KAILASA Library/பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)/ஒரு பார்வையிலிருந்து ரசிப்பது எவ்வாறு என்பதைப் புரிந்துகொள்வீர்கள்!Sign in
பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)

ஒரு பார்வையிலிருந்து ரசிப்பது எவ்வாறு என்பதைப் புரிந்துகொள்வீர்கள்!

தரிசனத்திற்குப் பிறகும், ஒவ்வொரு தீக்ஷ்க்குப் பிறகும் புத்திசாலித்தனம் அதிகரிக்கிறது ; ஆசைகள், தெளிவு பெறுகின்றன, ஒன்று, அவை நிறைவடைகின்றன அல்லது உங்கள் அமைப்பிலிருந்து மறைந்துவிடுகின்றன.

குருவிடம் நீங்கள் எதையும் கேட்க அவசியமில்லை. சரணாகதியில் அனைத்தையும் நிறைவேற்றிவிடும்!

குருவிடம் வெளிப்படுத்திக் கொள்கிறீர்கள். அவர்

எப்போதுமே உங்கள் இருப்பு நிலையைத்தான் பார்க்கிறார். நீங்கள் அவரிடம் எதைக் கேட்க முயற்சி செய்தாலும், அது நேரத்தை வீணாக்குவதாகும். ஏனெனில், அந்த நேரத்தில் நீங்கள் உங்களுடைய ஆத்மாவின் குழப்பத்தையும் அறியாமையையுமே வெளிப்படுத்துவீர்கள். உங்களுக்கு என்ன தேவை என்பது பற்றி உங்களுக்கே தெரியாது.

உங்களை இன்னும் மேலான நிலைக்கு எடுத்துச்செல்ல, என்ன செய்ய வேண்டுமென்பது குரு அறிவார். நீங்கள் எதையும் அவரிடம் கேட்க அவசியமில்லை. சூட்சுமமாகவே அனைத்தையும் நிறைவேற்றிடும் !

அனுபவம் உங்களுக்குள் ஊடுருவவும், அது தன்னை மகிழ்ச்சியான வழிகளில் வெளிப்படுத்தவும் நீங்கள் அனுமதித்தால், நீங்கள் முழுமையாகவும், பரவசமாகவும் இருக்க முடியுமானால், நீங்கள் சக்தியுடன் இசைந்து இருக்க முடியுமானால், அப்போது நீங்கள், தானாகவே, இதுவரை சேர்த்து வைத்திருந்த வார்த்தைகளும் எண்ணங்களும் இன்றி வெறுமை ஆகிவிடுவீர்கள். அதன்பின்பு தரிசனத்திற்கு குரு அருகில் செல்லும்பொழுது, உங்களுள் வெற்றிடமும் மகிழ்ச்சியும் மட்டுமே இருக்கும்.

அந்த மனநிலையில், நீங்கள் உங்களுக்குள் அமைதியாக இருப்பீர்கள். நீங்கள் வரவேற்கும் தன்மையுடனும், அன்புடனும் இருப்பீர்கள். நீங்கள் ஆனந்தம்பொங்கும் உள் அமைதியுடன் இருப்பீர்கள்.

அந்த சமயத்தில்தான், சக்தியானது ஒரு ஒளிக்கற்றையைப்போல், ஒரு மின்னலைப்போல் உங்களுள் நுழைய முடியும், அது ஆழமாகச்சென்று விதைநிலையில் தொட்டு, நீங்கள் அறியாத வழிகளிலும் உங்களை உணர்வுமாற்றம் பெறச்செய்துவிடும்.

குரு வடிவின் ஒவ்வொரு அங்குலத்தின் மூலமாகவும், பிரபஞ்ச இருப்பு சக்தி தன்னை வெளிப்படுத்தி, பொங்கிப் பிரவகிக்கிறது. அவரைப் பார்த்துக் கொண்டிருப்பதே, தெய்விகத்தன்மையின் கண நேர அனுபவத்தைத் தரும்.

நீங்கள் இந்த அனுபவத்தில் உங்களை எந்தளவுக்குக் கரைய அனுமதிக்கிறீர்களோ, அந்தளவுக்கு நீங்கள் அதனோடு இயைந்து பிரதிபலிப்பீர்கள்; பிரபஞ்ச சக்தியின் பிரவாகத்தாலும் தொடுதலாலும், நீங்கள் மேலும் விழிப்படைவீர்கள்.