KAILASA Library/பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)/ஞானமடைதலுக்கான வரைமுறைகள்Sign in
பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)

ஞானமடைதலுக்கான வரைமுறைகள்

  • 18.49 துறவைப் பயிற்சிசெய்வதன் மூலம், யார் ஒருவனுடைய மனம் சுயநல நோக்கிலிருந்து விடுபட்டிருக்கிறதோ, யார் ஒருவன் மனத்தைக் கட்டுப்படுத்தியிருக்கிறானோ, யார் ஒருவன் ஆசைகளிலிருந்து விடுபட்டிருக்கிறானோ அவன் கர்ம பலன்களின் மீதுள்ள பற்றிலிருந்து முழுமையாக விடுபடுகிறான்.
  • 18.50 குந்தியின் புதல்வா, இனி நான் கூறப்போகும் வழியில் நடப்பதன் மூலம் ஒருவர், மேலான உண்மை நிலையை, ப்ரஹ்ம நிலையை எப்படி அடையமுடியும் என்பதை அறிந்துகொள்.
  • 18.51,52,53 தூய்மைபடுத்தப்பட்ட பட்டறிவு, உறுதியான தீர்மானத்தின் மூலம் மனத்தைக் கட்டுப்படுத்துதல், புலனின்ப பொருட்களிலிருந்து விலகியிருத்தல், விருப்பு வெறுப்புகளை விட்டுவிடுதல், ஏகாந்தமாக வாழ்தல், மித உணவு, மனம், பேச்சு, கர்மேந்த்ரியங்களைத் தன் வசப்படுத்துதல், தியானத்திலேயே கரைந்திருத்தல், பற்றின்மை மற்றும் அஹங்காரம், வன்முறை,

பெருமை, காமம், கோபம், உடைமைக் குணம் ஆகியவற்றைத் துறந்திருக்கும் ஒருவர் அமைதியை, சாந்தத்தை அடைந்து 'நான்' மற்றும் 'எனது' என்னும் கருத்துகளிலிருந்து விடுபடுகிறார். மேலும் அந்த மேலான பரம்பொருளுடன் ஒன்றிணையும் தகுதியுடையவராகிறார்.

இந்த ஸ்லோகங்கள்இறுதி, அறுதி ஸூத்ரங்கள். ஒருவர் முக்தி அடைவதற்கும், ப்ரஹ்மத்தை - இறுதி லக்ஷ்யத்தை உணர்ந்துகொள்வதற்குமான ஒரு நுட்பம். கிருஷ்ணர், ஒருவர் இறுதி ஸ்திதியை எப்படி அடைவது என்று விளக்குகிறார். அவருடைய அறிவுரைகளை வெறுமனே பின்பற்றினாலே போதும் நாம் மீட்சியை அடைந்து விட முடியும் என்கிறார்.

கிருஷ்ணர், பகவத் கீதையில் சொல்லும் அறிவுரைகளின் அழகே, அவை அரைகுறையானவை அல்ல என்பதுதான். அவர் எந்த அனுமானங்களையும் தரவில்லை. அவர், அர்ஜுனன் கேட்ட சந்தேகங்களுக்கு மட்டுமல்ல, கேட்காமல் மனத்திற்குள் பூட்டி வைத்திருந்த சந்தேகங்களின் ஆழத்திற்கே சென்று, மிகத் தெளிவான வார்த்தைகளால் விளக்கிப் பதிலளிக்கிறார். அதில் எந்தவிதமான ஒளிவுமறைவோ அல்லது புரிபடாத, பிடிபடாத வார்த்தைகளோ இல்லை.

பகவத் கீதை, அடிப்படையில், அது அறிவைத் தரும் ஒரு சாஸ்த்ர நூல். அதைத் தருகின்ற ஆசிரியரான கிருஷ்ணர் கடவுளேயானாலும், அவர் மனிதப் பிறவியான அர்ஜுனனின் நிலைக்குக் கீழே இறங்கி வர வேண்டியுள்ளது.