சரணடையும்பொழுது நீங்கள் மறுபடியும் பிறக்கிறீர்கள்
சரணாகதி என்பது ஒரு அழகான வார்த்தை! அது உங்களை எளிதில் ஏமாற்றிவிடும். நான் கடவுளிடம், என் குருவிடம் எல்லாவற்றையும் சரணாகதி செய்திருக்கிறேன். அவர் என்னை பார்த்துக்கொள்வார் என்று நாம் எப்போதுமே சொல்வோம். ஆனால், நம்முடைய சரணாகதியெல்லாம் வெறும் உதட்டளவில் மட்டுமே இருக்கும். அது, நம் மேல் தோல் அளவிலேயே உள்ளது. உண்மையிலேயே நீங்கள் சரணாகதி செய்திருக்கிறீர்களா, இல்லையா என்பதை தெரிந்துகொள்ள, ஒரு சிறு கீறல் போட்டால் போதும்.
நீங்கள் உண்மையிலேயே உங்களுடைய 'நான்' ஐ சரணாகதி செய்யும்பொழுது, உங்கள் மன அமைப்பு முற்றிலுமாக கலைந்துவிடுகிறது. அகங்காரமயமாக இருக்கும் மனம் கடவுள்மயமாகிறது. அகங்காரமயம் என்றால் கிடசித்தமில்லா விநோத மனப்பாங்குடையதாகிறது.
கடவுளிடம் உங்கள் 'நான்' ஐ சரணாகதி செய்யும்பொழுது, உங்கள் அகங்காரத்தை சரணாகதி செய்யும்பொழுது, உங்கள் மனத்தை சரணாகதி செய்யும்பொழுது, உங்கள் சிந்தனை அமைப்பை சரணாகதி செய்யும்பொழுது,
உங்களுடைய 'நான்' ஐ சரணாகதி செய்யும்பொழுது, அகங்காரமயமாக இருக்கும் மனம் கடவுள்மயமாகிறது.
உங்களுள் என்றும் நிலையான ஆனந்தம் பொங்கிக் கொண்டேயிருக்கும். ஏனென்றால், கடவுள் என்பது நிலையான ஆனந்தம், நித்ய ஆனந்தம். உங்கள் மன அமைப்பை சரண் செய்யும்பொழுது, உங்களுள், வாழ்வும் உற்சாகமும் ஆனந்தமும் ஊற்றெடுக்கின்றன.
குழந்தைகள், குறிப்பாக ஏழு வயதிற்குட்பட்ட குழந்தைகள் எப்பொழுதும் ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும், குதித்துக்கொண்டும் இருப்பார்கள். அதுவரை அவர்களுக்கு, மனம் என்று நாம் அழைக்கும் ஒரு விஷயம் இருப்பதில்லை. அதற்குப்பிறகே, சமுதாயக் கட்டுறு மனப்பாங்குகள் அவர்களுக்குள் மனம் என்பதை உருவாக்குகின்றன.
எப்பொழுதாவது நீங்கள் அழகில்லாத குழந்தை என்று ஒன்றைப் பார்த்திருக்கிறீர்களா? மாட்டீர்கள். எல்லாச் சம்பிரதாயங்களிலும், கலாச்சாரங்களிலும் எல்லாப் போர்களும், ஏழ்மையும் மிகுந்த எதியோப்பியா போன்ற நாடுகளில் கூட குழந்தைகளை நீங்கள் பார்க்க முடியாது. அங்குள்ள குழந்தைகள் சத்தற்றவர்களாகவும் மெலிந்தவர்களாகவும் இருக்கலாம். ஆனால் அவர்கள் அசிங்கமாக இருப்பதில்லை. எப்போதும் குழந்தைகளிடம் ஒரு அழகு மிளிரும்.
நீங்கள் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அல்லது கடவுளின் காலடியில் சரணடையும்பொழுது இரண்டாவது பிறப்பை எடுக்கிறீர்கள்.
அதேபோல் அழகாக உள்ள ஒரு மனிதனையாவது பார்த்திருக்கிறீர்களா? இல்லை. ஏனென்றால், மனம் என்பது உள்ளே புகுந்துவிடுகிறது.
நாம் கட்டுறுமனப்பாங்கு இல்லாத வரை, நமக்கு மனம் என்ற ஒன்று இருப்பதில்லை. நமக்கு அகங்காரம் என்ற ஒன்று இருப்பதில்லை. நம்மைச் சுற்றிலும் ஒரு தனிப்பட்ட அழகு மிளிரும். நாம் மகிழ்ச்சியும் ஆனந்தமும் கொண்டிருப்போம். நம்மிடம் கள்ளம் கபடமற்ற தன்மையும் எளிமையும் குடிகொண்டிருக்கும். சரணடைந்துவிட்ட ஒரு மனிதர், மறுபடியும் ஒரு குழந்தையாகிவிடுகிறார். அதனால் தான், ஸம்ஸ்க்ருதத்தில், ஒரு அழகான சொல் இருக்கிறது, தீவிஜ - மீண்டும் பிறந்தவர்.
நம்முடைய முதல் பிறப்பு, தாய் தந்தையரிடமிருந்து நிகழ்கிறது. நமது இரண்டாவது பிறப்பு, நமது குருவிடமிருந்தும், கடவுளிடமிருந்தும் நிகழ்கிறது.
நீங்கள் உடல் ரீதியாகப் பிறப்பதை, நீங்கள் தூல உடலில் நுழைவதை முதல் பிறப்பு என்று சொல்கிறோம். நீங்கள் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM அல்லது கடவுளின் காலடியில் சரணடையும்பொழுது இரண்டாவது பிறப்பை எடுக்கிறீர்கள். பின்பு நீங்கள் தீவிஜ என்றழைக்கப்படுகிறீர்கள்.
நீங்கள், நான் எனும் மன அமைப்பை சரணாகதி செய்யும்பொழுது, அளவில்லாத இன்பத்தை, மகிழ்ச்சியை, ஆனந்தத்தை உணர்கிறீர்கள். இன்பம், மகிழ்ச்சி, ஆனந்தம் இவை வேறு வேறு அடுக்குகள்.
பொருட்களைத் தொட்டு, நுகர்ந்து, ருசித்து அனுபவிப்பதால் நிகழ்வது இன்பம்.
ஒரு அழகான மலை, பனிப்பொழிவு, சமூத்திரம் அல்லது காடுபோன்ற இயற்கைக் காட்சிகளைப் பார்க்கும்பொழுது ஏற்படுவது மகிழ்ச்சி.
காரணமே இல்லாமல் பெருகுவது ஆனந்தம். இது உங்கள் உள் இருப்பிலிருந்து நிகழ்வது!
நீங்கள் உங்கள் அகங்காரத்தை சரணாகதி செய்யும்போது, உங்கள் மனம் உயிர்ப்புடனும், தன்னிச்சையான மகிழ்ச்சியுடனும் திகழ்கிறது.
இப்பொழுது நீங்கள் ஒவ்வொரு கணமும், அன்றைய நாளை வாழ்வதற்கான திட்டத்தை வகுத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பெரிய, பெரிய பட்டியல்களைப் போடுகிறீர்கள்; பெரிய, பெரிய அட்டவணைகளைத் தயார்செய்கிறீர்கள்.
உங்கள் நண்பரைச் சந்திக்கச் சென்றால்கூட, நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்கள் நண்பரிடத்தில் நீங்கள் என்ன பேச வேண்டும், அவரிடத்தில் உங்களை எப்படிக் காட்டிக்கொள்ள வேண்டும் என, உங்கள் மனதளவில் உங்களைத் தயார்செய்து கொள்கிறீர்கள். நீங்கள் தயார் செய்யாத ஒரு விஷயத்தைப் பற்றிய கேள்வி கேட்கப்படும்பொமுது, நீங்கள் மொத்த விஷயத்தையும் குழப்பிவிட்டு விடுகிறீர்கள். அதனால் தான், நீங்கள் ஒரு எதிர்பாராத சூழ்நிலையைச் சந்திக்க திராணியற்றவர்களாக இருக்கிறீர்கள்.
வசனங்களை வைத்துக்கொள்கிறீர்கள். அதையே பேசி நடித்துவிட்டு வருகிறீர்கள். தயார் செய்யப்பட்ட வசனங்களைக் கேடயமாகப் பயன்படுத்தி யதார்த்த நிலைகளிலிருந்தும் உங்களைப் பாதுகாத்துக்கொள்கிறீர்கள்.
ஆனால் நீங்கள் சரணடையும்பொழுது, எந்தவித குறிப்பையும் வைத்துக் கொள்ளாமலேயே செல்கிறீர்கள்.
காரணமே இல்லாமல் பெருகுவது ஆனந்தம். இது உங்கள் உள் இருத்தலிலிருந்து நிகழ்வது!
எப்போது அப்படிப்பட்ட எளிமையான வழியில் செல்கிறீர்களோ, அப்போது அசாத்தியமான தைரியமும் நம்பிக்கையும் உங்களுள் குடி கொள்கிறது.