KAILASA Library/பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)/ஒரு நிமிட சரணாகதி, வாழ்க்கையையே மாற்றிவிடும்Sign in
பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)

ஒரு நிமிட சரணாகதி, வாழ்க்கையையே மாற்றிவிடும்

அடுத்த பிரச்சினை, நீங்கள் சரணடைய முடியாவிட்டால் என்ன செய்வது ?

சிலர் என்னிடம், '' ஸ்வாமிஜி, என்னால் சரணாகதி செய்ய முடியவில்லை? நான் என்ன செய்ய முடியும் ?'' எனக் கேட்பார்கள்.

நான் அவரிடம், ''கவலைப்படாதீர்கள், ஏனெனில், செய்வதற்கென்று ஒன்றுமில்லை. சரணாகதி செய்வதற்கு உங்களிடம் ஒன்றுமில்லை என்ற நீங்கள் முன்னமேயே சரணடைந்து விட்டீர்கள். நிம்மதியாயிருங்கள். ''

நீங்கள் இல்லையோ, இதுவே உண்மை. நீங்கள் சரணாகதி செய்கிறீர்களோ இல்லையோ பிரபஞ்ச இருப்பு உங்களைக் கவனித்துக் கொள்ளும். பிறகு தானாகவே வாழ்க்கை

நீங்கள் கடவுள் என்பதை உணர்ந்திருக்கிறீர்களோ இல்லையோ, நீங்கள் கடவுள்கான். இதில் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இல்லை.

தொடரும். நீங்கள் தளர்வான மனநிலையில் நிம்மதியாகிறீர்கள். அந்தத் தளர்வான மனநிலையே சரணாகதிதான்.

வாழ்க்கையின் ஒட்டத்தில் ஒய்வாக, நிம்மதியாக இருங்கள். உங்களுடைய புலன்கள் உங்களுக்குச் சுட்டிக்காட்டுவதைப்போல, நீங்கள் உடல் - மனம் அல்ல. அவற்றை விட உயர்வானவர் என்கிற ஸத்யத்திற்கு விழித்துக்கொள்ளுங்கள்.

சமுதாயம், 'நீங்கள் வேறு ஏதோவொன்று' என்று நீங்கள் நினைக்கும் வகையில், உங்களை வழிநடத்திச் செல்கிறது. ஆனால், நீங்கள் கற்பனை செய்ய முடிந்த எல்லாவற்றையும் விட, நீங்கள் உயர்ந்தவராயிருக்கிறீர்கள் என்கிற உண்மைக்கு விழித்துக்கொள்ளுங்கள். உங்களைப் பற்றி நீங்களே செய்யும் எந்தவொரு கற்பனைக்கும் அப்பாற்பட்டவராய் இருக்கிறீர்கள்.

சரணாகதி செய்வது, உங்களுக்கு ஒரு புதிய விழிப்புணர்வையே தரும். பின்பு நீங்கள் அதே மனிதராக இருக்க மாட்டீர்கள். ஒருநேர சரணாகதிகூட, உங்கள் முழு வாழ்க்கையையே உணர்வுமாற்றம் பெறச் செய்துவிடும். பிறகு நீங்கள், ஒரு புதிய இருத்தலாக மாறிவிடுவீர்கள்.

புராதன ஹிந்து நூல்களின்படி மூன்று விதமான பிறப்பு நிலைகள், கர்ப்ப நிலைகள் இருக்கின்றன. முதலாவது பூ கர்ப்பம். இது ஒரு ஜீவனைச் சுமந்து பெற்றெடுக்கும், ஒரு தாயின் கர்ப்பப் பையைக் குறிக்கும். இது, மனித உடலிலுள்ள ஏழு சக்கரங்களுள் மிகத் தாழ்நிலைச் சக்கரமான மூலாதாரச் சக்கரத்தோடு தொடர்புடையது.

அடுத்தது, சுமக்கும் கர்ப்பம். இதை, உண்மையான கலைஞர்களிடத்தில் காணலாம். உதாரணத்திற்கு, ஒரு பாடகர் பாடலை அல்லது சங்கீதத்தை, தம் இருதயத்தில் சுமந்து அதைப்போல் ஒரு சிற்பி, முதலில் தம் இதயத்தில் அந்தச் சிற்பத்தை உருவாக்கிச் சுமந்து, வடிக்கிறார். இதைப்போலவே ஒவ்வொரு படைப்புத்திறனும் பிறக்கிறது. அதனால்தான் கலைஞர்கள், அவர்களுடைய படைப்பின் மிகுந்த திருப்திபெறுகிறார்கள், தொடர்ச்சியாக புதிய படைப்புகளைத் தந்துக்கொண்டே இருப்பதால். கலைஞர்களுடைய வாழ்வே நிறைவளிப்பதாக இருக்கிறது.

ஒரு பெண், ஒரு குழந்தைக்குப் பிறப்புக் கொடுத்து காயான பின்பு, மனநிறைவை உணர்கிறாள். பொங்கித் ததும்புகிறது. அதைப்போலவே ஒரு கலைஞர், ஒரு ஓவியத்தையோ, கவிதையையோ, சிலையையோ

உங்களைப் பற்றி நீங்களே செய்யும் எந்தவொரு கற்பனைக்கும் அப்பாற்பட்டவராய் இருக்கிறீர்கள்.

அல்லது இசையையோ படைக்கும்பொழுது பொங்கித் ததும்பும் மனநிறைவையும் திருப்தியையும் உணர்கிறார். ஒரு கலைஞரின் கர்ப்பம், அவருடைய இருதயத்தில் இருக்கிறது.

மூன்றாவது நிலை ஜ்ஞான கர்ப்பம். இது உச்சந்தலையில் உள்ள ஸஹஸ்ரார சக்கரத்தில் நிகழ்கிறது. இந்த ஜ்ஞான கர்ப்பத்தில்தான் எல்லா ஆன்மிக கருத்துகளும் உருவாகின்றன, செயற்படுத்தப்படுகின்றன. சட்டென ஒரு கணத்தில் நீங்கள், முற்றிலும் 'புதிய உங்களை'ப் பெற்றெடுக்கிறீர்கள், ஒரு ஞானியைப் பெற்றெடுக்கிறீர்கள்.

பூ கர்ப்பம் எனப்படும் முதல் நிலை கர்ப்பம் நாமெல்லோரும் அறிந்த ஒன்றே. அடுத்த இருதய கர்ப்பத்தை ஒருசில கலைஞர்கள் அடைகிறார்கள். ஜ்ஞான கர்ப்பம் உச்ச நிலை. குருவின் போதனைகளையும், அவருடைய ஸாந்நித்யத்தையும் உள்வாங்கிக் கொள்கிறீர்கள். அவற்றை ஆழமாகச் சிந்தித்து, உங்களை ஒரு ஞானியாகப் பிறப்பித்துக் கொள்கிறீர்கள்.

சரணாகதியின் இந்தக் கருத்தை, இந்த ஸத்யத்தை ஆழமாகச் சிந்தியுங்கள். திடீரென நீங்கள்

விழித்துக்கொள்வீர்கள். உங்களுக்கு நீங்களே ஒரு ஜ்ஞானப் பிறப்பைக் கொடுத்துக்கொள்வீர்கள். நீங்கள் கடலோடு தொடர்புடையவர்தான், அதிலிருந்து வந்தவர்தான், இப்போதும் அதிலேயே இருப்பவர்தான், அதில்தான் கலந்து மறையப் போகிறீர்கள் என்பதைப் புரிந்துகொண்ட பின்பு, உங்களுக்கு மரணமே கிடையாது என்பதை உணர்வீர்கள். ஏனெனில், நீங்கள் கடல்!

உணர்வுமாற்றம், உங்கள் வாழ்வை மாற்றிவிடும்

நீங்கள் உங்களை ஒரு நீர்க்குமிழியாக நினைத்துக் கொண்டிருக்கும்வரை, நீங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக உணர்வீர்கள், மரணம் உங்களைப் பயமுறுத்திக் கொண்டேயிருக்கும், நீடித்து வாழ வேண்டும் என்ற உள்ளுணர்ச்சியும், எனதையுமே உடைமையாக்கிக்கொள்ள வேண்டுமென்ற உந்துதலும், உங்களைச் சித்ரவதை செய்கின்றன.

நீங்கள் கடல்தான் என்று உணர்ந்துகொண்ட கணமே, நீடித்து உயிர் வாழ வேண்டும் என்ற உள்ளுணர்ச்சி மறைந்துவிடுகிறது. ஏனெனில், உங்களுக்கு இனி மரணம் கிடையாது. அங்கு பயப்படுவதற்கென்று ஒன்றுமேயில்லை, பாதுகாப்பற்ற தன்மை பற்றிய உணர்ச்சிக்கு இடமில்லை.

நீங்கள் கடல்தான் என்று உணர்ந்த கணமே, நீங்கள் உடைமையாக்கிக் கொள்வதற்கென்று அங்கு அங்கு எல்லாமே உங்களுக்குச் சொந்தமானதுதான். அங்கு இழப்பதற்கும் ஒன்றுமில்லை.

நீங்கள் கடல்தான் என்று உணர்ந்த கணமே, உங்கள் உடைமையாக்கிக் கொள்வதற்கென்று அங்கு ஒன்றுமேயில்லை, ஏனெனில், எல்லாமே உங்களுக்குச் சொந்தமானதுதான்.

ஒன்றுமில்லை. புதிதாக அடைவதற்கும் ஏதும் இல்லை. அதனால் உடைமையுணர்ச்சி மறைந்துவிடுகிறது.

நான் உங்களை, சட்ட புர்வமாக, உங்கள் உடைமைகளைத் தூக்கியெறியச் சொல்லவில்லை. என்பனவற்றிற்காக வைத்திருக்கும் எதையும் தூக்கிப்போட வேண்டாம், அவற்றை உங்களுக்குள் உள்வாங்கிக்கொள்ள வேண்டாம் என்றுதான் கூறுகிறேன்.

உடைமையாக்கிக்கொள்ள முடிந்த எல்லாவற்றையும் விட, நீங்கள் மிக உயர்ந்ததாக இருக்கிறீர்கள் என்பதில், நீங்கள் விழிப்புடன் இருங்கள்.

ஏழு வயதில், உங்களுடைய விளையாட்டு சாமான்கள் உங்களுக்கு முக்கியமானவையாக இருந்தன. இன்றும் அவை உங்கள் வாழ்வில் அதே முக்கியத்துவத்தைப் பெறுகிறதா? நீங்கள் அவற்றை முற்றிலுமாக துறந்துவிடவும் இல்லை, அதே சமயத்தில் அவற்றுடன் அதே பற்றுடனும் இல்லை. அந்த விளையாட்டுப் பொருட்கள் வீட்டில் இருக்கின்றன, அவ்வளவுதான். அவற்றோடு விளையாட வேண்டும், அதற்காகவே சீக்கிரம் வீடு திரும்ப வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுகிறதா? இல்லையே!

அல்லது அவை உங்களுடைய வாழ்க்கைக்கு இடைஞ்சலாக இருப்பதாகவும், அதனால் அவற்றையெல்லாம் துறந்துவிட வேண்டுமென்றும் இல்லையல்லவா! நீங்கள் அவற்றோடு பற்றுடனும் இல்லை, பற்றில்லாமலும் இல்லை. நீங்கள் அவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு வளர்ந்து விட்டீர்கள்.

ராக என்றால் பற்று. அராக என்றால் துறத்தல். விராக என்றால் பற்றுதலுக்கும் துறத்தலுக்கும் அப்பால் என்றும் பொருள்.

ராக என்றால் பற்று. அராக என்றால் துறத்தல். விராக அல்லது வைராக்ய என்றால் பற்றுதலுக்கும் துறத்தலுக்கும் அப்பால் என்று பொருள்.

நீங்கள் வளர, வளர, உங்களின் விளையாட்டுப் பொருட்களைப் பற்றிய வைராக்யம், உங்களுக்குள் தானாகவே நிகழ்ந்து விட்டது.

அதைப்போலவே, நீங்கள் கடல்தான் என்று உணரும்போது, நீங்கள் சேகரித்துக்கொண்ட சில மணற்குகள்களிடமும், நீங்கள் உங்களைச் சுற்றி சேர்த்துக்கொண்ட நீர்க்குமிழிகளிடமும் வைராக்ய என்பது தானாகவே நிகழும். நீங்கள் அவற்றுக்கு அப்பாற் சென்றுவிடுவீர்கள்.

நீண்ட நாள் வாழவேண்டுமென்ற உள்ளுணர்ச்சியும், சேர்த்துக்கொண்ட உடைமைகளும் உங்களுக்கு முக்கியத்துவமற்றவையாகிவிடும். உங்கள் உடைமைகள், உடனடியாக, சட்டென உங்கள் வாழ்விலிருந்து மறைந்துவிடப் போவதில்லை. அவை அங்குதான் இருக்கப் போகின்றன. நீங்கள் அவற்றை ஆழமாக வாழ்வீர்கள். ஆழமாக அனுபவிப்பீர்கள். அவற்றை சாதாரணமாக, அலட்சியமாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள். அவை உங்களுக்கு சலிப்பை உண்டாக்குவதில்லை. 'ஐயோ அதே வீடு, அதே மனைவி, அதே வாழ்க்கை' என்று நினைக்கமாட்டீர்கள்.

இவற்றை உங்கள் உடைமைகளாகக் கருதிக் கொண்டிருக்கும்வரைதான், இவற்றைச் சாதாரணமாக உணர்வீர்கள் உங்களிடமிருந்து இவை எந்தக் கணத்திலும் பறிக்கப்பட்டுவிடும் அல்லது எடுக்கப்பட்டுவிடும் என்ற ஸ்தீயத்தை உணர்ந்த அக்கணமே, இவற்றை அலட்சியப்படுத்த மாட்டீர்கள்.

உங்களிடமிருந்து எந்தக் கணத்திலும் பற்க்கப்பட்டுவிடும் என்ற ஸ்தீயத்தை உணர்ந்த அக்கணமே, உங்கள் வாழ்க்கையை அலட்சியப்படுத்த மாட்டர்கள்.

நீங்கள் அவர்களும் அதே கடல்தான் என்பதையும் உணர்ந்துகொண்ட பிறகு, அவர்களை அதிக மதிப்புடன் நடத்துவீர்கள். நீங்கள் இதை உணர்ந்துகொண்ட பிறகு, உடல், மனம், விழிப்புணர்வு ஆகிய நிலைகளில் உணர்வுமாற்றம் விழிப்புணர்வு உணர்வுமாற்றம் பெற்றவுடன், 'நீங்களை'ப் பெற்றெடுக்கிறீர்கள்.

கிருஷ்ணர் சீரணாகதியின் இந்த மூன்று நிலைகளையும் தாண்டி, மேலும் ஆழமாகச் செல்கிறார். அவர், உயர்நிலை சீரணாகதியின் கண நேர அனுபவத்தை அர்ஜுனனுக்குத் தருகிறார். அவர், இறுதி அனுபவத்தின் துளியைத் தருகிறார். கிருஷ்ணர் ஏற்கெனவே அர்ஜுனனதுக்கு, தம்முடைய விச்வரூப தரிசனத்தின்போது, அந்த அனுபவத்தைக் கொடுத்துவிட்டார். இருந்தும்கூட, பயத்தின் காரணமாக அர்ஜுனால் அந்த அனுபவத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியவில்லை.

பொதுவாக நீங்கள் எல்லோருமே, பயத்தின் காரணமாக உங்கள் முதல் அனுபவத்தைத் தவறவிட்டுவிடுகிறீர்கள். இப்பொழுது அர்ஜுனன் அந்த அனுபவத்தில் நிலைபெறுவதற்கான முழுதிர்ச்சியையும், திறமையையும் பெற்றவராக இருக்கிறார். கிருஷ்ணர், அர்ஜுனனுக்குள் எப்போதுமே நிலைத்திருக்கும்படியான, ஒரு அனுபவத்தைத் தருகிறார்.

அடுத்து கிருஷ்ணர், அர்ஜுனனை அனுபவத்திற்கு எடுத்துச்செல்கிறார், இறுதி ஸ்த்யத்திற்கு விழிப்பிக்கச் செய்கிறார்.

ஒரு சின்ன கதை:

ஒரு ஜென் குருவிடம் ஒருவர், புத்தராக ஆவது எப்படி என்று கேட்டார். அந்த குரு, அவரின் கன்னத்தில் 'பளாரென' ஒர் அறை கொடுத்தார், அவ்வளவுதான், அந்தக் கணத்திலேயே அந்த மனிதர் ஞானமடைந்தார்! அவருக்குள் புத்தத் கன்மையை அனுபவமாக உணர்ந்தார்.

விழ்ப்புணர்வு உணர்வுமாற்றம் பெற்றவுடன், நீங்கள், ஒரு புதிய 'நீங்களை'ப் பெற்றெடுக்கிறீர்கள்.

குரு கொடுத்த அறையானது, அந்த மனிதருக்கு, அவர் ஏற்கெனவே புத்தராகத்தான் இருக்கிறார் என்பதை உடனே உணர்த்திவிட்டது. அவருடைய தூக்கத்திலிருந்து அவரை விழித்துக்கொள்ள செய்ய வேண்டியிருந்தது, அவ்வளவுதான்.

கிருஷ்ணர், அர்ஜுனனை ஸம்ஸாரஸாகரம்என்னும் நீண்டதூக்கத்திலிருந்து எழுப்பிவிடுகிறார். இந்தக் தூக்கத்தை விழிப்பணர்வற்ற நிலை அல்லது தமஸ் என்றும் சொல்லலாம். கிருஷ்ணர் அவருக்கு, இறுதி அனுபவம் என்னும் ஒரு இனிய அதிர்ச்சியைக் கொடுத்ததன்மூலம், அவரை அந்த நிலையிலேயே எப்போதும் நிலைத்திருக்கச் செய்கிறார்.

சேவை செய்வதிலும், துறப்பதிலும் காட்டப்படும் மனோதிடமே சரியான மனோதிடம்!

கேள்வி: அஹங்காரத்தைச் சீரணாகதி செய்துவிடுவது உண்மையான துறவு. ஆனால், ச்ரணாகதி செய்வதற்கே அஹங்காரம் அல்லது மனம் போன்ற ஏதோ ஒன்று தேவைப்படுகிறதே, இது முரணாக இல்லையா?

பதில்: ஆம், அது அப்படித்தான்; ஆனாலும் அப்படி இல்லை! ஒரே விஷயத்தை நம்மால் வெவ்வேறு கோணங்களில் பார்க்க முடியும்.

புத்தா் எப்போதுமே தம் போதனைகளை வலியுறுத்துபவராக இருந்ததில்லை. அவர், அவர், 'ஒவ்வொன்றும் சரியாகவும் இருக்கலாம், தவறானதாகவும் இருக்கலாம். சரியான அன்பு, தவறான அன்பு, அதேபோல், சரியான கோபம், தவறான கோபம் என்றும் இருக்கலாம்' என்கிறார்.

புத்தருக்கு முன் மக்கள், அன்பு என்றால், அது எப்போதும் சரியானதாகவே இருக்கும் என்றும், கோபம் என்றால், அது எப்போதும் தவறானதாகவே இருக்கும் என்றும்தான் நினைத்தார்கள். இது, ஒருவருடைய தீர்மானத்தைப் பொறுத்த விஷய மாகவே இருந்தது.

புத்தருக்கு முன் மனோதிடம்கொண்ட ஒரு மனிதருடைய தீர்மானம் எப்போதுமே சரியானதாகவே இருக்கும் என்று, மனோதிடத்தைப் புகழ்ந்து ஆதரித்து வந்தனர்.

மறுபுறம், ஆழ்ந்த அறிவும், நுண்ணறிவும்கொண்ட புத்தரோ, ஒவ்வொரு விஷயமும் சரியானதாகவும் இருக்க முடியும், தவறானதாகவும் இருக்க முடியும் என்று சொன்னார். எதுவுமே முற்றிலுமாக சரியானதாக இருக்க முடியாது. அஹங்காரத்தினால் பயன்படுத்தப்பட்டால், மனோதிடம்கூட தவறானதே. அது அஹங்காரத்தை அதிகரிக்கவே செய்யும். 100-க்கு 99 விஷயங்களில் அதுவே நடக்கிறது.

மனோதிடம் சரியானதாக இருக்க முடியும். ஆனால், ஒருவர் மிகவும் எச்சரிக்கையோடும், விழிப்போடும் இருந்தாக வேண்டும். சீரணாகதி செய்வதற்காகப் பயன்படுத்தும்பொழுது மட்டுமே மனோதிடம் என்பது சரியானதாக இருக்கும். இது ஒரு புரியாத புதிர்.

பொதுவாக நாம், சீரணாகதியும்மனோதிடமும் எதிரெதிர் துருவங்கள் என்று எண்ணுகிறோம். ஆனால், உண்மை அதுவல்ல; மனோதிடத்திற்கான ஒரேயொரு சரியான பயன்முறை இருக்கிறது: 'முழுழுமையிடம் சரணடைவதற்காக அதைப் பயன்படுத்தும் பயன்முறையே!' அதை - கடவுள், இயற்கை, தாவோ அல்லது உங்களுக்குப் பிடித்த எந்தப் பெயரைக்கொண்டும் அழைக்கலாம்.

ஒரு மனிதருடைய சேவையில், மனோதிடம் என்பது ஆபத்தானது ஏனெனில், அந்த மனிதருடைய கருத்தே தவறானது. ஒரு மனிதரின் தனித்துவம் என்பதே ஒரு பொய்த்தோற்றம்தான். நாம் அனைவரும் தனித்தனி அடையாளங்கள் அல்ல. இந்த முழுப் பிரபஞ்சமும் பல உறுப்புகள் இணைந்த ஒரு அமைப்பு !

பல உறுப்புக்கள் ஒருங்கிணைந்த அமைப்பான நம் உடலை, 'உடல்' என்ற ஒரே அமைப்பாக எப்படிக் கருதுகிறோமோ, அதேபோன்றதுதான். புல்லின் ஒரு சின்ன இதழ்கூட, மிகத் தொலைவிலிருக்கும் நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டிருக்கிறது. ஒவ்வொன்றுமே, ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டும் பின்னப்பட்டும் இருக்கிறது.

அது ஒருசிலந்தியின் வலையைப் போன்றதே! அதில் ஒரு இழையைத் தொட்டாலே போதும், அந்த அதிர்வை அந்த இழைப் பின்னல் முழுவதும் உணரலாம். அது மிருதுவான தொடுதலாக இருந்தாலும்கூட, அந்த அதிர்வலையை மொத்த வலைஅமைப்புக்குள்ளும் உணர முடியும். அதைப்போலத்தான் பிரபஞ்சத்தின் இயக்க அமைப்பும். நாம் ஒன்றும் தனியானவர்கள் இல்லை, தனித்தனியாக இருப்பதுபோல் தெரிகிறோம்.

நம் மனோதிடத்தை சேவையில் பயன்படுத்தினால் அது தவறான வகை மனோதிடம் ஆகும். அது மேலும் மேலும் அதிகமான துன்பங்கள், முரண்பாடுகள், வன்முறை ஆகியவற்றுக்குத்தான் வழிநடத்தும்.

கடவுளுக்காகச் துறப்பதிலும் காட்டப்படும் மனோதிடமே சரியான மனோதிடம் ! அது நிகழும்பொழுது 'நீங்கள்' அங்கு இருப்பதில்லை. சரியான மனோதிடம் என்பதன் பொருள், தன் சக்தி தன்னைத்தானே அழித்துக்கொள்ளுதலே! ஆனால், மனோதிடம்கொண்ட ஒருவர்தான் அதைச் செய்ய முடியும்!

மனோதிடத்திற்கான ஒரேயொரு சரியான பயன்முறை இருக்கிறது: 'முழுமையிடம் சரணடைவதற்காக அதைப் பயன்படுத்தும் பயன்முறையே!

மனோதிடம் இல்லாதவர்களும், மனோதிடம் எப்போதும் எடுத்துக்கொள்ளாதவர்களும், மனம் படைத்தவர்களும், மனத்தடுமாற்றம் கொண்டவர்களும் சீரணாகதி செய்ய முடியாது.

ச்ரணாகதி செய்ய, உறுதியான தீர்மானமும் ஒருங்குவித்தலும் உண்மையில், இதற்கு உறுதியான, உச்சபட்ச சாத்தியமான தீர்மானம் தேவைப்படுகிறது. நீங்கள் இருந்தால் மட்டுமே, சீரணாகதி நிகழும்.

சீரணாகதி செய்ய, உறுதியான தீர்மானமும் ஒருங்குவித்தலும் தேவைப்படுகிறது.

அப்படியல்லாமல் நீங்கள் துளி தயக்கம் காட்டினாலும், அது சீரணாகதி நிகழாது. நீங்கள் எதில் தயக்கம் காட்டுகிறீர்களோ, அதன் வழியாகவே அனைத்தும் உங்களுக்குள் திரும்ப நுழைந்துவிடும். நீங்கள் மீண்டும் அதே ஆளாகத்தான் இருப்பீர்கள்.

ஒருமுறை சீரணாகதி செய்து விட்டீர்களென்றால், அது, திரும்பப் பெற முடியாததாக இருக்க வேண்டும். திரும்பியே செல்ல முடியாத வகையிலான, முழுமையான, தீர்க்கமான தீர்மானமாக அது இருக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் கடந்து வந்த பாலமும் எரிக்கப்பட்டுவிடும் ; ஏறிவந்த பட்டுவிடும்.

சரியான தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் வலிமை படைத்ததாக இருக்கும். இது ஒரு விசித்திரமான கருத்து. ஆனால், அப்படித்தான் நமதுவாழ்க்கை இருக்கிறது. அது ஒரு புரியாத புதிராக இருக்கிறது.