KAILASA Library/பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)/மாயைப் புரிந்துகொள்ளும் நிலையே ஸாத்விகம்!Sign in
பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)

மாயைப் புரிந்துகொள்ளும் நிலையே ஸாத்விகம்!

நாம் கொண்டுள்ள அனைத்து குணங்களும், நம் இயல்பிலேயே பதிந்துள்ளன. இவையே நம்முடைய நடத்தையை வரையறுக்கின்றன, நம் எண்ணங்களை, வார்த்தைகளை, செயல்களைக் கட்டுப்படுத்துகின்றன.

ஒருவர் எல்லா நேரங்களிலும், பிறந்ததிலிருந்து இறக்கும்வரை ஒரே குணத்தில், ஒரே பண்பில் இருப்பதில்லை.

குணங்கள் வகைப்படும்: ஸாத்வீகம் என்பது அமைதி, நிம்மதி, ஆன்மிகம், நன்மை போன்ற நல்ல குணங்களாக வரையறுக்கப்படுகிறது. பொதுவாக, இப் பண்புகள், மக்களிடம் காணப்படும்.

ரஜஸ் என்பது ஆவேசம், வசப்படுவது, போன்ற குணங்களாக அரசர்களுக்கும் வியாபாரிகளுக்கும், இதுவே முதன்மை குணமாக இருக்கும்.

ஒருவர் எல்லா நேரங்களிலும், பிறந்ததிலிருந்து இறக்கும்வரை ஒரே பண்பில் இருப்பதில்லை.

தமஸ் என்பது சமயங்களில், நாம் எல்லோருமே, நமக்குள் இதை, 'செயலற்ற அம்சமாக' உணருகிறோம். ஆனால், சாப்பிடுவது, தூங்குவது மட்டுமே இது, உணர்வுகளுடன் ஊக்கத்துடன் செயல்படும் அம்சமாக' இருக்கிறது!

இந்த ஸ்லோகங்களில் கிருஷ்ணர், இம்முக்குணங்களின் தன்மைகளையும், அவை நம் மீது ஏற்படுத்தும் பாதிப்புகளையும் மிக அழகாக வரையறுத்துக் கூறுகிறார். அவர், இப்படி விளக்குவதற்கான நோக்கம்: நமக்குள்ளே என்ன நிகழ்கிறது என்பதை நமக்கு உணர்த்துவதற்கே.

பெரும்பாலான சமயங்களில், நாம் எதிர்செயல்களைச் செய்துவிட்டு, ஏன் அப்படிச் செய்தோம் என்றே யோசித்துக் கொண்டிருக்கிறோம். குரு இந்த வார்த்தைகளால் விளக்கியபடி, நம்முடைய எதிர்செயல்களைப் பற்றி நாம் புரிந்துகொண்டு விட்டோமானால், நாம் புரிதலின் அடுத்த நிலைக்கு நகர முடியும், ஒரு மேன்மையான பண்புக்கு உயர முடியும்.

ஆம், சில நேரங்களில் செயல்களைச் செய்து முடிக்க, நாமெல்லாருமே ரஜஸில் இருந்தாக வேண்டியுள்ளது. அவ்வாறு ரஜஸில் இருந்தாலும், நம்மைப் பாதிக்கும் கோபம், பேராசை, அச்சம் மற்றும் பற்றுதல் போன்ற உணர்ச்சிகளுக்காட்படாமல், உத்வேகத்துடன் செயலாற்ற முடிந்தால், நாம் பார்ப்பவர்களுக்கு ரஜஸில் இருப்பதாக தெரிந்தாலும்கூட, நாம் ஸாத்வீக நிலையில்தான் இருக்கிறோம்.

தனித்தனி ஜீவன்களிலும் கூட்டு விழிப்புணர்வை, முழுப் பிரபஞ்சத்தைக் காண்பவரே ஒரு ஸாத்விக மனிதர் என்று கிருஷ்ணர் வரையறுக்கிறார். அவர், தாம் ஒரு தனி ஆள் அல்ல. தாம் ஒரு தீவு அல்ல. மாறாக இந்தப் பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொருவரோடும், ஒவ்வொன்றோடுமே தாம் பிணைக்கப்பட்டிருப்பதைப் புரிந்துகொள்கிறார், பிரபஞ்ச சக்தியுடனான தம் தொடர்பைப் புரிந்துகொள்கிறார்.

ஒரு ஸாத்வீகனுக்கு எதன்மீதும் பற்றுதல் கொண்டிருப்பதில்லை. அவர் தம்முடைய வாழ்வு மற்றும் உடைமைகள் - நான் மற்றும் எனது என்பனவெல்லாம் அர்த்தமற்றவை என்று உணர்ந்துகொள்கிறார். அவர் தன்னலமில்லாமல், பாராட்டையோ பரிசையோ எதிர்பாராமல், செயல்முறை மீதோ, இறுதிப்பலன் மீதோ பற்றில்லாமலும் செயல்புரிகிறார். அவர், தமது செயல்களை, நான் மற்றும் எனது என்ற உணர்ச்சிகளோடு இணைக்காமல் தோல்விபோல் தோற்றமளிக்கும் அவற்றின் விளைவுகளாலும் பாதிக்கப்படுவதில்லை.

ஸாத்விக நிலைக்கு உயர்வது என்பது அப்படியொன்றும் கடினமான ஒரு காரியம் அல்ல. ஆம், எல்லா நேரமும் நீங்கள் ஸாத்விக நிலையிலேயே இருக்க முடியாது என்பது உண்மையே. ஆனால், இந்த நிலை நீங்கள் விடுதலைபெற உதவுகிறது என்பதை அறிந்துகொண்டீர்களானால், நீங்கள் அந்த நிலையிலேயே இருப்பதற்குதான் மேலும், மேலும் முயற்சி செய்வீர்கள்.

ஸாத்விக நிலையிலேயே நிலைத்திருப்பதற்கு, கடந்தகாலமும் எதிர்காலமும் வெறும் மாயையே என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவற்றுக்கு இருப்பு இல்லை. கடந்தகாலம் முடிந்துவிட்டது. மறுபடியும் திரும்பி வரப்போவதில்லை. அப்புறம் ஏன் அதை நினைத்துக் கவலைப்பட வேண்டும் ?

எதிர்காலம் என்பது வெறும் கானல் நீர். அது இன்னும் நடக்கவேயில்லை. அதற்குள் அதை நினைத்து ஏன் கவலைப்பட வேண்டும் ?

அதனால், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், நிகழ்காலத்தை மட்டும் உயிர்ப்போடு செயற்படுத்துவதுதான். அதை மட்டுமே உங்களால் செய்ய முடியும்.

நிகழ்காலமே உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது. நிகழ்காலத்தில் மட்டும் நீங்கள் கவனம் செலுத்தினால், உங்களின் விழிப்புணர்வு பல மடங்கு அதிகரிக்கும். மேலும், உங்களின் எதிர்பார்ப்புகளையும் பற்றுகளையும் விட்டுவிடுவீர்கள். எதைச் செய்ய வேண்டுமோ, அதை மட்டும் செய்வீர்கள். நீங்கள், யதார்த்த நிலைக்கேற்ப செயல்பரிவீர்கள் : ஸாத்விக நிலையிலிருப்பீர்கள்.

ஆன்மாவைத் தின்றுவிடும் ரஜஸ்

நீ - நான் என்றும், இது - அது என்றும் நீங்கள் வேறுபடுத்தி பார்க்கத் துவங்கும்பொழுது நீங்கள் ரஜனில் விழுந்துவிடுகிறீர்கள். அப்படியேதும் வேறுபாடேயில்லை. இந்த வேறுபாடுகளை உங்கள் மனமே, உங்கள் அஹங்காரமே உங்களுக்கும், கொண்டுவருகிறது.

ரஜோ குணமுடைய மனிதர், எந்தவொரு செயலையும் ஒரு பாராட்டை எதிர்பார்த்தே செய்வார். அவர் சுயநலம் மிக்கவராயும், எதையும் எதிர்ப்பவராயும் பொறுமையற்றவராயும் இருப்பார். அவர் விரும்பியது கிடைக்கவில்லையென்றால், அவர் நிலைகுலைந்து போவார். தோல்வி என்பது அவருடைய அணங்காரத்திற்கு ஒரு மிகப் பெரிய சம்மட்டி அடியாக இருக்கும்.

ர்ஜா குணமுள்ள ஒருவர் ஒருபோதும் சந்தோஷமாக இருக்க முடியாது. புரிந்துகொள்ளுங்கள், அநேகமாக உங்களில் எல்லோருமே ரஜஸால்தான் ஆளப்படுகிறீர்கள். இந்த நவீன யுகத்தில் இந்த குணம்தான் மிகவும் மேலோங்கியிருக்கிறது. செல்வந்தரோ ஏழையோ, அறிவாளியோ,

முட்டாளோ, படித்தவரோ, படிக்காதவரோ, பெரும்பாலும் ஒவ்வொருவரும் தம்மை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் அவர்கள் வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள்.

நீங்கள் ஆசைகளால் ஆளப்படும்வரை, உங்களிடம் இருப்பதை வைத்து நீங்கள் திருப்தியடையாதவரை, நீங்கள் ரஜஸில் இருக்கிறீர்கள். ரஜஸ் உங்களை அரித்து விடுகிறது. அது உங்கள் ஆன்மாவைத் தின்றுவிடுகிறது. அசை மற்றும் பயத்திற்கு எல்லையே இல்லை. இவையே ரூஜோ குணத்தை இயக்கும் முக்கிய சக்திகள்.

ரஜஸின் தன்மையாவன: உங்களிடம் எது இல்லையோ, அதை அடைய முயற்சிசெய்வது, உங்களிடம் எது இருக்கிறதோ அதைக் கொண்டு திருப்தியடையாமல் இருப்பது, நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது, நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும்பொழுது மகிழ்ச்சியில்லாமல் இருப்பது.

ரஜஸ் என்பது எப்போதுமே கற்பனை உலகில் வாழ்வது. ஒன்று, நீங்கள் எதிர்காலத்தைப் பற்றிய கற்பனையில் இருந்துகொண்டிருப்பீர்கள். அதாவது இனி நீங்கள் என்னவாக ஆக வேண்டும், உங்களுக்கு என்னென்ன வேண்டுமென்பதைப் பற்றிய கற்பனையில் மிதந்து கொண்டிருப்பீர்கள். இல்லையேல், கடந்தகாலத்தில் இருப்பீர்கள், முடிந்துவிட்ட ஒரு செயலைக் குறித்துச் சிந்தித்து, அதை இன்னும் சிறப்பாகச் செய்திருக்க வேண்டும், வாழ்வை இன்னும் சிறப்பாக வாழ்ந்திருக்க வேண்டும் என்று பலம்பிக் கொண்டிருப்பீர்கள்.