நாற்காலியில் சாய்ந்தமர்ந்து ஓய்வெடுக்கும் நேரமல்ல இது!
உங்களுடைய போலியான அடையாளங்களையும், சமுதாய கட்டுறு மனப்பாங்குகளையும் உடைத்தெறிந்துவிட்டு கொண்டாடுவதற்கு ஏற்ற தருணம் இது. இது, உங்களுடைய இருக்கை கயிறுகளை இறுகக் கட்டிக்கொண்டு, நாற்காலியில் சாய்ந்தமாந்து ஒய்வெடுக்கும் நேரமல்ல. சக்தி வந்து உங்களைத் தொடும், ஆனால், அதைப் பெற்றுக்கொள்ள நீங்கள் திறந்த மனத்தினராக இருக்க மாட்டீர்கள்.
தரிசன நேரத்தில் குருவின் அருகில் இருப்பதே, அவனோடு (பிரபஞ்ச விழிப்புணர்வோடு) நீங்கள் இணைந்துவிட உதவிடும். இது, பிரபஞ்ச விழிப்புணர்வையும் உங்கள் தனிமனித விழிப்புணர்வையும் சந்திக்க வைக்கும். ஒரு ஆறு எப்படி ஓடிக் கடலில் சங்கமமாகிறதோ, அதுபோல பிரபஞ்ச சமுத்திரமானவரும், வடிவமாக இருப்பவருமான குருவுள் நீங்கள் கரைந்து சங்கமித்துவிடுகிறீர்கள்.
அதனால்தான் தரிசனம் பெற்ற பிறகு நீங்கள் தளர்வாகவும், புத்துணர்ச்சி பெற்றவர்களாகவும் உணர்கிறீர்கள். சில சமயங்களில் தரிசனம் நீண்டநேரத்திற்கு இரவு முழுவதும் நடக்கும். ஆனாலும், விழிப்புணர்வில் ஏற்படும் மாற்றம், உங்களை ஓர் உயர் தளத்திற்கு எடுத்துச் செல்லும்.
தரிசன நேரத்தில், ஒருவர் குருவின் அருகில் இருக்கும்போது, விழிப்பற்ற தளத்திலுள்ள பயங்கள், குற்றவுணர்ச்சிகள், ஆசைகள், ஆழ்ந்த அமைதி, ஆனந்தக் கண்ணீர் போன்றவை மேலெழுந்து வரும். எதனால் இப்படி நேருகின்றன என்று ஒருவர் அறியாமல் இருக்கலாம், ஒருவர் குருவின் சாந்நித்தியத்தில் இருப்பதனாலேயே, இவை ஆழமான விழிப்பற்ற அடுக்குகளிலிருந்து மேலெழுந்து வருகின்றன.
அந்த உணர்ச்சிகளை அடக்கவோ அல்லது உள்ளேயே அழுத்தி வைக்கவோ வேண்டிய அவசியமில்லை. குருவின் சாந்நித்தியத்தில் அவை சுதந்திரமாக வெளிவர அனுமதித்துவிட வேண்டும். அவை முழுமையாக வெளிவரட்டும்.
உங்களால் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதனவெல்லாம் உணர்ச்சிகளாக நீங்களே கொடுத்துக்கொண்டிருக்கும், பதிந்துள்ள நினைவுப்பதிவுகளிலிருந்து விடுபட்டு வெளியே வருவதற்கான, மிக அரியதொரு சந்தர்ப்பம் இது.
உணர்ச்சிகளை அடக்கவோ அல்லது உள்ளே அழுத்தி வைக்கவோ வேண்டிய அவசியமில்லை. குருவின் சாந்நித்தியத்தில் அவை சுதந்திரமாக வெளிவர அனுமதித்துவிட வேண்டும்.
அந்த வேரோடு களையப்படுகின்றன. குருவின் பொங்குகிற முழுமையாக நீங்கள் வாய்ப்பளித்தால்தான், நீங்கள் பல வருடங்களாகக் கட்டி கட்டி வைத்திருக்கின்ற, அடக்கப்பட்ட கட்டமைப்பை உடைத்தெறிய முடியும்.
தரிசன நேரத்தில் எது நிகழ்ந்தாலும், அது முழுமையிலிருந்து நிகழ்கிறது. நீங்கள் கைகளைத் தட்டுவீர்கள், நடனமாடுவீர்கள், எந்தக் காரணமுமின்றி அழவோ சிரிக்கவோ செய்வீர்கள். பொங்கிப்பெருகும் உணர்ச்சிகளின் வெளிப்பாடாக நிகழ்கிறது. சிரிப்போ கண்ணீரோ, அவை குறிப்பிட்ட சந்தோஷத்தினாலோ அல்லது துக்கத்தினாலோ வருவதல்ல. அவை உள்ளிருந்து பொங்கி வெளிவரும் உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளே.
இருப்பு, தன்னைத்தானே சுதந்திரமாக வெளிப்படுத்திக் கொள்வதற்கு, மனம் ஒருபோதும் வாய்ப்பளிப்பதில்லை. மனம், கருப்பு, தன்னைத்தானே சுதந்திரமாக வெளிப்படுத்திக் கொள்வதற்கு, மனம் ஒருபோதும் வாய்ப்பளிப்பதில்லை.
அதை அடக்கியாள்கிறது. இருப்பு, தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்ளும் நேரம் இதுவே. அவ்வாறு நிகழும்போது, உணர்ச்சி வெளிப்பாடுகளை, தர்க்கத்தின் எல்லைக்குள் கொண்டுவர முடியாது. தூய்மையான முழுமை, தன்னைத்தானே வெளிப்படுத்திக்கொள்கிறது; அவ்வளவுதான்.
பொதுவாக ஒருங்கிணைக்கப்பட்டவர் ஒன்றோடொன்று போராடிக் கொண்டிருக்கும் பற்பல பகுதிகளின் தொகுப்பே நீங்கள். நீங்கள், இக்கணம் ஒன்றை விரும்புவீர்கள். அடுத்த கணமே, வேறொன்றை விரும்புவீர்கள். ஒரு கணம், ஒரு குறிப்பிட்ட உணர்ச்சி உங்களுக்குள்ளிருந்து வெளிப்படும், அடுத்த கணமே, அதற்கு நேரெதிரிடையான உணர்ச்சி மேலோங்கும். குழப்பத்தின் உச்சியில் இருந்தாலும், வெளியே, அமைதியாக இருப்பது போல் காட்டிக்கொள்வீர்கள்.
அந்த உள்மனப் போராட்டங்களை விட்டுவிட்டு, என்ன தேவையோ அதைச் செய்ய குருவை அனுமதிக்கும் நேரம் இதுவே. அவர் உங்களை அறிவார். நீங்கள், தளர்வாக, அமைதியாக நிகழ்வதை அனுமதித்தாலே போதும், குரு உங்களுக்கு எது தேவையோ அதைச் செய்துவிடுவார். நீங்கள், இதுவரை கற்றதை, ஏற்கெனவே சேர்த்துவைத்திருக்கும் தீர்ப்புகளை, உங்களைப் பற்றி நீங்களே கொண்டிருக்கும் அபிப்பிராயங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, குருவின் உணர்வுமாற்ற அன்பிற்கு, உங்களைத் திறந்து வைத்திருக்கும் நேரம் தரிசனம் ஆகும்.