ஒவ்வொரு குருவின் கடைசி போதனையும், சரணாகதியே
இறுதியில், கிருஷ்ணர் வெகு அழகாகச் சொல்கிறார்: "இதுவே கடைசி நுட்பம். உச்ச நுட்பம். எல்லாத் தர்மங்களையும் விட்டுவிடு. எல்லாக் குழப்பங்களையும் விட்டுவிடு. என் காலடியில் சரணடைந்துவிடு. நான் உன்னைக் காக்கிறேன். நான் உனக்கு முக்தி அளிக்கிறேன்.'' கீதையின் மொத்த சாரமும் இதுவே.
கீதை, உலக தத்துவங்களின் ஒரு சுருக்கப்படாத, முழுமையான அகராதி. எல்லாத் தத்துவப் போக்குகளின் விதையை... எல்லாச் சம்பிரதாயங்களின் விதையை ... எல்லா ஆன்மிக நுட்பங்களின் விதையை ... நீங்கள் கீதையினுள் பார்க்கலாம்.
ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஶரணம் வ்ரஜ | அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஶுச: || 18.66
ஒரு அழகான அல்லோகம். திரும்பவும் நான் இதைச் சொல்கிறேன், எல்லா வழிமுறைகளையும், வேர்களையும் அடியோடு விட்டுவிடு. தர்மம் என்றால் வாழும் முறை என்று பொருள். தர்மம் என்றால் ஸ்ர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஸ்ரணம் வ்ரஜ வாழும் முறை என்று பொருள். ஒரு துரும்பைக்கூட வைத்துக்கொள்ளாதே. அப்படியே எல்லாவற்றையும் விட்டுவிடு. உன்னுடைய என்னிடமே சரணாகதி செய்துவிடு.
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சு ச:
எல்லா இருளையும், எல்லா எதிர்மறைத் தன்மைகளையும், எல்லாப் பாவங்களையும் உன் இருத்தலிலிருந்து நீக்கிவிடுகிறேன். உன்னை விடுதலை செய்கிறேன். இறுதி ஜீவாத்ம ஞானத்தை நான் உனக்கு வழங்குகிறேன். வருந்தாதே!
இதுவே கிருஷ்ணர் கொடுக்கும் கடைசி வார்த்தை. எவராயினும் இந்தக் கடைசி வார்த்தையைத்தான் கொடுக்க முடியும். எல்லாச் சிறந்த குருமார்களுடைய கடைசி வார்த்தையும் இதுவாகத்தான் இருக்கிறது.
சரணாகதி என்பதன் பொருள் என்ன? சரணாகதி என்ற வார்த்தையைக் கேட்டவுடன் நாம் நினைப்பது: ஓ, இதுவே எளிதான நுட்பம். இதுவே வழிமுறை. சரணடைந்து விட்டால், நாம் எதுவுமே செய்ய வேண்டியதில்லை.
தியானம், பூஜை, யாகம் என்று எந்தவொரு நுட்பத்தை எடுத்துக்கொண்டாலும், நாம் ஏதாவது செய்யத்தான் வேண்டும். ஆனால், சரணாகதி என்றால் மட்டும் நாம் எதுவுமே செய்ய வேண்டியதில்லை என்று மக்கள் நினைத்துக்கொள்கிறார்கள்.
பலரும் என்னிடம் சொல்வதுண்டு: ஸ்வாமிஜி, நான் எல்லாவற்றையும் சரணாகதி செய்துவிட்டேன். ஆனாலும், என்னுள் எதுவுமே நிகழவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்?
இந்தக் கூற்றே தவறு. நீங்கள் உண்மையிலேயே சரணடைந்திருந்தால், ஏதாவது நிகழ வேண்டும் என்றோ அல்லது நிகழக்கூடாது என்றோ எதிர்பார்க்கமாட்டீர்கள். எனக்குள் எதுவுமே நிகழவில்லை என்று நீங்கள் சொல்லும்போது, தெளிவாக ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் சரணடையவில்லை.
பெரும்பாலான நேரங்களில் சரணாகதி எனும் வார்த்தையை மக்கள் சுலபமாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அதன் அர்த்தத்தை மட்டும் ஒருபோதும் புரிந்துகொள்வதில்லை. அதன் இயங்கு முறையை இப்போது பார்க்கலாம்.
உண்மையில் சரணாகதி என்றால் என்ன? குருமார்கள் சரணாகதி என்னும் வார்த்தைக்கு என்ன பொருள் சொல்கிறார்கள்? சரணாகதி என்ற வார்த்தையை அவர்கள் பயன்படுத்தும் முறை, சாதாரண மக்கள் பயன்படுத்தும் முறையிலிருந்து முற்றிலும் மாறுப்பட்டிருக்கிறது.
நான் என்பதை சரண் செய்வதென்றால், அஹங்காரம், மனம், மனப்பாங்கு ஆகியவற்றை சரண் செய்வது. இது, உங்கள் விதிமுறைகளை சரண் செய்வதைப் பற்றியது.
சரணாகதியில் மூன்று நிலைகள் உள்ளன. முதலாவது, 'நான்' என்பதை சரண் செய்வது. இரண்டாவது, 'எனது' என்பதை சரண் செய்வது. மூன்றாவது, 'நான்', 'எனது' என்ற இந்த இரண்டையும் சரண் செய்வது. இதை ஒவ்வொரு நிலையாக விளக்குகிறேன்.
முதலாவது, 'நான்' என்பதை சரண் செய்வது:
நான் என்பதை சரண் செய்வதென்றால், அஹங்காரம், மனம், மனப்பாங்கு ஆகியவற்றை சரண் செய்வது. இது, உங்கள் விதிமுறைகளை சரண் செய்வதைப் பற்றியது.
ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்ஸரிடம் ஒரு சீடர் கேட்டார்: குருவே, நான் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டேன். நான் எப்படி அதைவிடுவது? குரு: தேவி காளிக்கு அதைச் சமர்ப்பித்துவிடு; நீ தானாகவே அதை விட்டுவிடுவாய்; பின்பு நீ சரியாகிவிடுவாய்! சீடர்: எப்படி காளிதேவிக்கு நான் அதைச் சமர்ப்பிக்க முடியும்? குரு: குடிப்பதற்கு முன், நீ காளியை நினைத்துக்கொள். முதலில் அதை காளிக்கு அர்ப்பணி, பிறகு நீ குடி! இது ஒரு வினோதமான சூழ்நிலை.
ஆனாலும் சீடர், தம் குரு சொன்னபடியே செய்தார். குடிக்கும் முன் அதைக் காளிக்குப் படைத்து விட்டு, ஒ, காளி, இது உனக்கானது என்று பிரார்த்தித்துவிட்டு, அதைப் பிரசாதமாக நினைத்துக் குடித்தார்!
மூன்று நாட்களுக்கு பின், அந்தச் சீடர் சொன்னார்: இனி என்னால் குடிக்க முடியாது. இதுபோன்ற விஷயங்களையே முற்றிலுமாக மறந்துவிட்டேன்!
ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்ஸரின் வாழ்க்கை வரலாற்றுப் பதிவில் சொல்லப்பட்டிருக்கும் குறிப்பு இது.
நீங்கள் ஒரு ஆழமான உணர்வுமாற்றம் நிச்சயம் நிகழும். மனம் மற்றும் ஜடப்பொருள் நிலையிலிருந்து சக்தி நிலைக்கு மாறும் உணர்வுமாற்றம் உங்களுள் நிகழும்.
கடவுளுக்கு ஒருவரால் எப்படி அவருடைய நெடுநாளைய குடிப்பழக்கத்தை விட்டுவிட முடியும் என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், அப்படி அர்ப்பணிக்கும்போது, அவருடைய இதயம் ஆச்சரியப்பட ஆரம்பித்தது, நான் மிகவும் விரும்பும் காளிதேவிக்கு எப்படி நான் மதுவைக் கொடுப்பது?
அடுத்து, தன்னிடமே கேள்வி கேட்டுக்கொள்கிறார். நான் காளிக்கு இதைத் தர முடியாதென்றால் நான் எப்படி அதைக் குடிக்க முடியும்? அதே கடவுள் தானே, என்னுள்ளும் குடிகொண்டிருக்கிறது. அதனால் நான் எப்படி அதைக் குடிக்க முடியும்? இதை உணர்ந்தவுடன், அவருக்குள் இயல்பாகவே ஒரு கேள்வி எழுந்தது. மதுவை எனக்குள் ஊற்றி, என்னுடைய உடல் - மன அமைப்பை எப்படி நானே கெடுத்துக் கொள்வது?
சரணாகதி, புத்திசாலித்தனத்தைக் கொடுத்தது, அவருக்கு அந்தப் புரிதலைக் கொடுத்தது. அந்த இயற்கையான புரிதலே, அவர் செய்துகொண்டிருந்த செயலைக் கைவிடச் செய்தது.
இன்னுமொரு உண்மையாக, ஆழமான சிரத்தையுடன் உங்கள் மன அமைப்பை, நீங்கள் நேர்மையோடு சரணாகதி செய்யும்போது, மனம் மற்றும் ஜடப்பொருள் நிலையிலிருந்து சக்தி நிலைக்கு மாறும் உணர்வுமாற்றம் உங்களுள் நிகழும்.
கட்டுறுமனப்பாங்கை குருவின் காலடியிலோ அல்லது கடவுளின் காலடியிலோ சமர்ப்பித்துவிட்டால், அது முற்றிலுமாகக் கரைந்து மறைந்தே போகும்.
நீங்கள்தான் தேர்வுசெய்தீர்கள் ...
மனமே ஒரு பழக்கம்தான்! உங்களுடைய 'நான்' என்பது சில பழக்க வழக்கங்களின் தொகுப்பே. உங்களுடைய அகங்காரம் என்பது சில கட்டுப்பாடுகளின் தொகுப்பே. அதை நீங்கள் குருவின் காலடியில் சமர்ப்பிக்கும்பொழுது, நான் என்பதை நீங்கள் சரணாகதி செய்யும்பொழுது, அது முழுவதும் கரைந்து, மறைந்துவிடுகிறது.
ஒரு சிறு உதாரணம் மூலம் நீங்கள் இதைப் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் தினமும் காலையில், பத்து மணியளவில் காபி குடிக்கும் பழக்கமுள்ளவராக இருந்தீர்களானால், காலை பத்து மணியானாலே போதும், காபி குடிப்பதைப் பற்றி நீங்கள் நினைக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் மனமே, இப்போது மணி பத்து ஆகிவிட்டது, காபி கொண்டு வா என்று தானாகவே சொல்லிவிடும். இது ஒரு பழக்கம். இது ஒரு அடிமைத்தனம்! பழக்கத்தின் காரணமாகவே, மனம் காபியைக் கேட்கிறது.
அதைப்போலத்தான், உங்கள் எண்ணங்கள்கூட ஒரு பழக்கமே. உங்களுடைய மனோநிலைகள்கூட ஒரு கட்டுறு மனப்பாங்கே. உங்கள் மனம்கூட ஒரு பதிவுதான். காபி அருந்துவதை ஒரு
உங்களுடைய 'நான்' என்பது சில பழக்க வழக்கங்களின் தொகுப்பே. அதை நீங்கள் குருவின் காலடியில் சமர்ப்பிக்கும்பொழுது, அது முழுவதும் கரைந்து, மறைந்துவிடுகிறது.
பழக்கமாக எப்படிக் கொண்டிருக்கிறீர்களோ, அதைப்போலவே கவலைப்படுவதையும் ஒரு பழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள், உணர்ச்சிவசப்படுவதை ஒரு பழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள், ஒவ்வொரு சூழ்நிலைக்கும் எதிர்ச்செயல் புரிவதை ஒரு பழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள்.
நீங்கள் இந்த ஒரு உதாரணத்தைப் புரிந்துகொண்டீர்களானால்கூட, ஒன்றை புரிந்துகொள்வீர்கள். உங்களை யாராவது, ஏதாவது விமர்சித்துவிட்டால் போதும்,
உடனே நீங்கள் எதிர்ச்செயல் புரிவீர்கள். நீங்கள் ஒருவித பதட்டத்துக்குள்ளாவீர்கள். அதற்குப் பிறகு, அவரைக் குறைகூற ஆரம்பித்துவிடுவீர்கள்.
யாராவது உங்களைப் புகழ்ந்தால் போதும், மிகவும் அவரைப் பார்த்து ஒரு இனிய புன்னகை பூப்பீர்கள், அவரை நினைத்துக்கொள்வீர்கள். நீங்கள் நேர்மறை முறையாகப் பதில்செயல் புரிவீர்கள்.
உங்கள் மனம்கூட ஒரு பதிவுதான். காபி அருந்துவதை ஒரு பழக்கமாக எப்படிக் கொண்டிருக்கிறீர்களோ, அதைப்போலவே கவலைப்படுவதையும் ஒரு பழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள்.
எதிர்மறை முறையாக எதிர்ச்செயல் புரிவது மற்றும் நேர்மறை முறையாகப் பதில்செயல் புரிவது ஒரு தேர்ந்தெடுப்பே.
உங்கள் வாழ்க்கையை எடுத்துக்கொண்டால்கூட, காபி குடிக்க வேண்டும் என ஆரம்பத்தில் தேர்வுசெய்தது என்னவோ, நீங்கள் தான். அப்படிப் பல முறை குடித்ததற்குப் பின்பு, அதற்கு அடிமையாகிவிடுவீர்கள். அப்படி தேர்வுசெய்தது நீங்கள்தான் என்பதையே மறந்துவிடுகிறீர்கள்.
அதைப்போலவே, விமர்சிக்கும்பொழுது, நீங்கள்தான் தேர்வு செய்தீர்கள். அப்படிப் பலமுறை தேர்வுசெய்த பிறகு, நீங்கள்தான் அதைத் தேர்வுசெய்தீர்கள் என்பதையே நீங்கள் மறந்துவிடுகிறீர்கள். அதற்குப் பிறகு, மற்றவர்கள் எப்போதெல்லாம் உங்களை விமர்சிக்கிறார்களோ, அப்போது நீங்கள் தானாகவே சங்கடப்படுகிறீர்கள். நீங்கள் கலங்கி மனச்சோர்வடைகிறீர்கள். அவர்களைத் திட்ட ஆரம்பித்துவிடுகிறீர்கள்.
உங்களின் மன அமைப்பு, உங்கள் மனரீதியான பதில்செயல்கள், உங்கள் அகங்காரம் இவையெல்லாமே உங்களுடைய தேர்வுகள்தான். இவை அனைத்துமே உங்கள் மனப்பழக்கங்களே.
நீங்கள் நான் என்பதை சரணாகதி செய்யும்பொழுது, உங்கள் மன அமைப்பை தெய்விகத்திடம் சரணாகதி செய்யும்பொழுது, நீங்கள் கவலைப்படுவதையோ, பதட்டப்படுவதையோ, மற்றவர்களை குறைகூறுவதையோ தேர்வுசெய்து கொண்டிருக்க முடியாது. நீங்கள் உண்மையிலேயே சரணாகதி செய்யும்போது, யாராவது உங்களை விமர்சித்தால்கூட, மனம் புண்படுதலையோ, பதட்டத்தையோ, அவரைக் குறைகூறுதலையோ தேர்வுசெய்ய முடியாது.
நீங்கள் உங்கள் பழக்கங்களுக்கு அடிமையாக இருக்கும்வரை, நீங்கள் உண்மையிலேயே சரணாகதி செய்துவிட்டதாக சொல்வது சரியல்ல. உங்களுடைய வாழ்க்கையையே மாற்றியமைக்கச் செய்துவிடும் உண்மையான சரணாகதிக்கு அதற்கான வல்லமை உண்டு.
நீங்கள் உண்மையாக சரணாகதி செய்யும்பொழுது, எதையெல்லாம் தேர்வுசெய்கிறீர்களோ, அவை உங்களுடைய தேர்வு அல்ல. நீங்கள் விமர்சனத்தினால் பாதிப்புக்குள்ளாகமாட்டீர்கள். நீங்கள் விமர்சனத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டீர்கள் என்பது மட்டுமல்ல, நீங்கள் விமர்சிக்கப்பட்டதாகவே உணரமாட்டீர்கள்.
ஏதோவொரு விமர்சனத்திற்கு நீங்கள் பாதிக்கப்பட்டதாக உணர்ந்தால், நீங்கள் இதுவரை சரணாகதி செய்யவில்லை என்பதை ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். சரணாகதி செய்திருக்கிறீர்களா, இல்லையா என்பதை நீங்களே திரும்பத் திரும்ப சோதனைசெய்து பார்த்துக்கொள்ளுங்கள்.