KAILASA Library/பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)/தியாகம் மனித குலத்தையே மேம்படச் செய்திரும்Sign in
பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)

தியாகம் மனித குலத்தையே மேம்படச் செய்திரும்

துறவின் எந்தவொரு செயல்முறையாக இருந்தாலும், அது எந்த உணர்விலிருந்து செய்யப்படுகிறது என்பதை அடிப்படையாக வைத்தே, அது எந்தவகையான துறவு என்பதை முடிவுசெய்ய வேண்டும்.

துறவு என்பது மூன்று வகைப்படும்:

  1. யாகம், 2) தர்மம், 3) தவம்

இவை ஆன்மிக உலகில் ஏற்கெனவே தூய்மையானவர்களையும், தூய்மைபெற்றவர்களையும் மேலும் தூய்மைப்படுத்துகின்றன.

'யாகம் செய்வதின் நோக்கமே, மனித குலத்தை தூய்மைப்படுத்தி அவர்களை ஆன்மிகப் பாதையில் உயர்வடைய வைப்பதுதான். அவை, தனி மனித சக்தியை பிரபஞ்ச சக்தியோடு இணைத்து வைக்கின்றன' என்ற புரிதல் மிக அவசியம் என்கிறார், கிருஷ்ணர்.

''மனித குலத்தின் மேன்மைக்காகச் செய்யப்படும் எந்தவொரு யாகத்தையும் நாம் விட்டுவிடலாகாது,'' அவர் அறிவுறுத்துகிறார். பொதுவாக, யஜ்ஞம் மற்றும் ஹோமங்கள் போன்று யாகமும் ஒருவித சமயச் சடங்கே என புரிந்து வைத்திருக்கின்றோம். வேத நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள இந்த அக்னிச் சடங்குகள், தெய்வங்களை மகிழ்விப்பதற்காக விழிப்புணர்வோடு செய்யும்போது, இந்த சக்திவாய்ந்த நுட்பங்களே நம்மை பிரபஞ்ச சக்தியோடு இணைக்க உதவுகின்றன.

வேள்வித்தீயில் பலி கொடுக்கப்படும் உயிர்களின் ஆன்மாக்கள் உயர்தளத்திற்கு எடுத்துச்செல்லப்படுகின்றன என்ற கருத்தின் அடிப்படையில், புராதன காலங்களில், வாழும் உயிர்கள்கூட இந்த வேள்விக் தீயில் பலி கொடுக்கப்பட்டன.

இந்த வேள்விகளைச் செய்தவர்கள், இந்த உடல் வெறுங்கூடே, இதைத் தீயிலிட்டாலும், ஆன்மா அழிக்க முடியாதது; இதன் மூலம் அந்த ஆன்மா தூய்மைப்படுத்தப்பட்டு, பரிணாம வளர்ச்சியில் ஒரு உயர்ந்த நிலைக்கு எடுத்துச்செல்லப்படுகிறது என்னும் ஒரு உயர் புரிதலோடும், விழிப்பணர்வோடும் அதைச் செய்தார்கள்.

இருப்பினும், இப்புரிதலற்ற இன்றைய இந்த நவீன உலகில் உயிர்ப்பலி பொருந்தாது. ஏனெனில், ஒரு விலங்கு பலியிடப்படுவதால் பரிணாமநிலையில் உயரும் என்று நம்புவதற்கு யாரும் தயாராயிருக்க மாட்டார்கள். இம்மாதிரியான யாகங்கள், அவற்றின் உள்ளார்ந்த அர்த்தத்தை இழந்து, அவை ஒரு வெறும் சடங்காக மட்டுமே நடத்தப்படும்போது, அவற்றில் வலியை மட்டுமே நம்மால் உணர முடியும்; அதன் நோக்கத்தை அல்ல.

இங்கு நீங்கள், கிருஷ்ணர் ஐயாயிரம் வருடங்களுக்கு நடைமுறை வழக்கங்களைப் பற்றி சொல்லியிருக்கிறார் அப்போதெல்லாம் யாகங்களை ஒரு விழிப்புணர்வோடுதான் செய்து வந்தார்கள் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

அந்தக் யாகங்கள் நடத்தப்பட்டன. அது எப்படி நடத்தப்பட்டதென்றால், அஸ்வமேத யாகம் நடத்த விரும்பும் அரசர், தாம் மதித்து அன்புடன் வளர்க்கும் ஒரு குதிரையைப் பிற நாடுகளுக்கு அனுப்பி வைப்பார். இக்குதிரையும் ஒவ்வொரு நாடாகச் சென்று, ஊடுருவிச் சென்று, புல்லை மேய்ந்து கொண்டு சுதந்திரமாக உலவும். அந்த நாட்டுக்குரிய அரசர் எதிர்ப்புக்காட்டாமல், தம் அங்கீகாரத்தை அளிப்பாரேயானால், அவர் அக்குதிரையை அனுப்பிய அரசரின் தலைமையை, பலத்தை ஒப்புக்கொண்டவராகிவிடுகிறார்.

வேத நூல்களில் சூரியனை அஸ்வமாக உருவகப்படுத்தி அதன்மீது தியானம் செய்யும் உள்ளுலக அஸ்வமேத யாகத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

ஆனால், அப்படிச் செய்யாமல், அக்குதிரையைச் சிறைப்பிடித்து வைத்துக்கொண்டால், அவர் யாகம் நடத்தும் அரசருடன் போர்புரியத் தயாராகிறார். அப்போரில், யாகம் நடத்தும் அரசர் வெற்றிபெற்று விட்டால், தோல்வியடைந்த அரசர், யாகம் நடத்தும் அரசருடைய ஆட்சியை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

அந்தக் குதிரை இப்படி நாடுதோறும் வலம் வருதலை முடித்துக் கொண்டு, தன் சொந்த நாடு திரும்பியவுடன், ஒரு அஸ்வமேத யாகம் நடத்தி அதை அந்த நெருப்பிலிட்டு, அதன் ஆன்மா பரிணாம வளர்ச்சியில் மேல்நிலையை அடையும்படி முடிப்பார்கள். அதை, அந்தக் குதிரைக்குத் தரப்பட்ட ஆசீர்வாதமாக நம்பினார்கள்; குதிரையைத் துன்புறுத்துவதாக அல்ல. அதை வெறும் ஒரு உயிர்ப்பலியாக அவர்கள் நினைக்கவில்லை. ஆனால், காலம் செல்லச் செல்ல அவையெல்லாம் மாறாகப் புரிந்துகொள்ளப்பட்டன. அவை இக்காலத்திற்கு ஒவ்வாதனவாகிவிட்டன.

இராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாஸங்களிலிருந்து, இம்மாதிரியான கதைகளை நாம் அறிந்துகொள்கிறோம். உபநிடதங்கள், இந்தச் சடங்குகளின் அர்த்தங்களை உருவகமாகக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கின்றன.

வேத நூல்களில் சூரியனை அஸ்வமாக உருவகப்படுத்தி, அதன்மீது தியானம் செய்யும் உள்ளுலக அஸ்வமேத யாகத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

பற்றற்ற வாழ்க்கையை வாழ்வதே துறவு

இப்போது நம் காலத்தில், யாகம் எனப்படுவது தன்னலமற்ற எந்தவொரு சேவையையும் குறிக்கும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, சேவையில் ஈடுபடும் பலரும், சேவையில் தங்கள் கவனத்தைச் செலுத்துவதைவிட, தங்களின் புகைப்படம் தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும் காண்பிக்கப்படுவதிலேயே அதிக ஆர்வங்காட்டுகிறார்கள்.

பிரதிபலனாக எதையுமே எதிர்பாராது செய்வதே சேவை; மறுநாள் செய்தித்தாளில் தம் புகைப்படம் வெளியாக வேண்டும் என்பதற்காக, சிரித்தமுகம் காட்டிக் கொண்டு செய்யும் ஒரு செயல் அல்ல; அது வியாபாரம் !

உண்மையான சேவை செய்பவர்கள், தாங்கள் செய்யும் சேவைகளைப் பிறர் அறியா வண்ணமே செய்துவருவார்கள். இதைத்தான், 'வலது கை கொடுப்பதை இடதுகை சொல்கிறார்கள். அப்போது மட்டுமே சேவையின் நோக்கம் நிறைவேறுகிறது.

இப்போது நம் காலத்தில், யாகம் எனப்படுவது தன்னலமற்ற எந்தவொரு சேவையையும் குறிக்கும்.

சேவை என்பது சில சிரமங்களையும், வலிகளையும் உள்ளடக்கியதாகவும், உங்களால் கொடுக்க முடியாத ஒன்றைக்கூட கொடுப்பதாகவும் இருக்க வேண்டும்! சேவை என்பது உண்மையானதாக இருக்க வேண்டுமானால், அது ஒரு தவமாக மாற வேண்டும். அது எளிமைத் தன்மைக்கு வழிவகுக்க வேண்டும்.

தவம் என்பது புலனின்பங்களைக் கட்டாயமாக தனக்குத்தானே தவிர்த்துக்கொள்வதாகும். அனைத்து ஆன்மிகப் பயிற்சிகளின் நோக்கமும் மனத்தையும், புலன்களையும் கட்டுப்படுத்துவதே. தவம் என்பது உள்முகமாகத் திரும்புவது; ஆனால், வேள்விகளும் சேவையும் வெளிப்புறமாக செய்யப்படுவது.

''இந்தச் செயல்களைப் பற்றில்லாமலும் பலன் எதிர்பாராதும் செய்ய வேண்டும்; அவை அனைத்தையுமே ஒரு கடமையாகக் கருதிச் செய்ய வேண்டும். இதுவே என் இறுதி கருத்து,'' என்று குரு தெரிவிக்கிறார்.

கிருஷ்ணர் இங்கு அவருடைய கருத்தைத் தருகிறார். இதற்கு முன்னர், மற்றவர்கள் துறவுக்கு கொடுத்த விளக்கங்களை அதாவது 'செயலையே விட்டுவிடுவதுதான் துறவு என்று சிலரும், செயலைத் துறக்கத் தேவையில்லை, பலனை மட்டும் துறந்தால் போதும், அதுவே துறவு என்று சிலரும் சொல்லியிருந்ததை விளக்கினார்.

இப்போது அவர் தம் கருத்தை வெளியிடுகிறார்: 'பற்றற்ற வாழ்க்கையை வாழ்வதே துறவு!

அது ஆன்மிகமோ அல்லது உலகியலான விஷயமோ, நீங்கள் ஒரு இலக்கு, நோக்கம் என்று எதையாவது வைத்துக்கொண்டு போராடிக் கொண்டிருக்கும்வரை, நீங்கள் நிம்மதியாக, குளுமையாக இருக்க முடியாது.

இதைப் பற்றி மிகத் தெளிவாக இருங்கள். வாழ்க்கையின் போக்கிற்குச் சரணடைந்தவர்கள், வாழ்க்கையின் ஓட்டத்தோடு இசைந்து செல்பவர்கள் உள் உலகம், வெளி உலகம் இரண்டையுமே ஒரே நேரத்தில் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். கிருஷ்ணர் இந்தப் பதினேழு அத்தியாயங்களில் எதைப் பற்றிப் பேசினாரோ, அதன் மொத்த சாரத்தை இப்போது தருகிறார். புலன்களையும் கட்டுப்படுத்துவதே.

சரணாகதி என்பதின் அர்த்தத்தை இப்போது நான் உங்களுக்கு விளக்குகிறேன். பிறகு அதை உங்களால் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். கூட்டல் குறி போன்ற இரண்டு கோடுகளை நினைத்துக்கொள்ளுங்கள்.

செங்குத்துக்கோடு ஆன்மிக வாழ்க்கையைக் குறிப்பிடுகிறது. படுக்கைக்கோடு பொருள்சார்ந்த வாழ்க்கையைக் குறிக்கிறது. இரண்டும் சந்திக்கும் மையப்புள்ளிதான் உங்கள் இருப்பு. இதுவே உங்களுக்கான இலக்கு.

பொருள்சார்ந்த உலகிலும் நீங்கள் உங்களுக்கென சில இலக்குகளைக் கொண்டிருப்பீர்கள். பொருள்சார்ந்த உலகின் இலக்கை அடைய நீங்கள் தொடர்ந்து போராடி, வேலைசெய்து கொண்டிருந்தால், படுக்கைக் கோட்டில் இருக்கிறீர்கள். உங்கள் ஆன்மிக இலக்கையடைய, நீங்கள் யோகா, ப்ரணாயாமா, ப்ரத்யாகாரா போன்றவற்றை தீவிரமாகப் பயிற்சிசெய்து கொண்டிருந்தால், இப்போது நீங்கள் செங்குத்துக் கோட்டில் எங்கோ ஒரு இடத்தில் இருக்கிறீர்கள்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் பொருள்சார் இலக்கை அடைய போராடிக் கொண்டிருக்கும்போது படுக்கைக் கோட்டிலும், ஆன்மிக இலக்கை அடைய போராடிக் கொண்டிருக்கும்போது செங்குத்துக் கோட்டிலும் இருக்கிறீர்கள்.

நீங்கள் போராடிக்கொண்டிருக்கும்வரை, ஒன்று, நீங்கள் இந்தத் திசையிலோ அல்லது அந்தத்திசையிலோ போராடிக்கொண்டிருப்பீர்கள். நீங்கள் பொருள்சார் இலக்கை அடைய போராடிக் கொண்டிருக்கும்வரை, நீங்கள் ஆன்மிக உலகைத் தவிர்ப்பீர்கள்; ஆன்மிக இலக்கை அடைய போராடிக் கொண்டிருக்கும்வரை, பொருள்சார் உலகைத் தவிர்ப்பீர்கள். ஆக இரண்டுமே போராட்டமாகத்தான் இருக்கும்.

கிருஷ்ணர் சொல்கிறார், ''இரண்டிலிருந்தும் விலகி ஓய்வாக, நிம்மதியாக இருங்கள்!' இதைக் கேட்டவுடன் நீங்கள், 'இதென்ன இப்படி ஒரு யோசனை இரண்டையும் இழந்துவிட நேருமே' என்றும் நினைக்கலாம். பொருள்சார்ந்த வாழ்வு

நீங்கள், இரு திசைகளிலும் பயணிக்கலாம்!

ஆனால், லக்யும் என்னவென்றால், இரண்டையும் விட்டுவிட்டு நீங்கள் நிம்மதியாக இருக்கும்போது, நீங்கள் உங்களின் உள் விழிப்புணர்வினுள், உங்கள் இருப்பினுள், உங்கள் உள்ளுலகத்தினுள் விழுகிறீர்கள். உங்கள் உள்ளிருப்பு, உள் விழிப்புணர்வு அனுபவத்தைப் பெறும்போது, எல்லாத் திசைகளிலும் நீங்கள் விரிந்து பரவ முடியும் என்பதை உணர்வீர்கள். அதற்குப் பிறகு நீங்கள், படுக்கைக்கோடா அல்லது நெடுக்குக் கோடா என்றெல்லாம் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியமிருக்காது. நீங்கள் ஒரே நேரத்தில் இரு கோடுகளிலும் சென்று வர முடியும் !

பொருள்சார் இலக்கு, ஆன்மிக இலக்கு - இந்த இரண்டிலிருந்தும் விலகி ஒய்வாக, நிம்மதியாக இருங்கள்! - ஸ்ரீக்ருஷ்ணர் ஒரேயொரு சிரமம் என்னவென்றால், நீங்கள் உங்களுடைய சொந்த 'இருப்பினிடமாவது' ச்ரணாகத் அடைய வேண்டும் நீங்கள் மற்ற எவரிட்மும் ச்ரணாகத் அடைய வேண்டியதில்லை. ச்ரணாகதி அடைகிறீர்கள் என்பது முக்கியமல்ல. வெறுமனே உங்களுடைய சொந்த 'இருப்பினுள்' சென்று ஒய்வாக நிம்மதியாக இருந்துகொள்ளுங்கள். உங்களுடைய சொந்த உள்ளுலகத்திடம் ச்ரணாகத் அடையுங்கள். பொருள்சார் உலகம், ஆன்மிக உலகம் ஆகியவற்றோடு போராடிக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள்.

பொருள்சார் உலகில், அதாவது 'எனது' மயமாகத் திகழும் உலகில், உங்களின் சொத்துக்கள்தான் உங்கள் இலட்சியம். நீங்கள் இந்த இலட்சியங்களை அடையத்தான் போராடிக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆன்மிக உலகிலும், 'ஞானமடைவது' என்பதுபோன்ற சில குறிப்பிட்ட இலட்சியங்கள் உங்களுக்கென இருக்கலாம். நீங்கள் அந்த இலக்கை அடைய தொடர்ந்து ஓடிக் கொண்டிருப்பீர்கள்.

உண்மையில், இலக்குகளைவிட அதிக அஹங்காரத்தை உண்டாக்கும். பொருள்சார் இலக்கிலாவது, ஏதாவது ஒரு இடத்தில், அதன் பின்னாலேயே ஓடிக்

கொண்டிருப்பதாலேயே உங்களால் உண்மையான மகிழ்ச்சியை அடைந்துவிட முடியாது என்பதை உணர்வீர்கள். அது மிகுந்த சோர்வைத் தரும். ஆனால், உங்கள் ஆன்மிக இலக்கில், நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்களென்று உங்களுக்கேகூட புரியாது.

இருபக்க இலக்குகளுமே உங்களை மையத்திலிருந்து விலகச்செய்து விடுகின்றன. நீங்கள் உங்கள் இருப்புணர்விடம் சரணடைந்து, உங்களின் இருப்பினுள் தளர்வாக இருக்கும்பொழுது, சட்டென்று, நீங்கள் நெடுங்கோட்டையோ அல்லது படுக்கைக் கோட்டையோ தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை, நீங்கள் உங்கள் உடலும் இல்லை, மனமும் இல்லை என்பதை உணர்வீர்கள்.

நீங்கள், உங்களை நினைத்துக் கொண்டிருக்கும்வரை, நீங்கள் நெடுங்கோடு அல்லது படுக்கைக்கோட்டில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்குத் தள்ளப்படுவீர்கள். நீங்கள் குழப்பத்தில் ஆழ்வீர்கள். ஏனெனில், உங்களின் மனம், தேர்ந்தெடுத்தலையே விரும்பும்.

மனம் மற்றும் குழப்பம் - இந்த இரண்டுமே ஒன்றுதான். குழப்பங்கள் மறையும்பொழுது மனங்கூட மறைந்துவிடுகிறது. குழப்பம் இருக்கும்வரை மனம் இருந்து கொண்டுதான் இருக்கும்.

உங்களுடைய சொந்த 'இருப்பினுள்' சென்று ஒய்வாக நிம்மதியாக இருந்துகொள்ளுங்கள். உங்களுடைய சொந்த உள்ளூலகத்திடம் ச்ரணாகத் அடையுங்கள்.

உங்களுக்குள் எப்பொழுதாவது குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்! மனம் தொடர்ந்து குழப்பத்திலேயே இருந்து கொண்டிருக்கும் நீங்களும் தொடர்ந்து இதுவா இல்லை அதுவா என்று தேர்ந்தெடுப்பதிலேயே கவலைப்பட்டுக் கொண்டிருப்பீர்கள்.

ஒரு சின்ன கதை:

ஒரு மனிதர் தம் வீட்டில் அமர்ந்து சப்தமாக அழுதுகொண்டிருந்தார். பொதுவாக ஆண்கள் அழுவதில்லை, அதிலும் சப்தமாக ... நிச்சயம் இல்லை !

அவர் மனைவி கேட்டார், ''ஏன் அழுது கொண்டிருக்கிறீர்கள்?''

உடனே அவர், ''உனக்கு ஞாபகமிருக்கிறதா, இருபது வருடங்களுக்கு முன்நாம் இருவரும் கடற்கரையில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, உன் அப்பா நம்மைக் கையும் களவுமாகப் பிடித்து விட்டாரே? அப்போதுகூட, உடனே உன்னைத் திருமணம் செய்துகொள்ளாவிட்டால், என்னைச் சுட்டுக் கொன்று விடுவேன் என்று மிரட்டினாரே!''

சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அவருடைய மனைவி இடைமறித்து, " ஆமாம் சொன்னார், எனக்கும் ஞாபகம் இருக்கிறது, அதற்கு ஏன் இப்போது அமர்ந்து அழுது கொண்டிருக்கிறீர்கள் ?'' என்று கேட்டார்.

அதற்கு கணவர், குட்அப்போது அவர் சொன்னதை நான் செய்யாமலிருந்திருந்தால், இன்று நான் ஒரு சுதந்திரமான மனிதனாய் இருந்திருப்பேனே!' என்றார்.

நீங்கள் உங்கள் வாழ்வில் எதைத் தேர்ந்தெடுத்தாலும், பின்னர் ஒருநாளில், ஏன் அதைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று ஆச்சரியத்தில்தான் மூழ்கியிருப்பீர்கள்.

பொருள்சார் இலக்குகளைத் தேர்ந்தெடுப்பவர்கள், ஆன்மிக வாழ்க்கையை இழக்கிறோமே என்று பரிதவிப்பார்கள்; பொருள்சார் பரிதவிப்பார்கள். இது ஏனெனில், நீங்கள் அந்த இரண்டில் ஏதோ ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்கிறீர்கள்.

முதல் முறையாக கிருஷ்ணர், மொத்த ஆன்மிகத்திற்கும் இறுதி, அறுதி நுட்பத்தைத் தருகிறார். கிருஷ்ணர் உள்ளுலகத்திற்கான முதல் முழுமையான விஞ்ஞானியாகத் திகழ்கிறார். ''சரணடையுங்கள்; தளர்வாக இருங்கள்; பிறகு நீங்கள் உள்ளுலக விழிப்புணர்வின் தீவிரத்தை உணர்வீர்கள், '' என்று அவர் சொல்கிறார்.

அவ்வாறு கிடைக்கும்போது நீங்கள் கிடைக்கோடா இல்லை நெடுங்கோடு என்று தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்பதைப் புரிந்துகொள்வீர்கள். நீங்கள் 360 கோணத்திலும் விரிந்து பரவ முடியும். நீங்கள், ஒரு தேர்வற்ற தளத்தை, நிலையை அனுபவிப்பீர்கள்.

'தேர்வற்ற நிலை' என்றால், நீங்கள் எதையுமே தேர்ந்தெடுக்க மாட்டீர்கள் என்று அர்த்தம் அல்ல; நீங்கள் தேர்வுசெய்வதை நிறுத்தும்போது, நீங்கள் அனைத்தையும் தேர்ந்தெடுக்கிறீர்கள்.

நீங்கள் உங்கள் வாழ்வில் எதைத் தேர்ந்தெடுத்தாலும், பின்னர் ஏதாவது ஒருநாளில், ஏன் அதைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்ற ஆச்சரியத்தில் தான் மூழ்கியிருப்பீர்கள்.

அதைப்போலவே, உண்மையான ச்ரணாகதியில், நீங்கள் எதையுமே தவிர்க்க மாட்டீர்கள்; அனைத்தையுமே சேர்த்துக்கொள்வீர்கள். உணர்வீர்கள். பிறகு நீங்கள் நெடுங்கோடா இல்லை கிடைக்கோடா என்று இரண்டினுள் ஒன்றைத் தேர்வுசெய்யத் தேவையில்லை. நீங்கள் இரண்டையுமே உணர முடியும், அதற்கு மேலேயும் உணர முடியும். நீங்கள் உடனடியாக விரிந்து பரவ முடியும். உங்கள் கற்பனையையும் கடந்த ஏதோ ஒன்றை உணர்வீர்கள். உங்கள் இருப்பின் வேறு வேறு பரிமாணங்களையும் உணர்வீர்கள்.

உண்மையாகச் சரணடைந்தால், உங்களின் உள்ளுணர்வே உங்களை வழிநடத்தீச் செல்லும்

ச்ரணாகதி என்பதற்கு, முனைப்பற்ற ச்ரணாகதி அல்லது எல்லாவற்றையும் துறந்துவிட்டதைப்போன்று பாசாங்கு செய்வது என்று அர்த்தம் அல்ல.

'' ஸ்வாமிஜி, நீங்கள்தான் என்னை கவனித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், நான் உங்களிடம் முழுமையாகச் சரணடைந்து விட்டேன். தயவுசெய்து எனக்கு மன நிம்மதி அளியுங்கள்," என்று ஒருவர் சொன்னார்.

நானும், ''சரி, அடுத்த தியான முகாமில் கலந்துகொள்ளுங்கள்,'

என்று சொன்னேன். உடனே அவர், "என்னால் இதற்கு இரண்டு நாள் ஒதுக்க முடியாதே!' என்று பதிலளித்தார். பாருங்கள், இவர் இப்போதுதான் என்னிடம் முழுமையாகச் சரணடைந்து விட்டதாகச் சொன்னார். ஆனால், நான் சொல்வதைச் செய்வதற்குத் தயக்கம் காட்டுகிறார்.பெரும்பாலும், நமது ச்ரணாகதி பொய்யாகவே இருக்கிறது. ஒரு விஷயத்தைச் சொல்லும்முன், அதன் அர்த்தத்தை நன்கு புரிந்து வைத்திருக்க வேண்டும்.

ஒரு சின்ன கதை:

ஒரு சமயம் பத்திரிக்கை நிருபரொருவர், விபத்து நடந்த இடத்தைச் சுற்றி ஒரு கூட்டம் சேர்ந்திருப்பதைப் பார்த்தார். அவருக்கோ அங்கே என்ன நடந்தது என்று உடனே பார்க்க ஆவல்; ஆனால், அந்தக் கூட்டத்திற்குள்ளே அவரால் நுழைய முடியவில்லை.

உடனே அவர், "ஒ! என் மகன் விபத்தில் அடிப்பட்டு கிடக்கிறான். தயவுசெய்து எனக்கு வழிவிடுங்கள்,' என்று கத்தினார். கூட்டம் அவருக்கு வழிவிட்டது. அவர் வேகமாக முன்னேறிச் சென்று பார்த்ததில், அங்கு விபத்தில் ஒரு கழுதை இறந்து கிடந்தது!

அதனால் எதையும் சொல்லும் முன், சூழ்நிலையை நன்கு புரிந்துகொள்ளுங்கள் இல்லையென்றால் வருந்த வேண்டிவரும். ச்ரணாகதி என்னும் வார்த்தையை உபயோகிப்பதில் நீங்கள் அந்தத் தவற்றைத்தான் செய்கிறீர்கள்.

நீங்கள் தேர்வு செய்வதை நிறுத்தும்போது. நீங்கள் அனைத்தையும் தேர்ந்தெடுக்கிறீர்கள்.

'' ச்ரணாகதி அடைகிறேன் நான், என்று சொல்லும்போது, எந்தக் கடவுளிடமோ அல்லது எந்தக் குருவிடமோ சரணடையத் தேவையில்லை. கடவுள் அல்லது குரு, இவர்கள் ஒரு அடையாளங்களே அல்லது பிரதிநிதிகளே! உங்களுடைய சொந்த இருப்பினிடமே, உங்கள் உள்ளுலகத்திடமே சரணடையுங்கள்.

உங்களுடைய பிரச்சினை என்னவென்றால், உங்களுடைய உள்ளுலகத்திற்கு மதிப்பும் மரியாதையும் தருவதில்லை. அதனால்தான், ஆரம்ப நிலையில், உங்களுக்கு ஒரு குருவோ அல்லது கடவுளோ தேவைப்படுகிறார்கள்.

யாரோ ஒருவர் என்னிடம் கேட்டார், "ஸ்வாமிஜி, நான் உங்களிடம் சரணடைந்து விட்டேன். நான் என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்! '

நான் அவரிடம், 'நீங்கள் உண்மையிலேயே சரணடைந்திருந்தால், உங்களுக்கு இந்தக் கேள்வியே தோன்றியிருக்காது! நீங்களே உங்கள் உள்ளுலகத்தால் வழிநடத்தப்படுவீர்கள். நீங்கள் உண்மையாக சரணடைந்திருந்தால், உங்களின் உள்ளுணர்வு அல்லது தெய்விக சக்தியே உங்களை வழிநடத்திச் செல்லும். உங்களுக்கு இந்தச் சந்தேகமிருக்கும்வரை, நீங்கள் இன்னும் சரணடையவில்லை என்று ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், '' என்று சொன்னேன்.