KAILASA Library/பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)/குருவை நீங்கள் தேடத் தேவையில்லை!Sign in
பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)

குருவை நீங்கள் தேடத் தேவையில்லை!

இனி மூன்றாவது, 'நான்', 'எனது' என்னும் இரண்டையுமே சரணாகதி செய்துவிடுவது:

'நான் - எனது என்ற இரண்டையும்' என்று சொல்லும்பொழுது, நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்றால், உங்களுடைய மொத்த வாழ்க்கையையுமே எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் சரணாகதி செய்துவிடுவதையே குறிப்பிடுகிறேன்.

நீங்கள் அப்படிச் செய்துவிடும்பொழுது உங்களுடைய மொத்த வாழ்க்கையுமே உணர்வுமாற்றம் பெறுகிறது. அது முற்றிலும் வேறானதாக மாறிவிடுகிறது.

நீங்கள் நிரூபிக்க இனி எதற்காகவும் கவலைப்படவும் மாட்டீர்கள், துன்பப்படவும் மாட்டீர்கள். உண்மையாகவே உங்களுக்கு கவலைகளும் இருக்காது அல்லது துன்பங்களும் இருக்காது.

நீங்கள் தெய்விகத்தினிடம் நம்பிக்கை கொள்ளும்பொழுது, நீங்கள் கவலைப்பட்டு வீணாக்கிக்கொண்டிருக்கும் சக்தியெல்லாம் படைக்கும் திறனை நோக்கித் திரும்பிவிடுகிறது.

நீங்கள் யாரிடம் சரணடைகிறீர்கள் என்பது ஒரு பொருட்டே இல்லை. நான் அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால், 'யாரிடம்' என்பதைப் பற்றி நான் எதுவுமே சொல்லவில்லை. நீங்கள் கடவுளிடம் சரணடைகிறீர்களா அல்லது உங்கள் குருவினிடம் சரணடைகிறீர்களா என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. சரணாகதி - அதுவே உங்களுள் உணர்வுமாற்றம் ஏற்படுத்துவதற்கான வல்லமை கொண்டதாக இருக்கிறது.

ஒரு சின்ன கதை

ஒரு மனிதன், ஒரு குருவைத் தேடி அவரிடம் சரணடைய முடிவுசெய்தான். ஆனால், குருவை எப்படி, எங்கு கண்டுபிடிப்பது ? அவன் நவீன கால மனிதனாயிருந்தால் உடனே இணையதளத்தினுள் சென்று, எத்தனைவிதமான குருமார்கள் இருக்கிறார்கள் என்று தேடி இருப்பான். ஆனால் இணையதளங்கள் எதுவும் உலவவில்லை. அதனால் அவன் எங்குச் செல்ல முடியும் ? ஆகவே அவன் காட்டிற்குச் சென்றான். அங்கு ஒரு பாதையோரத்தில் அமர்ந்து கொண்டான். 'இந்தப் பாதை வழியாக முதலில் யார் வருகிறாரோ, அவரிடம் நான் சரணடைந்துவிட வேண்டும்' என்று தீர்மானித்துக்கொண்டான்.

நீங்கள் கடவுளிடம் சரணடைகிறீர்களா அல்லது உங்கள் குருவினிடம் சரணடைகிறீர்களா என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.

அவ்வமயம் துரதிர்ஷ்டவசமாக, முதல் நபராக, ஒரு திருடன் வர நேர்ந்தது. உடனே இந்த மனிதன் துள்ளிக்குதித்தெழுந்து, அந்தத் திருடனின் காலைப் பிடித்துக்கொண்டு, ''ஓ என்னுடைய குருவே, நீங்களே என் கடவுள். நீங்களே என்னைக் காப்பாற்ற வந்துவிட்டீர்கள். நான் தங்களிடமே சரணடைந்து விட்டேன். தயவுசெய்து என்னை ஏற்று, அருள்புரியுங்கள்,'' என்று இறைஞ்சினான்.

அந்தத் திருடனோ, அப்போதுதான் அரண்மனையில் திருடிவிட்டு, தப்பியோடி வந்து கொண்டிருக்கிறான். அரண்மனைக் காவலர்கள் எந்நேரத்திலும் வந்து தன்னைப் பிடித்துவிடக்கூடும் என்பதால், அங்கிருந்து வேகமாகத் தப்பி ஓடவே விரும்பினான். ஆகவே அவன், ''என்னைவிடு, நான் உன் குரு இல்லை. என்னைப் போகவிடு,'' என்று கத்தினான்.

ஆனால் அம்மனிதனோ, ''இல்லை இல்லை, நீங்கள்தான் என் கடவுள், என்னைக் காப்பாற்றுவதற்கென்றே வந்திருக்கிறீர்கள், இப்படியெல்லாம் பேசாதீர்கள், என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள், நான் உங்களிடம் சரணடைகிறேன், ' என்று மன்றாடினான். அந்தத் திருடன், 'இப்போது நான் என்ன செய்வது? என்ன மாதிரியான நிலைமை இது ?' என்று திகைத்துப் போய் நின்றான். இவனிடமிருந்து எப்படியாவது தப்பித்துச் செல்ல வேண்டுமென நினைத்தான்.

இறுதியில், ''சரி, நான்தான் உன் குரு, இப்பொழுது நான் சொல்வதைச் செய். உட்கார், கண்ணை மூடு, நான் சொல்லும்வரை கண்களைத் திறக்காதே,'' என்று சொன்னான்.

அந்த மனிதனும், ''அப்படியே செய்கிறேன் குருவே,'' என்று சொல்லி, கண்களை மூடி அப்படியே அமர்ந்து விட்டான். திருடனும், 'இதுதான் சமயம்' என்றெண்ணி, அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.

அந்த மனிதனும், அன்று முழுவதும் கண்களை மூடி அமர்ந்திருந்தான், அந்த நாள் கடந்தது. மறுநாளும் கடந்தது. 'குரு சொல்லும்வரை கண்களைத் திறக்கப் போவதில்லை' என்பதில் கடும் உறுதியாக இருந்தான். அவனுடைய தைரியமும், மன வலிமையும், தீர்க்கமான முடிவும் அவ்வளவு பலம் வாய்ந்ததாக இருந்தது.

அச்சமயத்தில் சிவபெருமான் அவன் முன்னே தோன்றி, ''மகனே, உன்னுடைய சீரணாகதியால் நான் வெகுவாக மகிழ்ந்தேன். கண்களைத் திறந்து, உனக்கு என்ன வேண்டுமோ, அதைக் கேள்,'' என்றார்.

அம்மனிதன், தன் கண்களைத் திறக்காமலே ''இல்லை, இல்லை, நீங்கள் என் குரு அல்ல. என்னுடைய குரு வந்து சொன்னால் மட்டுமே, நான் கண்களைத் திறப்பேன்,'' என்ற சொல்லி, கண்களைத் திறக்க மறுத்து விட்டான்.

சிவபெருமான் சொன்னார், ''மகனே, நான் கடவுள், பூமிக்கு உனக்காக இறங்கி வந்திருக்கிறேன். இதை நீ அறியாமல் பேசுகிறாய். நீ, 'குரு என்று நினைத்திருக்கும் மனிதன் உண்மையில் ஒரு திருடன். நான் கடவுள், உன் மேல் கொண்ட கருணையால், உன் பக்தியை மெச்சி உனக்கு காட்சியளித்திருக்கிறேன். கண்களைத் திறந்து பார்.''

அந்த மனிதனோ, ''அவர் திருடனோ அல்லது கடவுளோ, அதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை. நான் அவரிடம் தான் சரணடைந்துள்ளேன். அவரைக் கொண்டுவரவேண்டும்,'' என்றான்.

சிவனே, அந்தத் திருடனின் உருவத்திற்கு மாறி, அவனுடைய குரலிலேயே பேசிய பிறகே, அம்மனிதன் கண்களைத் திறந்தான். சிவனும் அவனுக்கு ஆன்மிக விழிப்புத்தந்து ஆசீர்வதித்தார் எனக் கதை முடிகிறது.

நீங்கள் யாரிடம் சரணடைகிறீர்கள் என்பது ஜீவன்முக்கியை நீர்ணயிப்பதில்லை. உங்களுடைய சீரணாகதி தன்னமமேயே அதை நீர்ணயிக்கிறது.