KAILASA Library/பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)/சிறையே, விடுதலையின் அருமையைப் புரியவைக்கும்Sign in
பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)

சிறையே, விடுதலையின் அருமையைப் புரியவைக்கும்

முதலில், நாம் அஹங்காரத்தை உருவாக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

பிறகு, அதை நன்றாகப் பழுக்கவைத்து, பலமுள்ளதாக்கிக்கொள்ள வேண்டும். அடுத்து அதை, முழுவதுமாக விட்டுவிடவும் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படியென்றால் அதை தேவையில்லையே' என்றுதான் நமக்குத் தர்க்க ரீதியாகத் தோன்றும்.

மேலும், விறகு எரிக்கும்பொழுது, தீ பிரகாசமானதாக இருக்கும்! அஹங்காரம் என்று ஒன்று இல்லாமலிருந்தால், உங்களுக்கு அதை விட்டுவிடுவதில் உள்ள பேரானந்தமும், சுதந்திர உணர்வும் தெரியாமலே போய்விடும். ஒருவர் சிறையில் இருந்திருந்தால் தவிர, விடுதலையின் அருமை அவருக்குப் புரிய முடியாது. சுதந்திரத்தின் சுவை தெரிய வேண்டுமானால், சிறைவாச அனுபவம் என்பது அடிப்படை தேவையாக இருக்கிறது.

முரண்பாடுகள் வாழ்க்கையே நிறைந்ததுதான். ஒரு ஏழை மனிதர் தாம் ஒரு ஏழையாக இருப்பதையே அறிய மாட்டார். ஏழையல்லாத மக்கள் கண்களுக்கே அவர் ஒரு ஏழையாகத் தெரிவார். தான் ஏழையாக இருப்பது அவருக்குத் தெரியாது. ஏனெனில், தம் ஏழைமையை ஒப்பிட்டுப் பார்க்குக்கொள்வதற்கு அவரிடம் ஏதும் இல்லை. இருப்பதற்கு, முதலில் நீங்கள் செல்வந்தராக இருந்திருக்க வேண்டும். நீங்கள் கற்றதையெல்லாம் விட்டுவிடும் நாளில், நீங்கள் மறுபடியும் ஒரு குழந்தையாகிவிடுகிறீர்கள்.

மட்டுமே ஏழைமையின் வலியும் வேதனையும் உங்களுக்குப் புரியும்.

உண்மையான ஒரு பிச்சைக்காரனாக இருப்பதற்கு, முதலில் நீங்கள் ஒரு சக்கரவர்த்தியாக இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால், ஒரு பிச்சைக்காரனாக இருப்பதென்றால் என்னவென்றே உங்களுக்குத் தெரியாது.

விடப்படுவதற்காகவே, அஹங்காரம் பிற்காலத்தில் வலுவுள்ளதாக்கப்பட வேண்டும். அனங்காரம் வலுவுள்ளதாக்கப்பட வேண்டும் என்பது, சிதறிப்போய்க் கிடக்கும் நமது சக்திகளை ஒரே பந்தாகத் குறிக்கிறது. உண்மையில், நமது சக்திகளை இப்படி ஒன்றுதிரட்டிய பிறகு,

அதைக் கைவிடுவது நமக்கு ஒரு எளிதான செயலாகிவிடுகிறது. இது, சரணடையும் செயல்முறைக்கு உதவிகரமாக இருக்கிறது.

நீங்கள் கற்றதையெல்லாம் விட்டுவிடும் நாளில், நீங்கள் மறுபடியும் ஒரு குழந்தையாகிவிடுகிறீர்கள். பிறகு நீங்கள், இரண்டாவது முறை பிறக்கிறீர்கள். இது, முதல் குழந்தை பருவம் போன்றது அல்ல ; அப்போது, அறிவுள்ளவராய் இருப்பது பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாமலிருந்தது. ஆனால், இப்போது, 'அறிவுள்ளவராய் இருப்பது என்றால் என்ன' என்பதை நீங்கள் அறிவீர்கள். கற்றதையெல்லாம் விட் (டுவிடுவதால் விளையும் சுதந்திரத்தையும், கொண்டாட்டத்தையும் ஆனந்தத்தையும் நீங்கள் உணர்வீர்கள், எதையும் பெறாமலேயே!

நீங்கள், கொண்டாட்டமாகவும் ஆனந்தமாகவுமே இருந்தீர்கள், ஆனால், அது பற்றி அறியாமலிருந்தீர்கள். இப்போது உங்களை விழிப்புள்ளவராக்குவதற்கு, இந்த முழுச் செயல்முறையும் தேவைப்படுகிறது. ஒரு உரையாடல் செயல்முறை மூலமாகத்தான், உங்களுக்கு விழிப்புணர்வு மலர்கிறது.

அதனால், விட்டுவிட முடியும்போது மட்டுமே, மனோதிடம் சரியானதாகவும் மற்றும் நல்லதாகவும் ஆகிறது. உங்களால் அதை விட முடியவில்லையென்றால், நீங்கள் அதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தால், அதுவே உங்களின் வாழ்க்கைமுறையாகிவிட்டால், நீங்கள் மொத்த விஷயத்தையுமே தவறவிடுகிறீர்கள். பிறகு அது, வேதனையையும் நரகத்தையும் உண்டாக்குகிறது.

நரகத்தையோ சொர்க்கத்தையோ உருவாக்குவதற்கு, மிகத் தீர்க்கமான மனோதிடம்தான் தேவைப்படுகிறது. நீங்கள் தொடர்ந்து அதிலேயே இருந்தீர்களென்றால், அது நரகத்தையே உண்டாக்கும். நீங்கள் அதிலிருந்து குதித்து வெளியே வந்து விட்டீர்களானால், அது சொர்க்கத்தை உருவாக்கிவிடும் !

பேரானந்தத்தின் பரிணாம வளர்ச்சி ஒன்றே, பரிணாம வளர்ச்சி என்று சொல்வதற்குத் தகுதிவாய்ந்த ஒரே பரிணாம வளர்ச்சி. இந்தப் பேரானந்தம் வளரவில்லையென்றால், நீங்கள் வளர்வதில்லை, இந்தச் சமுதாயம் வளர்வதில்லை. மக்கள், பொதுவாக எதை பரிணாம வளர்ச்சி என்று பரிந்து வைத்திருக்கிறார்களோ அது வெறும் அபத்தமே.

ஞானத்திற்கான ஒரு தேடலே சரணாகத்

பரிணாம வளர்ச்சி என்பது மிகவும் சிக்கலான ஒரு நுட்பத்தைக் குறிப்பதல்ல! நீங்கள் பல கருவிகள், பல சாதனங்கள், பெரிய பெரிய இயந்திரங்கள், விதவிதமான ஆகாய விமானங்கள், நவீன இரயில்கள், அருமையான வீடுகள் என்று பலவற்றையும் பெற்றிருக்கலாம் ஆனால், நீங்கள் அதே மனிதராகத்தான் இருப்பீர்கள்.

நீங்கள் ஒரு நாள், சந்திரனையோ நட்சத்திரங்களையோ சென்றடையலாம் ஆனாலும், அங்கும் நீங்கள் இந்தப் பூமியில் செய்த செயல்களைத்தான் தொடர்ந்து செய்வீர்கள்! இங்கு நீங்கள் சிகரெட் புகைத்தால், அங்குச் சென்றும் புகைக்கத்தான் செய்வீர்கள். இங்கு உங்களுக்கு மதுப்பழக்கம் இருந்தால், நீங்கள் சந்திரனுக்குக்கூட, மது பாட்டில்களை தூக்கிக் கொண்டு போவீர்கள். அங்கு வேறென்ன செய்வீர்கள் ?

மனித இனம், இப்படியே தொடர்ந்து இருந்தால், இங்கு, வளர்ச்சி ஏதும் நிகழாது. நாம் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறோம் என்றதொரு தோற்றத்தைக் காட்டும் வேறொரு வளர்ச்சியைத்தான் நம்மால் எடுத்து வர முடியும். பல நூற்றாண்டுகளாகவே, மணித இனமானது வளர்ச்சியடையவே இல்லை.

இங்கொன்றும், அங்கொன்றுமாக ஒருசிலர் மட்டுமே வளர்ச்சியடைந்தார்கள். புத்தா் போன்ற வெகுசிலரையே நாம் கேள்விப்படுகிறோம். அந்தப் பேரானந்த அமுதை ருசித்தவர்கள் மட்டுமே பரிணாம வளர்ச்சியடைந்த மனிதப் பிறவிகள்.

வெகுசிலரே இந்தப் பரிணாம வளர்ச்சியை அனுபவமாக உணர்ந்திருக்கிறார்கள். மரத்திலிருந்து இறங்கி, நான்கு கால்களுக்குப் பதிலாக இரண்டு கால்களால் நடந்து விட்டால் மட்டும், நாம் வளர்ச்சியடைந்த ஒரு மனிதனாகிவிட முடியாது. அது நம்மை நேராக நிமிர்ந்திருக்கச் செய்யும், அவ்வளவே தான்.

உண்மையான பேரானந்தத்தைப் பொறுத்து மதிப்பீடு செய்யப்படுகிறது. போரனந்தம் விழிப்பணர்வோடு சோ்ந்து வளர்கிறது. அவை இரண்டும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். விழிப்புணர்வில் வளரும்பொழுது, நீங்கள் அதிக ஆனந்தமாய் இருப்பீர்கள் அல்லது அதிக ஆனந்தமாய் இருக்கும்பொழுது, விழிப்புணர்வு உள்ளவராக இருப்பீர்கள். விழிப்புணர்விலிருந்தோ ஆனந்தத்திலிருந்தோ ஆரம்பித்துக்கொள்ளுங்கள். ஆனால், நீங்கள் வளருவீர்கள்.

சரியான பாதையில் செல்வதற்கான ஒரு முயற்சியே சீரணாகதி!

ஒருவர், ஒரு ஞானியாக மாறினால் தவிர, அவர் வளர்ச்சியடையும் சிறந்த வாய்ப்பை இழக்கிறார். மற்ற எல்லா வளர்ச்சிகளும் பொய்யானதே. சரியான பாதையில் செல்வதற்கான ஒரு முயற்சியே ச்ரணாகதி! அது, நம் உள்ளார்ந்த சக்தியை விடுவிக்கிறது.

மனித இனமானது எண்ணிறந்த அளவற்ற ஆற்றலைத் தன்னகத்தே கொண்டுள்ளது. மனிதன், மகிழ்ச்சியின் இறுதி உச்சத்தை சீரணாகதியில்தான் அடைய முடியும்; உடைமைகளைச் சேர்த்துக்கொள்வதில் அல்ல.

அறிவைப் பெறுவதென்பதுமிகவும் மலிவானது மற்றும் எளிதானதும்கூட. ஒருவர் நூலகத்திற்குச் சென்று தம் அறிவை வளர்த்துக்கொள்ளலாம். நமது ஞாபக சக்தி மிக மகத்தானது, அதீதமானது. ஒரு தனி மனிதருடைய ஞாபக சக்தி என்பது உலகத்திலுள்ள எல்லா நூலகங்களிலுமுள்ள எல்லா நூல்களையும் போட்டியிடும் அளவுக்கு, சக்தி வாய்ந்தது என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

மனிதனின் போட்டியிடும் கணினி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அது, ஒரு எல்லையே அற்றதாகவும், தான் சிறந்த புத்திசாலி என்றதொரு பெரிய மாயையை உருவாக்க வல்லதாகவும் இருக்கிறது.

ஜ்ஞாரம் என்பது முற்றிலும் ஒரு வித்தியாசமான கருத்து. அது அன்பின் மூலம் வருகிறது. அது இதயத்தில் வளர்கிறது, மலர்கிறது. இதயத்தின் பாதைகளானது, தலையின் பாதைகளைப் போன்றவை அல்ல.

ஞானத்திற்கான ஒரு தேடலே சிரணாகதி. உங்களுக்கு அறிவை வழங்குவதில் எனக்கு விருப்பமில்லை. நான் ஒரு ஆசிரியர் அல்ல. ஒரு ஆசிரியர் அறிவை வழங்குகிறார் ஒரு குருவானவர் தம்முடைய இருப்பை வழங்குகிறார் ஒரு குரு கற்பிப்பதில்லை. மாறாக, நீங்கள் கற்றவற்றிலிருந்து உங்களை விடுவிக்கிறார். உங்கள் பாரத்தை இறக்க உதவுகிறார். நீங்கள் தலையிலிருந்து இருதயத்துக்கு வருவதற்கு உதவி செய்கிறார்.

நீங்கள் இருதயத்தில் மையங்கொண்டு விட்டால் போதும், உங்கள் வாழ்வு, ஒரு புதிய சக்தியில் துடிப்போடு திகழும். அன்பே அந்தப் புதிய சக்தி. அது, நீங்கள் அதிக அன்பு கொண்டவராக ஆவது என்பது அல்ல; நீங்கள் அன்பாகவே மலருவது, நீங்கள் அன்பாகவே ஆவது.

அஹங்காரம் அன்பாகவே உணர்வுமாற்றம் பெறுவதே சீரணாகதி. இது, உங்கள் மீது நீங்களே கொண்டுள்ள காதலை, மற்றவர்களிட்டும் கொள்ளும் ஒரு உணர்வுமாற்றம். ஆம், இதை ஆரம்பிப்பதற்கு உங்களுக்கு விடப்படும்பொழுது ச ரணாகதி நிகழ்கிறது.

சிலருக்கு, இதை இதை ஆரம்பிப்பதற்கான அஹங்காரம் இல்லை என்றால் என்ன செய்வது ? ஏற்கெனவே கங்களுடைய அடையாளத்தைக் கரைத்துவிட்டவர்களின் நிலை என்ன ?

ஏற்கெனவே கூட்டு அடையாளத்தில் தங்களுடைய கரைக்குவிட்ட அவகாரப் புருஷர்களுக்கு,

அவரங்காரம் அன்பாக உணர்வுமாற்றம் பெறுவதே ச் ரனாாகதி !

இதை ஆரம்பிப்பதற்கான அஹங்காரம் தேவை இல்லை.

அஹங்காரமற்றவர்களாக ஒருவரும் இருக்க முடியாது. இப்படி நிகழ்வதற்கான சாத்தியம் இல்லை என்று நீங்கள் சொல்லலாம். நீங்கள் நினைப்பது தவறு. இது ஒரு அரிதான நிகழ்வு என்பது உண்மையே. ஆனால், இது நிகழ்வதற்கான சாத்தியம் இருக்கிறது. ஏனெனில், அவதாரப் புருஷர்கள் தங்களுடைய கூட்டு அடையாளங்களைப் பற்றிய முழு விழிப்புணர்வோடு இப்பூவுலகிற்கு வருகிறார்கள். அவர்கள் ஏற்கெனவே பிரபஞ்சத்தோடு ஒத்திசைந்துதான் இருக்கிறார்கள்.

உச்ச சிரிக்கை

18.17 யார் அஹங்காரமற்றிருக்கிறானோ, யாருடைய புத்தி பற்றற்று இருக்கிறதோ அப்படிப்பட்டவன் ஒரு கொலையே செய்தாலும். அவன் கொலையாளி அல்ல. மேலும் அவனுடைய செயல்களால் அவன் பந்தப்படுவதில்லை !

இது ஒரு ஆபத்தான அறிக்கை! கிருஷ்ணர் இறுதி எல்லைக்கே செல்கிறார்.

கிருஷ்ணரைத் தவிர வேறெந்த குருவும் இப்படி ஒரு ஒரு துணிச்சல்மிக்க கருத்தை வெளியிட முடியாது. அஹங்காரத்தினால் தூண்டப்படாத ஒருவர், பற்றை அடிப்படையாகக்கொள்ளாத புத்தியைப் பெற்ற ஒருவர், இவ்வுலகில் பல பேரைக் கொன்றாலும். அவர் கொலையாளியும் அல்ல, அவருடைய செயல்களால் அவர் பந்தப்படுவதுமில்லை.

நிச்சயமாக, அந்த அளவிற்கு உயர் விழிப்புணர்வு நிலையை அடைந்த ஒருவர் கொலை புரிவதைப்பற்றி நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார். 'நான்', 'எனது' என்ற நினைவை கொண்டிருக்கும்வரை, நாம் பிறரைத் தாக்குவோம், கொல்லுவோம். நாம் 'ஒதுக்குபவர்களாக' இருக்கும் வரை, நாம் கொல்கிறோம். ஆனால், நாம் சரணடையும்பொழுது, எல்லாவற்றையும் 'சேர்த்துக்கொள்ள'க் கற்றுக்கொள்கிறோம்.