சக்தி தரிசனம் பெறத் தயாராய் இருங்கள்!
ஒருசில நிமிடங்களுக்காவது உங்களின் எண்ண ஒட்டங்களிலிருந்து விடுபடுங்கள். பிறகுகூட நீங்கள் அவற்றை மீண்டும் பொறுக்கி எடுத்துக்கொள்ளலாம். அதில் எந்தப் பிரச்சினையும் வராது. ஒருசில நிமிடங்களுக்கு உங்கள் விழிப்புணர்விலிருந்தும் உள்ளுலகத்திலிருந்தும் அவற்றைத் தள்ளி வைத்துவிடுங்கள். அப்படியானால் மட்டுமே, அந்த விழிப்புணர்வின் ஒரு ஒளிக்கீற்றைத் தரிசிக்கலாம்.
கிருஷ்ணரின் கருணையால் அர்ஜுனன் அனுபவித்த அதே அனுபவத்தை, நீங்களும் அனுபவிப்பதற்கான ஒரு சிறப்பு சாத்தியக்கூறு இருக்கிறது.
இந்தப் சரணடைந்துவிடு,'' என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார். அவர், 'நான்', 'எனது' என்று சொல்லும்பொழுதெல்லாம், தாம் தெய்விகத்தின் உருவகம், பிரதிநிதி என்ற பொருளில்தான் சொல்கிறார்.
இப்பொழுது திடீரென்று, அவர் அதை மாற்றிக் கொண்டு, ''அவனிடத்தே சரணடைந்துவிடு,'' என்று படர்க்கை நிலையாக முதன்முறையாக, அவர் தெய்விகத்தை இந்த விதத்தில் குறிப்பிடுகிறார். இதற்கு அர்த்தம் என்னவென்றால், அவர் தம் எண்ண உடலைத் தாண்டி அப்பாலும், விரிவடைந்த நிலையில் இருக்கிறார். அவர் இப்பொழுது கிருஷ்ணராக, அதாவது, பிரபஞ்ச கிருஷ்ணராக பேச ஆரம்பித்திருக்கிறார் என்பதுதான்.
அவர் அழிவற்ற, எல்லையற்ற விழிப்புணர்வு நிலையிலிருந்து பேசுகிறார். 'என்னிடத்தில் சரணடைந்துவிடு' 'அவனிடத்தில் சரணடைந்துவிடு' என்று சொல்வதின் காரணம் இதுவே.
இதற்கு முன்பாக அவர், 'நான்', 'எனது' என்ற வார்த்தைகளையே பயன்படுத்தி வந்திருக்கிறார். அர்த்தம், அவர் இப்போது, அர்ஜுனனை அனுபவத்தினுள் ஆழ்த்துவதற்காக ஒரு விரிவடைந்த நிலையில் இருக்கிறார். இந்த விதமான ஒரு அனுபவத்தை ஒரு சீடருக்குக் கொடுப்பதற்கு, குருநாதரும் அதே நிலையில் இருந்தாக கிருஷ்ணர் அந்த விரிவடைந்த நிலைக்குள் சென்றார்.
கிருஷ்ணரின் கருணையால் அர்ஜுனன் அனுபவித்த அதே அனுபவத்தை, நீங்களும் அனுபவிப்பதற்கான ஒரு சிறப்பு சாத்தியக்கூறு இருக்கிறது.
ஒரு பூஜைக்கு முன்னர், அங்குஷ்டப்யாம் தர்ஜனிப்யாம் - என்னும் முந்திரங்களைப் புரோகிதர்கள் உச்சாடனம் செய்வார்கள். இந்த மந்திரங்கள், நாம் விரிவடைந்து, உடல் உணர்வுக்கு அப்பால் செல்வதற்காகவே உச்சரிக்கப்படுகின்றன. இது, நம் உடலைச் சுத்தமாக்கி, உடற்கடந்த நிலைக்குச் செல்வதற்கு நமக்கு உதவுகிறது. உண்மையில், சுத்தம் செய்வது மற்றும் கடந்த நிலைக்குச் செல்வது - என்ற இரண்டும் ஒன்றையே குறிக்கிறது.
அதனால் இப்போது கிருஷ்ணர் சொல்கிறார்: "அவனிடத்தே சரணடைந்துவிடு!' ஏனெனில், அவர் இப்பொழுது விரிவடைந்த நிலையில் இருப்பதால், அவர், 'நான்' என்னும் வார்த்தையை பயன்படுத்த முடியாது.
அவர் சொல்கிறார்: "பார்த்தா, முழுமையாக அவனிடத்தே சரணடைந்துவிடு. அவனுடைய விழிப்புணர்வையும், மிக உன்னதமான அமைதியையும் அடையப் பெறுவாய் !
அவர், பிரபஞ்ச விழிப்புணர்வாக, எல்லையற்று விரிவடைந்திருக்கிறார். அவர் இப்பொழுது, சக்தி தரிசனம் தரத் தயாராய் இருக்கிறார். அவருடைய சக்தியை அர்ஜுனனின் மேல் பொழியத் தயாராய் இருக்கிறார்.