'அறிந்துகொள்வது' என்பது வேறு, 'அறிவது' என்பது வேறு
அறிவு என்பது மூவகைப்படும். முதல்வகை, நம் மனத்தின் மூலமாகவும், பட்டறிவின் மூலமாகவும் பெறப்படும் அறிவாகும். விஞ்ஞான அறிவுகளான பௌதீகம், கணிதம், மருத்துவம் முதலியவை
ஒரு புத்தகத்தைப் படித்து மட்டுமே நம்மால் ஆடவோ, பாடவோ, ஓவியம் வரையவோ, கதைகள் எழுதவோ கற்றுவிட முடியாது.
இந்த வகையைச் சேர்ந்தவையே.
நாமெல்லோருமே, இந்த வகை அறிவுதான் நமக்குப் பலனளிக்கும் என்றும், நமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என்று நம்பி, அதன் பின்னேயே ஓடுகின்றோம்; அதைப் பெறுவதற்காகவே, நம் வாழ்வின் பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறோம்.
இறுதியில், இந்த எல்லாவகை அறிவு இருந்தும், நாம் நாம் ஏன் சந்தோஷமாக இல்லை என்று திகைக்கின்றோம். இந்த முதலாவது வகை அறிவை மேலும் மேலும் பெறும்போது, நாம் மேலும் மேலும்
குழப்பவாதிகளாக ஆகின்றோம்.
இரண்டாவது வகையான அறிவு, பட்டறிவைப் போன்று, ஒருவரால் கற்றுத்தந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய வகையான அறிவு அல்ல. இந்த வகையான அறிவை, நாம் செயல்புரிந்துதான் கற்றுத்தேற வேண்டும். படைப்பாற்றல் தேவைப்படுகின்ற கலைத்துறைகள் இந்த வகையைச் சார்ந்தவை.
ஒரு புத்தகத்தைப் படித்து மட்டுமே, நம்மால் ஆடவோ, பாடவோ, ஓவியம் வரையவோ, கதைகள் எழுதவோ கற்றுவிட முடியாது. வெறும் தகவல்களை, செய்திகளை மட்டும் பார்த்துவிட்டு அல்லது கேட்டுவிட்டு உட்கிரகித்துக் கொள்ளும் வகையல்ல இது.
இந்தக் கலைகளை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்; நன்கு ஆழமாக உள்வாங்கி, ஆராய்ந்து, பயிற்சிசெய்து, நம் அனுபவமாக்கிக்கொள்ள வேண்டும்; அதன்பின் வெளிப்படுத்த வேண்டும். இதில் நம்முடைய மூளை மற்றும் பட்டறிவோடு, நம் இதயமும் உணர்ச்சிகளும் இணைந்து முழுமையாக ஈடுபட வேண்டும்.
இதயம் சார்ந்த அறிவானது, புரிந்துகொள்ளும் திறனை மட்டுமல்லாது, அதற்கும் மேலான ஒன்றையும் அடிப்படையாகக் கொண்டதாகும்.
மூன்றாவதும், மிக உயர்ந்ததுமான அறிவு நம் இருப்பிலிருந்து வெளிவருவதாகும். அது ஒரு இருப்பிலிருந்து மற்றொரு இருப்புக்கு அனுப்பப்படுகிறது. இந்த வகையான அறிவு, நம்மை 'ஆஹா' என சொல்லவைத்து, நம்மை உருகிக்கரையச் செய்துவிடும். எப்போதாவது அரிதாகவே நிகழும் ஒரு அபூர்வமான அனுபவம் அது! மாபெரும் கண்டுபிடிப்புக்களும், புதிய படைப்புகளும், சாதனைகளும் இந்த அரிய வகையைச் சார்ந்தவையே. இந்த அறிவையே நாம் 'உள்ளுணர்வு' என்கிறோம்.
இது, பட்டறிவு அளவில் நடைபெறும் ஒரு தகவல் பரிமாற்றமும் அல்ல, உணர்ச்சிகள் அளவில் இணைந்து செயல்படும் ஒரு செயல்முறையும் அல்ல. இதை, 'இரு இருப்புகளின் ஒரு சங்கமம்' என்றே சொல்ல வேண்டும்.
'இருப்பு நிலையிலான அறிவு' என்பது மூளைசார்ந்த அறிவு, இதயம் சார்ந்த அறிவு மற்றும் இவற்றையும் தாண்டிய ஏதோ ஒன்றும் சேர்ந்த ஒரு கலவையே.
கடவுளைப் பற்றிய அறிவேயானாலுங்கூட, வெறும் மூளை சார்ந்த அறிவாக மட்டுமே இருக்கும்போது, அது நமக்கு பந்தத்தை, அடிமைத்தனத்தைத்தான் ஏற்படுத்துகிறது. ஏனெனில், நாம் 'கடவுளைப் பற்றியே' அறிந்துகொள்கிறோம், 'கடவுளை' அல்ல. ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், 'கடவுளைப் பற்றி அறிந்துகொள்வது' என்பது வேறு 'கடவுளை அறிவது' என்பது வேறு. அறிவதிலிருந்து, கடவுளைப்
மூளைசார்ந்த அறிவு, இதயம் சார்ந்த அறிவு மற்றும் இவற்றையும் தாண்டிய ஏதோ ஒன்றும் சேர்ந்த ஒரு கலவையே 'இருப்பு நிலையிலான அறிவு'
கடவுளை அறிவது என்பது முற்றிலும் வேறானது.
நாம் செய்யும்பொழுது, 'நமக்குக் கடவுளைத் தெரியும்' என்ற கருத்தே நம்முள் இருக்காது. அப்படிப்பட்ட கருத்துகூட நமக்குள் இல்லாதபோதுதான், கடவுளை இல்லாவிட்டால், பற்றித்தான் அறிந்திருப்போம், கடவுளை அறிந்திருக்க மாட்டோம்.
கிருஷ்ணர் சொல்லும் சரணாகதி என்பது நமது பகற்கனவுகளை எல்லாம் விட்டுவிட்டு, உண்மைக்கும் யதார்த்தத்துக்கும் சரணடைவதாகும்.
வார்த்தைகள், அவை கடவுளை வெளிப்படுத்தாது. எந்த விளக்கத்தாலும், நம்மைக் கடவுள் அனுபவத்திற்கு அழைத்துச்செல்ல முடிவதில்லை. எல்லா விளக்கங்களும் ஓய்ந்து முடியும்பொழுதே, கடவுள் அனுபவம் நிகழ்கிறது.
ஜென் ஞானிகள் சொல்கிறார்கள்: நிலவைச் சுட்டிக்காட்டும் விரலானது நிலவாகிவிட முடியாது. அது வெறுமனே சுட்டிக்காட்டும் ஒரு கருவி, ஞாபகமூட்டும் ஒரு கருவியே.
கடவுளைப் பற்றிய உண்மைகள்
உண்மையாக இருந்தாலும், அவையனைத்தும் வெறும் சுட்டும் விரல்களைப்போலத்தான். அவை வெறும் நினைவூட்டிகளே!
பகவத் கீதை முழுவதும், கிருஷ்ணர் துறவைப் பற்றித்தான் மீண்டும், மீண்டும் வலியுறுத்துகிறார். கிருஷ்ணர், நாம் செய்யும் செயல்களையே நிறுத்திவிடாமல், அதன் பலன்களை மட்டும் சரணாகதி செய்வது எப்படி என்பதையும், நம் எல்லா அறிவையும், செயல்களையும் அவர் காலடியில் அர்ப்பணிப்பது எப்படி என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.
கிருஷ்ணர் அர்ஜுனனிடம், அர்ஜுனா, இனி நீ செய்ய வேண்டியதெல்லாம் 'சரணடைதல்' ஒன்றுதான்,'' எனச் சொல்லும்போது, அவர் அர்ஜுனனை இந்த இறுதி நிலைக்குத்தான் தயார்செய்கிறார்.