குருவின் வார்த்தைகள், பெரும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கின்றன!
அர்ஜுனன், கிருஷ்ணரிடமிருந்து சத்தியங்களைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்க மட்டுமே விரும்பினார்.
சில நேரங்களில், என் முழு ஸத்ஸங்க உரையைக் கேட்ட பின்பு என் சீடர்கள், ஒரு நகைச்சுவையையோ அல்லது ஒரு கருத்தையோ இன்னொரு முறை சொல்லும்படி என்னிடம் கேட்டுக்கொள்வார்கள்! அவர்கள், மறுபடியும் அதைக் கேட்க விரும்புவார்கள்.
அர்ஜுனனும் அதேபோல, கிருஷ்ணரிடமிருந்து அந்த சத்தியங்களைத் திரும்பத் திரும்பக் கேட்பதற்கு விரும்புகிறான். ஒரு சீடருக்கு, குருவிடமிருந்து ஒருசில விஷயங்களைத் திரும்பத் திரும்பக் கேட்பது, பெரும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது.
குருவின் வார்த்தைகள் அனைத்தும் சக்தி வாய்ந்தவை. அந்த சத்தியங்கள் உங்களுள் ஆழமாக ஊடுருவிச்சென்று, உங்களை உணர்வுமாற்றம் பெறச்செய்யும். அவற்றின் ஆழத்தை நீங்கள் அறிவதில்லை : ஆனால், அவை உங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுவதே இல்லை.
அர்ஜுனன் சொல்கிறான், 'ஓ, வல்லமை மிகுந்தவரே, நான் துறவு மற்றும் துறவிகளின் ஆசிரம வாழ்க்கை முறை -இந்த இரண்டின் நோக்கங்களைப் பற்றி அறிந்துகொள்ள ஆவலாயிருக்கிறேன். ஓ ஹ்ருஷீகேசா, தயவுசெய்து, எனக்கு இந்த சத்தியங்களை விளக்குங்கள்.''
யாசிப்பவர் சந்நியாசியா அல்லது பிச்சைக்காரரா என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்பட்டால், பிச்சைக்காரரைக்கூட ஒரு சந்நியாசியாகவே பாவித்து நடத்துங்கள்.
கிருஷ்ணர் பதில் சொல்கிறார், ''பாரதா, இப்போது துறவைப் பற்றிய என்னுடைய தீர்ப்பைச் சொல்கிறேன். துறவு என்பது பலவகைப்படும். சில கற்றறிந்தோர், பலன்களை அடிப்படையாகக்கொண்ட செயல்களை விட்டுவிடுதலே 'துறவு' என்று சொல்கிறார்கள். சில கற்றறிந்தோர், செயல்களைச் செய்யலாம் ; ஆனால், அவற்றின் பலன்களை விட்டுவிடுதலே துறவு என்று சொல்கிறார்கள்.''
கிருஷ்ணரைப் போன்ற கருணை நிறைந்த ஒரு குரு எவரும் இல்லை. அவரே இறுதி. குரு. அவர் வெறும் உபதேசம் மட்டும் செய்யவில்லை. இது நம்புவதற்கு மிகக் கடினமான உபதேசம் என்றும், அதனால் இதை நம்புவதற்கு மக்களுக்குச் சிறிது காலம் தேவைப்படும் என்றும் அவருக்குத் தெரியும். அதனால் அவருடைய உபதேசங்களுக்கு வலுசேர்க்கும் சில கதைகளை நம் முன் வைக்கிறார்.
மீண்டும், புரியவைக்க முயல்கிறார். அவருடைய நிலையை எண்ணிப்பார்க்கும்போது, அவர் அர்ஜுனனுடைய நிலைக்கு தாழ்ந்து வர வேண்டிய அவசியமில்லை.
'இதுவே உண்மை உனக்குப் பிடித்தால் நீ இதைப் பின்பற்றலாம் இல்லையெனில் போர்க்களத்தை விட்டு வெளியேறலாம்' என்று அவர் சொல்லலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. அவர் மீண்டும், மீண்டும் அர்ஜுனனுடைய நிலைக்குக் கீழிறங்கி வந்து, சத்தியங்களைப் படிப்படியாக விளக்குகிறார்.
யாகம் மற்றும் ஹோமங்கள் போன்றவற்றை தூய விழிப்புணர்வோடு செய்யும்போது, அவை நம்மை பிரபஞ்ச சக்தியோடு இணைக்க உதவுகின்றன.
இறுதி சக்தியான பிரபஞ்ச கிருஷ்ணரே அனைத்து வித நூல்களையும், விதிமுறைகளையும் உருவாக்கியவர். அதனால் அவரிடமிருந்து வரும் விளக்கத்தையே இறுதி தீர்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்.