Part 2: Bhagavad Gita Explained
எல்லாவற்றையும் விட்டுவிட்டுச் சரணடையுங்கள்
எல்லாவற்றையும் விட்டுவிட்டுச் சரணடையுங்கள்- இது, பகவத் கீதையின் கடைசி அத்தியாயத்தின் சாரம் மட்டுமல்ல, மொத்த பகவத் கீதையின் சாரமும்கூட!
மேலும் காலங்காலமாக, எல்லா ஆன்மிக குருமார்களின் உபதேசங்களின் அடிப்படையாகவும் இதுவே இருந்துவருகிறது.
கிருஷ்ணர் இறுதியாக, ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ச'ரணம் வ்ரஜ / அஹம் த்வா ஸர்வபாபேம்யோ மோக்ஷயிஷ்யாமி மா சு'ச: //
'தர்மம் என்று நீ எதையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாயோ, வாழ்க்கை என்று நீ எதையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாயோ, உனக்குத் தெரியுமென்று நீ எதையெல்லாம் நினைத்துக்கொண்டிருக்கிறாயோ அவை அனைத்தையும் விட்டுவிட்டு என்னையே சரணடைவாயாக!' -என்னும் இந்த ஒரு உபதேசத்துடன் பகவத் கீதையை முடிக்கிறார்.
அவர் அழகாகச் சொல்கிறார்: உனக்கு எதுவெல்லாம் தெரிந்திருக்கிறதோ, அது வெறுமனே உன்னுடைய அறிவையே குறிக்கிறது. உனக்கு என்ன தெரிகிறதோ, அதை மட்டுமே குறிக்கிறது; உண்மையில், அது, 'என்னவாக இருக்கின்றதோ' அதைக் குறிக்கவில்லை.
எண்ணங்கள். நாம் அல்ல!
உண்மையில், ஜ்ஞாநம் மற்றும் ஸத்யம் என்பவை நாம் இதுவரை அறிந்திராததைப் பற்றியதே. நமக்குத் தெரிந்தது எதுவுமே நம்மை இறுதி
நாம் மிகவும் போற்றிப் பொறுமைப்பட்டுக் கொள்ளும் நம் மனத்தின் அறிவு என்பது குதிரையின் கண்களில் போடப்படும் கண் பட்டையைப்போல், பிரபஞ்ச இருப்புத்தன்மையின் இயல்பை நாம் அறிந்துகொள்ளாதபடி மறைத்துவிடுகிறது.
பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த தத்துவமேதை ரீனே டெக்கார்தே (Rene Descartes), "நான் சிந்திக்கிறேன், அதனால் இருக்கிறேன்," என்று சொல்கிறார். அவர் ஒரு மனிதர் என்பதிலோ அல்லது அவர் தம் மனம் மற்றும் எண்ணங்களின் காரணமாகத்தான் வாழ்கிறார் என்பதிலோ சந்தேகம் இல்லை. ஆனாலும், மனம் என்பது இருப்புத்தன்மையை அளப்பதற்கான அளவுகோல் அல்ல !
நம்முடைய உண்மையான நிலைக்கும் அதாவது நம் இருப்புக்கும், நமது எண்ணங்களுக்கும் சம்பந்தமே இல்லை. நமது இருப்பை,
எண்ணங்கள் பாதிப்பதில்லை !
நாம் என்னவாக இருக்கிறோம் என்பது நமது எண்ணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது. நாம் என்னவாக இருக்கிறோம் என்பதை நம் எண்ணங்கள் மட்டுமே வரையறுக்க முடியுமானால், நாம் உயிருள்ள ஒரு இயந்திரமாகத்தான் இருப்போம்.
மிருகங்களுக்கு மனிதர்களைவிட உள்ளார்ந்த புத்திசாலித்தனம் இருக்கிறது. அவை
THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM
மனத்தை, பல கற்பனைகளைக் கொட்டி குப்பைமேடாக்குவதில்லை. அவையெல்லாம் இயற்கையோடு ஒருங்கிசைந்து வாழ்கின்றன.
ஒரு சிங்கமோ புலியோ, அது தன் பசிக்காக மட்டுமே வேட்டையாடும். எப்போது சாப்பிட வேண்டுமோ, அப்போது மட்டுமே சாப்பிடும். களைப்பாயிருக்கும்போது மட்டுமே தூங்கும். எந்த வனவிலங்கும் தன் உணவைச் சேகரித்து வைத்துக்கொள்வதில்லை. ஒன்றிரண்டு இனங்கள் விதிவிலக்காக அப்படிச் செய்யலாம். ஆனால், அதுவும், இயற்கையின் நியதியே! காட்டில் எந்த விலங்குமே உடற்பருமனோடு இருப்பதில்லை.
மனிதர்கள் சிந்திக்கிறார்கள், பிரச்சினையே அதுதான்! நம்முடைய பழம்பெரும் முனிவர்களும் ரிஷிகளும், மேதைகள் சொல்லியிருக்கிறார்கள். எகிப்தியர்கள் ''மனத்தை விட்டுவிடுங்கள். விழிப்படைந்துவிடுவீர்கள். ஒரு மனிதனுக்குரிய உண்மையான உள்ளார்ந்த ஆற்றலை என்கிறார்கள் அவர்கள்.
மிருகங்களுக்கு மனிதர்களைவிட உள்ளார்ந்த புத்திசாலித்தனம் இருக்கிறது.
ஆதி சங்கராச்சாரியார், தம்முடைய ஆத்ம ஷட்கம் என்றும் நூலில் இதை மிக அழகாகச் சொல்கிறார். உண்மையில் 'தாம் யார்'
என்பதை அவர் விளக்குகையில், தம்முடைய உடல், மனம், புலன்கள், உணர்ச்சிகள் மற்றும் தம்முடைய எல்லா உறவுகளும் 'தாம் அல்ல' என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.
நான் இந்த உடல் அல்ல, நான் இந்த மனம் அல்ல, நான் இந்தப் புலன்கள் அல்ல, நான் இந்த உணர்ச்சிகள் அல்ல, நான் என்னுடைய உறவுகளும் அல்ல என மறுக்கிறார். எல்லாவற்றையும் மறுத்ததின் மூலம், ஆதி சங்கரர், தம் உள்ளார்ந்த தெய்விக ஆற்றலை மிக தெளிவாகவும் அழகாகவும் பிரகடனப்படுத்துகிறார்.
புரிந்துகொள்ளுங்கள். நாம் எல்லோரும் மனித உருவில் இருக்கும் 'தெய்வீக இருப்பு'களே தவிர, நாம் தெய்விக இருப்பிற்காகப் கடுமையாகப் பாடுபடும் மனிதப் பிறவிகள் அல்ல. நம்முடைய உள்ளார்ந்த ஆற்றலானது மிகப் பிரம்மாண்டமானது. நம்முடைய புத்திசாலித்தனம் எல்லையற்றது. ஆனால், நம்முடைய பட்டறிவு ஒரு எல்லைக்குட்பட்டதே.