?
இந்த அறிவைப் இல்லாமலிருந்திருந்தால், வேதப் பொக்கிஷங்கள், பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே மறைந்து போயிருக்கும்.
மற்றவர்களுக்கு சேவை செய்வதிலும், உடல் உழைப்பிலும் ஈடுபாடு கொண்டவர்களை சூத்ராகளாக வகைப்படுத்தினர்.
உங்களுக்குத் தெரியுமா? இன்றும்கூட, சிதம்பரத்தில் ஒரு அறிஞர்களின் குழு இருக்கிறது. அதைப்போலவே இன்னும் மற்ற சில இடங்களில் உள்ள வேத விற்பன்னர்களும் அந்த வேத அறிவைப் பாதுகாப்பதற்கான பொறுப்பை, சிரத்தையுடன் மேற்கொண்டிருக்கின்றனர். அவா்கள் அந்த ஊரின் எல்லையைக்கூட தாண்டிச் செல்லாமல், அங்கேயே இதற்காகவே வாழ்ந்து வருகிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா ?
இந்த வேத அறிவை வரும் தலைமுறையினர்களுக்கு வழங்க வேண்டுமென்பதற்காகவே, அவர்கள் பல தலைமுறைகளாக, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, தங்கள் வாழ்க்கையை இன்று வரையிலும், தியாகம் செய்து வருகிறார்கள். வேறு யார் இதுபோல், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வெளிப்படுத்திய அறிவைக் காப்பாற்றுவதற்காக, ஒரு பத்து மைல் சுற்றளவுக்குள்ளேயே தங்கி, தங்கள் வாழ்நாள் முழுவதையும் கழிக்க முடியும் ?
அவர்களுக்கு இதில் எந்த லாபமும் இல்லை. இதற்காக அவர்களுக்கு யாரும் எந்தக் கூலியோ, சன்மானமோ தருவதில்லை. இதற்கு நன்றியாக நாம் என்ன செய்கிறோம் ? வெளிப்படையாக, அவர்களைக் கேலி செய்கிறோம், தூற்றுகிறோம், அவர்கள் வாழ்க்கைமுறையைப் பழிக்கிறோம்.
இந்த முறைகளைப் பழிக்கும் மக்கள், தங்கள் சுயநலத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் பணத்திற்காகவும் இவ்வாறு செய்கிறார்கள். இந்தப் பாரம்பரிய அறிவைப் பேணிப் பாதுகாக்க, அவர்கள் வேறெந்த மாற்றுவழிகளையும் சொல்லவில்லை. கண்டனத்தை மட்டுமே தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
நான் ப்ராம்மணன் அல்ல. ஆனால், ப்ராம்மணர்கள் என்னிடம் வந்து, எங்களை ப்ராம்மணர்கள் என்று மற்றவர்கள் சொல்லுவது, எங்களைச் சங்கடப்படுத்துகிறது என்று சொல்வார்கள். அவர்கள் நன்கு படித்தவர்களே. நான் அவர்களிடம் சொல்வதெல்லாம் இதுவே: உங்களுடைய கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் எண்ணி பெருமைப்பட்டுக்கொள்ளுங்கள். ப்ராம்மணர்கள் மட்டும் இல்லையென்றால், இந்த பாரம்பரியம் என்றோ அழிந்து போயிருக்கும்!
இந்தப் பாராட்டு, தங்கள் வேத அறிவைப் பாதுகாத்து, அதற்கு உண்மையாக வாழ்ந்து வரும் ப்ராம்மணர்களுக்கு மட்டும்தான். செல்வத்தின் கவர்ச்சிக்கு அடிபணிந்தவர்கள், ப்ராம்மணர்கள் என்று சொல்லிக்கொள்வதற்கே அருகதையற்றவர்கள்.
இங்குதான் வர்ணாசிரம முறை தோல்வியடைந்தது. ஒரு நல்ல விஞ்ஞான முறையாகவும், ஒரு நல்ல திறமைமிக்க முறையாகவும் இருந்த வழிமுறை, கடைசியில் அதிகாரப் பரிமாற்ற முறையாக கெட்டுப்போய்விட்டது. இதை நாம் சரிசெய்தே ஆக வேண்டும்.
உண்மையில் இன்றைய நாட்களில், ஒரு ப்ராம்மணர், தான் ஒரு ப்ராம்மணர் என்று சொல்லிக்கொள்வதில் எந்த நன்மையும் அடைவதில்லை. பாரம்பரியப்படி வாழ்கின்ற ஏழைகளாகவும், படுபவர்களாகவும்தான் இருக்கிறார்கள். தங்களுடைய திறமைகளை உபயோகித்து, தங்களை க்ஷத்ரியர்களாகவும் வைசியர்களாகவும் மாற்றிக்கொண்ட ப்ராம்மணர்கள் அதிகாரம், பணம், மரியாதை ஆகியவற்றை அடைந்து, மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். அங்கேயே அவர்கள் தொடருவதே நல்லது.
நல்ல சமுதாயம், எல்லா விஷயங்களையும் தன்னக்கே உள்ளடக்கிக்கொள்வதாக இருக்க வேண்டும்.
ஆனால், பிரச்சினை என்னவென்றால், இந்தச் சமுதாயமும் சமுதாய அமைப்பு முறையும், குறிப்பிட்ட மக்களுக்கே சலுகையளிப்பதாகவும் மாறியதுதான். அது, குறிப்பிட்ட சிலரை மட்டுமே ஏற்றுக்கொள்வதாகவும் மற்றவர்களை ஒதுக்குவதாகவும் உள்ளது.
நல்ல சமுதாயம், எல்லாரையும் உள்ளடக்கிக்கொள்வதாக இருக்க வேண்டும். இன்று, பாரதம் உட்பட எல்லா நாடுகளிலுமே, பணம் மற்றும் அதிகாரம் இருந்தால் மட்டுமே நாம் மதிக்கப்படுகிறோம். இதை எதிர்த்து யாராவது போராடுகிறோமா ? இல்லையே! ஒரு மனிதனை மதிப்பதற்கு, பணத்தை மட்டுமே அளவுகோலாகக் கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தை வளர்ச்சியடைந்த சமுதாயம் என்று எப்படி நாம் சொல்ல முடியும் ?
பணத்தை மட்டுமே அளவுகோலாகக் கொண்டால், நான் மட்டும் பாரதத்தில் பிறக்காமல், வேறெந்த நாட்டிலாவது பிறந்திருந்தால் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகியிருப்பேன்.
பத்து வருடங்களுக்கு மேலாக நான் நாடோடியாக இருந்தேன்! ஒன்பது வருடங்கள், பாரதத்தின் பல பகுதிகளுக்கும் பணமில்லாமலேயே பயணம் செய்தேன். ரயிலில் நான் பயணச்சீட்டு வாங்கியதில்லை; உணவுக்கோ, தங்குமிடத்திற்கோ நான் எதுவும் கொடுத்ததில்லை. ஜனங்கள் பயணத்திற்கான வசதிகளையும் செய்துகொடுத்து உதவினார்கள். இதே, மேற்கு நாடுகளென்றால், என்னைச் சிறையில் தள்ளியிருப்பார்கள் அல்லது அனாதைகளுக்கான புகலிடத்தில் சேர்த்திருப்பார்கள்!
பாரத அமைப்பில் வன்முறை இருக்காது. ஒரு ஒப்பீடாகப் பார்க்கும்பொழுது, அமெரிக்காவில், ஏழைமைத் தோற்றம்கொண்ட நபர் ஒருவர் உங்கள் காரை அணுகினால், நீங்கள் உடனே உங்கள் கார் கண்ணாடிகளை ஏற்றிவிட்டு, கதவுகள் எல்லாம் சரியாகப் பூட்டப்பட்டிருக்கின்றனவா என்று சரிபார்த்துக்கொள்வீர்கள். நீங்கள் அவ்வளவு பயப்பட வேண்டியதிருக்கிறது.
பாரதத்தில், ஒரு பிச்சைக்காரர் உங்கள் முன் வந்து கையேந்தி நின்றால், நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. நீங்கள் அவர்களை அப்பால் செய்வீர்கள். ஆனால், அவர்கள் உங்களைத் எதிர்த்துத் தாக்குவார்களோ என்று பயப்படமாட்டீர்கள். ஏன் ? ஏனெனில், இங்கு ஒரு ஏற்புத்தன்மை நிலவுகிறது.
மேலைநாட்டு மக்கள் 'ஏற்புத்தன்மையை', பலவீனம் என்று சொல்கிறார்கள். ஆனால், வன்முறையை அவர்கள் பலவீனமாகக் கருதவில்லை! சமுதாய மதிப்பீடுகள் வினோதமாகிவிட்டன! எவ்வளவு தூரம் நீங்கள் மனிதரை மட்டுமே மதிக்கிறீர்கள் என்பது முக்கியம். நமது சிந்தனையில் ஒரு மாற்றம் வந்தால் தவிர, நாம் வளரமாட்டோம். எதிர்மறை குணங்களே மரியாதைக்குரிய குணங்களாகிவிட்ட ஒரு கீழான நிலைக்கு வந்துவிட்டோம். வன்முறையும் மூர்க்கத்தன்மையும் எப்போதும் வெற்றியடைந்ததில்லை; ஏற்புத்தன்மையும் கருணையும்தான் வெற்றியடைந்திருக்கின்றன.
குருவிடம் கொண்ட நன்றிக்காக, நீங்கள் ஞானமடைதலையே துறந்தாலும், நீங்கள் ஞானமடைந்து விடுவீர்கள்!
கேள்வி: ஞானமடைவதற்கும், அவரை அடைவதற்கும் சரணாகதி ஒன்றே வழி என்கிறார் கிருஷ்ணர். ஆனால், சரணாகதி மற்றும் துறவு என்பவை ஞானமடைவதற்கான ஆசையைக்கூட சரண்செய்துவிட என்பதைக் குறிக்கவில்லையா?
அழகான கேள்வி!
புத்தரின் சிறப்பான நெருங்கிய சீடர்களுள் ஆனந்தரும் ஒருவர். புத்தரின் நிழலைப்போன்று நாற்பத்தியிரண்டு வருடங்களாக, அவருடனேயே வாழ்ந்தவர். ஒரு குருவுக்கு வேறு எவருமே இது போன்று அவ்வளவு நீண்ட காலம் சேவை செய்ததில்லை. ஆனந்தா என்ற ஒரு மனிதரே அங்கில்லை என்பதுபோல் அவருடைய சேவைகள் அமைதியாக இருந்தன. அவர் அங்கிருப்பதை எவருமே உணரவில்லை.
அந்தளவுக்கு அவர் அமைதியாக இருந்தது. அவ்வாறு அவர் சேவை செய்ததால் புத்தர் மேலும், மேலும் மௌனமானவராகவும், அமைதியானவராகவும் கருணைமிக்கவராகவும் ஆகி வந்தார்.
ஆனந்தர், புத்தருடைய அருகாமையிலேயே இருந்ததாலும், நெருக்கமான உறவினாலும், அவருடைய சக்தி சூழலிலேயே இருந்து வந்ததாலும் புத்தருடைய ஆன்மாவோடு ஒன்றிப் போனார். அவர் சுத்தமாகத் தன்னையே மறந்துவிட்டார். ஆனந்தர், தாம் ஞானமடைந்தாக வேண்டும் என்பதைக்கூட மறந்துவிட்டிருந்தார்!
ஆனந்தா, நாற்பத்தியிரண்டு வருடங்கள், புத்தரின் நிழலைப்போன்று அவருடனேயே வாழ்ந்தவர். ஒரு குருவுக்கு வேறு எவருமே இது போன்று அவ்வளவு நீண்ட காலம் சேவை செய்ததில்லை.
புத்தரே அவரிடம் மீண்டும் மீண்டும், ''ஆனந்தா, குருவுக்கு சேவை செய்வது நல்லதுதான். நான் உன் சேவையால் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், நீயும் ஞானமடைந்தாக வேண்டுமென்பதை மறந்துவிடாதே!'' என்று ஞாபகமூட்ட வேண்டியதிருந்தது.
"உங்களுக்கு சேவை செய்வதொன்றே போதும். ஞானமடைவது பற்றி யாருக்குக் கவலை?" என்று ஆனந்தரும் சிரித்தபடி சொல்வார்.
உண்மையில், ஆனந்தா புத்தரிடம் பலமுறை சொன்ன ஒரு கருத்து: ''தயவுசெய்து, என்னுடைய ஞானமடைதலைக் கட்டாயப்படுத்தாதீர்கள். நீங்கள் ஏதாவது கட்டளையிட்டால், நான் செய்தே ஆக வேண்டும். ஆனால், இந்த ஒன்றை மட்டும் என்னால் செய்ய முடியாது. ஏனெனில், நான் ஞானமடைந்துவிட்டால், நீங்கள் என்னை வெளியே அனுப்பிவிடுவீர்கள். உங்களுடைய கருத்துகளை மக்களிடம் சொல்லி, அவர்களை விழிப்புறச் செய்வதற்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்யச் சொல்வீர்கள். அதனால், நான் அறியாதவனாகவே இருந்து விடுகிறேன். உங்களுக்கான சேவையை மட்டும் செய்துகொண்டு இருந்துவிடுகிறேன். ஞானம் பிறகு நிகழட்டும்! இப்பொழுது அதற்கென்ன அவசரம் ? நான் உங்களோடு இருப்பதே எனக்கு முழு நிறைவைத் தருகிறது ! ' '
ஒருவர் ஞானமடைந்து, புத்தரின் செய்தியை எடுத்துச்செல்லும் ஒரு கருவியாகத் தயாராகிவிட்டால், உடனே புத்தர் அவரிடம், ''நீ இப்போது தயாராகிவிட்டாய். உலகின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் சென்று, ஆழ்ந்த தூக்கத்தில் மூழ்கிப் போயிருக்கும் மக்களைத் தட்டி எழுப்பு!'' என்று சொல்லி, அவரை அங்கிருந்து அனுப்பிவிடுவார். இதுபோன்ற நிகழ்வுகளை ஆனந்தர் பலமுறை பார்த்திருக்கிறார்.
அதனால் ஒவ்வொரு இரவு தூங்கச் செல்லும் முன்பும், "என் தெய்வமே, நான் ஞானமடையாமல் இருக்க எனக்கு உதவி செய்யுங்கள். ஏனெனில், உங்களை விட்டுப்போக நான் விரும்பவில்லை," என்றுதான் பிரார்த்தனை செய்துகொள்வார். ஆனந்தருடைய தியாகம் அளவிடற்கரியது, அபூர்வமானது. மனித சரித்திரத்திலேயே ஒருவர் தம்முடைய சொந்த ஞானத்தையே தியாகம் செய்ததாகச் சான்றே கிடையாது.
ஆனந்தர், தாம் ஞானமடைந்தாக வேண்டும் என்பதைக்கூட மறந்துவிட்டிருந்தார்!
புத்தர் இறக்கும் முன்பு, "இன்றுதான் என் கடைசி நாள்," என்று அறிவித்தார். உடனே ஆனந்தர் அழ ஆரம்பித்துவிட்டார்.
புத்தர் ஆனந்தரைப் பார்த்து, "அழாதே ஆனந்தா, ஞானமடையச் சொல் உன்னைத் தயார்ப்படுத்தும். இல்லையென்றால் நீ ஞானமடையப் போவதில்லை. நான் சென்ற பிறகு, நீ பிடித்துக்கொள்ள எந்தவொரு பிடிப்பும் இருக்கப் போவதில்லை. இவ்வளவு காலமாக நீ எனக்கு சேவை செய்ததற்கு நான் உனக்கு நன்றி சொல்ல கடன்பட்டிருக்கிறேன்,'' என்று சொன்னார்.
புத்தர் சொன்னபடியே, அவர் இறந்த இருபத்துநான்கு மணி நேரத்திற்குள்ளாகவே ஆனந்தர் ஞானமடைந்துவிட்டார்.
புத்தர் இறந்த உடனே, ஆனந்தர் தம் கண்களை மூடிக்கொண்டார். அவர் ஞானமடையும்வரை, தம் கண்களைத் திறக்கவேயில்லை. மக்கள் கேட்டனர்: ஏன் நீங்கள் கண்களைத் திறக்க மறுக்கிறீர்கள் ?
அவர், ''நான் இந்த உலகத்திலேயே மிக அழகான மனிதரைப் பார்த்துவிட்டேன். இனி நான் பார்ப்பதற்கு வேறென்ன இருக்கிறது ? இப்போது என்னால் ஞானமடைய முடியும். என்னுடைய ஒரே பிடிப்பு புத்தர் தான். அதுகூட இப்பொழுது உடைந்து விட்டது,'' என்றார்.
ஆனந்தர் சொன்னார்: ஒருவேளை நான் ஞானமடைய வேண்டும் என்பதற்காகவே அவர் இறந்துவிட்டாரோ!
இது, குரு சீடருக்கு இடையே நிகழ்ந்த ஒரு அழகான கதை. இந்தக் கதை, குருவிடம் கொண்டிருந்த நன்றிக்காக, தம்முடைய ஞானமடைதலையே துறந்திருந்த ஒருவருடைய அபூர்வக் கதையாகும்.
குருவிடம்கொண்ட நன்றிக்காக, நீங்கள் ஞானமடைதலையே துறந்தாலும், நீங்கள் ஞானமடைந்து விடுவீர்கள்!