KAILASA Library/பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)/'நான்', 'எனது' என்பதின் சுவர் இல்லாமல் இருங்கள்Sign in
பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)

'நான்', 'எனது' என்பதின் சுவர் இல்லாமல் இருங்கள்

நம் எல்லோருக்குமே தியானத்தைத் தவிர பாக்கி எல்லாவற்றையும் செய்ய நேரம் கிடைக்கும்; மற்றவர்களுக்காக நேரம் ஒதுக்க முடியும்; ஆனால், நமக்காக தியானம் செய்ய மட்டும் நேரம் கிடைக்காது! அதனால் யாருக்கு நஷ்டம் ?

கிருஷ்ணர் சொல்கிறார். "எது செய்யப்பட வேண்டுமோ, அது, நிச்சயமாக, செய்து முடிக்கப்பட்டே ஆக வேண்டும். ஏனெனில், அதுவே பரிந்துரைக்கப்பட்ட செயல்கள். பற்றுதல் இல்லாமலும், ஆசையில்லாமலும் செயல்களைச் செய்வதே ஸாத்விக குணப்பண்பின் உச்சம்.

பற்றுதல் இல்லாமலும், ஆசையில்லாமலும் செயல்களைச் செய்வதே ஸாத்விக குணப்பண்பின் உச்சம். '

இதைக் கிருஷ்ணர் பல இடங்களில் வலியுறுத்துகிறார். மீண்டும் மீண்டும் சொன்னால் மட்டுமே, இந்த ஸ்தீயம் நம்முள் ஊடுருவிக் கலக்கும்.

'எதைச் செய்ய வேண்டுமோ, அதைச் செய்துவாருங்கள், உங்கள் சமுதாய மற்றும் மத நம்பிக்கைகளையும் விதிமுறைகளையும் அடிப்படையாகக்கொண்ட செய்யுங்கள்; இருப்பினும், இவற்றை பலன்கருதியோ எதிர்பார்ப்புகளுடனோ செய்யாதீர்கள்'. செய்யப்படுகின்ற செயல்களில், 'நான்', 'எனது' என்பதின் சுவடே இருக்கக்கூடாது.

பரம்பரை பரம்பரையாகச் சம்பிரதாயங்களைச் செய்துவரும் ஆசாரமான வீடுகளில்கூட, மந்திரங்கள் சொல்வதையோ அல்லது பூஜைகளைச் செய்வதையோ அன்றைய நாளின் ஒரு வேலைபோல் செய்வார்கள். அவர்கள் மனம் ஒன்றிச் செய்ய நினைப்பார்கள், ஆனாலும் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு செயலாலும் பாதிக்கப்படுவார்கள்.

ஆனால், அவர்கள் செய்யும் செயல்களில் ஆழமாக மூழ்கி மனமொன்றிச் செய்வார்களேயானால், அந்த நிகழ்வுகள் அவர்களுக்குள் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அவர்கள், தங்களுடைய 'செய்முறை'களில் பற்று வைத்தும், தங்களுடைய வழிமுறை 'நன்றாக அமைய வேண்டுமென்பதில்' பற்று வைத்தும் செய்வதினால்தான், சுலபமாக, ஒவ்வொன்றுமே அவர்களின் கவனத்தைச் சிதறடிக்கின்றன.

ஆனால், ஒரு குழந்தை ஒரு மந்திரத்தை எப்படிச் சொல்கிறது என்று கவனித்துப் பாருங்கள். அது, மந்திரத்தோடு விளையாடி மகிழ்கிறது!

திருவண்ணாமலையில் வசித்த அண்ணாமலை சுவாமிகள், என்னுடைய பத்தாவது வயதில், எனக்கு ஒரு தியான நுட்பத்தைக் கற்றுக் கொடுத்தார். அடுத்த இரண்டு வருடங்களுக்கு நான் செய்ததெல்லாம், அந்த நுட்பத்தோடு விளையாடியதுதான், அவ்வளவுதான். அந்த இரண்டு வருடங்களில் அந்த நுட்பமானது தனது வேலையைச் செய்துவிட்டது!

கிருஷ்ணர் சொல்கிறார், ஸாத்விக குணமான அமைதியிலும், நிலைபெற்றுள்ள ஒரு மனிதர், வெளிப்புற காரணங்களால் ஒருபோதும் பாதிக்கப்பட மாட்டார். செயல்களைப் பாராட்டினாலும் நிந்தித்தாலும், அதைப் பொருட்படுத்த மாட்டார். அவர், தாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்து, அதைச் செய்து முடிப்பார்.

ஸாத்விக குணத்தில் நிலைபெற்றுள்ள ஒரு மனிதர், வெளிப்புற காரணங்களால் ஒருபோதும் பாதிக்கப்பட மாட்டார்.

ஒரு சின்ன கதை:

ஒரு கிராமத்தில் ஸதாசிவ சாஸ்திரிகள் என்கிற ஒரு நிலச் சுவான்தார் இருந்தார். அவர் மிகவும் பக்தியுடையவராகவும், எப்போதும் பிறருக்கு உதவுபவராகவும் இருந்தார். உள்ளுர் கோவிலில் திருவிழா நடக்கும்போதெல்லாம், அவரே அதற்கான அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக் கொண்டார். யாராவது நோய்வாய்ப்பட்டால், அவர்களுடைய வைத்திய செலவுகளையும், போக்குவரத்து செலவுகளையும் தாமே ஏற்று உதவி செய்தார்.

அந்தக் கிராமத்தில் எல்லோருக்கும் தெரிந்த ஒரு பிரபலமான பிரமுகராகவும், எல்லோருக்கும் உதவுபவராகவும் இருந்தார். ஆனாலும் அவர் எப்போதுமே ஒரு இறுக்கத்தோடும், முகத்தில் மகிழ்ச்சியற்றவராகவும் காணப்பட்டார்.

ஒருநாள் அவருடைய மகளே, ''அப்பா ஏன் நீங்கள் எப்போதுமே இறுக்கமாகவும், சோகமாகவுமே இருக்கிறீர்கள் ? உடல் நலம் சரியில்லையா ?' என்று கேட்டாள்.

அதற்கு அவர், ஒன்றும் இல்லையே, நான் நன்றாகத்தானே இருக்கிறேன்," என்றார்.

ஒருவர், பிரதிபலன் எதிர்பார்ப்பதையே விட்டுவிடும்போது மட்டுமே, துறவு என்பது அதன் உண்மையான அர்த்தம் பெறுகிறது.

ஆனால், அவள் மறுபடியும் வற்புறுத்தவே, அவர், ''பாரேன், நான் இந்தக் கிராம மக்களுக்கு எல்லா உதவிகளையும் செய்து வருகிறேன். இருந்தாலும் அதற்காக எனக்கு ஒரு நன்றிகூட சொல்வதில்லையே!'' என்றார்.

அவர், தான் செய்து வந்த எல்லாவற்றையுமே ஞாபகம் வைத்திருந்தார். அந்த நற்காரியங்களின் பாரத்தையும்கூட சுமந்து கொண்டிருந்தார்!

ஒருவர், பிரதிபலன் எதிர்பார்ப்பதையே விட்டுவிடும்போது மட்டுமே, துறவு என்பது அதன் உண்மையான அர்த்தம் பெறுகிறது.

கர்ம சுழற்சியிலிருந்து விடுபடும் நுட்பம் ...

ஒரு மனிதரால் எந்த வேலையுமே செய்யாமல் சும்மா இருக்க முடியாது; அதுவே இயற்கை நியதி. மனிதன் என்பவன் எப்போதுமே எதையாவது ஒன்றைச் செய்துகொண்டுதான் இருக்க வேண்டும். உடலளவில் இல்லாவிட்டாலும், மனதளவில் செய்துகொண்டுதான் இருக்கிறான். தூக்கத்திலும்கூட கனவுகளைக் காண்கிறான். நாம் கண்ணை மூடினால், உடனே உள்ளுக்குள் இருக்கிற தொலைக்காட்சி விழித்துக்கொள்கிறது.

காதுகளை அடைத்து வைக்கப்பட்டாலும்கூட, நாம் உள் மனப்பேச்சினால் நிரம்பியிருப்போம்.

ஒரு ஞானியால் மட்டுமே, மனத்தையும், உடலையும் இயங்காமல் வைத்திருக்க முடியும். ஆனால், சாதாரண மனிதன் செயல்புரியாமல் இருக்கவே முடியாது.

அப்படியானால், மனிதன் தனக்குள் தானே சுகமாக, மன அமைதியாக இருக்க வேண்டுமென்றால், அதற்கான ஒரேவழி, தம்முடைய எண்ணங்கள், பேச்சுக்கள் மற்றும் செயல்கள் அனைத்தையுமே எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யவேண்டும். நம் ஒவ்வொருவராலுமே, இந்த நிலையை அடைய முடியும்.

கிருஷ்ணர் சொல்கிறார், தம் செயல்களின் பலனைப் பற்றியே கவலைப்படாத ஒருவரே, உண்மையான துறவி!

செயல்களின் மீதும், அவற்றின் விளைவுகளின் மீதும் வைக்கும் பற்றானது, மேலும் அதிக ஆசைகளைத்தான் தூண்டிவிடுகிறது. ஒரு செயலைச் செய்து முடித்து, அதற்கு விரும்பிய பலனை பெற்ற பிறகும்கூட, ஒருவா் தம் செயல்களின் மீதும், பலன்கள் மீதும் பற்று கொண்டிருக்கும்வரை, இன்னொரு ஆசை முளைத்துக் கொண்டுதான் இருக்கும். ஒரு ஆசையைப் பூர்த்திசெய்து முடிக்கும்பொழுதே, இன்னொரு நிறைவடையாத ஆசை முளைத்துவிடும். இது ஒரு நிரந்தரமான, தொடர்ச்சியான நிகழ்வுதான்.

இதைத்தான் நான் காமா என்று சொல்கிறேன். நிறைவேறாத ஆசைகளே கா்மா எனப்படுகிறது. 'நான் செயல்களைச் செய்பவன்' என்று நம்மைக் கா்த்தாவாக கருதி, அதன் மீது பற்றுதல் கொண்டிருக்கும்வரை, அது நமக்குள், பற்றிய கண்டனத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையோ ஏற்படுத்திவிடுகிறது. நாம் காமா அல்லது ஸ்ம்ஸார் சக்ரத்தில் சிக்கிக்கொள்கிறோம்.

நாம் செய்யும் செயல்களும், அவற்றால் விளையும் பலன்களும் நல்லதா அல்லது கெட்டதா அல்லது இரண்டும் கலந்ததா என்ற கவலையே நம் மரணத்திற்குப் பின்னும் நமது மனோபாவமாக அல்லது வாஸனாவாகத் தொடர்கிறது.

ஒரு ரூாணியால் மட்டுமே, மனத்தையும், உடலையும் இயங்காமல் வைத்திருக்க முடியும். ஆனால், சாதாரண மனிதன் செயல்புரியாமல் இருக்கவே மடியாது.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், 'மேல் உலகத்தில்' நமது செயல்களையும், கெட்ட நடத்தைகளையும் கணக்குவைத்துக் கொள்வதற்கென்று யாருமே கிடையாது. நம்முடைய ஆன்மாவே அந்த வேலையைச் செய்கிறது. அதனால் நாம் ஒருபோதும் கப்பிக்க முடியாது.

பாவப் பரிகாரங்கள் செய்வதாலோ அல்லது 'மேன்மையான' காரணங்களுக்காகத் தாராளமாகப் பொருளுதவி செய்வதாலோ, நாம் செய்த செயல்களை, நம் ஆன்மாவிடைய கணக்குப் பேரோடிலிருந்து அழித்துவிட முடியாது.

நாம் இறக்கும்பொழுது, நமது உடல்தான் அழிகிறது, ஆனால், ஆன்மா, மற்றொரு புது உடலுக்குச் செல்கிறது. அந்த ஆன்மா, முன்னிருந்த அதே மனப்பாங்கை, வாஸனையை உடன் எடுத்துச் செல்கிறது. இந்த விதிமுறைக்கு விதிவிலக்கே கிடையாது.

ஸ்ம்ஸ்காரங்கள் எனப்படும் நிறைவேற்றப் படாத ஆசைகளே, பிறப்பு -இறப்பு - மறு பிறப்பு என்னும் ஸம்ஸார சூழலுக்குக் காரணம்.

எப்படியிருந்தாலும், நாம், இச் செயல்களுக்கான 'கா்த்தா நானே' என்னும் எண்ணத்தைவிடுத்து, அச் செயல்களின்மீது நாம்கொண்டி ருக்கும் பற்றுதலைத் துறந்து விட்டு, அச்செயல்களையும், அவற்றின் விளைவுகளையும் ஒரு நமக்கு நிறைவேறாத ஆசைகளோ, காமாக்களோ, ஸம்ஸ்காரங்களோ அல்லது வாஸனைகளோ இருக்காது.

இதன் பற்றிய எதிர்பார்ப்பும் பற்றுதலும் இன்றி, ஆற்ற அப்படிப்பட்ட ஒரு மனிதர்தான் ஸ்மீஸார் விடுபடுகிறார்.