பொய்யற்ற கடமை
18.7 ஒருவன், தனக்கென விதிக்கப்பட்ட கடமைகளிலிருந்து ஒருபோதும் தவறக்கூடாது. தியாகம் என்பதின் உள்ளார்ந்த கருத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு,தனக்குரிய கடமைகளை செய்யத் தவறுவது தாமஸம் எனப்படுகிறது.
18.8 தனக்குரிய கடமைகளை ஒருவன் தொந்தரவாகவோ அல்லது பயமாகவோ கருதி, அவற்றைத் துறப்பது என்பது ராஜோகுணத்தின் நிலை. அவன் தியாகத்தின் பலன்களைப் பெறுவதில்லை.
18.9 ஆனால் பலன்கள் மீதான பற்றோ அல்லது எதிர்பார்ப்போ இல்லாது, இது விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்துவருவானேயானால், அவனுடைய தியாகம் ஸாத்விகமானதென கருதப்படுகிறது, அர்ஜுனா.
18.10. சந்தேகங்களை விடுத்து பிடித்த வேலை என்ற விருப்பும், பிடிக்காத வேலை என்ற வெறுப்பும் கொள்ளான்.
18.11 மனிதன், தன் கடமைகள் எதையும் தவிர்க்க முடியாது. ஆனால், தன் கடமைகளுக்கான பலன்களைத் துறந்தவன் தியாகி எனப்படுகிறான். 18.12 அப்படி தியாகம் செய்யாத ஒருவரை, விரும்பத்தக்க, விரும்பத் தகாத, மற்றும் இரண்டும் கலந்த -என மூன்று விதமான கர்ம பலன்கள் மரணத்திற்குப் பின்னும் தொடர்கின்றன ஆனால், உண்மையான தியாகிகளை அவை மூன்றுமே பாதிப்பதில்லை.
கிருஷ்ணர் சொல்கிறார், நித்ய கர்மாக்களை, அதாவது தினமும் செய்து முடித்தே ஆக வேண்டிய கடமைகளை, ஒரு ஒழுங்குமுறை தவறாமலும், தொடர்ந்தும் செய்து வர வேண்டும். அவற்றைச் செய்யாமலிருப்பது நம்மை, அறியாமையினாலும் சோம்பலினாலும் விளைகின்ற தமோ குண நிலைக்குக் கொண்டுசெல்லும்.
நித்ய கர்மா என்பது ஒருவருக்கொருவர் மாறுபடும். ஒரு இல்லறவாசியின் கடமைகள், ஒரு துறவி அல்லது ஒரு மாணவனின் கடமைகளிலிருந்து வித்தியாசமானவை. எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பது போன்ற ஒவ்வொருவருக்குமான விதிமுறைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.
பல நேரங்களில், நம் சொந்தப் பொறுப்புகளை விட்டுவிட்டு, வேறொரு வேலையை எடுத்துச் செய்வதென்பது, அதிகக் கவர்ச்சியுள்ளதாகத் தெரியலாம். தெளிவாக மனோபாவமும் விழிப்புணர்வும் இல்லையேல், நாம் எடுக்கும் எந்தப் பொறுப்பையும் நிறைவேற்ற மாட்டோம்.
பொறுப்பெடுப்பதும், நம்மை விரிவுபடுத்திக்கொள்வதும் வீணான வேலையைப் பார்ப்பதற்குப் பதிலாக, தொலைக்காட்சியைப் பார்ப்பதும் கற்பனையில் மிதப்பதுமே மிக சுகமானதாகவும் சுலபமானதாகவும் தெரியலாம். தியானம் அல்லது பூஜைகள் அல்லது கடமைகளைச் செய்வதற்குப் பதிலாக, நாம் வீணாகப் பொழுதுபோக்குவதையே விரும்புகிறோம்.
நம்முடைய ஆசிரமத்தில் ஒவ்வொருவரும், காலை 6 மணிக்குத் தவறாது குரு பூஜையில் கலந்துகொள்ள வேண்டும். இது, அங்கேயே நிரந்தரமாகத் தங்கியிருப்போர், பிரம்மச்சாரிகள், கலந்துகொள்ள வந்திருப்போர், உடல்நலம் பெறுவதற்காக வந்திருப்போர் என எல்லோருக்குமே பொருந்தும்.
தெளிவாக இருங்கள், சரியான மனோபாவமும் விழிப்புணர்வும் இல்லையேல், நாம் எடுக்கும் எந்தப் பொறுப்பையும் சரிவர நிறைவேற்ற மாட்டோம்.
ஆனால், வெளியிலிருந்து வந்து ஆசிரமத்தில் தற்காலிகமாகத் தங்கியிருப்பவர்களில் சிலர், மிகுந்த தயக்கத்தோடு விருப்பமில்லாமல் பூஜையில் வந்து அமருங்காட்சி, நீங்கள் பார்க்க வேண்டிய ஒரு காட்சி! மற்றும் சிலர், தங்கள் அறைகளிலேயே தூங்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால், அவர்களையெல்லாம் கண்காணிக்க எங்களிடம் கண்காணிப்புப்படை இல்லை!
செய்ய வேண்டிய கடமைகளை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காகச் 'செய்யாமல் விட்டுவிடுவது' துறவல்ல. அது ரஜஸ் குணத்திலிருந்து பிறக்கும் சௌகரியமான ஒரு 'செயலற்ற தன்மை'.
ஒரு பயிற்சி முகாமில் கலந்து கொண்டபின், பலரும், "ஸ்வாமிஜி, நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் எத்தனை தியான நுட்பங்கள் பயிற்சி செய்யலாம், ' என்று கேட்பார்கள்.
நான் அவர்களுக்கு, "ஒன்றையாவது முறையாக தினமும் செய்துவாருங்கள்!'' என்று சொல்வேன்.
ஒரு வாரத்திற்குப் பின், அந்த சூடு ஆறிய பின்னர், நான் இதைப்பற்றி அவர்களிடம் கேட்டால், ''ஒரு தியான முறையைக்கூட செய்ய எனக்கு நேரமேயில்லை ஸ்வாமிஜி,' என்று அப்பாவித்தனமான வெட்கத்துடன் சொல்வார்கள்.