KAILASA Library/பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)/பிரபஞ்ச இருப்புத்தன்மை, நமக்கு வேண்டியதை அறியும் எனும் சிறு நம்பிக்கையே போதும் ...Sign in
பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)

பிரபஞ்ச இருப்புத்தன்மை, நமக்கு வேண்டியதை அறியும் எனும் சிறு நம்பிக்கையே போதும் ...

உலகெங்கிலுமுள்ள மக்கள் பலரும், ஆனந்த தரிசனத்தின்போது, பற்பல அற்புதமான அனுபவங்களைப் பெற்றிருக்கிறார்கள். ஆழமான ஆன்மிக அனுபவங்கள், நோய்களிலிருந்து விடுபட்ட அனுபவங்கள், அகக் காட்சிகள் என, இந்தச் சக்தியை பலரும் பலவிதமாக உணர்ந்திருக்கின்றனர்.

தரிசனத்தின்பொழுது நமக்கும் ஏதாவது அனுபவம் ஏற்படவேண்டும் என நீங்கள் பேராசைபட வேண்டியதில்லை. 'எது நிகழ வேண்டுமோ, அது நிகழட்டும்' என அனுமதியுங்கள். பின்பு, அந்தத் தரிசனத்தை ஏற்பதற்குரிய ஒரு உணர்வு தளத்தை உங்களுக்குள் உருவாக்குவீர்கள்.

சக்தி, புத்திசாலியே. மேலும், என்ன செய்ய வேண்டுமென்பதை அது அறியும். எவ்விதமான எதிர்ப்பார்ப்புகளோடும் - ஒளியையோ அல்லது வெறுமையையோ அல்லது ஒருவித சக்தியையோ உணரும் அனுபவத்திற்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

பிரார்த்தனை மனோபாவத்துடன் இருந்தாலே போதுமானது. இது வார்த்தைகளைவிட, பிரார்த்தனை மனநிலை என்றால், 'பொருட்களை வேண்டுவது' என்பதைக் குறிக்கவில்லை; எல்லாவற்றைக் குறித்தும் ஆழ்ந்த நன்றி உணர்வுடன் இருப்பது. ஆயினும் நீங்கள் விரும்புவதைக் கேட்க, குரு அனுமதிக்கிறார். உங்களுடைய எந்தப் பிரச்சினைக்கும் அவரிடம் தீர்வு கேட்கலாம்.

ஆனால், உங்களுக்கு நம்முடைய பிரார்த்தனைகளை மறந்துவிட்டு, பிரபஞ்ச இருப்புத்தன்மையின் வைக்க முடியுமானால், நாம் அனுபவத்தை அடைய முடியும். பிரபஞ்ச இருப்பத்தன்மை, நமக்கு எது சிறப்பைத் தரும் என்பதை அறியும் போதும். நாம் இந்த மனோபாவத்துடன் அணுகினோமானால், குருவானவர் நமக்கு என்ன கொடுக்க முயலுகிறாரோ, அதைப் பெறுவோம். வேறெதுவும் அவசியமில்லை.

உங்கள் மனத்தின் மூலமாக, நீங்கள் பிரபஞ்சத்துடன் ஒன்றிணைய முடியாது. அது உங்கள் இதயத்தின் மூலமாக அல்லது இருப்பு மூலமாகவே நிகழ முடியும்.

பேசுவதுகூட கடினமாகிவிடும் அளவுக்கு, அத்தருணத்தில், ஆனந்தம் பொங்கித் ததும்புகிறது. கேட்கும் மனநிலையில் இருக்கும்பொழுது, உங்களுக்குக் அனுபவத்தைக் கேட்க வேண்டுமானால், மனம் உள்ளே நுழைந்தாக வேண்டியுள்ளது. அப்படி மனம் உள்ளே நுழையும்பொழுது, நீங்கள் அனுபவத்தைத் தவறவிடுகிறீர்கள்.

தரிசனத்தின்போது, நீங்கள் கேட்கும்போது, அக்கறையோடும் பதிலளிக்கிறார். பலர் ஒரே மாதிரி கேள்விகள் கேட்ட போதிலும், அவரவர்களுக்கு ஏற்ற தகுந்த பதிலைச் சொல்கிறார்.

ஒவ்வொரு இருத்தலும் வேறானவை. ஒவ்வொருவருடைய வழியும் தனித்துவம் மிக்கது. ஒவ்வொருவரும் குருவுடன் தத்தம் தனிப்பட்ட வழியில் தொடர்புகொள்கின்றனர். குரு, கேட்பவருடைய இருப்புக்குள் ஊடுருவி நோக்கி, 'கேட்டவருக்கே' பதிலளிக்கிறார், 'கேள்விக்கு' அல்ல.

முழுமையான நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்கு மட்டும், ''நான் பார்த்துக்கொள்கிறேன்,'' என்று சொல்கிறார். அவர்களும், குருவிடமிருந்து வரும் அந்த உறுதிமொழியினால், தங்கள் கவலைகளையும் மன அழுத்தங்களையும் உதறிவிடுகிறார்கள்.

தரிசன வார்த்தைகள்மூலம் தொடர்பு கொள்ளும் நிலையிலிருந்து, குருவின் பிரபஞ்ச இருப்போடு சங்கமிக்கும் நிலைக்கு அழைத்துச் செல்லக்கூடிய ஓர் அற்புதமான வாய்ப்பு.

அவருடைய சொற்பொழிவுகளின்போது, நாம் அறிவுப் பூர்வமான தெளிவைப் பெறவேண்டி, பல கேள்விகளைக் கேட்கிறோம். அப்போது நாம், நம் மனத்தின்மூலமாகத் தொடர்புகொள்ள முயலுகிறோம், ஒவ்வொரு சொற்பொழிவின் இறுதியிலும், வார்த்தைகளுக்குமேல் வார்த்தைகளாக சேகரித்து வைக்கிறோம். மேலும் பல வார்த்தைகளோடும் சந்தேகங்களோடும் வீடு திரும்புகிறோம் !

தரிசனம் என்பது இருப்பு மட்டத்தில் தொடர்பு கொள்ளும் நேரம். அந்த நேரத்தில், உங்கள் மனத்தை விட்டுவிட்டு, இதய பூர்வமாக இருங்கள், உங்களுக்குள்ளே சில அனுபவங்கள் நிகழ அனுமதியுங்கள்.

எந்தவிதமான இணைத்தலுமே நமது இதயத்தின் மூலமாக அல்லது இருப்பு மூலமாகவே நிகழ முடியும்.

தரிசனத்தின்போது குரு, உங்கள் கண்களுக்குள்ளே ஊடுருவிப் பார்க்கும் பொழுது, நீங்கள் அவருக்குள் உங்கள் பிரதிபலிப்பைக் காணமுடியும். அவர், தம் பார்வையாலும், தொடுதலாலும், அரவணைப்பினாலும் உங்களைக் குணப்படுத்துகிறார். ஒவ்வொரு தரிசனத்தின் பின்பும் நீங்கள், மேலும் சிறிது மலர்ந்து (வளர்ச்சிபெற்று) வேறு மனிதராகத் திரும்புவீர்கள்.