KAILASA Library/பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)/நாம் எப்போதுமே நமது சொந்த இயல்பை நம்புவதில்லைSign in
பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)

நாம் எப்போதுமே நமது சொந்த இயல்பை நம்புவதில்லை

ஒரு சின்ன கதை:

ஒரு சமயம், அரண்மனையில் உறங்கிக் கொண்டிருந்த அரசரின் முகத்தின்மீது, அங்குப் புகுந்த எலி ஒன்று குதித்தோடியது. அதனால் அதிர்ச்சிக்குள்ளான அரசர், அலறியடித்துக்கொண்டு, அறையைவிட்டு வெளியே ஓடிவந்தார். அதைக் கேட்டு ஓடிவந்த தம் படைத்தலைவரிடம், அந்த எலியைக் கொல்லுமாறு கட்டளையிட்டார்.

அந்தப் படைத்தலைவரும் எலியைத் தேடி அரசரின் படுக்கை அறையினுள் நுழைந்தார். மறுபடியும் தற்செயலாக, அந்த எலி, அந்தப் படைத்தலைவரின் முகத்திலேயே எகிறி குதித்து ஓடி மறைந்துவிட்டது.

உடனே அந்தப் படைத்தலைவா், ஒ, இந்த எலி மிகப் பெரியதாக இருக்கிறது! என்று கத்திக்கொண்டே வெளியே ஓடி வந்தார். இப்போது, படைத்தலைவருக்கு தம் மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலைமை. அதனால் அவர், மன்னரின் அறையில் சக்தி வாய்ந்த மிகப்பெரிய எலி ஒன்று இருக்கிறது என்ற ஒரு செய்தியைப் பரப்பிவிட்டார்! அரண்மனையில் ஒரு பெரிய எலி இருக்கிறது. அதை யாராலும் கொல்ல முடியவில்லை என்ற செய்தி நாடு முழுவதும் பரவியது. அந்த செய்தி அரண்மனை பூனையையும் எட்டியது.

அதே சமயம், அரசர், அரண்மனை பாதுகாவலருக்கு ஒரு கட்டளையிட்டார். அரண்மனை பூனையை அழைத்துச் சென்று, அந்த எலியைக் கொல்ல வேண்டும் என்பதே அது.

அரண்மனை பாதுகாவலரும், அரசரின்

அறைக்குள் இருக்கும் எலியைக் கொல்லுமாறு அரண்மனை பூனைக்குக் கட்டளையிட்டார். அந்த எலியை அரசராலோ, படைத்தலைவராலோகூட கொல்ல முடியவில்லை என்ற செய்தியைக் கேள்விப்பட்டு, அந்தச் செய்தியால் மூளைச்சலவை செய்யப்பட்டு பீதியடைந்திருந்த அரண்மனை பூனையும், பயந்துகொண்டே அறைக்குள் நுழைந்தது. மறுபடியும் எலி குதித்தோடியது, இந்த முறை பூனையின் முகத்தில்! இதனால் அதிர்ச்சியடைந்த பூனை, பயந்து நடுங்கி, அந்த அறையை விட்டு வெளியே ஓடிவந்தது.

தன்னுடைய அந்தஸ்தைக் காப்பாற்றிக்கொள்ள, அதுவும் தன் பங்குக்கு எலியைப் பற்றிப் பலவிதமாகத் திரித்துச் சொல்ல ஆரம்பித்துவிட்டது.

அது ஒரு ஒரு சாதாரண எலியே அல்ல. என்னைப்போல் இரண்டு மடங்கு பெரிதாக இருக்கிறது. அதைக் கொல்லவே முடியாது, என்று பலவித கதைகளைச் சொல்லி, நிலைமையைப் பூதாகாரமாக்கியது.

இப்போது இந்தச் செய்தி இன்னும் வேகமாகப் பரவியதால், அந்த முழு நாடும் அந்த எலியை நினைத்து பயந்தது. கடைசியில், அந்த அரசரும், அந்த எலியைக் கொல்பவர்களுக்குப் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார் அரசரின் செய்தி நாடு முழுவதும் பரவியது.

நம் மனம்தான் எல்லாவற்றையும் பெரிதாக்குகிறது.

இதை அறிந்த ஒரு ஏழை விவசாயி, தம் பூனையிடம், ''நீ போய் அந்த எலியை கொன்றால், உனக்கு ஒரு நாள் உணவாவது கிடைக்கும். உனக்குக் கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றுமேயில்லை! அதனால் நீ போய் ஏன் அதற்கு முயற்சிசெய்யக்கூடாது?'' என்று கேட்டார்.

அதற்கு அந்தப் பூனையும், "தாராளமாகச் செய்யலாமே, இப்போதே புறப்படுவோம்,'' என்று புறப்பட்டுவிட்டது. மற்ற பூனைகளெல்லாம் எச்சரித்தன, ''போகாதே. கொழுத்த அரண்மனை பூனையாலேயே அந்த எலியை ஒன்றும் செய்ய முடியவில்லை. அரண்மனை பிரத்யேகப்பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கும். அத்தனை வழிமுறைகளும், நுட்பங்களுமே அதற்கு உதவவில்லை. நீ போய் மடத்தனமாக மாட்டிக்கொள்ளாதே!'' என்றன. ஆனால், அந்தப் பூனையோ, ''அங்கே என்னதான் இருக்கிறது என்று பார்த்துவிடுகிறேன்,'' என தைரியமாகச் சொன்னது.

அந்தப் பூனையை அழைத்துக் கொண்டு அந்த விவசாயி அரண்மனைக்குச் சென்றார். அந்தப் பூனையை அரசரின் அறைக்குள் விட்டதுமே, அது வெகு சாதாரணமாக உள்ளே போய், அந்த எலியைக் கொன்று விட்டு வெளியே வந்தது. உடனே அரசரும் அந்தப் பூனைக்கு ஒரு பெரிய விருந்தளித்து, பரிசுகளை வழங்கி, தகுந்த மரியாதை செய்து வழியனுப்பி வைத்தார்.

நீங்கள் உண்மையையேய பேசுவதாயிருந்தால், எதையுமே நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமேயில்லை.

சிலா், அந்தப் பூனையிடம் நேர்காணலுக்காகச் (Interview) 'அந்த பெரிய எலியைக் கொன்றாய் ? அரசராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை, படைத்தலைவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை, அரண்மனை பூனையாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. உன்னால் எப்படி இதைச் சாதிக்க முடிந்தது?' எனக் கேட்டனர்.

அந்தப் பூனை, தெளிவாகப் பதிலளித்தது: ''நான் என்ன, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நான் ஒரு பூனை. எலிகளைக் கொல்வது என் சுபாவம் ? ''

அவ்வளவுதான்! ஒரே வார்த்தை! 'நான் ஒரு பூனை. என்னுடைய சுபாவம் எலிகளைக் கொல்வது. இதற்கிடையில் எதுவும் இல்லை.'

நம் மனம்தான் எல்லாவற்றையும் பெரிதாக்குகிறது. ஒரு எளிமையான கூற்று. 'நான் ஒரு பூனை. எலிகளைக் கொல்வது என்னுடைய சுபாவம். இதில் அதிசயப்படுவதற்கு ஒன்றுமே இல்லை!' இந்தக் கூற்றே எல்லாவற்றையுமே சொல்லிவிட்டது! எலியைக் கொன்றதிலே என்ன அதிசயம் இருக்கிறது ? அதுதான் இயற்கை.

அந்தப் பூனை, தன்னுடைய இயல்பைப் புரிந்துகொண்டு அதற்கு மதிப்பளித்தது. அதனுடைய இயல்பினாலேயே அதனைச் செய்ய முடிந்தது.

ஆனால், நாம் என்ன செய்கிறோம் ? நம் நண்பரை சந்திக்கச் செல்லும்போதுகூட, ஒரு குறிப்பைத் தயார்செய்கிறோம். நம்முடைய இயல்பை நாமே நம்புவதில்லை. நாம் ஆன்மிகவாதிகள், நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நாம் நம்புவதில்லை.

உங்களுடைய இயல்பே. உங்களை ஆனந்தத்திலேயே வாழச்செய்யும்

நாம் எப்போதுமே நமது சொந்த இயல்பை நம்புவதில்லை. எதையும் சந்திப்பதில் நாம் நம்பிக்கையே வைப்பதில்லை. அந்தப் பூனை சொன்னதைக் கவனித்தீர்களா? 'நான் ஒரு பூனை, என் இயல்பே எலிகளைக் கொல்வது ! அவ்வளவுதான். சிறப்பாக ஏதோவொன்று தேவையில்லை. எந்தவொரு நுட்பத்துக்கும் அவசியமில்லை. எந்தவொரு பயிற்சிக்கும் அவசியமில்லை. என்னுடைய இயல்பு எலிகளைக் கொல்வதே. அதுபோதுமே எனக்கு!'

அதைப்போலவே, உங்களுடைய இயல்பே, உங்களை ஆனந்தத்திலேயே வாழச்செய்ய முடியும். உங்களுடைய இயல்பே அந்த இறைசக்தியிடம், தெய்விகத்திடம் சரணாகதி செய்யவைத்துவிடும்.

ஆனால், உங்களுடைய கட்டுறுமன அமைப்பும், செயலாற்றும் முறையும் எல்லாவற்றையும் சிக்கலாக்கிவிடுகிறது. சிக்கலாக்கிக் கொள்ளும் கலையில் கைதேர்ந்தவர்களாகி விடுகிறீர்கள். உங்களுடைய மனைவியிடம் பேசுவதென்றாலும்கூட, அவரிடம் என்னென்ன பேச வேண்டும் என்பதற்கான வார்த்தைகளையும் வசனங்களையும் அலுவலகத்திலிருந்து செல்லும்போதே தயார்செய்து கொள்கிறீர்கள்.

இன்னொரு அழகான விஷயம்: நீங்கள் உண்மையைப் பேச வேண்டுமென்றால், எதையுமே நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமேயில்லை. நீங்கள் எப்போதுமே உண்மையே பேசுவதாயிருந்தால், உங்களுக்கு எந்த பிரச்சினைகளும் இருக்காது.

பலரும் என்னைக் கேட்பதுண்டு: ஸ்வாமிஜி, என்னுடைய ஞாபக சக்தியை அதிகரிக்க தாங்கள் உதவ முடியுமா? மக்கள் ஏன் அதிக ஞாபக சக்தியை விரும்புகிறார்கள் ?

இது எதற்காக என்று நாம் ஆழ்ந்து பார்க்கத் தோமானால், சென்ற முறை நாம் என்னென்ன பொய்களைப் பேசினோமோ அவற்றையெல்லாம் ஞாபகம் வைத்துக்கொள்ளவே, நாம் ஞாபக சக்தியை விரும்புகிறோம் !

நம்முடைய வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையான ஞாபக சக்தியை, ஏற்கெனவே கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிறார்.

உண்மையையே பேசுவதாயிருந்தால், நமக்கு அதிக ஞாபக சக்தி தேவைப்படாது. நம்முடைய வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையான ஞாபக சக்தியை, ஏற்கெனவே கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிறார். ஆனால், நம் பொய்களை ஞாபகம் வைத்துக்கொள்ளவே, அதிக ஞாபக சக்தி தேவை என்று நினைக்கிறோம் !

நாம் தொடர்ந்து பொய்களையே சொல்வதாயிருந்தால், எல்லாப் பொய்களையும் - எங்கு, எப்போது, யாரிடம் எந்த பொயைச் சொன்னோம் என்பதை நாம் ஞாபகம் வைத்துக்கொண்டே ஆக வேண்டும். நமக்கு ஞாபக சக்தியே அவசியமில்லை. நாம் உண்மையின் அடிப்படையில் வாழ்ந்தோமென்றால், நம் வாழ்க்கையை வாழ்வதற்கு குறிப்பு எதுவும் அவசியமேயில்லை.

'எனது' என்னும் கருத்தே 'நான்' என்னும் கருத்தை உருவாக்குகிறது

இரண்டாவது, 'எனது' என்பதைச் சரண் செய்வது

இங்குதான், மிகப்பெரிய பிரச்சினை வருகிறது. 'எனது' என்றால் உடைமைத்தன்மை. நம்மிடமிருப்பதை 'எனது' என்று சொந்தம் கொண்டாடும் தன்மையையே உடைமைத்தன்மை (possessiveness) என்கிறோம்.

நம்மால், நம் மனத்தைக்கூட சரணாகதி செய்துவிட முடியும், ஆனால், நம் உடைமைத்தன்மையை அவ்வாறு செய்துவிட முடிவதில்லை.

நம் அஹங்காரத்திலிருந்தே உடைமைத்தன்மை தோன்றியதாக நாம் நினைக்கிறோம். ஆனால், அதற்கு மாறாக தருத்ர சால்கிறம் சொல்கிறது: உங்களுடைய உடைமைகளை அடிப்படையாகக் கொண்டே, உங்கள் அஹங்காரம் அமைகிறது !

இது ஒரு புதுமையான அறிவிக்கை. ஆனாலும் நான் அதைக் கவனமாக ஆராய்ந்து பார்த்தேன். ஆம், அது உண்மைதான்! 'எனது' என்பதின் பக்கப் பொருளே (byproduct) அஹங்காரம். நீங்கள், 'எனது' என்று எதையெல்லாம் நினைக்கிறீர்களோ, அதிலிருந்துதான் உங்களுடைய 'நான்' என்னும் அடையாளம் பிறக்கிறது. 'எனது' என்னும் கருத்துதான் 'நான்' என்னும் கருத்தையே உருவாக்குகிறது.

அஹங்காரத்தை மரத்திற்கு ஒப்பிட்டால், 'எனது' என்பதை வேர்களுக்கு ஒப்பிடலாம். 'எனது' என்னும் வேரிலிருந்தே அஹங்காரம் என்னும் மரம் வளரத் துவங்குகிறது. உங்கள் 'எனது' என்பது வளரும்போது, அதாவது உங்கள் உடைமைகள் பெருகும்போது, நீங்களும் விரிவடைவதாக உணர்கிறீர்கள், நீங்கள் திடமாகிவிடுகிறீர்கள், நீங்கள் வேறொருவராக மாறிவிடுகிறீர்கள். நீங்கள் சுதந்திரமடைந்துவிட்டதாக உணருகிறீர்கள்.

ஆனால், இச்சுதந்திரம் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரமே தவிர, இன்ப - துன்பம் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் அல்ல.

ஆம். சுகபோகம் இருக்கிறது உண்மைதான். உங்களிடம் பணமிருந்தால், கார், வீடு என பலவற்றைச் சொந்தமாக வைத்துக்கொள்ளலாம். தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. ஆனால், அவையெல்லாம் துயரத்துக்கும், துயரத்துக்கும் இடையே ஆன வாய்ப்பே தவிர, துயரத்திற்கும், மகிழ்ச்சிக்கும் இடையேயான வாய்ப்பு அல்ல ; அதாவது இந்தத் 'துயரம்' வேண்டுமா அல்லது அந்தத் 'துயரம்' வேண்டுமா என்று வேண்டுமானால் நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாமே தவிர, இந்தத் 'துயரம்' வேண்டுமா அல்லது அந்த 'மகிழ்ச்சி' வேண்டுமா என்று தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு அல்ல.

'நான்' - 'எனது'களை விடுவதன் மூலமே, நாம், 'துயரம்' வேண்டுமா அல்லது 'மகிழ்ச்சி' வேண்டுமா என தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரத்தைப் பெற முடியும். 'எனது' என்னும் உடைமை குணத்திலிருந்து அது நிகழ்வதில்லை. உங்களுடைய உடைமைகளை நீங்கள் இன்பமாக அனுபவிக்கும்பொழுதுகூட, அந்த இன்பத்தின் அடி ஆழத்தில், 'இவற்றை நான் இழந்துவிடுவேனோ' என்கிற ஒரு பயம் இருக்கவே செய்கிறது. இந்த பய உணர்வு, அவற்றை இன்பமாக அனுபவிக்க உங்களை அனுமதிப்பதில்லை.

உடைமைக்குணம் அற்ற ஒருவர், தம்முடைய உடைமைகளை இன்னும் ஆழமாக இரசிப்பதையும் அனுபவிப்பதையும் நான் பார்த்திருக்கிறேன். ஏனெனில், அவரிடம் 'இவற்றை நான் இழந்துவிடுவேனோ' என்கிற பயம் இருப்பதில்லை.

செல்வம், இரண்டுவித அம்சங்கள் கொண்டதாக இருக்கிறது. ஒன்று, 'எனது' என்பதை அடிப்படையாகக் கொண்ட செல்வம். இதற்கு, அதிபதி குபேரன். குபேரன் என்றால் பொருளுக்கு உடைமையாளர். ஆனால், அதை ஒருபோதும் அனுபவிக்காதவர் என்று பொருள்.

உதாரணத்திற்கு, சம்பிரதாய முறைகளில் வாழ்கின்ற முதியவர்கள், தங்களிடம் எல்லாவகை செல்வங்களும் இருந்தாலும், அவற்றை அனுபவிக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி என்னுடைய கிராமத்திலேயே நடந்திருக்கிறது. நானே பார்த்திருக்கிறேன்.

'நான்' – 'எனது'களை விடுவதன் மூலமே, நாம், 'துயரம்' வேண்டுமா அல்லது 'மகிழ்ச்சி' வேண்டுமா என தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரத்தைப் பெற முடியும்.

நான் பிறந்து வளர்ந்த வீட்டிற்கு சில வீடுகள் தள்ளி ஒரு வயதான பாட்டி வசித்து வந்தார். அவர், சிறுவனான என்னை அழைத்து, அத்தெருக்கோடியில் இருக்கும் பெட்டிக் கடையில் கொஞ்சம் புகையிலை மட்டையை வாங்கிவரச்சொல்வார்.

ஆனால் அவர், அதற்கான பணத்தைத் தந்ததில்லை, என் தந்தையிடமே பணம் பெற்றுக்கொள்ளுமாறு நானும் அதேபோல் பணம் பெற்று, புகையிலையை வாங்கிப் பாட்டியிடம் கொடுத்துவிட்டு வருவேன். நானும், 'அந்தப் பாட்டி ஒரு ஏழை' என்றே நினைத்துக்கொண்டேன்.

அவர் வசித்த வீட்டில் ஒரு பெரிய கிணறு இருந்தது. மற்ற கிணறுகளிலெல்லாம் நீர் வற்றி வறண்டுபோனாலும், அவருடைய வீட்டு கிணற்றில் மட்டும் நீர் இருக்கும். ஆனாலும், உடைமைக்குணம் அற்ற ஒருவரோ தம்முடைய உடைமைகளை ஆழமாக இரசிக்கவும், அனுபவிக்கவும் முடியும்.

வேறு எவரையும் அந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க விடமாட்டார், அவர் அந்தளவுக்கு எனது என்னும் குணம் கொண்டவராக இருந்தார்.

ஒருமுறை, கிராமத்து வைத்தியருக்கு ஒரு அவசர அகால வைத்தியத்திற்காக, கொஞ்சம் கிணற்றுத் தண்ணீர் தேவைப்பட்டது. அதற்கும்கூட அந்தப் பாட்டி தண்ணீர் எடுக்க அனுமதிக்கவில்லை.

திடீரென ஒரு நாள் அந்தப் பாட்டிக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அதே வைத்தியர் பார்க்க வந்திருந்தார். அப்பொழுது பாட்டியிடம் அவர், 'நீங்கள் அன்று, ஒரு அவசரத் தேவைக்காகக்கூட தண்ணீர் கொடுக்கவில்லை. இப்போது அந்தத் தண்ணீரை உங்களுடன் எடுத்துக்கொண்டு போக முடியுமா?'' என்று கேட்டார். அந்த சமயத்திலும்கூட அவர் தம்முடைய தவற்றை உணரவேயில்லை. அவர், தம் உடைமைத்தனத்தை, 'தவறு' என்றே உணரவில்லை, வருந்தவுமில்லை.

அன்றே அவர் இறந்தும்விட்டார். இறுதி சடங்குகளுக்குப் பிறகு, அவர் படுத்திருந்த கட்டிலுக்குக் கீழே ஒரு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பெட்டி நிறைய தங்கமும், பணமும் கொட்டிக்கிடந்தன. அவற்றை அவர் ஒருபோதும் அனுபவித்ததில்லை.

அப்படிப்பட்ட மக்கள் சேகரிப்பதில்தான் திருப்தியடைகிறார்கள். அவற்றை தங்களிடம் வைத்திருக்கும்பொழுது, தங்களை யாரோவாக உணருகிறார்கள்.

இரண்டாவது, உடைமை உணர்வற்ற செல்வம். 'அபரிமிதம்'; இங்கு, செல்வம் இருக்கும், ஆனால், உடைமைத்தனம் இருக்காது. அப்படியிருக்கும்பொழுதுதான், ஒன்றை மேலும் அதை மிகுந்த சந்தோஷத்துடன் அனுபவிக்கவும் செய்வீர்கள்! உண்மையிலேயே, உங்கள் வாழ்க்கையை வாழ்வீர்கள்.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, செல்வச் செழுமையைக் குறிப்பவர். 'செல்வச் செழுமை' என்றால், உங்களுக்குச் சொந்தமாகப் பல பொருட்கள் இருக்கும். ஆனால், அதை அனுபவிக்க மாட்டீர்கள் என்பதுதான் பொருள்.

இப்போது நாம், குபேரத்தன்மையில் இருக்கின்றோமா அல்லது இலட்சுமித்தன்மையில் இருக்கின்றோமா என்பதை ஆராய்ந்தறிந்து கொள்ளலாம்.

ஒரு சின்ன கதை

இரயிலில் பயணம்செய்துகொண்டிருந்த ஒரு பயணி, தம்முடைய பெட்டிகளைத் தலைமேல் வைத்துச் சுமந்துகொண்டிருந்தார்.

சகபயணி ''ஏன், பெட்டிகளை நீங்களே சுமந்துகொண்டிருக்கிறீர்கள்!'' என்று கேட்டார்.

அதற்கு அவர், ''இல்லை, அது இரயிலுக்குப் பாரமாகிவிடும்!'' என்றார்!

எப்படியாயினும், அவருடன் சேர்த்து, அவருடைய பெட்டிகளையும் இரயில்தான் சுமக்கிறது என்பதை அம்மனிதர் புரிந்துகொள்ளவில்லை.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், உங்களுடைய மொத்த 'நான்' -'எனது'களைத் தெய்விகமே கவனித்துக்கொள்கிறது. அது, அதனுடைய வழியில் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்கிறது. ஆனால், நாம்தான் நம் அஹங்காரத்தின் காரணமாக, எல்லாத் தலைவலிகளையும், எல்லாச் சுமைகளையும், நம் தலைமீது சுமந்துகொண்டிருக்கிறோம்.

ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது, பின் ஏன் சுமையைக் கீழே இறக்கி வைத்துவிட்டு நிம்மதியாக இளைப்பாறக்கூடாது? உறங்கவாவது நேரம் கிடைக்குமல்லவா? உங்களுக்கும் நல்ல ஓய்வு கிடைக்கும். ''

எப்படியோ, இரயில் தன்னுடைய இலக்கைச் சென்றடைந்துவிடும். உங்கள் பெட்டி படுக்கைகளை நீங்கள் சுமந்துகொண்டிருந்தாலும், அவற்றைக் கீழே இறக்கி வைத்திருந்தாலும், அது, தான் எந்த நேரத்திற்குப் போய்ச்சேர வேண்டுமோ, அந்த நேரத்திற்குத்தான் போய்ச் சேரும், அது அதற்கான நேரத்தை எடுத்துக்கொள்ளத்தான் போகிறது.

ஜென் கூற்று ஒன்று இதை அழகாக விளக்குகிறது. 'நீங்கள் எதையாவது மெதுவாகச் செய்ய வேண்டுமென விரும்பினாலோ அல்லது செய்யவே வேண்டாமென விரும்பினாலோ, நீங்கள் அதை எவ்வளவு அவசரமாகச் செய்ய முடியுமோ அவ்வளவு அவசரப்பட்டு செய்யுங்கள்.

அவசரப்படுவதனால், நீங்கள் தவறுகளை செய்ய மாட்டீர்கள்; ஆம், அது உண்மையே, ஆனால் மடத்தனமான செயல்களைச் செய்துகொண்டிருப்பீர்கள்!

நீங்கள் தளர்வான இருக்கும்போது, தெய்விகத்தின் காலடியில் சரணாகதி செய்யும்போது, உங்களுடைய 99% சக்தியைச் சிறந்தமுறையில் ஆக்கப் பூர்வமாகச் செலவிடுவீர்கள், அதுவரை உங்களுடைய சக்தியைத் தேவையற்ற விஷயங்களுக்காக வீணாக்கிக்கொண்டிருப்பீர்கள்.

உங்களுடைய மொத்த 'நான்' - 'எனது'களைத் தெய்விகமே கவனித்துக் கொள்கிறது

ஒருமுறை நான், 'கடவுளை அறிவது எப்படி' என்ற புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது. அதன் ஆசிரியர் ஆராய்ந்து வெளியிட்டிருக்கும் தகவல் இதுவே:

''எந்தவொரு நீதிமன்ற சட்டமும் 'கடவுள் இருக்கிறார்' என்பதை நிரூபிக்க முடியாது. இருந்தாலும்கூட, 99% மக்கள் 'கடவுள் இருக்கிறார்' என்று நம்புகிறார்கள். அதன் விளைவாக அவர்களுடைய 'படைப்பாற்றல்' பிரமிக்கத்தக்க வகையில் முன்னேற்றமடைகிறது. அவர்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சிமிக்கதாகவும் ஆனந்தமயமாகவும் இருக்கிறது. அவர்களுடைய வாழ்க்கை இயல்பாகச் செல்கிறது. எப்படி ?

ஏனெனில், அவர்கள் கவலைப்படுவதில் தங்கள் சக்தியை செலவழிப்பதை நிறுத்திவிட்டார்கள். அதற்குப் பதிலாக அவர்கள் சரணடைகிறார்கள். ''

ஆம், தொடர்ச்சியான கவலைகள் உங்கள் வாழ்க்கையில் மன அழுத்தங்களைத்தான் உருவாக்கும். நீங்கள் சரணடையும்பொழுது, தெய்விகத்தினிடம் நம்பிக்கை கொண்டு, தளர்வாக நிம்மதியாக இருக்கும்பொழுது, நீங்கள் கொண்டிருக்கும் சக்தியெல்லாம், நேர்மறைச் செயல்கள் மற்றும் புதிது புதிதாகப் படைக்கும் திறனை நோக்கித் திரும்பிவிடுகிறது.

99% கவலைகள் நிஜமாவதே இல்லை. அவை நிகழ்வதே இல்லை. நிகழும் அந்த 1%கூட உங்களுக்கு நன்மையளிப்பதாகவே அமைகிறது.

நீங்கள் 'நான் என்பதை சரணாகதி செய்யும்பொழுது, உங்களுடைய துன்பங்களெல்லாம் மகிழ்ச்சியாகவும், ஆனந்தமாகவும் மாற்றம் பெறுகின்றன.

நீங்கள் 'எனது' என்பதை சரணாகதி செய்யும்பொழுது, உங்கள் செல்வச்செழிப்பு, செல்வமாகிவிடுகிறது.