முயற்சிகளைக் கைவிடுங்கள், அதுவே போதுமானது!
ஒவ்வொரு தரிசனமும் வித்தியாசமானவையே. இருப்புத்தன்மை அல்லது இயற்கையின் அழகே, அது ஒருபோதும், மீண்டும் அதேபோல் நிகழ்வதில்லை என்பதே. அதனால்தான், கடவுள் ஒரு கலைஞர், அவர் ஒரு பொறியாளர் அல்ல என சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு தரிசனமும் வித்தியாசமான முறையில், ஒரு புதிய பரிமாணத்துடன், புதிய உத்வேகத்துடன், புதிய தெரியாத ஊக்கத்துடன் வெளிப்படுகிறது. ஒவ்வொரு தரிசனமும், இதுவே சிறப்பானது எனத் தோன்றும், அடுத்த தரிசனம்வரை!
ஆனந்த தரிசன நேரத்தில் குருவிடமிருந்து பெற்ற சக்தியானது, நம்மை ஆசைகளற்ற நிலைக்குக் கொண்டுசென்றுவிட முடியும். நாம் அன்புடனும், திறந்த மனத்துடனும் இருந்தால், நம்மை அது பல சிறந்த வழிகளில் உணர்வுமாற்றம் பெறச்செய்துவிட முடியும்.
குரு, கேட்பவருடைய கருப்புக்குள் ஊருருவி நோக்கி, 'கேட்டவருக்கே' பதிலளிக்கிறார், 'கேள்விக்கு' அல்ல. உறுதியான பட்டறிவு ரீதியான புரிதல் மற்றும் தியானத்தின் மூலமாக முயற்சி செய்து, ஆசைகளற்ற மனநிலையை அடைய முடியும். ஆனால், தரிசன நேரத்தில், குருவின் கருணை மட்டுமே, உங்களை நேரடியாக ஆசைகளற்ற நிலைக்கு எடுத்துச்செல்ல முடியும்.
நீங்கள் முழுமையாக, மகிழ்ச்சியாலும் நன்றி உணர்வாலும் நிரம்பப் பெற்று, நிகழ்காலத்தில் இருக்க முடியுமானால், சக்தி உங்களுக்குள் ஊடுருவிச் செல்ல முடியும். உங்களுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள உதவுவது மட்டுமல்லாமல், உங்களை, அதையும் கடந்து, அசைகளற்ற நிலைக்குக் கொண்டுசெல்லும். முழுமையான மகிழ்ச்சியில் இருப்பது என்பது குறிப்பாக எதன்மீதும் அல்லாமல், ஒரு தீவிரமான விருப்ப நிலையில் இருப்பதே!
அது, குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எதைக் குறித்தும் அல்லாத தீவிர ஆசை. இந்நிலையில், நீங்கள் உள்வாங்கும் தன்மையுடனும், திறந்தமனத்துடனும் குருவினிடத்து இருப்பீர்கள். நீங்கள் இதற்காக எந்தவிதமான முயற்சியையும் செய்ய வேண்டாம், உங்களுடைய முயற்சிகளைக் கைவிட வேண்டும், அவ்வளவுதான்! பின்பு, மற்ற அனைத்தையும் பிரபஞ்ச சக்தியே கவனித்துக் கொள்ளும். சக்தி நுண்ணறிவுள்ளது. நீங்கள் அமைதியானால் போதும், பிரபஞ்ச இருப்பு உங்களுள் பாய்ந்து, தேவையானவற்றைச் செய்துவிடும்.
தரிசனம் என்பது ஒரு தெளிவான காட்சியைப் பெறுதல், 'பளீரென' தெளிவைப் பெறுதல். அது, மங்கலாக அல்லாமல் தெளிவாகப் பார்ப்பது. தரிசனத்தின்போது வெளிப்படும் சக்தியானது, இருப்பு நிலையில் அறிய அற்புதங்களை நிகழ்த்த வல்லது.
தரிசனத்தின்பொழுது விழிப்புணர்வை உங்களுக்குள் கொண்டு வந்தீர்களானால், பிரபஞ்சக் கடலின் பிரமாண்டத்தினுடைய ஒரு காட்சியைப் பெறலாம்: உருவாக்கப்பட்ட உற்சாகம், பாடல்கள் மற்றும் நடனங்களுக்கு இடையினிலும், அமைதிக் குளத்தில் மூழ்கியிருப்பதை உணரலாம். இந்த மொத்த நிகழ்விலும், நம்மைச் சூழ்ந்திருக்கும் பலத்த சத்தங்களுக்கு இடையிலும், அதிர்வுள்ள மௌனத்தின் மைய இழையை உணரலாம்.
பின்பு நீங்கள், 'மையத்தில் நிலைகொள்வது' மற்றும் 'அனைத்தையும் உள்ளடக்கியிருப்பது' என்பவற்றின் முறையினைப் புரிந்துகொள்வீர்கள், எதையும் ஒதுக்கித் தள்ளாமலேயே அல்லது துறக்காமலேயே அனைத்தையும் அரவணைத்துக் கொண்டு, ஆனால் அதே சமயத்தில், மையத்தில் நிலைகொண்டு, மொத்தக் காட்சியையும்